சனி, 22 ஜூன், 2019

1311. பாடலும் படமும் - 67

வாமன அவதாரம்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


அருணகிரிநாதர்  பல பாடல்களில் திருமாலின்  வாமனாவதாரத்தைக் குறிக்கிறார்.  உதாரணமாக, “  சீர்பாத வகுப்”பில்  வரும் சொற்றொடர்:

வடிவு  குறளாகி மாபலியை 
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில்

( குள்ள வடிவங் கொண்ட வாமனா மூர்த்தியாக,  மகா பலி சக்ரவர்த்தியை,  கடினமான சிறையில் வைக்க,  அண்டத்தின் உச்சி பிளவுபட, முழுமையாக வளர்ந்த மேகம் அன்ன நிறமும் கொடைத் திறமும் கொண்ட திருமால்)

திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:

தொழுநீர் வடிவில் குறளுருவாய் 
  வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்ட
  மூவா வுருவி னம்மானை
உழுநீர் வயலுள் பொ ன்கிளைப்ப 
  ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து
  அடியேன் கண்டு கொண்டேனே.


பொருள்:  கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய
வடிவு கொண்ட வாமன ரூபியாய் அவதரித்து மஹாபலியினிடத்தில்
முன்பொருகால் கடல் சூழ்ந்த உலகத்தை இரந்து பெற்ற விகாரமற்ற ரூபத்தையுடையனான ஸர்வேச்வரனை, (எப்போதும்) உழுவதையே இயல்பாகவுடைய வயல்களிலே பொன் விளையப் பெற்றதும் வேறு சில இடங்களில் முல்லைமலர்களும் கருமுகைமலர்களும் செங்கழுநீர்ப் பூக்களும் மலரப் பெற்றதுமான திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டு கொண்டேன்-

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக