கொத்தமங்கலம் சுப்பு
பிப்ரவரி 15. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நினைவு தினம். அவர் 1974-இல் மறைந்தவுடன் , விகடனில் வந்த கட்டுரை:
=====
மக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.
திரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரை யைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர்.
அவர் ஒரு கவிச்சுரங்கம். அவரது பேனாவிலிருந்து சொற்கள் சொட்டும்போதும், கருத்துக்கள் கொட்டும்போதும் குற்றால அருவி யின் சுகத்தை அனுபவிக்கலாம். 'ஒளவையார்' திரைப்படம் அவர் உண்மையான உழைப்பிற்கு ஒரு சான்று. 'காந்தி மகான் கதை' அவரது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. 'தில்லானா மோகனாம்பாள்' அவரது உன்னத கற்பனை வளத்திற்கு ஒரு சிகரம்.
வாழ்க்கைப் போராட்டங்களை யும் குடும்பப் பொறுப்புக்களையும் சிரித்துக்கொண்டே சந்தித்த ஓர் அசாதாரண மனிதர் சுப்பு. பரம ரசிகர். பிறரைத் தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் இணையற்றவர்.
ஒரு நல்ல கவிஞரை, நல்ல தமிழ் அன்பரை, நல்ல மனிதரை இழந்த துயரத்தில் தமிழகம் சோகக் கண்ணீர் வடிக்கிறது.

[ நன்றி: விகடனின் காலப் பெட்டகம் ]
'கல்கி'யில் வந்த அஞ்சல் குறிப்பு.
சுப்பு அவர்களைப் பற்றிச் சென்னையில் நடந்த ஒரு சொற்பொழிவு பற்றிய குறிப்பு இதோ:

தொடர்புள்ள பதிவுகள்:
சென்ற வாரம் 8/2/19 மலேசிய பத்துமலை குகைக்கோயில் செல்லும் வாய்ப்புப் பெற்றேன். மேற்கோயிலில் பூசனை செய்த சைவவேளாளரின் பேச்சிலிருந்து அவர் காரைக்குடியைச் சேர்ந்தவர் என்று அறிந்தவுடன் நான் இளம்பிராயத்தில் கொத்தமங்கலத்தில் கழித்ததைக்கேட்ட அவர் 'சுப்பு ஊரா, நான் அவருடன் நாடகத்தில் நடித்திருக்கிறேனே' என நினைவு கூர்ந்தார். அவரின் உறவினன் என்று அறிந்தபின் இன்னும் அன்புகாட்டி முருகனை மனமுருக கண் நிறைய வழிபட உதவினார். 'மனமே முருகனின் மயில் வாகனம்.. ' எனும் கவிஞர் சுப்புவின் அமரப்பாடல் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
பதிலளிநீக்குExcellent!
பதிலளிநீக்கு