திங்கள், 21 பிப்ரவரி, 2022

2031. பாடலும் படமும் - 143

இராமாயணம் - 22
அயோத்தியா காண்டம் - 1


 எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் மூன்றாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.


तस्यास्तत्क्षिप्रमागम्य रामो धर्मभृतां वरः।

चीरं बबन्ध सीतायाः कौशेयस्योपरि स्वयम् ( வால்மீகி )

Rama, foremost among protectors of righteousness, came forward quickly and fastened the bark himself over her silk garment.

கம்பன்

அனைய வேலை, அக மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்-
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்.
   
அனைய வேலை - அப்பொழுது; 
அகமனை எய்தினள் - மாளிகைக்குள்ளேசென்றாள்;
புனையும் சீரம் - உடுத்தற்குரிய  மரவுரியை;
துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு;
புனைந்தனள் - உடுத்திக் கொண்டு;
நினைவின் - உடன் போம் கருத்தோடு; 
வள்ளல் பின் வந்து - இராமனுக்குப்பின்புறமாக வந்து;
அயல் - அருகிலே;
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் - பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்;

நின்றனள். 

[ நன்றி : ஓவியம், லலிதாராம் ]

 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக