திங்கள், 28 பிப்ரவரி, 2022

2035. கதம்பம் - 73

 அமரத்வம்

பிப்ரவரி 28. கமலா நேருவின் நினைவு தினம். அவர் மறைந்தபின் , 'ஆனந்த விகடன்' 8.3-1936-இதழில் வெளியிட்ட தலையங்கத்தில் இருந்து ஒரு பகுதி இதோ. 

=====

ஸ்ரீமதி கமலா நேரு கோடீசுவரர் குடும்பத்தில் பிறந்தவர். பண்டித நேருவின் குடும்பத்தாரைவிட அவர்கள் பன்மடங்கு செல்வர்கள். 1916-ம் வருஷத்தில் ஸ்ரீமதி கமலாவுக்கும் பண்டித ஜவஹரிலாலுக்கும் கலியாணம் நடந்தது.

அவர்களுக்குக் கலியாணமான மறு வருஷத்தில் தேசத்தில் 'ஹோம் ரூல்' கிளர்ச்சி எழுந்தது. அதற்கு அடுத்த வருஷங்களில் சத்தியாக்கிரஹ இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் தொடர்ந்து வந்தன. பண்டித ஜவஹரிலால் நேரு தாம் வசித்த சுக போக மாளிகையின் ஏழாவது உப்பரிகையி லிருந்து தியாக நெருப்பில் குதித்தார்; அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

ஸ்ரீமதி கமலா நேரு, தமது கணவன் தியாக வாழ்வை மேற்கொள்வதற்குக் குறுக்கே நிற்கவில்லை; அதற்கு மாறாக அவருக்கு இடைவிடாமல் உற்சாகம் அளித்து வந்தார். தம்மையும் தியாக வாழ்வுக்குச் சித்தமாக்கிக்கொண்டார். குடும்பத்திற்குள் தேக துர்ப்பலமானவர் அவர்தான்; ஆயினும் அவரும் மற்றவர்களுக்குச் சளைத்து விடாமல் சிறை புகுந்தார்.

ஸ்ரீமதி கமலா நேருவின் சிறைவாசந்தான் அவர் நம்மைவிட்டு இவ்வளவு சீக்கிரம் பிரிந்ததற்குக் காரணம் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.

[ நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம் 

கமலா நேரு: விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக