எழுத்து கம்பீரம்!
ம.வெ.சிவகுமார்
ஏப்ரல் 8. ஜெயகாந்தனின் நினைவு தினம். அவர் 2015-இல் மறைந்த சமயம், கல்கியில் வந்த கட்டுரை.
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
ஜே.கே. பற்றிய ஒரு அரை வேக்காட்டு பிரசுரம் இது. கல்கி போன்ற பத்திரிகைகள் இப்படியான விவரமில்லாத காரியங்களைச் செய்தால் இதை வாசிக்கும் எதிர்காலத் தலைமுறையினர் ஜே.கே.-பற்றி எபடியான சித்திரத்தை மனத்தில் கொள்வர்?..
பதிலளிநீக்குஇதைப் பிரசுரித்தற்கு பிராயசித்தமாக ஜெ.கே. என்ற ஆளுமைப் பற்றி விவரமாகச் சொல்லும் வேறு கட்டுரை ஒன்றை பிரசுரியுங்கள். என்னிடம் கேட்டால் நான் கூட அப்படியான ஒன்றைத் தருவேன்.
ஜீவி; அனுப்புங்கள். போடுகிறேன். s.pasupathy@yahoo.ca
பதிலளிநீக்கு// அதற்குப் பிறகு தான் விகடன் ஜெயகாந்தன் கூட்டணி முடிந்தது.. //
பதிலளிநீக்குஅன்னிப் பிரவேசத்திற்குப் பிறகு -- தினமணிக் கதிர் வரவுக்குய் முன் -- தொடர்ச்சியாக எவ்வளவு கதைகள் விக்டனிலேயே தொடர்ச்சியாக ஜெ.கே. எழுதியிருக்கிறார்? கூட்டணி முடிந்தது என்கிறாரே?
பரலி சு. நெல்லையப்பருக்கு பாரதியாருக்குமான உறவு எத்தகையது?.. பாரதியாரின் நூல்களை வெளியிடுவதற்காகவே பிறவி எடுத்திருப்பதாக நினைத்தவர் பரலி. பாரதியாரின் மேல் அதீத மோகம் கொண்டவர் ஜெயகாந்தன். அவர் பேச்சில் பாரதியார் வாழ்ந்தார்.. பாரதியார் காலத்து பரலி வேறு;
பிற்காலத்து வயறு ஒடுங்கிய வறுமை ஆட்கொண்ட பரலி வேறு. என்ன தான் மயக்க நிலையில் இருந்தாலும் இந்த வித்தியாசம் கூடத் தெரியாமலா, ஜெயகாந்தன் அந்த இடி இடி சிரிப்பு சிரித்திருப்பார்?.. பரலியை மிகவும் தாழ்ந்து காட்டிய இந்தப் படப்பிடிப்பு என் மனதை மிகவும் வாட்டியது. அதான் பொறுக்க முடியாமல் எழுதினேன்.
ஜெயகாந்தனை வாசித்த அவருடன் பழகிய அனுபவம் பற்றி ஒரு கட்டுரை அனூப்பி வைக்கிறேன்.
லேசான நீளத்துடன் இருந்தாலும் தங்கள் தளத்தில் அது பிரசுரமாவது எனக்குப் பெருமை. நன்றி, பசுபதி ஐயா.
ஜீவி, மகிழ்ச்சியுடன், உங்கள் பயைப்பை, அதற்குரிய கவனத்துடன் வெளியிடுவேன்.
பதிலளிநீக்குபரலியாரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். சென்னையில், தி.நகரில், வாணி மகாலுக்கு வருடா வருடம் பாரதி விழாவிற்கு தவறாமல் வருவார். நீங்கள் எழுதியது எனக்கும் மிகவும் மனவருத்தத்தைக் கொடுத்தது.
நம் கடமையை நாம் செய்வோம்.
பரலி. சு. நெல்லையப்பர் பற்றிய ஒரு சிறு குறிப்பு;
பதிலளிநீக்குhttps://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/