வியாழன், 31 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 64

சங்கீத சீசன் : 56 -4 
நாரதர் விஜயம் 
சுப்புடு 

இது 56 சீசனைப் பற்றிக்  ‘கல்கி’ யில் வெளிவந்த கட்டுரை.

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53: 1 ; சீஸன் 53: 2  ; சீஸன் 53 : 3

சீசன் 54 : 1 ; சீஸன் 54: 2 ; சீஸன் 54 -3

சீஸன் 55-1 ; சீஸன் 55-2 

சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2   ; சங்கீத சீசன் : 56 -3

சங்கீத சங்கதிகள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 63

சங்கீத சீசன் : 56 -3 

முந்தைய பகுதிகள்:

சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2

இது 56- சீஸன் பற்றிய விகடனின் மூன்றாவது கட்டுரை.  இது ஒரு ஓவியப் பொக்கிடம் என்றே சொல்வேன். ‘சில்பி’யின் அதியற்புத ஓவியங்களை இங்கே பார்க்கலாம்.

இங்கே உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி நிறைய எழுதலாம்!

ஓர் உதாரணம்:  “ஹிந்து” உப ஆசிரியர் ரகுநாதய்யர் என்ற ஒருவரை நீங்கள் ஒரு படத்தில் பார்ப்பீர்கள். இவர் தான் “ரசிகன்” என்ற பெயரில் அருமையான தமிழ்ச் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்! (  “விசித்திரவாணி” என்ற பெயரில் நக்கல் நிறைந்த,  இசைத் தொடர்புள்ள ஒரு கதையை எழுதியுள்ளார்! )  ஆங்கிலத்தில் ‘விக்னேஸ்வரா’ என்ற புனைபெயரில் ‘ Sotto Voce' கட்டுரைகளையும் தான்! . பாகவதம், பத்துப்பாட்டு, ராமாயணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்!

பி.எஸ்.வைதேகி ; சென்னை வானொலியில் எஸ்.ராஜம் அவர்களுடன் கோடீஸ்வர அய்யர் பாடல்களை நிறையப் பாடிக் கேட்டிருக்கிறேன்!

இப்படி ஒவ்வொருவரையும் பற்றித் துணுக்குகள் எழுதிக் கொண்டே போகலாம்! ( இந்தக் காலத்தில் யாருக்காவது அக்கறை உண்டா ? )

[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53: 1 ; சீஸன் 53: 2  ; சீஸன் 53 : 3

சீசன் 54 : 1 ; சீஸன் 54: 2 ; சீஸன் 54 -3

சீஸன் 55-1 ; சீஸன் 55-2

சங்கீத சீசன் : 1956 - 1 ;    சங்கீத சீசன் : 1956 -2   ; 
சங்கீத சீசன் : 1956 -3  ; சங்கீத சீசன் : 1956 -4 
சங்கீத சங்கதிகள்

திங்கள், 28 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 62

சங்கீத சீசன் : 56 -2 

முந்தைய பகுதி :

சங்கீத சீசன் : 1956 - 1

இந்த இரண்டாம் ’விகடன்’ கட்டுரையில் காணப்படும் சில தகவல்கள்:

மயங்கச் செய்த காருகுறிச்சியாரின் இசை.
ஏழெட்டு மாதங்களாய்ப் பாடாத எம்.எஸ்.
ஜி.என்.பி யின்  ‘அப்ளாஸ்’ கச்சேரி
தேவாரத்திற்கு நடனம்
அமீர்கானின் ‘பாதாம் அல்வா’க் கச்சேரி ........

இதோ 56 சீசனின் இரண்டாம் ‘ஆடல் பாடல்’ கட்டுரை!

( கோபுலு, சில்பியின் உன்னதமான ஓவியங்களுடன்  )

[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 61

சங்கீத சீசன் : 1956 - 1

50-களில் சென்னை இசை விழாக்கள் என்றாலே மூன்று இடங்கள் தான் ரசிகர்களை இழுத்தன: வித்வத் சபை ( Madras Music Academy ), தமிழிசைச் சங்கம், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி.  1956-இலும் அப்படியே.

1956-இல் வித்வத் சபையின் தலைவர்: திருவீழிமிழலை சுப்ரமண்ய பிள்ளை .
வித்வத் சபை தொடங்கிய 1927-ஆம் ஆண்டிலேயே அங்கே நாகஸ்வரம் வாசித்தவர் !

தமிழிசைச் சங்கத்தில் மு.வரதராசனார் தலைமை.  “ தியாகய்யர் தமிழரே. அவர் தாய்மொழி தெலுங்காக இருந்ததால் அவர் தெலுங்கில் பாட்டியற்றினார். ஆனால் அவர் கையாண்ட இசை தமிழிசை தான். ஆகவே கர்நாடக சங்கீதம் வேறு தமிழிசை வேறு என்று சொல்வது பெரும் தவறு” என்றெல்லாம் பேசினார் மு.வ. ( இதை இவருக்குப் பின் எத்தனை பேர்கள் சொல்லியிருப்பார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினம்! ஆனால், சொன்னவர்கள் மு.வ. 56-இலேயே சொன்னார் என்று சொல்லியிருப்பார்களா என்பது ஐயமே! )

இந்த வருடத்தில் இன்னொரு விசேஷம். சில்பி, கோபுலு இருவருமே ‘ஆடல் பாடலுக்கு’ அவர்களின் கைவண்ணத்தைச் சேர்த்திருக்கிறார்கள் ! ( சில்பியும், கோபுலுவும் நல்ல நண்பர்கள்! ”சிலரை நான் வரைகிறேன், நீர் வரைய வேண்டாம்”, என்று கோபுலு சொல்லியிருப்பார்” என்பது என் யூகம். பாலசரஸ்வதியை அவர் ‘காரிகேசராக’ வரைந்தது நடனமணிக்குப் பிடிக்கவில்லை ;அவர்  விகடன் ஆசிரியர் வாசனைக் கூப்பிட்டுப் பேசினதாகப் பின்னர் கோபுலு ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.)

இந்த வருடம் ‘தேவன்’ விகடனில் பொறுப்பாசிரியராய் இருந்தார். 57-இல் இசை விழாவைப் பார்க்க அவர் இல்லை.

56-இல் இசை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு: நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 12 டிசம்பர், 56 -இல் மறைந்தார்.

இதோ ‘விகடனின்’ 56-இன் முதல் ஆடல் பாடல் கட்டுரை!  

[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

வெள்ளி, 25 டிசம்பர், 2015

ராஜாஜி - 2

இந்த உலக மன்றம் தனிலே 

ஆங்கில மூலம் : ராஜாஜி ; தமிழாக்கம்: மீ.ப.சோமு  

டிசம்பர் 25. ராஜாஜி அவர்களின் நினைவு நாள்.

மார்கழி இசை விழாக்களில் எம்.எஸ். பாடிப் பிரபலப் படுத்திய “குறை ஒன்றும் இல்லை” என்ற ராஜாஜியின் பாடலைப் பலரும் அறிவர். இந்த சமயத்தில் அவர் எழுதிய , எம்.எஸ். பாடிய இன்னொரு ஆங்கிலப் பாடலையும் நினைவு கூரலாமே?

இதில் இரண்டு பொருத்தங்கள் . ஒன்று, இந்த வருடம் எம்.எஸ். ஸின் நூற்றாண்டு வருடம். இரண்டாவது, “குறை ஒன்றும்” பாடலில் ராஜாஜிக்கு உதவியவர் தமிழறிஞர் மீ.ப.சோமு . அவரே இந்த ஆங்கிலப் பாடலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தன்  1966 ஐ.நா. சபைக் கச்சேரியின் நிறைவில் ராஜாஜியின் ஆங்கிலப் பாடலை, ஆங்கில இசை முறைப்படியே பாடினார். இதற்கு இசை அமைத்தவர் சென்னை வானொலியில் மேனாட்டிசைப் பொறுப்பாளராய் இருந்த ஹாண்டேல் மானுவல் அவர்கள்.  ஐ.நா.சபையில் எம்.எஸ்.  ஒரு ஆங்கிலப் பாடலைப் பாட வேண்டும் என்று தூண்டியவர் மேஜர் ஜெனரல் கரியப்பா என்று சொல்வர்.

முதலில் மீ.ப.சோமுவின் தமிழாக்கம்.

அனைவரின் குற்றமும் பொறுத்தருள் இறைவா!
மக்கள் யாவரும் ஒன்றாய்ச் சேர்ந்தே 
இந்த உலக மன்றம் தனிலே! 

வெறுப்பும் அச்சமும் விட்டுத் தொலைந்தே 
ஒருவரை ஒருவர் உள்ளம் புரிந்திட 
இந்த உலக மன்றம் தனிலே !

சென்ற போரில் ஆகுதி யாக 
உயிரை ஈந்தவர் எம்மைக் கருதிப் 
பூசலில் உள்ள தீரம் தனிலும் 
அமைதியில் மாபெரும் தீரம் வேண்டுமென்(று) 
அமைத்தனர் எமக்கொரு பணியை அன்றோ 
இந்த உலக மன்றம் தனிலே 

ஒவ்வொரு மானிட நல்லுயி ருள்ளும் 
அணுசக்தியிலும் அளவிலாப் பெரிய 
அரியதோர் சக்தி மறைந்துள துணர்ந்தே 
அதனைக் கண்டு பயன்பெற முனைந்தே 
அவனியில் அமைதி நிலைத்திடும் வண்ணம் 
அணுவெடி போலதை வெடித்திட அருள்வாய்!
இந்த உலக மன்றம் தனிலே

இறைவா அனைவரின் குற்றம் பொறுத்தே 
அமைதியில் எம்மை உய்த்தே அருள்வாய் 
இந்த உலக மன்றம் தனிலே!

ஆங்கில மூலம் :

May the Lord forgive our sins
And gather all the Nations
Here under this Uniting Roof.

To give up hate and fear
And learn to understand
Here under this Uniting Roof.

They took the risks of war
And dying, wished us take
The better risks of peace
Here under this Uniting Roof.

The God in everyman
is an atom too
of measureless potential.
Let us learn to find it
And explode it into lasting peace
Here under this Uniting Roof.

May the Lord forgive our sins
Inspiring us to peace on Earth
Here under this Uniting Roof.

==== 

தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜியைப் பற்றி

செவ்வாய், 22 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 60

எம்.எஸ். அளித்த நிரூபணம்
‘கல்கி’ 

இது (2015) எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் நூற்றாண்டு வருடம்.

எம்.எஸ். 1943-இல் எப்படிப் பாடினார் என்று தெரியவேண்டுமா? இதோ, ’கல்கி’யில்  ‘கல்கி’ எழுதிய விமர்சனக் கட்டுரையைப் படியுங்கள்!

[ நன்றி: கல்கி களஞ்சியம், வானதி பதிப்பகம் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

சங்கீத சங்கதிகள்

'கல்கி’ கட்டுரைகள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 59

இசைக் கலையின் அற்புதம்

கல்கி 

என் சங்கீத சங்கதிகள் - 1 கட்டுரையில் 1953-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இசை விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த ஆடல் பாடல் கட்டுரையை வெளியிட்டிருந்தேன். (அதைத் தொடர்ந்த ‘சங்கதிகளிலும்’ தான்.)

ஆனால், 53- ஐப் பற்றிய ஒரு விஷயம் என்னை ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனென்றால், 1953-இல் தான் பேராசிரியர் ‘கல்கி’ இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சங்க’த்தின் சங்கீத மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்;  அச்சங்கத்தார் அவருக்கு ’சங்கீத கலா ரசிக சிகாமணி’ என்று ஒரு பட்டம் அளித்தனர். அப்போது அவர் நிகழ்த்திய தலைமை உரை என்னிடம் எங்கோ இருக்க வேண்டுமே, படித்த ஞாபகமாய் இருக்கிறதே என்று ஒரு குருவி மனத்துள் சொல்லிக்கொண்டே இருந்தது. மேலும், அதற்கு அடுத்த வருடம் 54-இல், கல்கி மறைந்து விட்டார். அதனால்,  கல்கி பங்கேற்ற கடைசி இசை விழா என்பதால் அந்த 53 ஆண்டு உரையைக் கண்டு பிடிப்பது  மேலும் முக்கியமானதாய் ஆயிற்று!

கடைசியில் என்னுடைய ‘களஞ்சியத்தில்’ அண்மையில் அதைக் கண்டு பிடித்தேன்! அதை இங்கே இடுகிறேன்.!

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1

சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீஸன் 54: 1

சீஸன் 54: 2 

சீசன் 54-3
சீஸன் 55-1

சீஸன் 55-2

சங்கீத சங்கதிகள்

கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . .

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நா.பார்த்தசாரதி -1

‘தீபம்’ பார்த்தசாரதி
சி.சு.செல்லப்பா

டிசம்பர் 13. ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவு நாள்.

அவர் நினைவில்,  ஜனவரி-பிப்ரவரி, 88  ‘தீபம்’ இதழில் வந்த  தலையங்கத்தையும், சி.சு.செல்லப்பாவின் அஞ்சலிக் கட்டுரையையும் இங்கிடுகிறேன்.

[ நன்றி : தமிழம்.நெட் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்: 

சனி, 12 டிசம்பர், 2015

பி.ஸ்ரீ. -11: பாரதி விஜயம் -3

விதியின் விசித்திர கதி 

பி.ஸ்ரீ

டிசம்பர் 11. பாரதியார் பிறந்த தினம். 

பாரதி விஜயம்’ என்ற சிறுதொடரைக் ‘கல்கி’ பத்திரிகை
 தொடங்கிய  காலத்தில் , 1943-இல்,  இந்திய சுதந்திரத்திற்கு
 முன்பு --- - தமிழறிஞர் பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதினார். 

அந்தத் தொடரின் இரண்டாம் கட்டுரை இதோ:

இந்தப் “பாரதி விஜயம்” தொடரிலிருந்து முன்பு நான்
 இட்டவை: 
விருந்தும் மறுவிருந்தும்

[  நன்றி: கல்கி ; ஓவியம் : வர்மா ]