ஞாயிறு, 29 ஜூலை, 2018

1129. பாடலும் படமும் - 40

இராமாயணம் - 12
யுத்த காண்டம், வருணனை வழிவேண்டு படலம்


[ ஓவியம்: கோபுலு ]

அண்ட மூலத்துக்கு அப்பால் 
  ஆழியும் கொதித்தது; ஏழு

தெண் திரைக் கடலின் செய்கை 
  செப்பி என்? தேவன் சென்னிப்

பண்டை நாள் இருந்த கங்கை 
  நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்

குண்டிகை இருந்த நீரும் 
  குளுகுளு கொதித்தது அன்றே.

[ அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும்  கொதித்தது-
அண்டத்தின்   அடிப்பகுதியில்  உள்ள  பெரும் புறக்  கடலும்
கொதித்தது (என்றால்); 
ஏழு தெண்திரைக்  கடலின் செய்கை செப்பிஎன்-  உலகத்திலுள்ள   தெளிந்த   அலைகளையுடைய ஏழுகடல்களின்   செய்கையைச்   சொல்ல என்ன இருக்கிறது?;
தேவன்   சென்னிப்  பண்டை  நாள்   இருந்த  கங்கை
நங்கையும்  பதைத்தாள்-  சிவபிரானுடைய சென்னியில் வெகு
காலமாக வீற்றிருந்த கங்கையாகிய பெண்ணும்  பதைபதைத்தாள்;
பார்ப்பான் குண்டிகை இருந்த நீரும்- அந்தணர் தலைவனான பிரமனது
கமண்டலத்தில் இருந்த  தண்ணீரும்; 
குளு  குளு கொதித்தது அன்றே - குளு குளு வென ஒலித்துக் கொதிக்கலாயிற்று. ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1 கருத்து:

  1. தட்டச்சு: அழியும் - ஆழியும்.
    பேச்சு வழக்கில் குளுமையின் மிகுதியைச் சுட்டப் பயன்படுத்தும் குளுகுளு என்னும் இரட்டைக் கிளவியை இங்கு ஒலிக்குறிப்பாகக் கையாளப்பட்டதைக் காண்கிறோம்; காளிதாசன் வடமொழியில் இவ்வாறு பயன்படுத்தியததாக நினைவு.

    பதிலளிநீக்கு