ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

1133. பாடலும் படமும் - 41

இராமாயணம் - 13
யுத்த காண்டம், முதற்போர்புரி படலம்


[ ஓவியம்: கோபுலு ]

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

[ஆள்  ஐயா-  அரக்கரை  ஆள்கின்ற  ஐயா; 
உனக்கு அமைந்தன - உனக்குத்  துணையாக அமைந்திருந்த படைகள்
அனைத்தும்; 
மாருதம் அறைந்த  பூளை ஆயின கண்டனை-  பெருங்காற்றினால்  தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து  போயினமையைக் கண்டாய்;  
இன்று போய் நாளை போர்க்கு வா- இன்று உன் இலங்கையரண்மனைக்குச் சென்று, (மேலும்    போர்புரிய  விரும்பினால்)   போர்க்கு   நாளைக்கு வருவாயாக; 
என- என்று; 
நல்கினன் -(இராவணனுக்கு) அருள் புரிந்து   விடுத்தான்;  (யார்  என்னில்) நாகு இளங்கமுகின்மிகவும் இளைய கமுக மரத்தின்மீது; 
வாளை தாவுறும் கோசல நாடுடை  வள்ளல் - வாளை  மீன்கள்  தாவிப் பாயும் (நிலம், நீர்வளம்  மிக்க)   கோசல   நாட்டுக்கு  உரிய  வள்ளலாகிய
இராமபிரான்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக