ஞாயிறு, 17 நவம்பர், 2013

தேவன் - 15: ‘அம்பை’ யின் கட்டுரை

’தேவன்’ கதைகளில் பெண்கள்
 ‘அம்பை’ 


தேவனின் நாவல்களின் தலைப்புகளைப் பார்த்தால் பாதிக்கு மேல் பெண்களின் பேர்கள் தாம்!  மாலதி, மைதிலி, கல்யாணி, மிஸ் ஜானகி, கோமதியின் காதலன், லக்ஷ்மி கடாக்ஷம் !  ‘பார்வதியின் சங்கல்பம்’ , 'நடனராணி இந்திரா’ போன்ற குறுநாவல்கள், கதை-கட்டுரைத் தொடர் 'ராஜத்தின் மனோரதம்’ இவை வேறு உண்டு!    ஐந்து நாவல்களின் பெயர்களில் தான் ஆண்கள் தலைதூக்குவார்கள் : துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி சந்துரு! இப்படி இருக்கும்போது, யாராவது ‘தேவ’னின் கதைகளில் வந்த பெண்களைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினால் நன்றாய் இருக்குமே என்று தோன்றுகிறதல்லவா? அதைத் தான் பிரபல எழுத்தாளர் “அம்பை” செய்தார்!  ’தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் இது நமக்குக் கிட்டிய ஒரு ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ தான் என்று சொல்லவேண்டும் ! ( ஆம், “அம்பை” யின் இயற்பெயர் ‘லக்ஷ்மி’தான்! மேலும், அவருடைய புனைபெயரான “அம்பை”க்கும் “தேவ”னின் ஒரு பாத்திரத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது! பொருத்தம், தகுதி  போதுமா?  )

அண்மையில் சென்னையில் நடந்த தேவன் நூற்றாண்டு விழாவில் ‘அம்பை’ இந்தக் கட்டுரையைத் தான் சமர்ப்பித்தார். கூடவே “லக்ஷ்மி கடாக்ஷ”த்தில் வந்த ‘கோபுலு’வின் பல சித்திரங்களையும் காட்டி அவையினரை ( கோபுலுவும் அங்கிருந்தார்! ) மகிழ்வித்தார்!

’அமுதசுரபி’ 2013 தீபாவளி மலரில் வந்த ’அம்பை’யின் அந்தக் கட்டுரையை இங்கே மீண்டும் இடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! ’தேவன்’ நூற்றாண்டு விழாத்தருணத்தில் மிகப் பொருத்தமாக இந்தக் கட்டுரையை வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு என் நன்றி!







[ நன்றி : அமுதசுரபி, நவம்பர் 2013 ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நூற்றாண்டு விழா -2

தேவன் நூற்றாண்டு விழா -1
 
தேவன் படைப்புகள்

துப்பறியும் சாம்பு



7 கருத்துகள்:

  1. தீபாவளி மலர் கிடைக்கப் பெறாத என்போன்றோர்க்கு ஒரு அரிய வாய்ப்பாக இங்கிட்டமைக்கு நன்றி.
    1957-ல் 13 வயது என்று தொடங்கும் இக்கட்டுரை, அடுத்தப் பக்கத்தில், 1950-ல் 16 வயது என்று அச்சாகியுள்ளது. 1960 என்றிருக்க வேண்டும்.
    மும்பையில் வளர்ந்திருந்தாலும் தமிழில் தேர்ச்சி பெற அம்பைக்கு நல்ல வாய்ப்பும் பெற்றோரின் ஊக்கமும் இருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. தேவனருமை. அம்பைருமை, லக்ஷ்மிகடாக்ஷம் தான் போங்கோ.

    பதிலளிநீக்கு
  3. ’ஆண்கள் தலைதூக்கும்’ நாவல்களின் எண்ணிக்கையை 25% உயர்த்த ’ஜஸ்டிஸ் ஜகன்னாத’னைச் சேர்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.
    தேவனைப் பற்றி மேலும் மேலும் புதியதாகவே தந்துகொண்டே இருக்கும் உங்களின் பணிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கருத்துரைத்த யாவருக்கும் நன்றி.
    சௌந்தர், “அம்பை” மதராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் தான் படித்தார் என்று எண்ணுகிறேன். ( 2008-இல் டொராண்டோவில் இயல் விருது பெற்றபோது என்னால் அவர் பேச்சைக் கேட்க முடியவில்லை. தேவன் விழாவில் அவரைச் சந்தித்து, பேச்சைக் கேட்டதில் மகிழ்ச்சி)
    அனந்த், சேர்த்து விட்டேன் ..”ராஜத்தின் மனோரத”த்தையும் தான்!

    பதிலளிநீக்கு
  6. You are a great blessing, Pasupathy Sir. May you line long happily!

    பதிலளிநீக்கு