வானவெளியிலே !
மே 31. எஸ்.வி.வி. அவர்களின் நினைவு தினம்.
எஸ்.வி.விஜயராகவாச்சாரி அல்லது எஸ்.வி.வி (25-8-1880 - 31-5-1950
) ஒரு முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர் ; 40/50-களில் விகடனில் இவருடைய கதை, கட்டுரை, நாவல்களைப் படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது.
அவர் மறைந்தவுடன், 'கல்கி' ஒரு நீண்ட தலையங்கத்தைக் கல்கியில் எழுதினார். ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த எஸ்.வி.வி.யைத் தமிழில் எழுதவைத்ததில் கல்கிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. விகடனை விட்டு விலகின கல்கி, தன் சொந்தப் பத்திரிகையான ‘கல்கி’யில் எழுத எஸ்.வி.வி.யை அழைத்தார். மறுத்த எஸ்.வி.வி. தொடர்ந்து விகடனுக்கு மட்டுமே அவர் மறையும் வரை --1950 வரை --எழுதிவந்தார். ( ஓரிரு கட்டுரைகள் கல்கியில் வந்தன என்பது என் நினைவு, பின்னர் அவற்றை வெளியிட முயல்வேன்)
இதோ கல்கியின் தலையங்கம்.
அவர் 1950-இல் மறைந்தவுடன், விகடன் இப்படி எழுதியது :

===
நாம் தெரிந்து கொண்ட சிலரை அவர்கள் ஆயுட்காலத்திலேயே மறந்துவிடுகிறோம்; இன்னும் சிலரைக் காலமானவுடனே மறந்து விடுகிறோம். ஆனால், என்றைக்கும் மறக்கமுடியாதபடி நம் மனத்தில் ஆழ்ந்து தங்கியிருப்பவர்கள் சிலர் உண்டு. அப்பேர்ப்பட்டவர்களில் காலஞ்சென்ற எஸ்.வி.வி. மிகவும் முக்கியமானவர். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு என்றென்றும் நிலைத்து இருந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுமார் 17 வருஷங்களுக்கு முன் ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டு இருந்த எஸ்.வி.வி.யை எப்படியும் தமிழில் எழுதும்படி செய்யவேண்டு மென்ற எண்ணத்துடன் ஸ்ரீ வாஸனும், ஸ்ரீ கல்கியும் ஒரு நாள் திடீரென்று திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே எஸ்.வி.வி. பிரபலமாக வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்தார். இவர்களை வரவேற்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர், "கல்கியின் தமிழை ரஸித்த வாசகர்கள் என் தமிழைப் படிப்பார்களா?'' என்று ஒரு போடு போட்டார்.
"உங்கள் ஹாஸ்யம் எந்த பாஷையிலும் பிரகாசிக்கும். முக்கியமாக, அது தமிழர்களின் வாழ்க்கை யையே அடிப்படையாகக் கொண்டுள்ளதால் ஆங்கிலத்தை விட, தமிழில்தான் அதிகமாகப் பிரகாசிக்கும். நீங்கள் அவசியம் தமிழில் எழுதவேண்டும். பிறகு ஆங்கிலத்தில் எழுதுவதைக்கூட நீங்கள் நிறுத்தினாலும் நிறுத்தி விடுவீர்கள்'' என்று வற்புறுத்தியதன்பேரில் அவர் ஆனந்த விகடனுக்கு எழுத ஒப்புக்கொண்டார். 'தாகக்ஷாயணியின் ஆனந்தம்' என்ற அவருடைய முதல் கட்டுரையிலேயே அவர் தமிழிலும் நன்றாக எழுதக் கூடும் என்பதை நிரூபித்துக் கொண்டுவிட்டார். அன்று முதல் அவருடைய கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரிக்கும் பெருமை ஆனந்த விகடனுக்கே கிடைத்தது.
எஸ்.வி.வி. வெகு நாளாகவே நோய்வாய்ப்பட்டிருந்து, சென்ற மூன்று மாதங்களில் அது அதிகமாகிக் காலமானார். அத்தனை சிரமத்திலும்கூட அவருடைய ஹாஸ்யம் அவரை விடவில்லை. தேக நிலை கேவலமாகி, 'ஸ்ட்ரெப்டோமைஸின்' என்ற ஒளஷதத்தை இஞ்செக்ஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னாராம். அதற்கு எஸ்.வி.வி., "நன்றாகக் கொடுங்கள். எஸ்.வி.வி. ஒரு பெரிய எழுத்தாளர், ஆசிரியர் இல்லையா? கேவலம் ஒரு 'ஸ்ட் ரெப்டோமைஸின்'கூடக் குத்திக் கொள்ளாமலே அவர் இறந்து போனாரென்றால் உலகம்தான் ஒப்புக்கொள்ளுமா?'' என்று பதில் சொன்னாராம்.
எஸ்.வி.வி.யின் பிரிவினால். தமிழ்நாடு ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டது.
====
====
எஸ்.வி. வி அவர்களை அறிந்து கொண்டேன். நன்றி.
பதிலளிநீக்கு