செவ்வாய், 17 ஜூன், 2014

குறும்பாக்கள் 7,8 ; சார்புநிலைக் கோட்பாடு

குறும்பாக்கள் 7,8 : சார்புநிலைக் கோட்பாடு 
பசுபதி

7.
ஐன்ஸ்டைனின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னாளில் வீடுவந்து சேர்ந்தாள் ! 

****
8.
ஐன்ஸ்டைனின் சீடன்சொன்ன பேச்சு:
'என்மறதி அதிகமாகிப் போச்சு!
. வாழ்வேகம் மிகவாகி,
. வருங்காலம் இறப்பாகி,
ஜனிக்குமுன்பே நான்எரிந் தாச்சு! '
****
சார்புநிலைக் கோட்பாடு =Theory of Relativity;
சார்புவழி = relative way; மின் =ஒளி.
இறப்பு = இறந்த காலம். 

[ ‘திண்ணை’  ஜூலை, 24, 2003 -இதழில் வெளியானது ]

=================
மூலம்: இரு ஆங்கில லிமெரிக்குகள்
There was a young lady named Bright
Whose speed was much faster than light;
     She set out one day,
      In a relative way
And returned on the previous night.

Said a pupil of Einstein; "It's rotten
To find I'd completely forgotten
      That by living so fast 
      All my future's my past 
And I'm buried before I'm begotten. 
தொடர்புள்ள பதிவுகள்: 

1 கருத்து:

  1. அன்புடையீர்!

    உங்கள் சார்புவழிக் குறும்பாக்களில் அழகுடன் ஆச்சரியம் மின்னுகிறது!
    நான் முயன்ற ஒன்று:

    தந்தையவர் சார்புவழித் துளைவார்
    விந்தையெலாம் விண்வெளியில் அளைவார்
    . வருடங்கள் நாளாகி
    . வயதெல்லாம் தூளாகி
    வந்தபோது மகனைவிட இளையார்!

    --ரமணி, 05/07/2015

    *****

    பதிலளிநீக்கு