சங்கீத ‘ஜோக்ஸ்’!
சிரிகமபதநி - 0
சிரிகமபதநி - 0
[ மேற்கண்ட படம் எனக்கு அரியக்குடி ராமானுஜ ஐயங்காரையும், பாலக்காடு மணி ஐயரையும் நினைவுறுத்துகிறது! :-)) ]
[நன்றி: விகடன்]
தொடர்புள்ள பதிவுகள்:
சிரிகமபதநி
சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்
சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி
மாமாங்க மாறுதல்கள் ! ..மாலி-சில்பி
சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்
சங்கீத நகைச்சுவை சுவையாக இருந்தது. பகிர்ந்து கொண்டதற்கு
பதிலளிநீக்குநன்றி.
கச்சேரியில் பேசுவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகிறது.
அதை வித்வான்கள்
தங்களுக்கே உரிய முறையில் சமாளிக்கிறார்கள்.
செம்மங்குடி ஒரு கச்சேரியில் "பேசி முடிச்சாச்சா. நான் இப்ப பாடலாமா"
என்று கேட்டார் பெண்கள் பகுதியை நோக்கி. அப்படியும் பேச்சு
நிற்கவில்லை. மின்விசிறிகளை அணைக்கச் சொன்னார். புழுக்கம்
மிகுந்து பேச்சு நின்றது. "வெள்ளைக்காரன்கிட்டே இருந்து சேர்,
ஃபேன், சூட்டு, கோட்டு எல்லாம் கத்துண்டிருக்கோம். ஆனா ஒரு
கச்சேரியில அமைதியா கேக்கறது மட்டும் கத்துக்கலை" என்றார்.
அதிக இடையூறின்றி கச்சேரி தொடர்ந்தது.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
வாஸ்தவம். ஒரு சமயம் ராத்திரி 2 மணி. மாலியின் குழலிசை தேவகானமாக வானத்திலிருந்து பொழிகிறது, ராமககிருஷ்ணா மிஷன். ஒருவர் எழுந்து கதவைத் திறந்து வெளியேற, கதவு கிரிச்சீட்டது. பதில்' க்ரீச்' குழலலிருந்து. 'உட்காருங்கோ' என்று அதட்டல். அவரும் வந்து அமர்ந்தார்.
பதிலளிநீக்குஇன்னம்பூரான்
Very good humour based on carnatic music
பதிலளிநீக்குமிகவும் பழைய வெளியீடுகளை தற்பொழுது பகிர்வது தங்களிடம் உள்ள சிறந்த திறமை. எங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது தங்களுக்கு எங்கள் யவரின் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
பதிலளிநீக்கு23 டிசம்பர் 1945 அட்டையைப் பார்த்ததும் 'அரியக்குடியாரும் பாலக்காடு மணியும் போலிருக்கே' என நினைத்தேன். கீழே உருட்டிப் பார்த்தால் நீங்களும் அதையே எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவயலின் ஜோக்கை பார்த்தபோது முன்னே ஏதோ ஒரு பழைய படத்தின் நகைச்சுவை ஞாபகம் வந்தது. ஒரு வாத்தியக் கோஷ்டியில் நாலைந்து பேர் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என். எஸ். கே. வா தங்கவேலுவா நினைவில்லை, ரொம்ப நேரம் பார்த்துட்டு போய் கீழே தரையில ஏதோ தேடறாங்க. என்ன தேடுறீங்க என்று யாரோ கேட்க "இல்லே, இவங்க இத்தனை நேரமா அறுத்துத் தள்றாங்களே, இந்த தூள் எல்லாம் எங்க போச்சுன்னு தேடறேன்" என்பார்.
Thanks for sharing these gems.
பதிலளிநீக்கு