மையல்
கருமை ஒளிரும் அழகி -- உன்னைக்
. . . கண்ட கண்கள் புனிதம்
பரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன்
. . . பரிசம் என்றும் வேண்டும்
அருமை அறிந்த ஆண்கள் -- உன்னை
. . . அடையப் போட்டி இடுவர்
பெருமை பிறகு தருவாய் -- என்மேல்
. . . பிறர்பொ றாமை வளரும்
கடையிற் பார்த்த உடனே -- என்னைக்
. . . காதற் தீயில் இட்டாய்
எடைக்குப் பொன்னும் சமமோ -- உன்றன்
. . . எழிலும் ஒளிரக் கண்டேன்
அடைய ஆர்வம் கொண்டேன் -- உன்னை
. . . அணைக்கக் கைது டித்தேன்
தொடையில் உன்னை வைக்க -- அருகில்
. . . துள்ளி ஓடி வந்தேன்
விடியும் காலை வேளை -- உன்னை
. . . விரைந்து வாரி எடுப்பேன்
கடிதில் காப்பி குடித்து -- உடனே
. . . கையில் தூக்கிக் கொள்வேன்
இடியும் புயலும் துச்சம் -- விரியும்
. . . இணையம் என்றன் சொர்க்கம்
மடியில் அமருங் கணினி -- உன்மேல்
. . . மைய லாகி நின்றேன்.
[ 23 ஜூலை, 2000 ‘திண்ணை’ யில் வெளியானது ]
தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்
எளிமையான வார்த்தைகளைக் கொண்டு
பதிலளிநீக்குபடிக்கப் படிக்கச் சுகம் தரும் மாச்சீரைக் கொண்டே
படைக்கப் பட்ட கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் ஊக்கமொழிக்கு நன்றி, ரமணி.
பதிலளிநீக்குகணினி மேல் மையல்....!!
பதிலளிநீக்குசுவைத்துப் படித்தேன்.
அருமையான கவிதை ஐயா.
@AROUNA SELVAME
பதிலளிநீக்குமிக்க நன்றி, நண்பரே.
கவிதை என்றால் என்னவென்று
பதிலளிநீக்குகாட்டும் சொற்கள் எளிமை;இந்தப்
புவியில் அதனைப் படித்துப்பார்த்தால்
புரியும் விதமோ அருமை!தமிழ்ச்
சுவையை உணர்ந்து மேலும்மேலும்
சூட்டும் சொற்கள் புதுமை;இந்த
அவையில் நல்ல தமிழைக் கண்டேன்
அதுதான் உங்கள் திறமை!
இவண்-
கிருஷ்ணன்பாலா
18.9.2012
@Krishnan Balaa
பதிலளிநீக்குஉங்கள் ஆசு கவிதைக்கு நன்றி, நண்பரே.
அருமையான விருத்தம் அய்யா
பதிலளிநீக்குமடியில் அரும் கணினி - அதுவே
மையல் கொண்ட கன்னி
அடிக்கும் மனைவி வந்து -வாயால்
. அரற்றுகின்ற போதும்
வடிவம் வயது இன்றி -என்னை
வழிய வைத்துப் பொழுது
விடியும் வரை பெருத்த- இன்பம்
. வாரி வழங்கி மகிழும்
Malarin mevum thiruvukku poRaamai thara vandhal
பதிலளிநீக்குMadiyil amarum kanini!!
இணையம் மோஹம் கவிதை, அமோஹம்!
பதிலளிநீக்கு