வியாழன், 23 ஜூன், 2016

குறும்பாக்கள்: 9,10,11 : கானம், கனவு, கல்யாணம்

கானம், கனவு, கல்யாணம்
பசுபதி 



9. கானம் 



"மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் !
வீணை,குழல் மற்றதற்கு விரல் ! "
. . குருசொல்வார் சீடனுக்கு,
. . "குரல்,விரலில் வீணனுக்கு,
இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! "


10. கனவு 


வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
. . இன்னுமொரு நொடியினிலே,
. . இருந்திருப்பாள் மடியினிலே .
என்கனவைக் கலைத்தகடி காரம்!

11.. கல்யாணம் 



முறைமனைவி மூன்றுடைசிங் காரம்,
மும்மணத்திற்(கு) அவன்விளக்க சாரம் :
. . "மறைசொல்லும் பெருங்கடமை !
. . மணமொன்றோ முழுமடமை !
சிறைதள்ளும் குற்றம்இரு தாரம் ! "

தொடர்புள்ள பதிவுகள்:

குறும்பாக்கள்

கவிதைகள்

3 கருத்துகள்:

  1. எங்கள் பேராசிரியர் எனது பார்வையில்

    குறும்பாக்கள் குரும்பாக எழுதுவார் பசுபதி
    குணம் கொண்ட பாக்களுக்குத் தளபதி
    இலக்கணத்தில் கணக்கு வளையா பதி
    இலங்குகின்ற அவர்முகம் முழு மதி

    பதிலளிநீக்கு
  2. வந்தமர்ந்தாள் என்படுக்கை ஓரம்,
    மனங்கவர்ந்த நடிகைஇரா நேரம்.
    . . இன்னுமொரு நொடியினிலே,
    . . இருந்திருப்பாள் மடியினிலே .
    என்கனவைக் கலைத்தகடி காரம்!- எனக்குப் பிடித்த திது.

    பதிலளிநீக்கு