அம்பரமே
ஆண்டாளின் ‘திருப்பாவை’ப் பாடல்களுக்கு வரையப் பெற்ற பழங்காலப் படங்களைத் தேடினேன். ‘திருப்பாவை’ என்ற நூல் கையில் அகப்பட்டது. அதன் முன், பின் அட்டைகளின் படங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
இந்த நூலில் 30 பாடல்களுக்கும் சித்திரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து எனக்குப் பிடித்த ஒரு படத்தை இங்கிடுகிறேன். “அம்பரமே” என்று தொடங்கும் 17-ஆம் திருப்பாவை . நந்தகோபன், கிருஷ்ணன், பலராமன், யசோதை இவர்களைத் துயிலெழுப்பும் காட்சிகள் உள்ள அபூர்வமான படம் இது.
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
( இந்த நூலை எனக்குத் தந்த ஸ்ரீநிவாச ரங்கஸ்வாமி அவர்களுக்கு நன்றி; ரங்கஸ்வாமி அவர்கள் ‘ஒட்டக்கூத்தரை”ப் பற்றி ஓர் அழகிய , சிறிய ஆய்வு நூல் எழுதியிருக்கிறார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.)
நந்தகோபன், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரை எழுப்பும் காட்சியைச் சித்திரிக்கும் ஒரு தற்கால ஓவியம்.
[நன்றி: தினமணி]
மேலும் இப்பாடலுக்கு ( நான் பார்த்த, எனக்குக் கிட்டிய ) சில படங்கள் :
|
[ நன்றி : கேசவ் ] |
[ ஓவியம்: கேசவ் ] |
[ ஓவியம்: சித்ரலேகா; நன்றி : அனந்த் ] |
[ நன்றி: ரவிசந்திரன் ] |
திரு.பசுபதி அவர்களுக்கு,
பதிலளிநீக்குபகிர்வுக்கு மகிழ்ச்சி.கண்டு மகிழ்கிறேன்.
திருப்பாவை நூலின் அட்டைப்படம்
ஆண்டாளின் அழகு தெய்வீகம்.அருமை.
நந்தகோபன்,முதலானோரைத் துயிலெழுப்பும்
காட்சிகள் கொண்ட சித்திரம் ரொம்பவும் பழையகாலத்தது
மாதிரி இருக்கிறது.அதிலும் அணிகள்,உடை,கட்டில் எல்லாம் வேலைப்பாடு
கொண்டவையாய் இருக்கிறது.
மணியனின் காளிங்க நர்த்தனம் சித்திரம் கொள்ளை அழகு.
மிக்கநன்றி.
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள தங்கமணி அவர்களுக்கு,
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி.
1951-ல் வெளியான 'சித்திரத் திருப்பாவை’ என்னும் நூலில் மறைந்த தமிழ்ப் பேரறிஞர் பி.ஸ்ரீ. ஆசார்யா அவர்கள் ’திருப்பாவை’ மூலத்தையும் தமது உரையையும் முன்னாள் ஆனந்தவிகடன் ஓவியர் சித்ரலேகாவின் படங்களுடன் பதிப்பித்துள்ளார். (இப்போது இந்நூல் கிட்டுகிறதா என்று தெரியவில்லை). முகப்புப் பக்கப் படத்தையும் சிலபாடல்களுக்கான படங்களையும் சந்தவசந்தம் இணையக் குழுமத்தில் 2009-ல் இட்டுள்ளேன்.
பதிலளிநீக்குஅனந்த் 4-1-2016
நன்றி, அனந்த். நீங்கள் அனுப்பிய “அம்பரமே” பாடலுக்கு வரையப்பட்ட சித்ரலேகா ஓவியத்தை விரைவில் பதிவில் சேர்க்கிறேன்.
பதிலளிநீக்கு