சித்திரலேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்திரலேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 மே, 2014

பி.ஸ்ரீ -7 : சித்திர ராமாயணம் -7

366.  கிஷ்கிந்தா காண்டத்தின் ஸ்தானம்
பி. ஸ்ரீ



கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதியை விவரிக்கும் இக்கட்டுரையில், பி.ஸ்ரீ கம்பனின் எல்லாக் காண்டங்களையும் பற்றித் தன் கருத்துகளைச் சுருக்கமாய்க் கூறுகிறார்.

1944 -இல் விகடனில் தொடங்கிய இத்தொடரில், 50-இல் எழுதிய ‘கிஷ்கிந்தா காண்டம் இறுதிவரையே 366 கட்டுரைகள் ( 7 ஆண்டுகள்! ) எழுதி இருக்கிறார் பி.ஸ்ரீ! அப்படியானால், மீதி எவ்வளவு கட்டுரைகள் எழுதியிருப்பார்? நீங்களே யூகித்துக் கொள்ளலாம். என்னிடம் அந்தக் கணக்குத் துல்லியமாக இல்லை! 1956/57 - ஆண்டில் தொடரில் (யுத்த காண்டத்தில் , “ மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து நீ முடித்தி! ... போன்ற பாடல்கள் ) அசோகவனத்தில் நடக்கும் ராவணன் -சீதை சம்பாஷணையைப் படித்த நினைவு இருக்கிறது.  14 ஆண்டுகள்; சுமார் 700+ கட்டுரைகள்; 1957- செப்டம்பர் 22 இதழில்  நிறைவு பெற்றது. ( இவ்வளவு ஆண்டுகள் தொடர்ச்சியாக வேறெந்தத் தொடராவது எந்தத் தமிழ்ப் பத்திரிகையிலாவது வந்துள்ளதா ? தெரிந்தால் சொல்லுங்கள்! )

 பி.ஸ்ரீ கம்பனைப் பற்றி எழுதிய சில தொடர்கள்/ நூல்கள் .

‘கம்ப சித்திரம்’, ‘சித்திர ராமாயணம்’ என்ற முதல் இரண்டு தொடர்கள் விகடனில் வெளிவந்தன.

பிறகு, பி.ஸ்ரீ தன் 95-ஆம் வயதில் , சரஸ்வதி ராமநாதனுடன் இணைந்து எழுதிய ‘கம்பன் கலைக்கோயிலுக்கு ஒரு கைவிளக்கு’ என்ற நூல் 1980 -இல் ‘வானதி பதிப்பக’ நூலாக வந்தது. ( தன் வாழ்நாளில் ‘சித்திர ராமாயண’த்தை நூல்களாகப் பார்க்கமுடியாது என்று அவருக்குத் தோன்றியதோ, என்னவோ?) இந்தக் கடைசி நூல்  பி.ஸ்ரீ என்ற மாபெரும் கம்பராமாயண ஆய்வாளரை நினைவுபடுத்த இன்று என்னிடம் நூலாக உள்ளது. அதை வெளியிட்ட ’வானதி’க்கு என் நன்றிகள்!


**தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் கூடிய விரைவில், விகடன் பதிப்பகம் முழுத் தொடரையும் , ’சித்திரலேகா’வின் படங்களுடன் நூல்களாக வெளியிடும் நாளை எதிர்நோக்குகிறேன். 

பி.ஸ்ரீ -யின் ‘கம்ப சித்திரம்’ தொடரையும் நான் படித்ததில்லை. அதனையும் விகடன் வெளியிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியே!




**

பின் குறிப்பு:

‘ சக்தி விகடன்’  இதழ்  2015 -2018 வருடங்களில் ‘ சித்திர ராமாயண’த் தொடரைச் சுருக்கி, படங்களுடன் வெளியிடத் தொடங்கினார்கள். அருமையான தொண்டு. ஆனால், என்ன காரணமோ , தொடரை ஆரணிய காண்டத்தின் நடுவில் நிறுத்தி விட்டார்கள்.  சிறு வயதில் நான் உன்னிப்பாகப் படிக்காத தொடரை இப்போதாவது படிக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். என் ஆசையில் மண்!  ‘சக்தி விகட’னுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்தேன். ஊஹும் ...இதுவரை சித்திர ராமாயணம் அவ்விதழில் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. 

 தொடர் அவ்விதழில் வருவதானால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்! நான் மீண்டும் ‘சக்தி விகட’னைப் படிக்கத் தொடங்குவேன்!  

தொடர்புள்ள பதிவுகள் ;

360. தமிழகத்தில் ராம தூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை



பி. ஸ்ரீ படைப்புகள்

வியாழன், 20 மார்ச், 2014

பி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6

365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை
பி.ஸ்ரீ


பி.ஸ்ரீ. ஆச்சார்யாவுக்கும் ‘ஆனந்தவிகட’னுக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. 1930- இல் தொடங்கிய அந்த அனுபவங்களைப் பற்றிப் பி. ஸ்ரீயே “நான் அறிந்த தமிழ்மணிகள்” என்ற நூலில் விவரமாய்ச் சொல்லியிருக்கிறார்.

சட்டக் கல்லூரியில் படித்து வந்த பி.ஸ்ரீயின் சகோதரர் ஏ.என்.மகரபூஷணம் மூலமாகத் தான்  ‘கல்கி’யின் நட்புக் கிடைத்தது பி.ஸ்ரீக்கு. பிறகு வாசனின் நட்பும் கிட்டியது. முதலில் கல்கி அவரை விகடன் ஆண்டுமலர் ஒன்றில் ஓர் இலக்கியக் கட்டுரை எழுதும்படி கேட்டுக் கொண்டார். பி.ஸ்ரீ ’குற்றாலக் குறவஞ்சி’யில் வரும் குறிகாரியான குறத்தியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்; பத்து ரூபாய் சன்மானமும் கிடைத்தது!  பிறகு, ஆழ்வார்களைப் பற்றி” திவ்யப்பிரபந்த சாரம்”, வியாச பாரதத்திலிருந்து கதைகள், நாயன்மார்களைப் பற்றிச் “சிவநேசச் செல்வர்கள்” , “கம்ப சித்திரம்” என்ற தலைப்பில் கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதினார். இக் கட்டுரைகளைப் பொதுமக்கள் பாராட்டியதால் , “சித்திர ராமாயண’க் கட்டுரைகளை பல வருடங்களாக எழுத பி.ஸ்ரீக்கு இன்னொரு வாய்ப்புக் கிட்டியது.

பேராசிரியர் 'கல்கி' பி.ஸ்ரீ அவர்களைவிட வயதில் சிறியவர். இருந்தாலும், 1938-இல் வெளியான பி.ஸ்ரீ -யின் " திவ்ய பிரபந்த ஸாரம்" என்ற நூலுக்கு கல்கியை முன்னுரை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் பி.ஸ்ரீ.

அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதி { நன்றி: பொன்னியின் புதல்வர், சுந்தா ]

" இந்தப் புத்தகத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கும் திவ்வியப் பிரபந்தக் கட்டுரைகள் ஆனந்த விகடனில் பிரசுரமாகிக் கொண்டு வந்தபோது, ஒரு நண்பர், "இந்த ஆழ்வார் கட்டுரைகளை யாராவது படிக்கிறார்களா? " என்று கேட்டார். "படிக்காமற் போனால், ஆழ்வார்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை" என்று பதில் சொன்னேன். "


சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த பகுதியைக் காண்போமா?

மகேந்திர மலையின் மீது, பேருருவம் கொண்ட அனுமன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான்.

365. வானுற ஓங்கிய தன்னம்பிக்கை

பி.ஸ்ரீ







[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

ஞாயிறு, 9 மார்ச், 2014

பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5

364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?

பி.ஸ்ரீ



 “ கம்பனின் இசைச் செல்வத்தை நாளதுவரை யாரேனும் முழுவதும் கண்டுவிட்டதாகச் சொல்லமுடியுமா? இசைக்கு அடுத்தபடியாக மனோபாவந்தான் கவிஞனுக்கு மூலதனம். அந்த மூலதனம் இல்லாமல் --கவிக்கடை போடுவதெல்லாம் வீண்முயற்சியே. கம்பனது மனோபாவம் ( imagination)  பல்வேறு வடிவங்களைக் கொண்டு ஒரு அற்புத சித்திரசாலையைப் படைத்திருக்கிறது. எனவேதான் இதைக் ’கம்பசித்திரம்’ என்கிறோம். இதற்கு மேலாக கம்பனிடம் நாம் காண்பது நாடகப் பண்பு. “கம்ப நாடகம்” என்று மணவாள மாமுனிகள் கூறுவது சிந்திக்கத் தக்கது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும்போதும், ஊடுருவிப் பார்க்கும்போதும் நமக்குத் தோன்றுவதுதான் என்ன? 

இது மொழிபெயர்ப்புமன்று. சார்பு நூலுமன்று. “முதல் நூல்” என்றே முடிவு கட்டத்தக்க இலக்கிய படைப்புத்தான் கம்பராமாயணம் “

        --பி.ஸ்ரீ,ஆசாரியா, சரசுவதி ராமநாதன்,
       “ கம்பன் கலைக்கோயிலுக்கு ஒருகைவிளக்கு “ என்ற நூலில்.

சரி, நம் “சித்திர ராமாயண”ப் பயணத்தில் பி. ஸ்ரீ-யின் அடுத்த கட்டுரையைப் பார்ப்போமா? ஜாம்பவான் அனுமனின் சக்தியைப் புகழ்ந்து பேசும் கட்டம்.

ஒரு குறிப்பு: சரியாக, 70 -ஆண்டுகளுக்கு முன் ( ஆம், 1944 -இல் ) விகடனில் தொடங்கப்பட்ட இத் தொடரில் முதலில் ஆர்ட் டைரெக்டர், ஓவியர் ‘சேகர்’ தான் ஓவியங்களை வரைந்தார் . பிறகு தான் ‘சித்திரலேகா’வின் ஓவியங்கள்.)




======

[ நன்றி: விகடன், படம்: சித்திரலேகா ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள முந்தைய கட்டுரைகள்:

360. தமிழகத்தில் ராமதூதர்கள்
361. புதிய நண்பன்
362. வானரர் கற்ற வைத்திய பாடம்
363. கழுகு மகராஜா


பி. ஸ்ரீ படைப்புகள்

( தொடரும் ) 

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4

363. கழுகு மகாராஜா 
பி.ஸ்ரீ  
[ பி.ஸ்ரீ ]

‘கல்கி’ விகடனில் எழுதுவதற்கு முன்பே, பி.ஸ்ரீ. விகடனில் எழுத ஆரம்பித்து விட்டார். ’கல்கி’ விகடனின் ஆசிரியரான பின்னர், பி.ஸ்ரீ. அவர்களுக்கு மேலும் நிறைய எழுதும் வாய்ப்புகள் கொடுத்தார். அந்தக் காலத்தில் ’கல்கி’க்கு அடுத்தாற்போல் விகடனில் இடம்பெற்றவர் பி.ஸ்ரீ.யே என்கிறார் ’சுந்தா’. பி,ஸ்ரீ-யின் “இலக்கியப் பூஞ்சோலை”க் கட்டுரைகள், சித்திர விளக்கங்கள், “சிவநேசச் செல்வர்கள்”, ”கம்பசித்திரங்கள்” முதலிய நெடுந்தொடர்கள் அக்கால விகடனில் தான் வெளிவந்தன. (  இவை இப்போது நூல்களாக கிடைக்கின்றனவா? தெரியவில்லை! )

“ பி.ஸ்ரீ. யின் கட்டுரைகள் விகடனின் பொதுவான பொருளடக்கத்துடன் பொருந்தாமல் கனமாக இருந்தன. ஆயினும், தமிழ் இலக்கியத்தின் அருமை, பெருமைகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் , அவற்றைக் கல்கி ஆட்சேபணைகளுக்கு இடையே உறுதிப் பற்றுடனும் இடையறாமலும் வெளியிட்டு வந்தார் ”
( சுந்தா, பொன்னியின் புதல்வர்)

சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த கட்டத்திற்குத் தாவுவோம்! ஸம்பாதி சீதை இருக்கும் இடத்தை வானரர்க்குச் சொல்கிறது.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

(தொடரும்) 

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 22 மார்ச், 2013

பி.ஸ்ரீ -3 : சித்திர ராமாயணம் -3

362. வானரர் கற்ற வைத்திய பாடம்
பி.ஸ்ரீ.


பி.ஸ்ரீ. ஆசார்யா அவர்களின் நூல்களின் பட்டியலை இட்டால் அதுவே ஒரு கட்டுரையாகும்! மேலும், பல்வேறு  துறைகளிலும் அவர் எழுதியுள்ள படைப்புகளைப் படித்தால் நமக்குப் பிரமிப்பு இன்னும் அதிகரிக்கும்! உதாரணமாக, அவர் தன் பெயரை வெளியிடாமல் ‘விகட’னில் எழுதிய கட்டுரைத்தொடர்கள் பலவற்றில் இரண்டு காட்டுகள்: 

1) “துள்ளித் திரிகின்ற காலத்திலே”  என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு முறை , மாண்டிசோரி கல்வி முறை  பற்றி அழகாக எழுதி இருக்கிறார். ( இதை அல்லயன்ஸ் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.)

2) ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை ‘ என்ற சரித்திர வரலாறு இன்னொன்று. கிளைவ், ராஜாஜி இருவரின் கையெழுத்துகளுடன் கம்பீரமாய் விகடனில் 1948 -இல் வெளியான தொடர் இது. ( இதை அசோகா பப்ளிகேஷன்ஸ் ஹவுஸ், ( மதுரை) 1954 -இல் நூலாக வெளியிட்டது என்ற ஒரு தகவல் கிட்டுகிறது. நூல் இப்போது அச்சில் இருக்கிறதாய்த் தெரியவில்லை.)

இப்படிப்பட்ட தொடர்களை நாங்கள் சிறுவயதில் ( 40/50-களில்) படிக்கும் போது, இவற்றின் ஆசிரியர் யார் என்று யூகிக்க முயன்றதுண்டு. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இவற்றை எழுதியவர் பி.ஸ்ரீ. என்று அறிந்தோம். (இப்போதும் சிலர் அறியாமலிருக்கலாம்! ‘விகடன்’ வெளியிட்ட ‘காலப்பெட்டகம்’ என்ற நூலில் இரண்டாம் தொடரைப் பற்றித் தகவல் இருக்கிறது.ஆனால், அதன் ஆசிரியர் யார் என்று ஏனோ குறிப்பிடப் படவில்லை! )

எழுத்தாளராக இவர் ஆவதற்கு முந்தைய இவருடைய  வாழ்க்கையைப்  பற்றிச் “சுந்தா” ( பொன்னியின் புதல்வர் நூலில்) எழுதியதைப் படித்தால், உங்களுக்கே ஆச்சரியமாய் இருக்கும்!  ‘சுந்தா’ எழுதுகிறார்:

”டி.கே.சியைப் போலவே பி.ஸ்ரீயும் பொருனை தந்த செல்வர்களிலே ஒருவர். விட்டலபுரம் கிராமத்தில் இலக்கியச் செல்வம் படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்து, அந்தச் செல்வத்தை அனுபவித்துக் கொண்டே வளர்ந்தவர். அவர் முதலில் வகித்தது உளவறியும் போலீஸ் உத்தியோகம். அரவிந்தரின் நடவடிக்கைகளை உளவறியும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவருடைய உள்ளத்தில் மாறுதல் உண்டான காரணத்தால் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, தேசிய உணர்ச்சியையும் , இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் எழுத்தாளராய்ப் பரிணமித்தார்”


சரி, நாம் ராமாயணத்தில் ’வானரர் கற்ற வைத்திய பாடம் ‘ என்னவென்று பார்க்கலாமா?





[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

திங்கள், 11 பிப்ரவரி, 2013

பி.ஸ்ரீ -2: சித்திர ராமாயணம் -2

புதிய நண்பன் 
பி.ஸ்ரீ.



கம்பனைக் காண அறிஞர் பி.ஸ்ரீக்கு வழிகாட்டியவர்கள் யார்?
“ கம்பன் கலைக் கோவிலுக்கு ஒரு கலைவிளக்கு” என்ற நூலின் முகவுரையில் பி.ஸ்ரீ. யே இதற்குப் பதில் சொல்கிறார்.

” கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்
   கம்பன் பிறந்த தமிழ்நாடு --”

என்றான் மகாகவி பாரதி. பாரதியின் இந்த அடிகள் கம்பனில் யாருக்கும் ஒரு ஈடுபாட்டைத் தோற்றுவிக்கும் எனக்கும் அவ்வாறே. .... அடுத்தபடியாகக் கம்பனைக் காண எனக்கு வழிகாட்டியவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் வையாபுரி பிள்ளை. ... அவரைப் பின்பற்றியே கம்பனை இலக்கிய ஆராய்ச்சி முறையில் அணுகவும் கற்கவும் முனைந்தேன்”

என்கிறார் பி.ஸ்ரீ.

சரி, தமிழ்நாட்டிற்கு வந்த ராமதூதர்கள் அடுத்து என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாமா?








[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

முந்தைய பதிவு :

தமிழகத்திலே ராமதூதர்கள்

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

[நன்றி: விகடன்] 

வியாழன், 8 நவம்பர், 2012

பி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1

தமிழகத்தி்லே ராமதூதர்கள்
பி.ஸ்ரீ.


’சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் ஆனந்த விகடனில் 40/50-களில் வந்த ‘சித்திர ராமாயணம் ‘என்ற தொடர்தான்  என்னைப் போன்ற அன்றைய பல இளைஞர்களுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்தது. பி.ஸ்ரீ என்று அழைக்கப் பட்ட பி.ஸ்ரீநிவாசாச்சாரி எழுதிய தொடர் அது. அவர் எழுதிய பல படைப்புகள் இன்று பதிப்பில் இருந்தாலும், ‘சித்திர ராமாயணம்’ இன்னும் முழு நூலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்திரலேகாவின் இயற்பெயர் நாராயணசாமி .


அந்தத் தொடரிலிருந்து இதோ ஓர்  அத்தியாயம்!






 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

ஒப்பிலக்கியச் செம்மல்!