செவ்வாய், 3 ஜனவரி, 2017

கொத்தமங்கலம் சுப்பு -17

கட்டபொம்மு கதை
கொத்தமங்கலம் சுப்பு 




ஜனவரி 3. கட்டபொம்மனின் பிறந்த தினம்.

தான் கண்டெடுத்த பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து கொத்தமங்கலம் சுப்பு   தொகுத்து, விகடனில் 1951- இல் ‘கட்டபொம்மு கதையை’ வெளியிட்டார். 






அதிலிருந்து ஒரு பகுதி:

ஆசார வாசல் அலங்காரம் துரை
ராஜன் அரண்மனை சிங்காரம்
ராசாதி ராசனாம்கட்டபொம்மு துரை
ராசன் கொலுச்சிறப்பென்ன சொல்லுவேன்
பூவாசம் வீசும் புகழ் வீசுமெங்கும்
பொன் வாடை வீசும் பொலிவாக
சாலை குளங்களும் சோலைகளும் அன்னம்
வாரி வழங்கிடும் சாலைகளும்
வாழைப்பலாவும் பழஞ்சொரியும் நல்ல
மாவும் கமுகும் வளம் பெருகும்
தாழை மலர்களும் பூச்சொரியும் நதி
தாமரை பூத்திடும் மேன்மைகளும்
நந்த வனங்களும் சந்தனச்சோலையும்
நதியும் செந்நெல் விளைவுகளும்
விந்தையாகத் தெரு வீதிகளும் வெகு
விச்தாரமாய் கடை வாசல்களும்
வாரணச்சோலை ஒருபுறமாம் பரி
வளரும் சோலை யொரு புறமாம்
தோரண மேடை யொருபுறமாம் தெரு
சொக்கட்டான் சாரிகள் ஒருபுறமாம்
சோலையில் மாங்குயில் கூவிடுமாம் வளம்
சொல்லி மயில் விளையாடிடுமாம்
வாலையென்னும் சக்க தேவி கிருபையால்
பாலும் பசுவும் வளர்ந்திடுமாம்
அன்பு வளர்ந்தேறும் பாஞ்சால நாட்டினில்
அதிசயம் சொல்லக் கேள் தோழி
தென்பாஞ்சைப் பதி நாட்டு முயலது
திரும்பி நாயைக் துரத்திடுமாம்
முசலும் நாயைக் கடித்திடுமாம் வெகு
முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
பசுவும் புலியும். ஓர் துறையில் ஒரு
பக்கமாய் நின்று தண்ணீரருந்தும்

கறந்த பாலையும் காகம் முடியாது
கட்டபொம்மு துரை பேரு சொன்னால்
வரந்தருவாளே வீரமல்லு திரு
வாக்கருள் செய்வாளே சக்கதேவி 

கோபுலுவின் ஓவியங்கள்  தொடரை அலங்கரித்தன.






                                                                


[ நன்றி: விகடன், சுப்பு ஸ்ரீநிவாசன், வள்ளியப்பன் ராமநாதன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக