புதன், 17 நவம்பர், 2021

1971. தேர்தல்: கவிதை

தேர்தல் 

பசுபதி 


[ஆறு வருடங்களுக்கு முன் -  17-11-2015 அன்று -  தினமணி/கவிதைமணி -யில் வெளியான கவிதை. ( கொடுக்கப்பட்ட தலைப்பு: தேர்தல் ) ]


தேர்தல் முடிந்து போச்சு தம்பி!

  . . திரையும் தூக்கி யாச்சு!

தில்லு முல்லு திரைப்ப டத்தைத்

  . . திடுக்கி டாமல் பாரு!


வாக்குத் தேடி வீடு வந்த

 . .  மனிதர் மறைந்து போவார்!

சாக்குப் போக்கு சொல்லி வாக்கைத்  

. . தட்டிக் கழிப்பார் பாரு!


எனக்குக் கல்வி ஒன்றே தெய்வம்

  . . என்ற வெற்றி வீரர்

தினமும் மறைவாய் லக்ஷ்மி பூஜை

  . . செய்யும் காட்சி பாரு!


இனிமேல் ராம ராஜ்யம் தருவேன்

  . . என்று சொன்ன ஹீரோ

சினிமா முடிவில் வில்ல னாதல்

  . . சினப்ப டாமல் பாரு!


 விளக்கு மாறு பழசாய்ப் போனால்

 . .  வேலை செய்யு மாப்பா?

களைத்த மக்கள் புதுசு வாங்கக்

  . . காத்தி ருத்தல் பாரு!

 

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக