பகைவன்
பசுபதி
பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தி லேறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்.
அண்டை மனைகளிலே -- அவனால்
. . அவச்சொல் பெற்றுவிட்டேன்
நண்பனவன் அல்லவே -- எனக்கு
. . நச்சுப் பகைவனவன்.
தீய குணம்மனத்தில் --தேங்கத்
. . தித்திப்புக் காட்டிவிட்டான்
ஆயுள் முழுதுமவன் -- எனக்(கு)
. . ஆண்டானாய் ஆகிவிட்டான்.
வாழ்வினில் தோல்விகளை-- எனக்கு
. . வாரி வழங்கிவிட்டான்
தாழ்வில் மனமயர்ந்தேன் -- அவனைச்
. . சந்திக்க ஆசைகொண்டேன்.
காலம் சுழன்றதடா -- அவனோ
. . கண்ணில் தெரியவில்லை
மூலப் பகைவனவன் --ஒருநாள்
. . முகத்தைக் காட்டிவிட்டான்.
கண்ணாடி முன்னிலையில் -- அன்று
. . கண்டேன் விரோதிமுகம்
விண்டேன்; விழிதிறந்தேன் -- எனக்கு
. . வெம்பகை நானேதான்.
**********
( அமுதசுரபி 2002 தீபாவளி மலரில் வந்த ஒரு கவிதை )
பசுபதி
பிள்ளைப் பிராயத்திலே --என்மனப்
. . பீடத்தி லேறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே -- கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்.
அண்டை மனைகளிலே -- அவனால்
. . அவச்சொல் பெற்றுவிட்டேன்
நண்பனவன் அல்லவே -- எனக்கு
. . நச்சுப் பகைவனவன்.
தீய குணம்மனத்தில் --தேங்கத்
. . தித்திப்புக் காட்டிவிட்டான்
ஆயுள் முழுதுமவன் -- எனக்(கு)
. . ஆண்டானாய் ஆகிவிட்டான்.
வாழ்வினில் தோல்விகளை-- எனக்கு
. . வாரி வழங்கிவிட்டான்
தாழ்வில் மனமயர்ந்தேன் -- அவனைச்
. . சந்திக்க ஆசைகொண்டேன்.
காலம் சுழன்றதடா -- அவனோ
. . கண்ணில் தெரியவில்லை
மூலப் பகைவனவன் --ஒருநாள்
. . முகத்தைக் காட்டிவிட்டான்.
கண்ணாடி முன்னிலையில் -- அன்று
. . கண்டேன் விரோதிமுகம்
விண்டேன்; விழிதிறந்தேன் -- எனக்கு
. . வெம்பகை நானேதான்.
**********
( அமுதசுரபி 2002 தீபாவளி மலரில் வந்த ஒரு கவிதை )
தொடர்புள்ள பதிவுகள் :
அருமையான கவிதை கடைசி வரியில் நானே எனக்கு பகைவன் என்று கூறியதில் மிகவும் ரசித்தேன் -வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு