இராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜனவரி, 2023

2445. பாடலும் படமும் - 167

இராமாயணம் - 26

யுத்த காண்டம்



எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த பத்து ஓவியங்களில் எட்டாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்  1958 -இல் வெளியிடப் பட்டது.


அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

अशोकजैः प्रीतिमयैः कपिमालिङ्ग्य सम्भ्रमात् || 
सिषेच भरतः श्रीमान् विपुलैरश्रुबिन्दुभिः |

"Embracing Hanuma with eagerness, the illustrious Bharata bathed him with copious tear-drops born of delight and as such, other than those born of anguish."

கம்பன்

அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால் 

தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்; 

விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்

குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். 

அழும் - அழுவான்; 
நகும்- சிரிப்பான்;  
ஆழிக் கைகளால் அனுமனை  தொழும் -  மோதிரம்  உள்ள கையால் அனுமனைத் தொழுவான்; 
எழும் -   எழுவான்;   
வெங்களி   துளக்கலால் துள்ளும் - விரும்பும் மகிழ்ச்சி அவனை அசைப்பதால் துள்ளித் துடிப்பான்; 
அழிந்து  விழும் -  உடனே  சோர்ந்து  விழுவான்;
ஏங்கும்-   இரங்குவான்;   
போய்  வீங்கும்  -   மேற்சென்று பூரிப்பான்;  
வேர்க்கும்  -   வியர்ப்பான்;   
அக்குழுவொடும் குனிக்கும் -   மகிழும்   கூட்டத்தாருடனே  நடமிடுவான்; 
தன தடக்கை கொட்டும் - தனது நீண்ட கைகளைத் தட்டுவான்.
 

ஆல் - உரையசை.

[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]
 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 28 டிசம்பர், 2022

2387. பாடலும் படமும் - 164

இராமாயணம் - 26

சுந்தர காண்டம்



எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஏழாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்  1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

वानरोऽहं महाभागे दूतो रामस्य धीमतः।
रामनामाङ्कितं चेदं पश्य देव्यङ्गुलीयकम्

"O noble lady I am a vanara, an envoy of learned Rama. You see this ring with Rama's name inscribed on it, O godlike lady"
கம்பன்
"மீட்டும் உரை வேண்டுவன இல்லை" என, "மெய்ப் பேர்
தீட்டியது; தீட்டஅரிய செய்கையது; செவ்வே,
நீட்டு இது" என,நேர்ந்தனன்' எனா, நெடிய கையால்,
காட்டினன் ஓர்ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.

மீட்டும் உரைவேண்டுவன இல்லை என - திரும்பவும் யான் கூற
வேண்டியவை இல்லை என்று; 
மெய்ப்பேர் தீட்டியது - உண்மைப் பேர் பொறிக்கப்பட்டதும்; 
தீட்டரிய செய்கையது - எழுத முடியாத வேலைப்பாடு பெற்றதும்;
 (ஆன) இது - இந்தத் திருவாழி; 
செவ்வே நீட்டு என - செவ்வையாய் அமைந்த திருமுகம் என்று கூறி;
 (இராமபிரான்) நேர்ந்தனன் - என்பால் வழங்கினான்; 
எனா - என்று கூறி (அனுமன்); 
நெடிய கையால் - நீண்ட கைகளில்; 
ஓர் ஆழி - ஒப்பற்ற மோதிரத்தை; 
காட்டினன் - காண்பித்தான்;  
அது - அந்த மோதிரத்தை; 
வாள் நுதலி - ஒளிமிக்க நெற்றியை உடைய பிராட்டி; 
கண்டாள் - பார்த்தாள்.
[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]
 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம் 

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 23 நவம்பர், 2022

2322. பாடலும் படமும் - 157

இராமாயணம் - 25

கிஷ்கிந்தா காண்டம்





எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஆறாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

नाहं जानामि केयूरे नाहं जानामि कुण्डले
नूपुरे त्वभिजानामि नित्यं पादाभिवन्दनात्।

After examining the jewels for a while, Lakshmana was able to recognise only the anklet among all the jewels.
Thus addressed by Rama, Lakshmana replied, 'I recognise neither the armlets nor the earrings. I only recognise the anklets as I used to bow at her feet daily.'  
கம்பன்
இப்படி இலக்குவன் சொல்லும் பாடலைக் கம்பனில் நான் பார்க்கவில்லை.
சீதையின் அணிகலன்களைக் கண்டதும் இராமன் சொல்லும் ஒரு பாடல்.
விட்டபேர் உணர்வினை விளித்த என்கெனோ?
அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ?
கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ?
சுடடன என்கெனோ? யாது சொல்லுகேன்?
அவ் அணிகள்- அந்த அணிகலன்கள்; 
விட்ட பேர் உணர்வினை- (இராமனை) விட்டு நீங்கியிருந்த சிறந்த அறிவினை; 
விளித்த என்கெனோ?- திரும்பி அழைத்தன என்று சொல்வேனோ?
உயிரை அட்டன என்கெனோ- (அவனது) உயிரைக் கொன்றன என்று சொல்வேனோ? 
கொட்டின சாந்து என - (அவன் மீது) மிகுதியாகக் கொட்டப் பெற்ற சந்தனம் போல; 
குளிர்ந்த என்கெனோ - குளிச்சி செய்தன என்று சொல்வேனோ?
சுட்டன என்கெனோ - பிரிவுத் துயரை அதிகமாக்கிச் சுட்டன என்பேனோ?
யாது சொல்லுகேன் - என்னவென்று சொல்லுவேன்?

[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம் 

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வியாழன், 10 நவம்பர், 2022

2305. பாடலும் படமும் - 155

 இராமாயணம் - 24

 ஆரணிய காண்டம்




எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஐந்தாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.
आर्यपुत्राभिरामोऽसौ मृगो हरति मे मनः।
आनयैनं महाबाहो क्रीडार्थं नो भविष्यति
The basic meaning of this sloka is :
"O prince O longarmed one, this deer has captivated my mind. Fetch him for me.This will be our playmate."  Being attracted by the Golden Deer, Sita implores Rama to get it for her. 
கம்பன்
நெற்றிப் பிறையாள்  முனம் நின்றிடலும்,
முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள்,
'பற்றித் தருக என்பென்' எனப் பதையா,
வெற்றிச் சிலை  வீரனை மேவினளால்.

நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை
உடைய சீதை முன்; 
நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; 
முற்றிப் பொழி காதலின் - (அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க;
 'பற்றித் தருக' என்பென் - 'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக் கேட்பேன்; 
எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை);
வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய
இராமனை; 
முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை)  
[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

2076. பாடலும் படமும் - 144

இராமாயணம் - 23

அயோத்தியா காண்டம் - 2




எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் நான்காம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.
पादुके त्वभिषिच्याथ नन्दिग्रामेऽवसत्तदा।
स वालव्यजनं छत्रं धारयामास स स्वयं।

 The basic meaning of this sloka is :

Bharata coronated the sandals and lived at Nandigrama longing for the return of Rama. Bharata reported everything relating to the kingdom to the sandals first. Waving the chamaras (a fan made of yak tail) himself, he held the royal parasol over them.

கம்பன்

நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந்தனிக் கோல்முறை செலுத்த, சிந்தையான் 
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் 
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்

அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் - இரவும் பகலும்
ஓயாமல் அழுதுகொண்டுள்ள நீர் நீங்காத கண்ணை உடையனாய் (பரதன்);
நந்தியம் பதியிடை- நந்திக்கிராமத்திடத்தே; 
நாதன் பாதுகம்- இராமன் திருவடிநிலை; 
செந்தனிக் கோல் முறைசெலுத்த - செங்கோல் முறையைச்
செய்ய; 
சிந்தையான் - மனத்தினால்; 
இந்தியங்களை - ஐம்பொறிகளையும்;
அவித்து - புலனின்பம் நுகராதவாறு அடக்கி; 
இருத்தல் மேயினான் - அங்கேயே தங்கியிருத்தலைப் பொருந்தினான்.


[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம் 

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 21 பிப்ரவரி, 2022

2031. பாடலும் படமும் - 143

இராமாயணம் - 22
அயோத்தியா காண்டம் - 1


 எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் மூன்றாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.



அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.


तस्यास्तत्क्षिप्रमागम्य रामो धर्मभृतां वरः।

चीरं बबन्ध सीतायाः कौशेयस्योपरि स्वयम् ( வால்மீகி )

Rama, foremost among protectors of righteousness, came forward quickly and fastened the bark himself over her silk garment.

கம்பன்

அனைய வேலை, அக மனை எய்தினள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்-
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்.
   
அனைய வேலை - அப்பொழுது; 
அகமனை எய்தினள் - மாளிகைக்குள்ளேசென்றாள்;
புனையும் சீரம் - உடுத்தற்குரிய  மரவுரியை;
துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு;
புனைந்தனள் - உடுத்திக் கொண்டு;
நினைவின் - உடன் போம் கருத்தோடு; 
வள்ளல் பின் வந்து - இராமனுக்குப்பின்புறமாக வந்து;
அயல் - அருகிலே;
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் - பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்;

நின்றனள். 

[ நன்றி : ஓவியம், லலிதாராம் ]

 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 26 நவம்பர், 2021

1979. பாடலும் படமும் - 141

இராமாயணம் - 21
பால காண்டம் - 2



எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் இரண்டாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.




அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

पश्यतां नृपसहस्राणां बहूनां रघुनन्दन: ।
आरोपयत्स धर्मात्मा सलीलमिव तद्धनु:    ( வால்மீகி )

Virtuous Rama, the delight of the Raghus, in the presence of several thousands of men fixed the string to the bow and drew it as though with ease.

கம்பன்:

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

தடுத்து   இமையால்- கண் கொட்டுவதைத் தடுத்து  இமையாதபடி;
இருந்தவர்   யாரும்  -  (நிகழ்வதை)  பார்த்து  நின்ற  அவையோர் யாவரும்;
தாளில்   மடுத்ததும்   -  (இராமன்)  தன்  திருவடியால் அவ்வில்லின்  முனையை  மிதித்ததையும்;
நாண்  துதி வைத்ததும் - (அதை  வளைத்து)  மற்ற முனையில் நாண் ஏற்றியதையும்;
கடுப்பினில் -   (செயலின்)   வேகத்தால்;
நோக்கார்  -  காணமுடியாதவராயினர்;
அறிந்திலர் -       அன்றியும்      மனத்தாலும்   இன்னது   தான் நிகழும்  என்று கருதவும் இயலாதவர் ஆகினர்;
கையால்  எடுத்தது - (ஆயினும்)   இராமன்  தன்  கையால்  (அவ்  வில்லை)   எடுத்ததை;
கண்டனர்  -  பார்த்தார்கள்;
இற்றது கேட்டார்- (அந்தவில்) முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்..

[ நன்றி : ஓவியம், லலிதாராம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 21 ஏப்ரல், 2021

1855. பாடலும் படமும் - 136

இராமாயணம் - 20
பால காண்டம் - 1


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் முதல் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடல்களையும் பார்ப்போம். 

இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.  ( 1933-இல் வந்த முதல் பதிப்புக்கு ஓவியங்கள் வரைந்தவர் பிரபல ஆந்திர ஓவியர் கே.ராம்மோகன் சாஸ்திரி. அவ்வோவியங்களில் ஒன்று எனக்குக் கிட்டியுள்ளது. பின்னர் ஓர் பதிவில் இடுவேன்.   )

நூலின் அட்டைகளிலும் ராஜம் அவர்களின் 'கைவண்ணம்' !

[ ஓவியங்கள்: எஸ்.ராஜம் ] 

இந்த இரண்டாம் பதிப்பைத் தேடி நான் கலைமகள் காரியாலயத்திற்கு  ஒரு வருடம் கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்றபோது, அது அச்சில் இல்லை என்று சொல்லித் தன் பிரதியை எனக்கு அன்பளிப்பாய்த் தந்தவர்  அமரர் 'லெமன்'  ( எஸ்.லக்ஷ்மணன்; முன்னாள் மஞ்சரி ஆசிரியர்; அமரர் சாருகேசியின் சோதரர் ) .




அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

ततो वै  यजमानस्य पावकादतुलप्रभम। 
                                   प्रादुर्भूतं   महद्भूतं  महावीर्यं   महाबलम।।


அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு: 
     
         (Then , from the fire of the sacrifice , arose a great being of matchless radiance and possessed of great valour and strength.)


இதைக் கூறும் கம்பனின் பாடல்கள்:

ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.

ஆயிடை   கனலின்  நின்று  -  அப்போது  அந்த  வேள்வித் தீயிலிருந்து;
தீ எரிப்பங்கியும் சிவந்த  கண்ணுமாய்  -  தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக;
பூதம் ஒன்று - ஒரு   பூதமானது; 
அம்பொன்  தட்டம்  -  அழகிய  ஒரு பொன் தட்டத்தின் மேலே;
தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான அமுதத்தை  ஒத்த  ஒரு  பிண்டத்தை;
ஏந்தி  ஏயென எழுந்தது - தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.

(  சுதை: அமுதம்.  பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே  பாயசத்தை ஏந்தி அப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று). பூதம்: தோற்றம்   என்னும் பொருள்   கொண்ட  வட  மொழிச்  சொல்லாம்.  )

வைத்தது தரைமிசை. மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும். வேந்தனை.
‘உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்’ என்றான்.

பூதம்    தரை மிசை வைத்தது - (அவ்வாறு தோன்றிய) அந்தப்
பூதம்  அப்பொன்  தட்டத்தைத்  தரையின் மேல் வைத்தது;
மறித்தும் அவ்வழி  தைத்தது  -  திரும்பவும்   வந்த விதமே அந்த வேள்வித் தீயினுள் சென்று மறைந்தது;
அத்தவனும் உய்த்த நல்  அமிர்தினை- அந்தக்  கலைக்  கோட்டு முனிவனும் பூதம் கொடுத்த நல்ல  அமுதுப் பிண்டத்தை; 
உரிய    மாதர்கட்கு    -   உனக்குரிய பட்டத்து அரசியர்களுக்கு;
அத்தகு மரபினால் - மூத்தவள். இளையவள் என்ற முறைப்படியே;    
அளித்தியால்    என்றான்.-கொடுப்பாயாக என்று கூறினான்.

[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]

 தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

வியாழன், 28 நவம்பர், 2019

1403. பாடலும் படமும் - 78

இராமாயணம் - 19
வான்மீகி



கல்கியில் 1954-இல் வந்த மணியம் அவர்களின் அருமையான ஓவியம். 

ராஜாஜி எழுதத் தொடங்கிய ' சக்கரவர்த்தித் திருமகன்' என்ற தொடர் இதற்கு முந்தைய இதழில் தொடங்கியது; அதன் தொடர்பில் வந்த முதல் அட்டைப்படம் இது.  


[ஓவியம்: மணியம் ] 

படத்திற்குப் பொருத்தமான ஒரு செய்யுள்.

நாரணன் விளையாட்டு எல்லாம்
   நாரத முனிவன் கூற.
ஆரணக் கவிதை செய்தான்.
   அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத்
   திருவழுந்தூருள் வாழ்வோன்.
கார் அணி கொடையான். கம்பன்.
   தமிழினால் கவிதை செய்தான்.
                                          ---  தனியன் ( கம்ப ராமாயணம்) 

[ நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் - வேதம்;   சீர்அணி   -  சிறப்புடைய;  திருவழுந்தூர்-  தேரழுந்தூர்; கார்அணி - மேகம் போன்ற; கொடை - ஈகை; கவிதை - செய்யுள்]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 8 செப்டம்பர், 2018

1152. பாடலும் படமும் - 46

இராமாயணம் - 18
யுத்த காண்டம், மீட்சிப் படலம்

[ ஓவியம்: கோபுலு ]

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை, 

பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை 

தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை, 

அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 


[ அத் தலைவனும் - அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;
கற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக 
உள்ளவளை; 
பெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாக உள்ளவளை; 
பொற்பினுக்கு அழகினை- அழகிற்கு அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை- புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; 
தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை - தனி நாயகனாகிய
தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; 
அற்பின்- அன்பினால்; 
அமைய நோக்கினான் - நன்றாகப் பார்த்தான்.]

(   மர்ரே ராஜம் ‘கம்பராமாயணம்’ நூல்களின் அட்டைகளில் வந்த 18 படங்களைக் கொண்ட இந்தத் தொடர் இத்துடன் நிறைவேறுகிறது.) 

[ பொருத்தமான பாடல்களுக்கு நன்றி: அமுதசுரபி தீபாவளி 
மலர் 2004 ] 

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

1149. பாடலும் படமும் - 45

இராமாயணம் - 17
யுத்த காண்டம், வேல் ஏற்ற படலம்


[ ஓவியம்: கோபுலு ]

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி,
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ?


[ இலக்குவற்கு   முன்  வீடணன் புகும் - இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; 
இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும்  விலக்கி  விட்டு  வாலி மகன் அங்கதன்   முன்  புகுவான்;  
அவனையும்  விலக்கி  வானரக் காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன்  முந்துவான்;  
அனுமன் முன்  கடுகும்  - அனுமன் விரைந்து செல்வான்; 
அலக்கண் அன்னதை  -   அப்படிப்பட்ட துன்பத்தை; 
இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது என்று கூற முடியுமா? ]

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

1146, பாடலும் படமும் - 44

இராமாயணம் - 16
யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]


'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம்  மேவி,

நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி  நீரால்,

எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, 

உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?'

[ சினத்தொடும் கொற்றம் முற்றி-  சினத்தோடு நின்று
வெற்றியை முழுமையாக எய்தி; 
இந்திரன் செல்வம் மேவி - இந்திரனுடைய செல்வத்தை அடைந்து; 
நினைத்தது முடித்து நின்றேன் - நினைத்ததைச்  செய்து  முடித்து  நின்ற யான்;
நேரிழை   ஒருத்தி   நீரால் -  (இப்போது)  பொருந்திய அணிகலன்களை  அணிந்த  (சீதை  என்கின்ற)  ஒருத்தியின் காரணமாக,  
( அந்நிலையிழந்து); 
எனக்கு  நீ  செய்யத்தக்க கடன் எலாம் - எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம்;  
ஏங்கி  ஏங்கி  உனக்கு நான் செய்வதானேன்  -  வருந்தி  வருந்தி  உனக்கு யான்  செய்யும் நிலைமையை அடைந்தேன்;  
என்னின்  யார்  உலகத்து   உள்ளார்?- என்னைவிட இழிந்தவர்கள் இவ்வுலகத்து யாருளர்?]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்