இராமாயணம் - 25
கிஷ்கிந்தா காண்டம்எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் ஆறாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம். இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு) கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால் 1958 -இல் வெளியிடப் பட்டது.
அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.
नाहं जानामि केयूरे नाहं जानामि कुण्डले
नूपुरे त्वभिजानामि नित्यं पादाभिवन्दनात्।
After examining the jewels for a while, Lakshmana was able to recognise only the anklet among all the jewels.
Thus addressed by Rama, Lakshmana replied, 'I recognise neither the armlets nor the earrings. I only recognise the anklets as I used to bow at her feet daily.'
கம்பன்
இப்படி இலக்குவன் சொல்லும் பாடலைக் கம்பனில் நான் பார்க்கவில்லை.
சீதையின் அணிகலன்களைக் கண்டதும் இராமன் சொல்லும் ஒரு பாடல்.
விட்டபேர் உணர்வினை விளித்த என்கெனோ?
அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ?
கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ?
சுடடன என்கெனோ? யாது சொல்லுகேன்?
அவ் அணிகள்- அந்த அணிகலன்கள்;
விட்ட பேர் உணர்வினை- (இராமனை) விட்டு நீங்கியிருந்த சிறந்த அறிவினை;
விளித்த என்கெனோ?- திரும்பி அழைத்தன என்று சொல்வேனோ?
உயிரை அட்டன என்கெனோ- (அவனது) உயிரைக் கொன்றன என்று சொல்வேனோ?
கொட்டின சாந்து என - (அவன் மீது) மிகுதியாகக் கொட்டப் பெற்ற சந்தனம் போல;
குளிர்ந்த என்கெனோ - குளிச்சி செய்தன என்று சொல்வேனோ?
சுட்டன என்கெனோ - பிரிவுத் துயரை அதிகமாக்கிச் சுட்டன என்பேனோ?
யாது சொல்லுகேன் - என்னவென்று சொல்லுவேன்?
[ நன்றி : ஓவியம்- லலிதாராம் ]
தொடர்புள்ள பதிவுகள்:
தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக