திங்கள், 9 ஜூலை, 2018

1113. பாடலும் படமும் - 37

இராமாயணம் - 9
சுந்தர காண்டம், காட்சிப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு 
                                  அறியாள்;
தூவி அன்னம்மென் புனலிடைத் தோய்கிலா
                                  மெய்யாள்;
தேவு தெண் கடல்அமிழ்து கொண்டு அனங்கவேள்
                                  செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்.

  [   புனைவது ஒன்றுஅன்றி - உடுத்துக் கொண்டிருக்கும் ஓராடையைத்
தவிர;
வேறு - வேறு ஒரு; 

அம் ஆவி துகில் அறியாள் - அழகிய பால் ஆவி ஒத்த ஆடையை அறியாது; 
தூவி அன்ன - மயிலின் தோகை போன்ற (நீலநிறமுடைய); 
மென் புனலிடை - தெளிந்த நீரில்; 
தோய்கிலா மெய்யாள் - குளிக்காத மேனியை உடையவளாய்; 
தேவு - தெய்வத் தன்மை பெற்ற; 
தெண்கடல் அமிழ்து கொண்டு - தெளிந்த பாற்கடலில் தோன்றிய அமுதத்தை மூலப் பொருளாகக் கொண்டு; 
அனங்க வேள் செய்த - மன்மதனால் செய்யப்பெற்ற; 
ஓவியம் - விக்கிரகம்; 
புகை உண்டதே ஒக்கின்ற - புகையால் விழுங்கப் பெற்றதை ஒத்திருக்கின்ற; 
உருவாள்வடிவத்தை உடையாள். ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக