சசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜனவரி, 2023

2439. சசி -17

"நீங்கதானே?"

  சசி




[நன்றி: விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 10 ஏப்ரல், 2019

1267. சசி -16: சரியான ஆள்!

சரியான ஆள்!
‘சசி’ 

‘சசி’ அவர்களை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்.

ஆனந்த விகடனில் 40, 50 -களில்  ஒரு பக்கக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற  பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’  25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.
( 1939- ஆண்டு வந்த “ விமோசனம்” படத்திற்குக் கதையும், பாடல் வரிகளையும் ‘சசி’ எழுதினார். )  




[நன்றி: விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்

திங்கள், 30 ஜூலை, 2018

1130. சசி -15: மீண்ட காதல்

மீண்ட காதல்
சசி 


''நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்துவிடுங்கோ! உங்களுக்கு என் மேலே அவ்வளவு அன்பு இருக்கும்னு தெரிஞ்சு கொள்ளாதது என்னுடைய பிசகுதான்! எழுந்திருங்கோ! காபி ஆறிப் போகிறது. பாதாம் ஹல்வா பண்ணியிருக்கேன். சீக்கிரமா வந்து சாப்பிட்டாத்தான், உங்களுக்கு என் மேலே கோபம் இல்லேன்னு அர்த்தம். அப்பத்தான் என் மனசு திருப்தி அடையும்'' என்று கூறியவாறு, என் மனைவி ஒரு காதல் பார்வையை என் மீது செலுத்திவிட்டுச் சடக்கென்று என் கையை கெட்டியாகப் பிடித்துச் சமையலறைக்கு இழுத்துக் கொண்டு போனாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! அன்று காலையில் எங்களுக்குள் நடந்த சண்டையை நீங்கள் அறி வீர்களானால், உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

புது வருஷம் பிறக்கப் போகிறதே, குடும்ப சம்பந்தமாக ஏதாவது ஒரு நல்ல தீர்மானமாகச் செய்துகொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்கலாமே என்ற உத்தேசத்துடன், மங்களத்தைக் கூப்பிட்டு, ''இந்த வருஷம் புதிதாக என்ன தீர்மானம் செய்து கொள்ளலாம்?'' என்று கேட் டேன். ''என்ன தீர்மானம் செய்து கொண்டால் என்ன? அதன்படி ஒரு தடவையாவது நீங்கள் நடந்து கொண்டதுண்டோ?'' என்று என்னையே திருப்பிக் கேட்டாள்.

''போனதை விட்டுத் தள்ளு! இந்த வருஷம் சிக்கனமாக இருக்கலாமென்று பார்க்கிறேன்...''

''என்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுங்களேன்! செலவு எல்லாம் என்னால்தானே? நான் தொலைந்தால், எல்லாப் பணமுமே உங்களுக்கு மிச்சம்!''

இதற்கு நான் பதில் சொல்ல, அதற்கு அவள் பதில் சொல்ல, கடைசியில் அவள் தன் தலையில் படார், படார் என்று போட்டுக் கொண்டு சமையலறைக்குப் போய்விட்டாள். நான் என் அறைக்குப் போய்விட்டேன்.

சாதாரணமாக, எங்களுக்குள் சண்டை ஏற்பட்டால், குறைந்தது ஒரு வாரமாவது நீடித்திருக்கும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டோம். அப்படி இருக்க, சண்டை நடந்த தினமே அவள் மேற்கூறியவாறு என்னிடம் மன்னிப்புக் கேட்டு வந்தால், ஆச்சரி யமாக இருக்காதா?

ஆனால், என் ஆச்சரியமெல்லாம் சிறிது நேரத்திற்குள்ளாகவே பறந்துபோய்விட்டது. ஆமாம், அவளுக்கும் பக்கத்து வீட்டுக்காரிக்கும் நடந்த சம்பாஷணையை நான் ஒட்டுக்கேட்டுவிட்டேன்!

''இவ்வளவு சீக்கிரமாகவா உங்களுக்குள்ளே சமாதானம் ஏற்பட்டுவிட்டது?'' என்று பக்கத்து வீட்டுக்காரி ஜன்னல் வழியாக என் சம்சாரத்தைக் கேட்டாள். அதற்கு என் சம்சாரம், ''உனக்காக நான் என் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம். மன்னித்துவிடு!' அப்படின்னு என் புருஷர் ரொம்பக் கேட்டுக்கொண்டார். 'சரி'ன்னு நானும் சமாதானமாகி விட்டேன்'' என்று பதில் சொன்னாள்.

அப்போதுதான் எனக்கு விஷயமே புரிந்தது. நான் கோபித்துக் கொண்டு என் அறைக்குப் போனதும், 'மனைவியை வெல்வது எப்படி?' என்ற புஸ்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ''எப்படிப்பட்ட சண்டையாக இருந்தாலும், 'உனக்காக நான் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்து விடு!' என்று மனைவியிடம் சொல்லிவிட்டால், அவள் கோபம் தணிந்து, மீண்டும் காதலுடன் நடந்துகொள்வாள்'' என்று அதில் போட்டிருந்தது.

அதைப் படித்தபோது எனக்கு ஆத்திரமே உண்டாயிற்று. ''உனக்காக என் உயிரையும் விடத் தயார்! நான் செய்ததெல்லாம் தப்பிதம்! மன்னித்து விடு!'' என்ற வாக்கியத்தை ஆத்திரமாகவும் பரிகாசமாகவும் பல தடவை உரக்கச் சொல்லிச் சிரித்தேன்.

என் மனைவி அதை அறைக்கு வெளியேயிருந்து ஒட்டுக் கேட்டிருக்கிறாள். உண்மையிலேயே நான் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுப் புலம்புகிறேன் என்று தீர்மானித்துக் கொண்டு, என்னிடம் அன்போடு பேச வந்திருக்கிறாள், தன் கோபத்தையெல்லாம் மறந்து!

[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்



புதன், 25 ஏப்ரல், 2018

1042. சசி - 14: நல்ல வியாபாரம்

நல்ல  வியாபாரம் !
சசி 

40-களில் வந்த ஒரு கதை!









[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

861. சசி - 13: குமரி கிழவியான கதை!

குமரி கிழவியான கதை!
சசி 



''சார்! உங்களைத்தானே!'' என்று யாரோ கையைத் தட்டி என்னைக் கூப்பிடவே, திரும்பிப் பார்த்தேன். நண்பர் ராமானுஜம் விரைவாக என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். பக்கத்தில் வந்ததும், ''ஒரு நல்ல சமாசாரம் சொல்லத்தான் கூப்பிட்டேன்'' என்று கூறிவிட்டு, அச்சடித்த நோட்டீஸ் ஒன்றை என்னிடம் நீட்டினார்.

''இதில் நல்ல சமாசாரம் என்ன ஐயா இருக்கிறது?'' என்று நான் கேட்டேன், அந்த நோட்டீஸைப் பார்த்துவிட்டு. அதில் 'பிரேம பாசம்' என்ற நாடகம் நடக்க இருக்கும் தேதியும் இடமும், டிக்கெட்டுகளின் விவரங்களும், அவற்றுடன், நாடகத்திற்கு ஒவ் வொருவரும் அவசியம் டிக்கெட் வாங்கவேண்டும் என்ற கோரிக்கையும் காணப்பட்டன.

''அப்படியானால், நீங்கள் ஒன்றுமே கேள்விப்படவில் லையா?'' என்று அவர் என்னை ஆச்சரியத்துடன் கேட்டார்.

''இல்லையே!'' என்றதும், ''இந்த நாடகம் நடப்பதில் ரொம்பத் தகராறுகள் எல்லாம் ஏற்பட்டு, நாடகம் நடக்குமோ, நடக்காமலே போய்விடுமோ என்று கவலைப் படும்படியாக இருந்தது, சார்! அப்புறம், நான்தான் வெகு சாமர்த்தியமாகத் தகராறுகளைத் தீர்த்து வைத்தேன்!'' என்று அவர் பெருமையோடு தெரிவித்தார்.

''என்ன தகராறு? எப்படித் தீர்த்து வைத்தீர்கள்?''

''பிரேம பாசம் என்கிற நாட கத்தை எழுதினவன் நான். அது தெரியுமல்லவா?''

''அப்படியா!''

''ஆமாம், சார்! இல்லாவிட் டால் எனக்கென்ன அக்கறை? நாடகத்தை நடத்துகிறவர்கள் நம்ம ஊர் மாதர் சங்கத்து அங்கத் தினர்கள்! மாதர் சங்கத் தலைவி மனோன்மணியின் வேண்டு கோளின்படிதான் நாடகத்தை எழுதிக் கொடுத்தேன்.''

''சரிதான்!''

''நாடகம் ரொம்ப உயர்தரமானது. கதாநாயகி, கணவனுக்காக உயிரைக் கூடத் தியாகம் செய்யத் துணிந்து விடுகிறாள்! நாடகத்தைப் பார்த்தால் அப்படியே நீங்கள் கண்ணீர் விட்டுவிடுவீர்கள்!''

''சரிதான்! ஏதோ தகராறு ஏற்பட்டது என்றீர்களே..?''

''ஆமாம்! யார் கதாநாயகி வேஷம் போடுவது என்பதில் அங்கத்தினர்களிடையே பெரிய தகராறு ஏற்பட்டது! முக்கியமாக, சுப்ரியாதேவி, நாகலட்சுமி, மீனாம்பாள் ஆகிய மூன்று பேர் இந்தப் பாத்திரத்திற்காகப் போட் டியிட்டார்கள். சங்கத் தலைவிக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. உண்மையில் இந்த மூன்று பேருக்குமே கதாநாயகி வேஷம் போட்டுக்கொள்ள எவ்வித யோக்யதையுமில்லை. சுப்ரியாதேவிக்கு நடித்துப் பழக்க மில்லை; நாகலட்சுமிக்குப் பாட்டு வராது; மீனாம்பாள் கண்ணுக்கு நன்றாக இருக்கமாட்டாள்.மங்களம் என்கிற ஒரு ஸ்திரீக்குதான் கதாநாயகிக்கு வேண்டிய சகல யோக்யதைகளும் இருந்தன. பல நாடகங்களில் அவள் நன்றாக நடித்துப் பெயர் வாங்கியிருந்தாள். ஆனால், மேற்கூறிய மூன்று முக்யஸ்தர்களையும் தள்ளிவிட்டு இந்த ஸ்திரீக்கு முக்கிய பாகத்தைக் கொடுப்பது எப்படி..?''

''அப்புறம் என்ன செய்தீர்?''

''அந்த மூன்று முக்கியஸ்தர்களும் தாங்களாகவே விலகிவிடும் படி ஒரு காரியம் செய்துவிட்டேன். மங்களமே கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்!''

''ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி என்ன காரியம் சார் செய்தீர்கள்?''

''கதாநாயகியின் வயது 18 என்பதற்குப் பதிலாக 30 என்று மாற்றிவிட்டேன். போட்டியிட்ட மூன்று பேருமே 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தும், அவர்களில் யாரும் நிஜ வயதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை! '30 வயதுக் கிழவி வேஷம் யாருக்கு வேணும் இங்கே!' என்று தாங்களாகவே ஒதுங்கிவிட்டார்கள்!''



[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்



திங்கள், 2 ஜனவரி, 2017

சசி -12 : திருட்டுப்போன நகை

 திருட்டுப்போன நகை
 சசி 






''ஏண்டி மங்களம், பக்கத்து வீட்டிலே ஒரே குதூகலமா இருக்காப்போலே இருக்கே! திருட்டுப் போன நகைகள் எல்லாம் ஒரு வேளை அகப்பட்டிருக்குமோ?'' என்று என் சம்சாரத்தைக் கேட் டேன்.

அதற்கு அவள், ''அப்படித்தான் தோண்றது. எதுக்கும், போய் விசாரிச்சுட்டு வாருங்களேன்!'' என்று சொல்லவே, நான் உடனேயே பக்கத்து வீட்டுக்குச் சென்று நண்பர் ஐயாசாமியை விசாரித்தேன்.

அவர் என்னைத் தனியே மாடி அறைக்கு அழைத்துச் சென்று தாழ்ந்த குரலில், ''திருட்டுப் போன நகைகள் ஒண்ணும் அகப்படவே இல்லை, சார்! போனது போனதுதான்!'' என்று தெரிவித்துவிட்டு, ''உங்களைச் சாப்பிடக் கூப்பிட நானே உங்க வீட்டுக்கு வரணும்னு நினைச்சிண்டிருந்தேன். நீங்களே வந்துட்டேள்! இன்னிக்கு என் பிறந்த நாள்! அதைக் கொண்டாடணும்னு என் சம்சாரம் ரொம்பவும் வற்புறுத்தினாள்'' என்று தெரிவித்தார்.

எனக்குச் சிரிப்பு வந்தது. ஏனென்றால், நண்பருக்கும் அவர் சம்சாரத்துக்கும் அவ்வளவாக அந்நியோன்னிய பாவம் வெகு நாளாகவே இருந்து வரவில்லை என்பது எனக்குத் தெரியும் அப்படியிருக்க, அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று அவர் சம்சாரம் வற்புறுத்தினாள் என்று கேள்விப்படும் போது சிரிப்புத்தானே வரும்?

என் சிரிப்பைக் கவனித்த நண்பர், ''நான் சொல்றது உண்மைதான் சார்! அவள் இப்போது அடியோடு மாறிவிட்டாள்!'' என்றார்.

''எதனால்?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

''முன்பு அவளுக்கு என்மீது அவ்வளவு மதிப்போ அக்கறையோ இல்லாததற்கு, நகை நட்டுகள் முதலிய சகல பொருள்களும் அவளுக்கு நிறைய இருந்ததுதான் காரணம். ஏதாவது தேவையாக இருந்தாலல்லவா அதை வாங்கிக் கொடுத்துத் திருப்திப்படுத்தி, மேலும் மேலும் அவள் அன்பைப் பெறமுடியும்!''

''வாஸ்தவந்தான்!''

''ஆனா, இப்போ நிலைமை மாறிப்போயிடுத்து. மறுபடியும் நகை நட்டுகளை நான் வாங்கிக் கொடுக்கணுமோல்லியோ? அதற்காக, அவள் எங்கிட்டே ரொம்ப அன்பு செலுத்துகிறாள்! பாருங்களேன். என் பிறந்த நாளைக் கொண்டாடித்தான் ஆகணும்னு ஒரே பிடிவாதம் பிடிக்கிறாள்!''

''கேட்கிறதுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு, சார்! ஆனால், ரொம்ப நஷ்டத்துக்கப்புறந்தான் இந்த மாதிரி சந்தோஷம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கு, இல்லையா?''

''நகைகள் திருட்டுப் போனதைத்தானே சொல்றேள்?'']

''ஆமாம்!''

''உங்களிடத்திலே உண்மையைச் சொல்றதிலே ஒண்ணும் தப்பு இல்லே. நகைகளை யாரும் வெளியிலேயிருந்து வந்து திருடிண்டு போகல்லே!''

''அப்படின்னா..?''

''நானேதான் ஒரு இடத்திலே மறைத்து வைத்திருக்கேன்! மனைவியினுடைய அன்பை மறு படியும் பெறுவதற்காக அதுமாதிரி செய்தேன்! எப்படி என் சூட்சுமம்?''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சசியின் சிறுகதைகள்

வெள்ளி, 10 ஜூலை, 2015

சசி -11: குடியிருக்க ஓர் இடம்

குடியிருக்க ஓர் இடம்
சசி



நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. எனவே, ''கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன், தயவுபண்ணி'' என்று தினம் பத்துத் தடவை வீட்டுக்காரன் காலில் விழுந்து கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தச் சமயத்தில் ஊரிலிருந்து வந்த என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு அபூர்வமான யோசனை சொல்லிக் கொடுத்தார். அதாவது, 'மாஜிஸ்ட்ரேட் கோர்ட்'டுக்குத் தினம் போய் வந்தால், யாருக்கு நீண்ட நாள் சிறைவாச தண்டனை கிடைக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம் என்றும், அந்த ஆசாமியின் வீட்டுக்கு வாடகைக்குப் போய்விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த யோசனை ரொம்பவும் சரியானதென்று எனக்கும் தோன்றியதால், நான் அன்று முதல் தினந்தவறாமல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போய் வரும் வழக்கத்தை ஆரம்பித்துக்கொண்டேன். நல்லவேளையாக, முதல் வாரத்துக்குள்ளாகவே நான் எதிர்பார்த்த பலனும் கிட்டிவிட்டது. ஆமாம்! ஒரு பாங்கியில் நுழைந்து கொள்ளையடித்த குற்றத்துக்காக வேலாயுதம் என்ற ஆசாமிக்கு இரண்டு வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் எனக்கு ஒரே குதூகலமாகிவிட்டது. 'மாஜிஸ்ட்ரேட் நீடூழி வாழட்டும்!' என்று அவரையும் வாழ்த்திவிட்டு, அங்கிருந்த ஒரு சிப்பந்தியை அணுகி, ''கைதி வேலாயுதத்துடன் அவசரமாக ஒரு நிமிஷம் பேச வேண்டுமே!'' என்றேன்.

''அதற்கென்ன! பேஷாகப் பேசுங்களேன்!'' என்று அவர் என்னை அழைத்துக்கொண்டு போய் வேலாயுதத்தின் முன்னால் நிறுத்தினான்.

''வேலாயுதம்! உங்களுக்கு இம்மாதிரி தண்டனை கிடைத்ததைப் பற்றி நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன்'' என்று கண்ணில் நீரை வரவழைத்துக்கொண்டு கூறி னேன்.

ஆனால், அவன் சற்றுக்கூட மனம் கலக்கமடைந்தவனாகத் தெரியவில்லை. ''தண்டனைஅடைந்த நானே சந்தோஷத்தோடு இருக்கும்போது நீங்கள் ஏன் சார் வருத்தப்பட வேண்டும்?' என்று என்னைக் கேட்டான்.

எனக்கு அந்தக் கேள்வி மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கவே, ''உங்களுக்கு என்னமாக சந்தோஷம் ஏற்படமுடியும்?'' என்று கேட்டேன்.

''என்னைப்போல் நீங்களும் குடியிருக்க வீடு கிடைக்காமல் திண்டாடிவிட்டுக் கடைசியில் உங்களுக்கு இம்மாதிரி இரண்டு வருஷம் நிம்மதியாகக் குடியிருக்க ஒரு சிறை கிடைத்தால், அப்போது தெரியும் ஏன் சந்தோஷம் உண்டாகாதென்று!'' என்றான்.

''அப்படியானால் காலி செய்ய உமக்கு வீடு எதுவும் இப்போது இல்லையா?'' என்று கேட்டேன்.

''வீடு இருந்தால், நான் ஏன் சார் அநாவசியமாக ஒரு திருட்டுக் குற்றத்தில் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு இங்கே வருகிறேன்? ஏன் சார் முழிக்கிறீங்க? உங்களுக்கும் வீடு அகப்படாமல் தவிக்கிறீர்களா, என்ன? அட! ஒன்றுக்கும் பயப்படாதீர்கள் சார்!'' என்று அவன் எனக்குத் தேறுதல் கூறினான்.

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்;




புதன், 25 பிப்ரவரி, 2015

சசி -10 ; எதிர்பாராதது!

எதிர்பாராதது !
சசி

அன்புள்ள தங்கவேலு,
பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிடமிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி 




நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸுக்குப் பயந்து, தலைமறைவாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். வந்தது முதல் உன்னைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டு இருக்கிறேன்! (உன்னைத் தவிர வேறு நண்பன் ஏது?) ஆனால், உன் வீட்டுக்கு நேரில் வருவது உசிதமில்லை. ஆகவே, உன்னை மூர்மார்க்கெட்டில் நாளை மாலை 6 மணிக்கு எதிர்பார்க்கிறேன். முன்பு நாம் வழக்கமாகச் சந்தித்துப் பேசும் மரத்தடியில் நீ வந்து காத்திரு. தவறாமல் வா!
                                                      இப்படிக்கு,
                                             உன்னை மறவா நண்பன்,
                                                     நடராஜன்.


தங்கவேலுவும் நடராஜனும் பால்யத்தில் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். அதற்காக, இப்போது ஒரு நல்ல லாபத்தைக் கை நழுவ விடுவதற்குத் தங்கவேலு தயாராக இல்லை!

ஒரு கொள்ளைக் கேஸில் சம்பந்தப்பட்டான் என்று நடராஜனை போலீஸார்கள் தேடிக் கொண்டிருந்த விஷயம் அவனுக்குத் தெரியும். அவனைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்ததும் தெரியும். ஆகவே, தன்னைச் சந்திக்கப் போகும் நடராஜனைப் போலீஸ்காரர்களிடம் பிடித்துக் கொடுத்து விட்டு 500 ரூபாய் பரிசைப் பெறுவதுதான் புத்திசாலித்தனம் என்று தங்கவேலு தீர்மானித்து விட்டான்.

சரியாக 6 மணி. நடராஜன், தங்கவேலு இருந்த இடத்திற்கு வந்தான். வந்தவன் சட்டென்று ஒரு கடிதத்தைத் தங்கவேலுவின் பையில் போட்டுவிட்டு, "என்னைப் போலீஸ்காரர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆகவே, இந்த இடத்தில் பேசுவது ஆபத்து! இந்த லெட்டரில் விஷயங்களை எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்குக் கட்டாயமாக வா!" என்று அவசரமாகக் கூறிவிட்டு, ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து ஓடினான்.

ஆனால், தங்கவேலு தகவல் தந்திருந்த போலீஸ்காரர்கள் லேசுப்பட்டவர்களா? நடராஜனைப் பின்தொடர்ந்து ஓடி, ஒரே நிமிஷத்தில் அவனை மடக்கிவிட்டார்கள்.

500 ரூபாம் இனாம் கிடைக்கப்போவது பற்றித் தங்கவேலு அப்போது அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால், நடராஜன் தந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தபோது, அவனுக்கு உண்டான துயரத்திற்கும்கூட அளவே இருந்திருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்புள்ள தங்கவேலு,
கொள்ளையில் நானும் சம்பந்தப்பட்டவன் என்று போலீஸார் நினைத்திருக்கிறார்கள். என்றாலும், நான் உண்மையில் நிரபராதி என்பது 

கூடிய சீக்கிரம் ருசுவாகப் போகிறது. வக்கீலை வைத்து கேஸ் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் மணக்கப்போகும் பெண்ணின் தகப்பனார் என் விஷயமாக சிரத்தை கொண்டிருக்கிறார். அவர் பெரிய பணக்காரர். ஆதலால், நான் மறுபடியும் மனிதனாக உலகத்தில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
என் உறவினர் ஒருவரிடம் என் பணம் 16,000 ரூபாய் இருக்கிறது. என் நட்புக்கு அறிகுறியாக அதை அப்படியே உன்னிடம் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். நாளைக் காலையில் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நீ என்னைச் சந்தித்தால், நேரில் விவரங்களைச் சொல்கிறேன். உடனே சென்று அவரிடமிருந்து நீ அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஏழ்மை நிலையில் இருக்கும் உனக்கு இந்த அற்ப உதவியையாவது செய்ய முடிந்திருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி!
                                                       இப்படிக்கு
                                              உன் நன்மையைக் கோரும்,
                                                       நடராஜன்.
[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள் :

சசி: சிறுகதைகள்

செவ்வாய், 3 ஜூன், 2014

சசி - 9: இப்படியும் நடக்குமா?

இப்படியும் நடக்குமா?

சசி 



ஒரு சிறிய துணுக்கையே ஒரு கதையாக்கி விடுவார் சசி!

============

''யார் அது?'' என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி இருந்தது.

காட்டுப் பாதையில் இருட்டு வேளையில் செல்வது அபாயகரமானது என்று நடராஜனின் நண்பன் கோவிந்தராவ் எவ்வளவோ முறை எச்சரித்திருந்தான். அதை அலட்சியம் செய்துவிட்டு அந்தப் பாதையில் வந்தது, அதுவும் தனியாக வந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நடராஜன் அப்போதுதான் நன்றாக உணர்ந்தான்.

ஆயினும் தைரியமாக, ''யார் நீங்கள்?'' என்று கேட்டான்.

''புலிக்குட்டி முனுசாமி என்று நீ கேள்விப்பட்டதே இல்லையா, தம்பி? நாங்கள் அவருடைய ஆட்கள்!'' என்று கூறிவிட்டு, அந்தப் பத்து முரடர்களும் உரக்கச் சிரித்தார்கள்.

''சரி, நீங்கள் ஏன் என்னை இப்படிச் சூழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்?'' என்றான் நடராஜன், அதட்டும் குரலில்.

''உன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்துவிட்டால் தாராளமாக வழி விடுவோம்! சீக்கிரம் எடு, பணத்தை!'' என்று அவர்கள் குண்டாந்தடிகளை ஓங்கினார்கள்.

நடராஜன் சிறிதும் பயப்படாமல், ''முடியாது!'' என்றான்.

''முடியாதென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம்'' என்றார்கள் அந்த முரடர்கள்.

உடனே நடராஜன் குபீ'ரென்று பாய்ந்து, அந்த முரடர்கள் அத்தனை பேரையும் ஒரே நொடியில் கீழே தள்ளிவிட்டான்.

நடராஜன் என்னமோ மகா நோஞ்சலான ஆசாமிதான். வயதும் இருபதுக்கு மேல் இருக்காது. காற்றடித்தால் கீழே சாய்ந்து விடக்கூடியவன்தான். என்றாலும், அவன் கையை ஓங்குவதற்கு முன்னால் அத்தனை முரடர்களும் தொப்... தொப் என்று கீழே விழுந்துவிட்டார்கள்.
விழுந்தவர்கள் மறுபடியும் எழுந்திருந்து நடராஜன்மீது பாய்ந்து, அவனோடு சண்டை போடுவார்கள் என்பதுதான் யாரும் எதிர்பார்க்கக்கூடியது.

ஆனால், அந்த முரடர்கள் அப்படி ஒன்றும் செய்துவிட வில்லை. விழுந்த இடத்திலேயே கிடந்தார்கள்; மூர்ச்சைகூட ஆகிவிட்டார்கள்.

'இப்படியும் நடக்குமா?' என்றே நினைக்கத் தோன்றும் நமக்கு! மகா பலிஷ்டர்களான பத்து முரடர்களை ஒரு நோஞ்சல் பேர்வழி எப்படிக் கீழே வீழ்த்தியிருக்க முடியும்? அவனிடம் ஏதாவது மந்திர சக்தி இருந்ததா?

அதெல்லாம் ஒன்றுமில்லை. அவனுடைய வெற்றிக்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது.

அது ஒரு சினிமா படப்பிடிப்பு. அந்த நோஞ்சான்தான் அந்தப் படத்தின் கதாநாயகன்! கதாநாயகன் எப்போதாவது தோல்வி அடைந்தான் என்பது உண்டா?

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சசியின் சிறுகதைகள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சசி - 8 ; புல்லிலிருந்து பால்!

புல்லிலிருந்து பால்!
சசி



ந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. 'சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்' என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்?

''அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு இலாகா டைரக்டரைப் பார்த்து ஏன் உங்கள் நூதன வழியைச் சொல்லப்படாது? பால் பஞ்சம் ஏற்பட்டிருக் கும் இந்தச் சமயத்தில் அதனால் எவ்வளவோ நன்மை ஏற்படக்கூடுமே! அதோடு, அந்த நூதன வழியைச் சொல்லிக்கொடுத்தால், உங்களுக்கும் ஏராளமான சன்மானம் கிடைக்குமே!'' என்றேன்.

''யாரிடம் அந்த மர்மத்தைத் தெரிவிப்பது என்று தெரியாமல்தான் முழிக்கிறேன்! ரகசியத்தைக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு பணம் தராமல் ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்றும் பயமாக இருக்கிறது'' என்றார் அந்த ஆசாமி.

''அப்படி ஒன்றும் உங்களை ஏமாற்றிவிடமாட்டார்கள்! ஆமாம், நீங்கள் குறைந்தது எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறீர்கள்?''

''நானும் தேச நன்மைக்காகப் பாடுபடுகிறவன் தான், ஸார்! ஆகவே, நான் அப்படியன்றும் அதிகத் தொகை எதிர்பார்க்கிறவனல்ல. பத்து ரூபாய் கொடுத்தால் கூடப் போதும்!''

''பத்து ரூபாய்தானா... பூ..! அதை நானே கொடுத்துவிடுகிறேன். என்னிடம் சொல்லுங்கள் ரகசியத்தை. அதை உணவு இலாகா டைரக்டருக்குப் பிறகு நான் தெரிவித்துவிடுகிறேன்.''

''இப்படி அநேகர் என்னிடம் சொல்லி மர்மத்தைத் தெரிந்து கொண்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் ஓடிப்போய் விட்டார்கள். நான் யாரை நம்புவது?''

இவ்வாறு அவர் கூறியபோது, அவர் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டு இருந்தது. உடனே, நான் அவருக்குச் சில ஆறுதல் மொழிகளைக் கூறிவிட்டு, ''எல்லோரும் அயோக்கியர்களாக இருக்கமாட்டார்கள். இந்த உண்மையை நிரூபிப்பதற்காக இதோ இப்போதே நான் பத்து ரூபாய் கொடுக்கிறேன். முதலில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு ரகசியத்தைச் சொல்லலாம்'' என்று பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

சிறிது நேரம் அவர் என்னையே உற்றுப் பார்த்தவாறு, ஏதோ சிந்தனையிலிருந்தார். பிறகு, ''சரி, இந்தாருங்கள்! அந்த மர்மம் எழுதிய கடிதம் இந்தக் கவருக்குள் இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் பாருங்கள்'' என்று ஒரு கவரை என்னிடம் கொடுத்தார்.

அதை நான் ஒரு மூலைக்கு எடுத்துக் கொண்டுபோய், யாருக்கும் தெரியாமல் படித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! புல்லிலிருந்து பால் எடுக்கும் விதம் பற்றித் தெளிவாகவும் வெகு சுருக்கமாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். உங்களுக்கும் உபகாரமாக இருக்கட்டும் என்று அதைக் கீழே பிரசுரிக்கிறேன்.

''தினந்தோறும் நல்ல பசும் புல்லை நிறையச் சேகரித்து, அதைக் கறவைப் பசுக்களுக்குப் போட்டு வாருங்கள். அவை அதைத் தின்று, நல்ல பாலைக் கொடுக்கும். புல்லிலிருந்து பால் கிடைக்க இதுவே வழி!''

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற படைப்புகள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சசி -7 : பொதுஜன சேவை

பொதுஜன சேவை 
சசி





ரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை 'பிளாக் மார்க்கெட்'டில் விற்கிறவர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத் தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும், அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்?

துணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு! பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு ''வெள்ளை மணல், எத்தனை வீசை வேணும்? வீசை 2 ரூபாய்'' என்று கொஞ்சங்கூட பயப்படாமல், பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், ''சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ! இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ!'' என்று முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், ''ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர்? உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம்! முதலில் நீர் தான் ஒழிய வேண்டும்!'' என்று இரைச்சல் போட ஆரம்பித்தான். 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. 'வெள்ளை மணல்' என்று சொல்லி, சர்க்கரையை பிளாக் மார்க்கெட் விலைக்கு விற்கும் அந்தப் பேர்வழியை எப்படியாவது போலீஸாரிடம் அப்போதே ஒப்புவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஆனால், அவனுடைய குற்றத்தை எப்படிப் போலீஸார் முன்னிலையில் ருசுப்படுத்துவது? ''நான் யாருக்கும் விற்கவில்லை!'' என்று அவன் சொல்லி விட்டால்?

அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று எனக்கு. அவனிடமிருந்து 'வெள்ளை மணலை' அப்படியே நாம் விலைக்கு வாங்கிக்கொண்டுவிட்டு, பக்கத்திலிருந்த மனிதரை சாட்சி சொல்லச் சொன்னால், சட்டப்படி அந்த ஆசாமியின் குற்றத்தை ருசுப்படுத்திவிடலாமல்லவா?

இந்த யோசனையின்படி, அவனிடமிருந்து 'வெள்ளை மணல்' மூட்டையை விலைக்கு வாங்கி விட்டேன். அவன், ''இன்னும் உங்களுக்கு வேணுமானால், நம்ம வீட்டுக்கு நாளைக்குக் காலையிலே வாங்க, தரேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டபோது, ''தம்பி! சித்தே என்னோடு போலீஸ் ஸ்டேஷன்வரை வந்துவிட்டுப் போயேன்'' என்றேன்.

''எதுக்காக?'' என்றான் அவன் முறைப்பாக.

''பிளாக் மார்க்கெட்டிலே சர்க்கரை விற்ற குற்றத்துக்காக!''

''உங்களாலே அதை ருசுப்படுத்த முடியுங்களா?''

''ஏன் முடியாது? இதோ, இந்த நண்பர் எனக்கு சாட்சி சொல்லுவார்.''

''சொன்னா அவருக்குத்தான் ஆபத்து. பைத்தியம்னு சொல்லி, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவாங்க.''

''ஏன்?''

''இந்த மூட்டையில் இருக்கிற மணலைப் பார்த்து, சர்க்கரைன்னு சொன்னா பின்னே எங்கே கொண்டு போவாங்களாம்?''

''இதுலே மணலா இருக்குது?''

''வேற என்ன இருக்கு? நான்தான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டு வந்தேனே, வெள்ளை மணல்னு!''

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற படைப்புகள்