வியாழன், 30 நவம்பர், 2017

922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3

ஒளி
ச.து.சுப்ரமணிய யோகி 


நவம்பர் 30. ச.து.சு.யோகியின் பிறந்த தினம்.

‘அஜந்தா’ இதழில் 1947-இல் வந்த ஒரு கவிதை.


 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


ச.து.சுப்பிரமணிய யோகி

புதன், 29 நவம்பர், 2017

921. அ.மருதகாசி - 1

"திரைக்கவித் திலகம்' கவிஞர் மருதகாசி
ஆர்.கனகராஜ்

நவம்பர் 29. மருதகாசி அவர்களின் நினைவு தினம்.
==

மரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்.

 ÷திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் எழுதும் தூண்டுதல் பெற்று சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை'யின் நாடகங்களுக்கும் மு.கருணாநிதி எழுதிய "மந்திரிகுமாரி' நாடகத்துக்கும் பாடல்கள் எழுதினார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றியதுடன், அந்நாடகங்களுக்கு இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான ராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.

 ÷தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாடகப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.

 ÷1949-இல் வெளிவந்த "மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. ""பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.

 ÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.

 ÷ஒருசில தமிழ்ச் சொற்களுடன் மிகுதியும் சம்ஸ்கிருதமும், சாஸ்திரியமுமாக பழைய கீர்த்தனைகளை அடியொற்றி உருவாகி வந்த திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி. திரைப்பாடல்களுக்கு இலக்கிய ரசிகர்களுக்கான சாளரத்தைத் திறந்து வைத்து, இசைத் தன்மையுடன் பொதுத் தன்மைக்கும் பாடல்களை நகர்த்திய முன்னோடிப் பாடலாசிரியர்களுள் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர் என்று சொல்லவேண்டும்.

 ÷""நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.

 ÷"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.

 ÷இவர், 1940-இல் தனகோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.

 ÷கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், "நல்லவன் வாழ்வான்' படத்துக்காக "சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.

 ""புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது "நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.

 ÷1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர், எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

 ÷தேவர் பிலிம்ஸின் "விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். "கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', "இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற "விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.

 ÷டி.எம்.சௌந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.

 "திரைக்கவித் திலகம்' என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார்.

 ÷தமிழ் சினிமாவைப் பற்றிய பதிவுகளில் தவிர்க்க முடியாத பங்களிப்பு மருதகாசியுடையது. கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி இருவரும் அறுபதுகளிலிருந்து தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசிரியர்களாக வலம் வந்தாலும்கூட, மருதகாசியின் பாட்டுகளுக்குத் தனித்துவமும், ஜனரஞ்சகமும் இருந்ததால், அவரை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்டிவிட முடியவில்லை. மருதகாசியின் திரையிசைப் பாடல்கள் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

 [ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
அ. மருதகாசி : விக்கிப்பீடியா

செவ்வாய், 28 நவம்பர், 2017

920. திரு. வி. க - 4

உடலோம்பலும் அறிவோம்பலும்
திரு.வி.க 


‘சக்தி’ இதழில் 1939-இல் வந்த ஒரு கட்டுரை.
===


 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

திரு. வி.க

திங்கள், 27 நவம்பர், 2017

919. சிறுவர் மலர் - 9

ஓநாயின் தந்திரம்
ராசு

‘பாரிஜாதம்’ இதழில் 1949-இல் வந்த ஒரு சிறுவர் கதை.



 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்

918. தெ.பொ.மீனாட்சிசுந்தரம் -3

சென்னை நாகரிகம் - 1
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்


‘தமிழ்முரசு’ பத்திரிகையில் 1947-இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை.





 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

ஞாயிறு, 26 நவம்பர், 2017

917. பரலி சு.நெல்லையப்பர் -2

செந்தமிழ் நாடு 
பரலி சு.நெல்லையப்பர் 





‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கவிதை.


 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பரலி சு.நெல்லையப்பர்

சனி, 25 நவம்பர், 2017

916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ

நிஜமான ஒரு ராஜா : ராஜா சாண்டோ
அறந்தை நாராயணன் 

நவம்பர் 25. ராஜா சாண்டோவின் நினைவு தினம்.




[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:

நட்சத்திரங்கள்

இராசா சாண்டோ: விக்கிப்பீடியா

ராஜா சாண்டோ ( தமிழ் சினிமா முன்னோடிகள் - 2 )

915. சங்கீத சங்கதிகள் - 138

 விளம்பரங்களில்  எம்.எஸ்.  



41-இல் வந்த விளம்பரக் கதம்பம்!











தொடர்புள்ள பதிவுகள்:

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

சங்கீத சங்கதிகள்

வெள்ளி, 24 நவம்பர், 2017

914. ஆர்.எஸ்.மணி - 1

கோபம் தணிந்தது!
ஆர்.எஸ்.மணி

ஆர்.எஸ்.மணி என்ற பெயரில் பலர் ‘அந்தக்’ காலத்தில் எழுதினார்கள். எனக்குக் கிட்டிய சிலவற்றில் இது ஒன்று!  என்றேனும் இந்த 'ஆர்.எஸ்.மணி'யைத் தெரிந்தவர்கள் இதைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை இங்கிடுகிறேன்.!

 விகடனில் 50-களில்  வந்த கதை இது. 








[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

வியாழன், 23 நவம்பர், 2017

912. அ.சிதம்பரநாதன் செட்டியார் - 1

பழந்தமிழ்ப் புலவர் சிறப்பியல்புகள்
அ.சிதம்பரநாதச் செட்டியார் 


நவம்பர் 22. அ.சி.செட்டியாரின் நினைவு தினம்.

‘யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க வெள்ளிவிழா மலரில்’ 1950-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.







[ நன்றி : noolaham.org ] 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

அ. சிதம்பரநாதச் செட்டியார் : விக்கிப்பீடியா 

அ.சிதம்பரநாதன் செட்டியார்

913. மு.அருணாசலம் - 1

அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்
முனைவர் தெ.ஞானசுந்தரம்


நவம்பர் 23. மு.அருணாசலம் அவர்களின் நினைவு தினம்.
===
ஒரு பல்கலைக்கழகத்தில் பலதுறை அறிஞர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அறிஞர் ஒருவர்க்குள்ளே ஒரு பல்கலைக்கழகமே இருந்தது உண்டா? அப்படி அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி இருந்தவர்தான் மு.அருணாசலம்.

  நாகை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம்.

  அவரிடம் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமை, இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிக்கும் ஆர்வம், கல்வெட்டுகளைப் படிப்பதில் தேர்ச்சி, தம் காலத்திய அரசியல் தலைவர்களோடும் தமிழறிஞர்களோடும் நெருக்கமான பழக்கம், பத்திரிகை ஆசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று, பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று இவையெல்லாம் குடிகொண்டிருந்தன.

  தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜாசர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

  கணக்குப் படித்த இவர், தமிழாராய்ச்சியில் தடம்மாறியதால் தமிழுக்குக் கணக்கில்லா ஆராய்ச்சி முடிபுகளைக் கொண்ட தரமான நூல்கள் கிடைத்தன. அறிஞர்கள் கா.சு.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்த வரலாறு, அறிஞர் மு.அருணாசலத்தின் வரலாறு. அந்தத் தொகுதிகள் எல்லாம் தகவல் களஞ்சியங்கள்! பலருக்கும் பெயர்கூடத் தெரியாத நூல்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களைக் காணலாம்.


  ""எமது இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்திலும் காணும் அட்டவணைகள் எல்லாவற்றையும் ஒருங்கு தொகுத்துத் தந்தால் அதுவே இலக்கிய வரலாற்றைச் சுருக்கி உணர்த்தவல்ல ஒரு கருவிநூலாக அமையும்'' என்னும் நூலாசிரியர் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

  ""எப்படி இவ்வளவு தூரம் கைவலிக்க எழுதினீர்கள்?'' என்று கேட்ட பொழுது அவர், ""நான் கையெழுத்து நன்றாக இருப்பவரைக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி எழுதச்செய்து பின்னர் பிழைகள் இருந்தால் திருத்துவேன். கைப்பட எழுதுவது குறைவு'' என்றார். கி.வா.ஜ.வும் மு.வ.வும் கூட இப்படித்தான் நூல்களை எழுதியுள்ளார்கள் என்பது சிலரே அறிந்த உண்மை.

  மு.அருணாசலனார் தமிழ்த்தாத்தா உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ்படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். திரு.வி.க., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்றவர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது தத்துவ மேதை ராதாகிருஷ்ணனோடும் பழகி இருக்கிறார்.

  இவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் ""அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை'' என்று எழுதியுள்ளார்.


  . தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டிச் சீர்காழி மூவரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அவரைச் சாரும்.

  வையாபுரிப்பிள்ளையோடு பழகியதன் விளைவாக அரிய ஆய்வுக்குறிப்பு ஒன்றைத் தெரிவித்தார். ""சிந்தாமணியை உ.வே.சா. முதன்முதலில் வெளியிட்டபோது, சீர் பிரிக்காமலேயே வெளியிட்டார். அதற்குக் காரணம் அதில் வரும் ஒருவகை யாப்பின் அமைப்பு விளங்கவில்லை. அந்த யாப்பு அடிதோறும் 14 எழுத்துகளைக் கொண்ட 4 அடிகளால் ஆகிய காப்பியக் கலித்துறை என்பதாகும். அது பெரும்பாலும், மா மா கனி மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த அடிகளைக் கொண்டதாக அமையும். இதனை முதலில் கண்டறிந்தவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். அதனையொட்டியே பின்வந்த பதிப்புகளில் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டது'' என்றார்.

  தமிழ்த் தாத்தாவோடு பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது நூல் முழுமையடைந்தது. உ.வே.சா.வால் குறிஞ்சிப்பாட்டு முழுமையாகக் கிடைத்ததுபோல் மு.அருணாசலத்தால் ஈங்கோய்மலை எழுபது முழுமையாகக் கிடைத்தது. அவர் சேகரித்த சுவடிகளில் "திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி, இன்றைய கையடக்கப் பதிப்பினும் சிறிதாக அமைவதாகும்.

  காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபாபாவே, ஜே.சி.குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார். அவர் தம் ஊரில் ஏற்படுத்திய ஆரம்பப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவை அவரது தொண்டுள்ளத்திற்குச் சான்றுகளாகும். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் தளர்ந்தார் ஸ்தாபனமாய் அமைந்தது. ஒரு காசுகூடப் பெறாமல் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.

  தம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று திருமடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார் மு.அருணாசலம். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

  சைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

  அவர் பதவியைத் தேடிச் சென்றதில்லை. அவை அவரைத் தேடி வந்தன. அவர் அறிஞர்கள் போற்றும் அறிஞர். அண்மையில் முதுபெரும் தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ஒருவர் மு.அருணாசலம் எழுதியுள்ள "திருவாசகக் குறிப்புக்கள்' என்னும் நூலைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் அருகில் இருந்த ஒருவர் ""இந்நூலுக்கே ஒரு "டாக்டர்' பட்டம் கொடுக்கலாம்?'' என்றார். அதைக் கேட்ட ம.ரா.போ.குருசாமி, ""அவர் செய்திருக்கும் வேலைக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுப்பது?'' என்றார்.

  வாழ்நாள் முழுவதும் "அருணாசலம் எம்.ஏ.' என்னும் பெயருடனேயே எழுதிக்கொண்டிருந்த அப்பெருந்தகைக்கு டாக்டர் பட்டம் வீடுதேடி வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்தது.

  மு.அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் இவ்வுலகிலிருந்து மறைந்த போதிலும் தமிழிருக்கும்வரை மறக்க முடியாத தமிழ்த்தொண்டும் ஆற்றியவர் என்பது மறுக்க இயலாத உண்மை.

தொடர்புள்ள பதிவுகள்:
மு. அருணாசலம் : விக்கிப்பீடியா 

செவ்வாய், 21 நவம்பர், 2017

911. சங்கீத சங்கதிகள் - 137

தியாகராஜர் கீர்த்தனைகள் - 6
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.



மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1931-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்