திங்கள், 4 ஜூலை, 2016

விவேகானந்தர் - 1

சந்யாசி கீதம் 


ஜூலை 4. சுவாமி விவேகானந்தரின்  நினைவு தினம்.

விவேகானந்தர் இயற்றிய  பாடல்களில் ஒன்று “ சந்யாசி கீதம் “ ( Song of the Sanyasin ). 13 கண்ணிகள் கொண்ட பாடல் அது. அதை முற்றிலும் , ஒரு கம்பீரமான ஆசிரியப்பாவில் மொழிபெயர்த்தவர் அமரர் பண்டித  ம.கோபாலகிருஷ்ண ஐயர்.

“ சொற்பொழிவும் பொருட்சிறப்பும் நடையின் தெளிவும் ஸ்ரீ ஐயரின் தமிழறிவையும் யாப்புத் திறனையும் நன்கே விளக்குகின்றன” என்று மகாகவி பாரதியார் ம.கோ அவர்களைப் பற்றி எழுதியுள்ளார்.

வீரத் துறவி, வேதாந்த சிங்கம் விவேகானந்தரின் நினைவில், அவருடைய “சந்யாசி கீத”த்தின் முதல் கவிதையின் ( ம.கோ இயற்றிய) மொழிபெயர்ப்பை இங்கே இடுகிறேன்.

மனவலி படை த்த மாசிலாத் துறவீ!
சுவைமலி இன்பச் சுரந்தனை எழுப்புதி! 
மகிதலக் கறைஉறா வெகுதொலைக் கப்பால் , -
புலப்பகை வெறுக்கை புகழ்இவை அமைதியைக் 
கலைப்பதற் கென்றும் தலைப்படாத் தலத்தை 
அறிவுமெய் என்னும் அருவிக ளுடனே 
பரமா நந்தத் திருமா நதிபாய் 
வெற்புறு குகையைப் பொற்புறு வனத்தைப் 
பிறப்பிட மாக்கொடு சிறப்புமிக் கார்ந்தே 
எழும்கீ தத்தை முழங்குதி நன்கு!
ஓதுக நீ “ஓம் தத் ஸத் ஓம்” என.


மூலப் பாடல்:

Wake up the note! - 
   The song that had its birth 
Far off, where worldly taint 
   Could never reach:
In montain caves, and 
    Glades of forest deep
Whose calm no sigh 
    For lust or wealth or fame
Could ever dare to break
    Where rolls the stream
Of knowledge, Truth and 
    Bliss that follows both - 
Sing high that note,
    Sanyasin bold! say " Om tat sat, Om !" 

[ நன்றி: ”அரும்பொருட்டிரட்டு” சந்தியா பதிப்பகம், 2012 ]
 

தொடர்புள்ள பதிவுகள்:

விவேகானந்தர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக