சனி, 18 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 27

மதுரை சோமு - 2 

( தொடர்ச்சி ) 



1971 -ஆம் ஆண்டு. தமிழிசைச் சங்கத்தின் ‘இசைப் பேரறிஞர்’ என்ற விருதைப் பெறுகிறார் மதுரை சோமு. அவருடைய அகாடமிக் கச்சேரியைக் கேட்டு  “சோ என்று கொட்டும் சோமு” என்று தினமணி கதிரில் எழுதுகிறார் சுப்புடு.  அந்த விமர்சனத்தில் ஒரு பகுதி :

சோமு பாடிய காம்போஜி அப்படியே நேரே, இருதயத்தைத் தொட்டது. அது என்ன மூர்ச்சனை ஐயா? காந்தாரத்தை வல்லின மெல்லினமாய் நாதஸ்வர பாணியில் கொடுக்கும்போது மெய் சிலிர்த்து விட்டது. அதே மாதிரிக் குழைவுகள் கொடுக்கும் பொழுது ஆனந்தமாக ‘மஸாஜ்’ பண்ணிக் கொள்வதுபோல் இருந்தது. சோமு ராகத்தை ஒரு பூரண சொரூபமாய் உருவகப் படுத்திக் கொள்கிறார். அவர் கண்ணோட்டமும், கைவீச்சும் அத்தைகைய பிரமையை நமக்கு உண்டுபண்ணுகின்றன. காம்போஜியில் பல இடங்களில் அவர் அந்த ராகத்துடனே இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவருக்கு சங்கீதம் சத்யப் பிரமாணம். “  

அடுத்து, தனக்குப் பிடித்த ஆறு ராகங்களைப் பற்றிச் சோமு அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!


பிரபல எழுத்தாளர் ‘மணியன்’ சோமுவின் தீவிர ரசிகர். அவருடைய ஒரு கட்டுரை இதோ:



[ நன்றி: ”இதயம் பேசுகிறது”, ராஜு அசோகன் ] 
கடைசியாக , சிவாஜி கணேசன் -சோமு அவர்களின் ஒரு சந்திப்பைப்
பற்றிய தகவலுடன் , இம்மடலை முடிக்கிறேன்!

[ நன்றி: சினிமா எக்ஸ்ப்ரஸ், ராஜு அசோகன் ] 
பி.கு. : 

இந்தச்  சிவாஜி -சோமு சந்திப்புப் பற்றிய  தகவலையும், ம்துரை சோமு - ராமாயணம் படத் தொடர்பு பற்றியும் மேலும் விவரமாக ( சரியாக?)  கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து அறியலாம்:

“ ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஸி.எஸ்.ஜெ., நமது இன்றைய பாடல் உட்பட இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார்! அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட மாத இதழில் புகைப்படம் கூட வந்தது.) ஆனால், திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. (இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமுவிடமிருந்தே அறிந்துகொண்டேன்.) ”

http://krishnathreya.blogspot.com/2012/04/blog-post_30.html

என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.

( தொடரும் )

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


2 கருத்துகள்:

  1. பொதுவாகவே சங்கீதம் என்றாலே பிடித்த விஷயம். அதிலும் ஆனந்த விகடனில் வெளிவந்த அந்த காலத்து ஆடல் பாடல் எனக்கு மிகப்பிடித்தவற்றில் ஒன்று. தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.

    ஆ. Na . சப்தகிரீசன்

    பதிலளிநீக்கு
  2. மதுரை சோமுவின் கச்சேரிகளில் மிக முக்கிய அம்சம் அவர் உணர்ச்சியோடு பாடுவது தான். பாடலுடன் அப்படியே ஒன்றிப்போய்விடுவார். அவர் சம்பூர்ண ராமாயனத்துக்காகப் பாடியதை ரங்கசாமி ஒலிப்பதிவு செய்தபடியால், அந்தப் பதிவு எங்கேயாவது இருக்கக் கூடும். ஆனால் திரைப்படத்துறை வர்த்தக ரீதியில் செயல்பட்டதால் பல அரிய கலைப்படைப்புகள் காப்பாற்றப் படாமலே போயின என்பது வருத்தத்துக்குரியது.
    ---
    ஐயா, சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தை யாராவது Digitise செய்ய உங்களால் முடிந்த அளவு முயன்று பாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு