ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

985. பாடலும் படமும் - 27

ஆனந்தக் கூத்து 

பிப்ரவரி 10. எஸ்.ராஜம் அவர்களின் பிறந்த நாள்.
சிவராத்திரியும் நெருங்குகிறது  !

இதோ அப்பரின் தேவாரமும் , ராஜம் அவர்களின் ஆனந்தக் கூத்தனும்!


[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

                                                           -திருநாவுக்கரசர்

இன்னொரு ஓவியம்:

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


பொழிப்புரை:
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்


S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

1 கருத்து:

  1. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். நான் தினமும் தேவாரப் பதிகம் ஒன்றினை படித்துவருகிறேன். தேவாரத்திற்கு ஈடாக தேவாரத்தை மட்டுமே கூறமுடியும். அனுபவித்து படிக்கும்போது இன்னும் சுகம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு