வியாழன், 20 ஆகஸ்ட், 2015

கொத்தமங்கலம் சுப்பு -11

சந்திரனே சந்திரனே சௌக்கியமா?
கொத்தமங்கலம் சுப்பு 


[ ஓவியம்: கோபுலு ] 


1957, நவம்பர் 3-இல் ரஷ்யா ‘ஸ்புட்னிக் -2’ என்ற விண்கலத்தில் லைகா என்ற நாயை அனுப்பியது ; இது யாவரும் அறிந்த விஷயம். ஆனால், அதை எப்படி ‘ஆனந்த விகடன்’ வரவேற்றது என்பதைத் தற்கால இளைஞர் பலரும் படித்திருக்க மாட்டார்கள் ! ’அக்கால’ இளைஞர்களும் மறந்திருப்பார்கள்! இதோ நினைவு படுத்துகிறேன்!

முதலில் , “இந்த வாரம் “ என்ற பகுதியில் “மனிதனின் உயர்வு” என்ற தலைப்புடன் வந்த ஒரு பத்தியில் ,

“ முதல் செயற்கைச் சந்திரனை விடப் பன் மடங்கு பெரிதான  மற்றொரு சந்திரனை விண்ணில் பறக்கவிட்டு ருஷ்ய விஞ்ஞானிகள் உலகத்தையே பிரமிக்க வைத்திருக்கிறார்கள். “

என்று பாராட்டி எழுதியது ‘விகடன்’. அதன் கீழேயே , “மனிதனின் தாழ்வு” என்ற தலைப்பில் உள்ள இன்னொரு பத்தியில்,

“வியக்கத் தக்க செயற்கைச் சந்திரனை பறக்க விட்டு விஞ்ஞான உலகையே பிரமிக்க வைத்த ருஷ்யாவில் மார்ஷல் ஜுக்கோவ் விலக்கப்பட்ட அரசியல் நிலையைப் பார்க்கலாம். சர்வாதிகாரம் என்ற மனித வெறிக்காக உலகப் பிரசித்தி பெற்ற போர் வீரர் பலியிடப் பட்டார்” என்றும், மற்ற உலக நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டியும், உலக அரசியல் எப்படி மனிதனைக் கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும் கவலையைத் தெரிவிக்கிறது ‘விகடன்’.

இரண்டாவதாகவே, கோபுலுவின் கார்ட்டூனும், கேலிச் சித்திரங்களும் விகடனை அலங்கரித்தன!


மூன்றாவதாக வந்தது ஓர் அற்புதக் கவிதை! ஆம், கொத்தமங்கலம் சுப்புவின் நீண்ட கவிதைதான்!








அதற்குக் ‘கோபுலு’ வரைந்த படத்தை மேலே பார்த்தீர்கள் அல்லவா?

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு: மற்ற பதிவுகள்

4 கருத்துகள்:

  1. படமும் செய்தியும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றது

    பதிலளிநீக்கு
  2. அரிய கருவூலம்! என்னைப் போன்ற இந்தக் கால இளைஞர்களும் இதைப் பார்க்க வாய்ப்பளித்தற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. கொத்த மங்கலத்தார் தந்தது
    சொக்க வைக்கும் நக்கலான
    குக்கன் கவிதை ! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பேஷ்! சபாஷ்!
    ’அக்கால’ இளைஞர்களும் மறந்திருப்பார்கள்!
    நான் மறக்கல்லையே!
    நன்றி, சார்,

    பதிலளிநீக்கு