சனி, 30 மார்ச், 2019

1258. பாடலும் படமும் - 57

ராகு
கி.வா.ஜகந்நாதன்[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

ராகுவின் ஒவியத்தில் அவனுடைய உருவம் அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. திருமுகம் மாத்திரம் தேவனைப் போல இருப்பினும் உடல் முழுவதும் செதில்கள் அமைந்து பாம்பு, என்பதைப் புலப்படுத்துகின்றன. சூலமும் கட்கமும் ஏந்திய கைகளும் வரதமுடைய கை ஒன்றும், சும்மா தொங்கப்போட்ட கை ஒன்றும் உடைய கோலத்தில் கரிய உடையோடு தோலையும் அணிந்து வீற்றிருக்கிறான். மேலே உள்ள சிங்கக் கொடி, அவனுடைய வாகனமும் அது என்பதை உய்த்துணர வைக்கிறது. கொடியும் குடையும் கருநிறம் உடையன. முறத்தைப் போன்ற ஆசனத்தில் ராகு வீற்றிருக்கிறான். -

வலப்பக்கத்தில் அதிதேவதையாகிய பசுவையும் இடப்புறம்
பிரத்தியதி தேவதையாகிய சர்ப்பத்தையும் காண்கிறோம். மேருவை
இடமாகச் சுற்றுபவன் ராகு பின்னால் உள்ள மலை இதைக் குறிப்பிக்
கின்றது. பின்னே நிலைக்களம் பயங்கரமாக அமைந்திருக்கிறது.

கரவின் அமுதுண்டான் ; கார்நிறத்தான் ; மேனி
அரவம் முகம்அமரன் ஆனான் ; - மருவுமுறம்  
ஆகும் இருக்கையான்; அஞ்சுதகு தோற்றத்தான் ;
ராகுநிழற் கோளென் றிசை.


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்


பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக