முத்தமிடு!
போகி ஒருநண்பன் - எனக்குப்
போதித்த சொற்களிவை.
"தேகம் நிரந்தரமோ ? - இதனைச்
சிந்தனை செய்துவிடு!
சோகம் தவிர்த்துவிடு -தினநள
பாகம் புசித்துவிடு!
மோகக் கடல்மூழ்கி -- மங்கை
முத்துகள் முத்தமிடு! "
யோகம் பயில்பெரியார் - ஒருவர்
என்னிடம் சொன்னதிது.
" தேகம் ஒருகோயில் - அதனைத்
தினமும் வணங்கிவிடு!
நாகம் எனவளைந்தே -- உனது
நாபியை முத்தமிடு!
ஏகன் ஒருவனையே -- நினைத்து
இந்த்ரியம் கட்டிவிடு! "
காதில் உரைத்ததிது.
" தேவை சுருக்கிவிடு -- உனது
சிந்தை விரித்துவிடு!
பாவம் வெறுத்துவிடு -- ஆனால்
பாவியை முத்தமிடு!
சாவில் அமைதியுறு -- ஆன்ம
சாதனை செய்துவிடு! "
கனவில் அருவுருவம் -- என்றன்
கருத்தில் பதித்ததிது.
"நினைவை எரித்துவிடு -- உன்றன்
நெற்றிக்கண் பார்வையிலே!
மனதை முழுங்கிவிடு -- தினமும்
மெளனத்தை முத்தமிடு !
எனதெனும் எண்ணமதைக்-- கொன்றே
இறையுன தாக்கிவிடு ! "
~*~o0O0o~*~
[ இது ‘திண்ணை’யில் முதலில் 2001-இல் வெளியானது.]
தொடர்புள்ள பதிவுகள்:
கவிதை இயற்றிக் கலக்கிவிட்டீர்கள் பேராசிரியரே. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்புடன் புகாரி
மிக்க நன்றி, புகாரி.
பதிலளிநீக்குமுத்தமிட வேண்டிய கவிதை!
பதிலளிநீக்குMuthu Muthusubramanyam:
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி !
முத்தம்பலவிதம்! முத்து அம்பலவிதம்!
பதிலளிநீக்குஅனந்த்
நன்றி, அனந்த்.
பதிலளிநீக்குமுத்து முத்தான கவிதை அளித்த உமக்கு முத்தஆரத்தை பரிசளிக்க விழைகிறேன்!
பதிலளிநீக்கு-கீதா ஸ்ரீனிவாசன்
அருமை
பதிலளிநீக்குசத்தமின்றி முத்தான முத்தம் !
பதிலளிநீக்கு