வியாழன், 4 நவம்பர், 2021

1964. தீபாவளித் திருநாளினிலே: கவிதை

தீபாவளித்  திருநாளினிலே

பசுபதி



தெய்வக் கண்ணனைக் கொண்டாடும் – இந்தத்
  தீபா வளித்திரு நாளினிலே
பொய்மை இருட்டினைப் போக்கிடுவோம் – நம்
  புந்தி எனுமகல் விளக்கெடுத்தே !

குளிக்கும் நீரினில் கங்கையென – அன்பு
  கொடுக்கும் நற்குணம் பொங்குகவே !
களிப்பைப் பகிர்ந்திடும் நன்னாளில் – நாம்
  அளிப்போம் உதவியை வறியவர்க்கே!

அரக்கன் நரகனின் வதத்தினிலே – உதவி
  அளித்த பாமையை மறப்போமா?
கருணை காட்டிடும் தாய்க்குலமும் – தீக்
  கயமை அழிப்பதில் முன்வரட்டும் !   

வெட்டிச் செலவுகள் தவித்திடுவோம் – இன்று
  வெடிப்போம் சினத்தினைப் பட்டாசாய்!
நட்பின் சுடர்களைத் தூண்டிடுவோம் – இந்
  நாட்டின் பெருவிழாப் போற்றிடுவோம் !

07-11-15 

( 'தினமணி'யில்  2015 -இல் வந்த கவிதை) 

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக