ஞாயிறு, 10 ஜூலை, 2022

2176. சோ ராமசாமி - 8

சத்தியம் அஹிம்ஸை!

சோ

                                

 


சோ’ விகடனில் 1970-இல் எழுதிய ஏழாம் நவரச(!)க் கதை (பாப்பா மலர் கதை)



 

வானொலி நிலையத்தில் பாப்பா மலருக்காக சிறுவர்கள், சிறுமியர்கள் கூடியிருக்க, ரேடியோ அண்ணா ஒரு சிறுமி யைப் பார்த்துக் கேட்கிறார்...

''உன் பேர் என்னம்மா?''

''ஆமப்பியா!'' என்கிறது குழந்தை.

''ஆமப்பியாவா... ஓ, ராமப்ரி யாவா? உம், சொல்லும்மா. என்ன கதை சொல்லப்போறே?''

''வந்து... ஒயு ஊய்லே... இல்லே...வந்து... ஒயே ஒயு ஊய்லே...''

''ம்... கதை ரொம்ப சுவாரஸ் யமா இருக்கே! ம்... சொல்லு!''

''ஒயே ஒயு ஊய்லே... ஒயு காக்கா. ம்ம்ம்... வந்து... அந்த காக்கா ஒயு வதைய வாயிலே வெச்சுந்து இய்ந்துது...''

''பலே! பலே!'' - ரேடியோ அண்ணாவிற்கு உற்சாகம் தாங்க வில்லை. கதை இவ்வளவு சுவாரஸ்யமாகப் போகும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ''ம்... மேலே சொல்லு. காக்கா வாயிலே வடை இருந்தது. அப்புறம்...''

''ம்ஹ¨ம்... காக்கா வாயிலே வதை இல்லை... வதையைதான் காக்கா வாயிலே வெச்சுந்து இய்ந்தது.''

''சரி, காக்கா வாயிலே வடையை வெச்சுண்டு இருந்தது.'' ரேடியோ அண்ணா தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிறார்.

''அந்த காக்கா வந்து, மயத்து மேலே இய்ந்துது. அப்போ அங்கே ஒயு நயி வந்தது!''

''ஓ! நரி வந்துதா?!''

''நயி வந்து... காக்கா பாத்து... 'காக்கா, காக்கா... நீ நன்னா பாத்துப் பாதுவியே... ஒயு பாத்துப் பாது'ன்னு சொல்லித்து!''

''பலே! அப்புறம்?''

''வந்து... காக்கா... கா... கான்னு நன்னா உய்க்க நம்ம யேடியோவிலே பாதய மாதியே பாத ஆயம்பிச்சுது...''

''சரி... சரி... அப்புறம்?''

''காக்கா வதைய வாயிலே வெச்சுந்து இய்ந்ததா... அது பாத ஆயம்பிச்ச உதனே... வாயைத் தியந்து பாடித்து... வாயைத் தியந்த உடனே... வாய் தியந்தது. வந்து... வந்து...''

''ம்... வாயைத திறந்த உடனே வடை கீழே விழுந்துடுத்தா?'' _ ரேடியோ அண்ணாவால் சஸ் பென்ஸைத் தாங்கமுடிய வில்லை!

''வாயைத் தியந்த உதனே வதை கீயே உயலை... வதை கீயே உயத்துக்குள்ள நயி அதை கப்புனு பிதிச்சுதுத்து...''

''ஐயய்யோ! அடப் பாவமே!'' - எதிர்பாராத இந்த அதிர்ச்சி தரும் முடிவைத் தாங்கும் சக்தி இல்லாமல் திணறுகிறார் ரேடியோ அண்ணா.

''வதையை நயி வாயிலே பிதிச்சு, துடுதுடுன்னு ஓதிப் போச்சு!''

''காக்கா என்ன பண்ணித்து?''

''காக்கா... வந்து... வந்து...''

''ஓஹோ! 'நாம முட்டாள்தனமா பாடினதாலேதானே வடையைப் பறி கொடுத்தோம். நம்ம சக்தியை பெரிசா நினைச்சுண்டா ஏமாந்து தான் போவோம். தன்னடக்கமா இருந்தாதான் நன்னா வாழ லாம்'னு காக்கா புரிஞ்சுண்டு தாக்கும்..?''

''உம்... கதை முதிஞ்சு போச்சு'' என்கிறது குழந்தை ராமப்ரியா.

எல்லாக் குழந்தைகளும் கை தட்டி மகிழ்கின்றன. ''இந்தக் கதையிலேருந்து நீங்கள்ளாம் என்ன தெரிஞ்சுக்கணும்? மகாத்மா காந்தி சொன்ன மாதிரி நாமெல்லாம் நடந்துக்கணும். காந்திஜி காட்டின வழி அஹிம்சை, சத்தியம். அது ரெண்டையும் நாமெல்லாம் மறக்கவே கூடாதுன்றதை ராமப்ரியா எவ்வளவு அழகா சொல்லிட்டா!'' என்று முடிக்கி றார் ரேடியோ அண்ணா.

 

 [ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சோ ராமசாமி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக