திங்கள், 7 நவம்பர், 2016

கிருபானந்தவாரியார் - 1

திருப்புகழமிர்தம் -1


நவம்பர் 7. வாரியாரின் நினைவுதினம்.

டொரண்டோவில் அவர் நடத்திய பேருரைகள் பல. ஒரு வருடம், ஒரு தொடர் சொற்பொழிவுக்கு முன் திருப்புகழ் அன்பர்களுக்குச் சில திருப்புகழ்களைப் பாடும் வாய்ப்புக் கிட்டியது.  மேடைக்கு முன் அவர்கள் உட்கார்ந்து பாடினார்கள்.  தினமும் இது நடந்தது.

 அப்போதெல்லாம் அவருடைய வழக்கமான புன்முறுவலுடன் பாடலுக்கேற்ற தாளத்தை ஜாலராவில் போட்டபடியே வாரியார் கேட்பார். ஒன்றும் பேசமாட்டார். ஒரு நாள் மட்டும் ஒரு பாடலைக் கேட்டுவிட்டு,   “ உம்... ராகவன் அங்கே போட்ட விதை, இங்கே செடியாய் வளர்ந்து, மலர்களைப் பூக்கிறது” என்றார் ‘மைக்’கில் .

கூட்டத்தில் குழுமியிருந்த பலருக்கு அவர் சொன்னது புரிந்ததோ என்னவோ?  ஆனால்  திருப்புகழ் அன்பர்களோ குருஜி (டெல்லி) ராகவனைப் பற்றியும், அங்குப் பாடப்பட்ட  அன்பர்களின் பாடல்களுக்கு ராகவன் தான் மெட்டமைத்தார் என்றும் குறிப்பிடுகிறார் என்பது புரிந்து மகிழ்ந்தனர்!

 இதோ, அவர் நினைவில் அவர் நடத்திய “திருப்புகழ் அமிர்தம்” என்ற அற்புதமான மாத இதழிலிருந்து ஒரு திருப்புகழ் விரிவுரை.

1937 -ஆம் ஆண்டில் வந்த  கட்டுரை.












தொடர்புள்ள பதிவுகள்:


1 கருத்து: