பல மாநிலங்களில் இன்று ( 4.4.2015 ) அனுமன் ஜயந்தி .
முதலில் இறையருள் ஓவியர் ‘சில்பி’யின் ஓவிய மடலொன்று ! பிறகு ஒரு கவிதை!
சொல்லின் செல்வன்
பசுபதிஅன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? '
தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '
ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். '
சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.
' 'திருமால் மாருதி! ' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி 'தான் ! தெளிந்தவர் களித்திடுக! '
இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் !
[ திண்ணை’ மே 13, 2004 இதழில் வந்தது ]
தொடர்புள்ள பதிவுகள்
திருமால் -மாருதி : மாலைமாற்று
கவிதைகள்
’சில்பி’யின் மற்ற ஓவியங்கள்
திருமால் மாருதி.............. தெளிந்து களித்தேன்.
பதிலளிநீக்குஇம்மாலைமாற்று அருமை அய்யா!
பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ
என்னும் அகத்துறை குறள் வெண்பாவும் அது...!
தொடர்கிறேன்.
நன்றி.