வெள்ளி, 31 மார்ச், 2017

679. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் -1

தமிழுக்கு நெல்லை தந்த கொடை!
ஜெயநந்தனன்

மார்ச் 31. தொ.மு.பாஸ்கரத் தொண்டமானின் நினைவு தினம்.

அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றியும், சரித்திரப் பிரசித்தி பெற்ற தலங்களைப் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் "கலைமணி" தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான்.


நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

இவரது தந்தை வழிப் பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்றால், தகப்பனார் முத்தையாவோ தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற அறிஞர். இப்படிப்பட்ட மொழி ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்த பாஸ்கரத் தொண்டைமானுக்கு இயற்கையிலேயே தமிழில் நாட்டமும், கலைகளில் ஈடுபாடும் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

அன்றைய வழக்கப்படி, கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டுவிட்ட பாஸ்கரத் தொண்டமானின் மாணவர் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. கல்லூரி நாள்களில் பாஸ்கரத் தொண்டைமானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருவர்.

ஒருவர் தொண்டைமான் படித்த இந்துக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர்.

இன்னொருவர், "சொல்லின் செல்வர்" இரா.பி.சேதுப்பிள்ளை. இரா.பி.சேதுப்பிள்ளையின் தூண்டுதலின் பேரில்தான் பாஸ்கரத் தொண்டைமான் தனது கல்லூரி நாள்களிலேயே "ஆனந்தபோதினி" பத்திரிகையில் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார். கம்பனின் கவிதையில் காதல் வசப்பட்டவர்கள் இரசிகமணியின் இரசனை வட்டத்திற்குள் இழுக்கப்படுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே?


"இரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பரிச்சயமும், அவருடன் அமர்ந்து கம்பனை வரிவரியாக இரசித்துப் படிக்கும் அனுபவமும் பாஸ்கரத் தொண்டைமானின் தமிழ்ப் பித்துக்கு மெருகும் உரமும் ஊட்டின. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற கையோடு, அரசு உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. இன்றைய "வனவள"த் துறைக்கு அப்போது "காட்டிலாகா" என்று பெயர். காட்டிலாகாவில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, பாஸ்கரத் தொண்டைமான் வருவாய்த் துறை ஆய்வாளரானார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், மாவட்ட உதவி ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார் அவர்.

இவரது சேவையைக் கருதி, அரசு இவரை இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) தகுதியை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது.1959ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாஸ்கரத் தொண்டைமான் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டார். தமது பாரம்பரியமான வீட்டில் தங்கி தமது இலக்கியப் பணியைக் கடைசிக் காலம்வரை தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல, அவர் எழுதிக் குவித்ததும் ஏராளம் ஏராளம். பாஸ்கரத் தொண்டைமான் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் அரசுப் பணியுடன் தமிழ்ப் பணியும் ஆற்றினார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு.

தஞ்சையில் அவர் பணி புரிந்தபோது அங்கே கிடைத்தற்கரிய கலைச் செல்வங்களும், சிற்பப் படிவங்களும், சரித்திரத்தின் அடிச்சுவடுகளும் கேள்வி கேட்பாரற்று வீணாகிப் போவதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவைகளை எல்லாம் முறையாக சேமித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துத் தமிழரின் சரித்திரத்துக்கு வலு சேர்த்த பெருமை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுடையது!

நெல்லை வண்ணாரப்பேட்டையில் அப்போதெல்லாம் தமிழகமெங்கும் உள்ள தேர்ந்தெடுத்த இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஒன்றுகூடும் இடம் "இரசிகமணி" டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீடு. சாரல் பருவம் வந்துவிட்டால், இவர்கள் குற்றாலத்தில் இருக்கும் இரசிகமணியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் நடு முற்றமாக வட்டவடிவில் அமைந்த தொட்டிக்கட்டு அமைப்பில்தான் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரசிகமணியின் நண்பர் வட்டம் கூடும். அவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவர், சங்க இலக்கியம் என்று இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்தில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தனது நண்பர் வட்டத்தைக் கூட்டி இலக்கியக் கழகம் என்ற பெயரில் இலக்கிய ஆய்வுகள் நடத்துவாராம். அதேபோல, இலக்கிய ஆய்வு நடத்தும் திருநெல்வேலியிலுள்ள இரசிகமணியின் நண்பர் வட்டம், "வட்டத் தொட்டி" என்று வழங்கலாயிற்று.

வட்டத் தொட்டியின் தலைவர் இரசிகமணி டி.கே.சி. என்றால் அதன் தூண்களில் ஒருவராகச் செயல்பட்டவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

"கம்பர் அடிப்பொடி" சா.கணேசன், மு.அருணாசலப் பிள்ளை, நீதிபதி மகாராஜன், மீ.ப.சோமு, நாமக்கல் கவிஞர், "கவிமணி" தேசிக விநாயகம் பிள்ளை, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான ஆ.சீனிவாச இராகவன், ஏ.சி. பால் நாடார் மற்றும் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், போன்ற பல தமிழறிஞர்கள் "வட்டத் தொட்டி"யில் அடிக்கடி பங்கு பெறும் தமிழார்வலர்கள். மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுத்தாளர் கல்கி ஆகிய இருவரும் சற்று ஓய்வு கிடைத்தாலும் நெல்லையிலுள்ள இரசிகமணியின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து விடுவார்கள்.

அவர்களும் சேர்ந்து கொண்டால், வட்டத் தொட்டியின் கலகலப்புக்கும், இலக்கிய சர்ச்சைக்கும் கேட்கவே வேண்டாம். இந்த இலக்கிய சர்ச்சைகளில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் பங்களிப்பு மிகவும் அதிகம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் எண்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நெல்லையிலுள்ள நண்பர்கள் முடிவெடுத்து ஒரு விழா எடுப்பது என்று தீர்மானித்தனர்.

"வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு" என்பது இரசிகமணியின் கருத்து. அவரே "தமிழ்த் தாத்தா" உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார். இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான "மகா மகோபாத்தியாய" டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:- "என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள். நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது. என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும், உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான். பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து "என்னை ஆண்டான்" என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் "பிள்ளையாண்டான்" என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!"
இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. "தமிழ்த் தாத்தா" தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் "தம்பி" என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார்.

"தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், "தம்பி" என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!" என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் "கல்கி" வார இதழில் தொடராக வந்தது.

வேங்கடத்துக்கு அப்பால், பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், இரசிகமணி டி.கே.சி., கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, தமிழர் கோயில்களும் பண்பாடும், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும் என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்.

இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. இரகுநாதன் இவருடைய இளைய சகோதரர்.

நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு இரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள், தொண்டைமான், மகாராஜன், ஆ.சீ.ரா. போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள்.

இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!

தமிழும், கலையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

ஆனால், வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


வியாழன், 30 மார்ச், 2017

678. தி.க.சிவசங்கரன் - 1

திறனாய்வு முன்னோடி தி.க.சி.
மகா.பாலசுப்பிரமணியன்மார்ச் 30. திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் அவர்களின் பிறந்த தினம்.
===
குற்றங்களை பொறுத்துக் கொள்வதும், சிறுமைகளோடு சிரித்து பழகுவதும், தீமைகளோடு கை குலுக்குவதும், வாழ்க்கை சாமர்த்தியங்களாக வர்ணிக்கப்படுகின்ற கால கட்டத்தில், இவற்றை எதிர்த்து யார் போர்க்கொடி துாக்கினாலும், வாழத்தெரியாதவன் என்ற சாயம் பூசப்படுகிறது.

இந்த கரையான்களுக்கு நடுவில் அழிக்க முடியாத நெருப்பாகவும், எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத மனிதராகவும், தவறான வாழ்க்கையை தேடாமல் தவறானவர்களோடு சேராமல், நிறையோடு வாழ்ந்த மாமனிதர், எழுத்திலும், பேச்சிலும் துணிவு, மனித நேயத்தில் பணிவு, எளிமை கொண்டவர். தமிழில் நவீன முற்போக்கு இலக்கிய திறனாய்வாளர்களில் தம் திறனாய்வு மூலம் இலக்கிய வளர்ச்சிக்கும், இலக்கிய திறனாய்வுக்கும் வழிகாட்டியாக அமைந்தது மட்டும் அல்லாமல், முற்போக்கு இலக்கிய படைப்பாளிகள் பலர் உருவாவதற்கும் காரணமாக விளங்கியவர் தி.க.சி., என்ற தி.க.சிவசங்கரன்.

இளம்பருவம் : தி.க.சி., திருநெல்வேலியில் 1925 மார்ச் 30-ல் கணபதியப்பன்-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். ஆறு வயதில் தந்தையையும், ஏழு வயதில் தாயையும் இழந்த இவரை காந்திய நுால்களும், நுாலகங்களும் தனிமையின் தவிப்பில் இருந்து கை துாக்கி விட்டன. காந்தியத்தில் தொடங்கி, மார்க்சியத்துக்குள் நுழைந்து கடைசி வரை அங்கேயே நிலை பெற்றார். நெல்லை மண்ணுக்கு தாமிரபரணி நிலவளம் தந்ததுபோல், நவீன இலக்கிய செழுமைக்கு திறனாய்வு வளம் அமைத்து தந்தவர் தி.க.சி., பள்ளி கல்வியை திருநெல்வேலி மந்திரமூர்த்தி பள்ளியிலும், கல்லுாரி கல்வியை ம.தி.தா., இந்து கல்லுாரியிலும், துாய சவேரியார் கல்லுாரியிலும் பயின்றார்.

எழுத்து வாழ்க்கை : பதினெட்டு வயதிலேயே அவருடைய எழுத்து வாழ்க்கை தொடங்கி விட்டது. வல்லிக்கண்ணன் நடத்திய 'இளந்தமிழன்' என்ற கையெழுத்து இதழில் எழுத தொடங்கினார். நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடனில் முதல் சிறுகதையை எழுதினார். தொடக்கத்தில் கிராம ஊழியன் இதழில் திரைப்பட விமர்சனம் எழுதி கொண்டிருந்த தி.க.சி.,யை இலக்கிய விமர்சனம் எழுத துாண்டி ஆற்றுப்படுத்தியவர் பேராசிரியர் நா.வானமாமலை.தி.க.சி.,யின் முற்போக்கு, மார்க்சிய அணுகு முறையிலான ஆய்வுக்கு வழிகாட்டிகளாக அமைந்தவர்கள் நா.வானமாமலை, ஜீவா, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோராவர். தி.க.சி.,யின் இலக்கிய குருவாக அமைந்தவர் வல்லிக்கண்ணன். மானசீக குருவாக ஏற்று கொண்டவர் பாரதியார். 19 ஆண்டு காலம் 'தாம்கோஷ்' வங்கியில் காசாளராக பணியாற்றினார். அங்கே தொழிற்சங்க பணியில் ஈடுபட்டதால், பல ஊர்களுக்கு மாறுதலாகி கடைசியில் அந்த வங்கி பணியிலிருந்தே விலகி விட்டார். அதன்பின் 25 ஆண்டு சென்னையில் சோவியத்நாடு செய்தி துறையில், மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பல இதழ்களில் 60 ஆண்டுகளாக கட்டுரை மற்றும் சிறுகதைகளை எழுதினார்.தாமரை இதழில் பணியாற்றியபோது, பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். அவர் பொறுப்பாசிரியர் நிலையில் வெளியான தாமரையின் 100 இதழ்கள் இன்றளவும் இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த மதிப்பிற்குரியதாக இருக்கிறது.

சாகித்ய அகாடமி விருது : இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதம் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதம் எழுதுவது அவரது முக்கியமான இலக்கிய செயல்பாடுகள். இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார். இவரது மதிப்புரைகளும், கட்டுரைகளும், தி.க.சி., கட்டுரைகள் என இருபகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

இத்தொகுதிகளுக்கு 2000-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம், எழுத்தாளர். அண்மையில் இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. தந்தை வழியில் தனயனும் இந்த விருதை பெற்றது, இலக்கிய உலகில் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

நிறை வாழ்வு : தி.க.சி., பெரும்பகுதி நேரத்தை புதிதாக வெளிவரும் நுால்களை வாசிப்பதிலும், புதிய படைப்பாளர்களை வாழ்த்தி, பாராட்டி எழுதி அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் செலவிட்டார். அத்துடன், முற்போக்கு இலக்கிய இயக்கங்களுக்கு ஆலோசனை வழங்குதல், வழிகாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.

ஓர் இலக்கியவாதி, தம் சொந்த வாழ்க்கை குறித்தும், எழுத்து வாழ்க்கை குறித்தும் பெரும்பாலும் மன நிறைவு கொள்வது இல்லை. ஆனால், தி.க.சி., எனது இலக்கிய வாழ்க்கை நிறை வாழ்வுதான் என கருதுகிறேன் என்றார்.

இலக்கிய நோக்கம் : எனது இலக்கிய சிந்தனைகளும், களப்பணிகளும், சமுதாய விழிப்புணர்வுக்காகவும், மனித குல மேன்மைக்கும் உரியது. நான் தொடர்ந்து எழுதி வருகின்ற கடிதங்களும், குறிப்புகளும் எனக்கு மன நிறைவை அளிக்கின்றன எனக் கூறியுள்ளார். தி.க.சி., இடது சாரி அரசியல் ஒன்றின் நிலைப்பாட்டிலும், அதன் கலை இலக்கிய அமைப்பிலும் அங்கம் வகித்தாலும், மற்ற அரசியல் இயக்கத்தையோ, அதன் கலை இலக்கிய அமைப்பையோ வெறுப்புடன் பார்ப்பது இல்லை. அவற்றின் முற்போக்கு நோக்கத்துடன் கூடிய செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதும், ஆலோசனை வழங்குதலும் ஒரு முற்போக்காளனின் கடமை என்று கருதி, அந்த பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தது அவரது தனித்தன்மை வாய்ந்த குணம். ''கலை இலக்கிய துறையில், ஒரு பரந்து விரிந்த ஐக்கிய முன்னணி அமைப்பதும், அதை கொண்டு நசிவு இலக்கியத்தை எதிர்த்து போராடுவதும் எனது லட்சியம்'' என்று வாழ்ந்தவர்.

முதுமையையும் நோய் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், முற்போக்கு
கொள்கையில் ஈடுபாடும், அதன் சமுதாய மாற்றத்தில் கொண்ட அக்கறையிலும் முற்போக்கு இயக்க இலக்கிய நிகழ்வுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்ளும் அவரின் சமூக இலக்கிய அக்கறை, முற்போக்கு இயக்கத்தினர் அனைவரும் ஏற்று போற்ற வேண்டிய ஓர் உயரிய பண்பாகும்.2014 மார்ச் 25-ல் இயற்கை எய்தினார். இவரது மறைவு இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்று சொல்வதுண்டு. அப்படி இலக்கிய உலகில் இவர் எழுதிய திறனாய்வு கட்டுரைகள் வருங்கால இளைய தலைமுறையினருக்கு புதிய இலக்கியங்களை படைக்கவும், படைக்கப்பட்ட இலக்கியங்களை திறனாய்வு செய்து பல்கலையில் முனைவர் பட்டங்கள் பெறுவதற்கும் வழிவகுப்பதாக அமையும்.

-மகா.பாலசுப்பிரமணியன்
செயலர் , வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை, காரைக்குடி.

[ நன்றி : தினமலர்  http://www.dinamalar.com/special_detail.asp?id=1736903&Print=1 ]

தொடர்புள்ள பதிவுகள்:

தி.க.சிவசங்கரன்

புதன், 29 மார்ச், 2017

பதிவுகளின் தொகுப்பு : 626 - 650

பதிவுகளின் தொகுப்பு : 626 - 650 


626. சங்கீத சங்கதிகள் - 110
டைகர் வரதாச்சாரியார் -2
த.சங்கரன்

627. அகிலன் - 2
இளமையில் நடந்தது
அகிலன்

628. பம்மல் சம்பந்த முதலியார் -1
"நாடகக்கலைப் பிதாமகர்' பம்மல் சம்பந்த முதலியார்
கலைமாமணி விக்கிரமன்

629. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 2
முதற் காட்சி
உ.வே.சாமிநாதையர்

630. அண்ணாதுரை -1
கொக்கரகோ
செளமியன்

631. காந்தி - 6
காந்திஜி கண்ட தமிழ்நாடு - 2
     ‘கோபு

632. சங்கச் சுரங்கம்
மோக முல்லை
பசுபதி
633. சங்கீத சங்கதிகள் - 111
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 1
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

634. சாவி -16: 'துக்ளக்' துரைசாமி
 'துக்ளக்' துரைசாமி
சாவி
பிப்ரவரி 9.  சாவியின் நினைவு நாள். .

635. பாடலும், படமும் - 16
சுக்கிரன்
எஸ்.ராஜம்

636. சங்கீத சங்கதிகள் - 112
தியாகராஜர் கீர்த்தனைகள் - 3
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.

637. சரோஜினி நாயுடு
கவியரசி சரோஜினி
பாகோ

638. பி.ஜி. உட்ஹவுஸ்
கனிந்த சிரிப்பாம்பழம்!
ஜே.எஸ்.ராகவன்

639. காதலர் தினக் கும்மி : கவிதை
காதலர் தினக் கும்மி
பசுபதி

640. கொத்தமங்கலம் சுப்பு -19
ஐக்ய நாட்டுப் பஞ்சாயத்து !
கொத்தமங்கலம் சுப்பு

641. டி.கே.சண்முகம் -2
அவ்வை சண்முகம் : பேட்டி
பூவை எஸ். ஆறுமுகம்

642. ரசிகமணி டி.கே. சி. - 3
எந்தநாள் காண்போம் ?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

643. என். சி. வசந்தகோகிலம் - 1
வாடாத இசை தந்த வசந்தகோகிலம்!
வாமனன்

644. repeat post deleted

645. எஸ். வையாபுரிப்பிள்ளை - 2
இராம சரிதத்தின் வரலாறு
எஸ்.வையாபுரிப்பிள்ளை

646. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 2
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
ஸரஸி

647. சங்கீத சங்கதிகள் - 113
சங்கராபரணம் நரசையர் 
உ.வே.சாமிநாதய்யர்

648. பதிவுகளின் தொகுப்பு : 601 - 625

649. கஸ்தூரிபாய் காந்தி -1
கஸ்தூரிபாய் மறைந்தார்!

650. தென்னாட்டுச் செல்வங்கள் - 22
கஜ சம்ஹாரர் , பிக்ஷாடனர்
தொடர்புள்ள பதிவு:

ராஜாஜி - 6

ராஜாஜி : சில நினைவுகள் -1 
சுப்புடு

மார்ச் 29. இசை விமர்சகர் ‘சுப்புடு’ ( பி.வி.சுப்பிரமணியம்) அவர்களின் நினைவு தினம்.


அவர் ‘ராஜாஜி’யைப் பற்றித் தினமணி கதிரில் எழுதிய ஒரு கட்டுரையின் முதல் பகுதி இதோ.  1946 -இல் நடந்த ஒரு நிகழ்வு பற்றி எழுதியிருக்கிறார்.

‘சுப்புடு’ டொராண்டோவிற்கு வந்தபோது, அவருடைய பல கட்டுரைகளை நான் அவருக்குக் கொடுத்தேன். இதைக் கொடுத்தேனா, அவருடைய நூல் ஒன்றில் இது வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது.

 தொடர்புள்ள பதிவுகள்:

ராஜாஜி
சுப்புடு

செவ்வாய், 28 மார்ச், 2017

சத்தியமூர்த்தி - 1

கல்யாண விஷயம் 
எஸ்.சத்தியமூர்த்தி 


மார்ச் 28. எஸ்.சத்தியமூர்த்தியின் நினைவு தினம்.

1943-இல் சுதேசமித்திரனில்  வந்த ஒரு கட்டுரை; இது அவர் 41-இல் எழுதிய ஒரு கடிதத்தின் மொழிபெயர்ப்பு .பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

திங்கள், 27 மார்ச், 2017

விபுலானந்தர் - 2

விபுலானந்த அடிகள்
போ.குருசாமி 

மார்ச் 27. விபுலானந்த அடிகளாரின் பிறந்த தினம்.
ஜுலை 19. அவருடைய நினைவு தினம்.

அவர் மறைந்ததும்  ‘ தமிழ் முரசு’  ஆகஸ்ட் 1947 -இதழில் வந்த ஒரு கட்டுரை.[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

விபுலானந்தர்

ஞாயிறு, 26 மார்ச், 2017

சுத்தானந்த பாரதி - 5

வால்ட் விட்மன் -2
சுத்தானந்த பாரதியார் வால்ட் விட்மன் -1 

( தொடர்ச்சி ) 
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதி - 4

வால்ட் விட்மன் -1
சுத்தானந்த பாரதியார் மார்ச் 26. அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் நினைவு தினம்.
சுத்தானந்த பாரதியார் ‘சக்தி’ இதழில் 1939-இல் எழுதிய ஒரு கட்டுரையின் முதல் பகுதி
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:


சுத்தானந்த பாரதியார்

வெள்ளி, 24 மார்ச், 2017

பி.எஸ். ராமையா -3

மணிக்கொடிக் காலம் 
1.முகப்பு 
பி.எஸ்.ராமையா 

மார்ச் 24. பி.எஸ்.ராமையாவின் பிறந்த தினம்.அவர் ‘தீப’த்தில் எழுதிய பிரபல ( பின்பு சாகித்திய அகாதமி விருது பெற்ற ) ‘மணிக்கொடிக் காலம்’ என்ற தொடரின் முதல் அத்தியாயம் இதோ!

அப்போது நான் அமெரிக்காவில் ‘தீப’த்தை வரவழைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். ( சென்னை விடுமுறை ஒன்றின் போது ‘மணிக்கொடி’ சீனிவாசனின் மகன் ஜயதேவ் அவர்களையும் சந்தித்தேன். )

[ நன்றி: தீபம் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மணிக்கொடி சிற்றிதழ்

மணிக்கொடி: விக்கிப்பீடியா கட்டுரை

பி.எஸ்.ராமையா

சங்கீத சங்கதிகள் - 114

முத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -2டி.எல்.வெங்கடராமய்யர் பாடாந்தரப்படி 
பி.ராஜமய்யர் ஸ்வரப்படுத்தியது.

மார்ச் 24. முத்துசாமி தீக்ஷிதர் பிறந்த தினம்.


’சுதேசமித்திரனில்’  1956 -இல் வந்த ஒரு கட்டுரை:
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]தொடர்புள்ள பதிவுகள்: