செவ்வாய், 28 டிசம்பர், 2021

1997. அ.மாதவையா - 2

எனது பழைய தோழர்

அ.மாதவையா


சார்ல்ஸ் லாம்ப் (Charles Lamb) என்ற ஆங்கிலக் கவியின் 

 OLD FAMILIAR FACES  என்ற கவிதை பிரபலமானது. இதன் தமிழ் 

 மொழிபெயர்ப்பைத்  "தமிழ்  நாவல் முன்னோடி" அ.மாதவையா "தமிழர் நேசன்" இதழில் 1917/18- வாக்கில்   வெளியிட்டார்.  'கலைமகளி'ல் ஒரு கௌரவ ஆசிரியராய் இருந்த "அறிவியல் எழுத்து முன்னோடி" பெ.நா.அப்புசாமிக்கு அ.மாதவையா சிறிய தந்தை. அப்புசாமி அந்தக் கவிதையைக்  கண்டுபிடித்து, 'கலைமகளில்' 1935-இல் வெளியிட்டார்.  அதுதான் இன்றையப் பதிவு. 

இந்த வருடம் காலத்தில் கரைந்த என் நண்பர்களை நினைக்கும்போது, இது என் கவிதையாகவே மாறுகிறது. 

ஓம்  சாந்தி. 

====

 1. என்னுடன் கல்வி இளமையில் கற்றவர் 
என்னுடன் இன்பமாய் ஆடிய தோழர் 
அனைவரும் போயினர், அந்தோ ! 
எனது பழைய தோழர் எவருமே. 

2. உரிமை நண்பரோ டுண்டாட் டயர்ந்தும், 
சிரித்தும், பேசியும் சென்றன பல நாள் ; 
அனைவரும் போயினர், அந்தோ ! 
எனது பழைய தோழர் எவருமே. 

3. அழகில் எதிரிலா ஒருத்திமேல் அன்பாய்ப் 
பழகினேன் ; இன்றவள் என் முகம் பார்க்கிலள்; 
அனைவரும் போயினர், அந்தோ !
எனது பழைய தோழர் எவருமே. 

4. இருக்கிறான் ஒருதுணை ; எவரும் இணையிலை;
பொருக்கென, நன்றி கெட்டவர் போல, நான் 
அந்த நண்பனை அகன்றேன், 
சிந்தையில் பழைய என் சிநேகரை நினைந்தே. 

5. இளைமையில் இருந்த இடமெல்லாம், பேய்போல்
வளைய வந்தேன், நான் செலற் குரியதோர் 
பாழென இருந்ததிப் பாரும்,---
தோழர் பழையரைத் துருவித் தேடியே. 

6. என்னுயிர்த் தோழ! என் தம்பியின் இனிய நீ 
என்னுடன் எந்தை இல் ஏனோ பிறந்திலை? 
இன்று நம் தோழரை எண்ணி 
ஒன்று சேர்ந்து நாம் பேசல் ஒண்ணுமே. 

7. இறந்தனர் சிலர், எனைத் துறந்தனர் சிலர், சிலர் 
மறந்தெனை நீங்கினர் மற்றெவர் பிரித்தென. 
அனைவரும் போயினர், அந்தோ !
எனது பழைய தோழர் எவருமே. 
                  



ஆங்கில மூலம் இதோ :


The Old Familiar Faces
BY CHARLES LAMB


I have had playmates, I have had companions,
In my days of childhood, in my joyful school-days,
All, all are gone, the old familiar faces.

I have been laughing, I have been carousing,
Drinking late, sitting late, with my bosom cronies,
All, all are gone, the old familiar faces.

I loved a love once, fairest among women;
Closed are her doors on me, I must not see her —
All, all are gone, the old familiar faces.

I have a friend, a kinder friend has no man;
Like an ingrate, I left my friend abruptly;
Left him, to muse on the old familiar faces.

Ghost-like, I paced round the haunts of my childhood.
Earth seemed a desert I was bound to traverse,
Seeking to find the old familiar faces.

Friend of my bosom, thou more than a brother,
Why wert not thou born in my father's dwelling?
So might we talk of the old familiar faces —

How some they have died, and some they have left me,
And some are taken from me; all are departed;
All, all are gone, the old familiar faces.
====


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

அ.மாதவையா

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக