கனவு நாடு
பசுபதி
ஜூலை 1. கனடா நாள். கனடாவின் தேசிய நாள்; பொது விடுமுறை நாள்.
என்றன் இனிய கானடா!
. . இன்பக் கனவு நாடடா!
தந்தை தேசப் புகழினைத்
. . தாயின் மொழியில் சொல்லடா! (1)
கழுகு நாட்டு நேசனாம்;
. . கனடா என்ற தேசமாம்;
அழகு, அமைதிப் பறவைகள்
. . யாவும் இங்கு வாசமாம். (2)
கார்வ ழுக்கும் சாலைகள்;
. . கணினி ஓட்டும் ஆலைகள்;
நீர்சி லிர்க்கும் காலைகள்;
. . நிலவு கொஞ்சும் சோலைகள். (3)
நளின, பருவ அழகுகள்
. . நான்கும் காட்டும் வானிலை;
எளிதில் உறையும் நீர்நிலை;
. . என்றும் ஈர மனநிலை. (4)
வேரில் பிரெஞ்சின் ஊட்டமாம்;
. . மேற்குக் கிழக்குக் கூட்டமாம்;
பாரில் அமைதி நாட்டவே
. . படைகள் அனுப்பிக் காட்டுமாம். (5)
எண்ணெய் என்ற பொக்கிடம்
. . எங்கும் நிலத்தின் அடியிலே;
மண்ணின் மைந்தன் மேபிளின்
. . வண்ணக் கையும் கொடியிலே. (6)
அகதி யான மாந்தரை
. . அழைத்து, இதயம் திறக்குமாம்;
மகுட ராணி பெயரிலே
. . மக்க ளாட்சி சிறக்குமாம். (7)
இனங்கள் மொழிகள் வண்ணமாய்
. . இணைந்த வான வில்லிது;
மனித பண்பு வேர்களை
. . மதித்துப் போற்றும் நாடிது. (8)
கருணைக் கனடா நாடெனக்
. . கைகள் கொட்டி ஆடுவோம்;
அருமைத் தந்தை நாடென
. . அன்னை மொழியில் பாடுவோம். (9)
[ கலைமகள் 2005 தீபாவளி மலரில் வந்த கவிதை.]
தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்
பசுபதி
ஜூலை 1. கனடா நாள். கனடாவின் தேசிய நாள்; பொது விடுமுறை நாள்.
என்றன் இனிய கானடா!
. . இன்பக் கனவு நாடடா!
தந்தை தேசப் புகழினைத்
. . தாயின் மொழியில் சொல்லடா! (1)
கழுகு நாட்டு நேசனாம்;
. . கனடா என்ற தேசமாம்;
அழகு, அமைதிப் பறவைகள்
. . யாவும் இங்கு வாசமாம். (2)
கார்வ ழுக்கும் சாலைகள்;
. . கணினி ஓட்டும் ஆலைகள்;
நீர்சி லிர்க்கும் காலைகள்;
. . நிலவு கொஞ்சும் சோலைகள். (3)
நளின, பருவ அழகுகள்
. . நான்கும் காட்டும் வானிலை;
எளிதில் உறையும் நீர்நிலை;
. . என்றும் ஈர மனநிலை. (4)
வேரில் பிரெஞ்சின் ஊட்டமாம்;
. . மேற்குக் கிழக்குக் கூட்டமாம்;
பாரில் அமைதி நாட்டவே
. . படைகள் அனுப்பிக் காட்டுமாம். (5)
எண்ணெய் என்ற பொக்கிடம்
. . எங்கும் நிலத்தின் அடியிலே;
மண்ணின் மைந்தன் மேபிளின்
. . வண்ணக் கையும் கொடியிலே. (6)
அகதி யான மாந்தரை
. . அழைத்து, இதயம் திறக்குமாம்;
மகுட ராணி பெயரிலே
. . மக்க ளாட்சி சிறக்குமாம். (7)
இனங்கள் மொழிகள் வண்ணமாய்
. . இணைந்த வான வில்லிது;
மனித பண்பு வேர்களை
. . மதித்துப் போற்றும் நாடிது. (8)
கருணைக் கனடா நாடெனக்
. . கைகள் கொட்டி ஆடுவோம்;
அருமைத் தந்தை நாடென
. . அன்னை மொழியில் பாடுவோம். (9)
[ கலைமகள் 2005 தீபாவளி மலரில் வந்த கவிதை.]
தொடர்புள்ள பதிவுகள்:
கவிதைகள்
கனடா பாடல் அருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அழகோ அழகு
பதிலளிநீக்குசிலிர்க்கச் செய்யும் வரிகள்.
ஆற்றொழுக்கு நடை.
- தில்லைவேந்தன்(Natarajan Ramaseshan)
நன்றி, தில்லை வேந்தன்.
பதிலளிநீக்கு