ஆர்.கே.நாராயணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.கே.நாராயணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 மே, 2021

1866. ஆர்.கே.நாராயணன் - 3

அவன் செய்த குற்றம்
ஆர்.கே.நாராயண்
தமிழாக்கம்: ரா.வீழிநாதன்










[ நன்றி: கல்கி ]
 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஆர்.கே.நாராயணன் - 2

பத்மவிபூஷண்     ஆர்.கே.நாராயண்
’பரணீதரன்’ 


அக்டோபர் 10. ஆர்.கே.நாராயணின் பிறந்த தினம்.

ஆர்.கே.நாராயணின் ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ மொழிபெயர்க்கப் பட்டு விகடனில் 1937-இல் வந்தது. மாலியின் ஓவியங்கள் அருமையாய் இருக்கும்!

இதோ ஒரு படம் : 

அவருக்கு 2000-இல் பத்மவிபூஷண் விருது கிடைத்தபோது, ‘பரணீதரன்’ ( ஸ்ரீதர், மெரினா) விகடனில் எழுதிய கட்டுரை இதோ! 
==========

அண்மையில் இலக்கிய சாதனைகளுக்காக பத்மவிபூஷண் விருது பெற்ற ஆங்கில நாவல் - சிறுகதை ஆசிரியர் ஆர்.கே.நாராயண் எனக்கு அறிமுகமானது 63 வருடங்களுக்கு முன். அதற்கு முன் 12 ஆண்டுகள் 'குஞ்சப்பா’ வாக மட்டுமே அவரை நான் அறிந்திருந்தேன்!

மைசூர் அத்தை மகனான அவர், நான் பிறப்பதற்கு முன்னரே, புரசைவாக்கத்தில் இருந்த  எங்கள் வீட்டில் பாட்டி, மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து, லூதரன் மிஷன் பள்ளியில் படித்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர், மைசூரிலிருந்து அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் கதை சொல்வதுபோல், எங்களிடம் நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பார்.
குஞ்சப்பா ஆங்கிலத்தில் எழுதும் கதைகள் 'சன்டே இண்டு’வில் வெளிவருவதாக வீட்டில் பேசிக் கொள்வார்கள். முத்தையா செட்டியார் பள்ளியில் மூன்றாம் பாரம் படித்துக்கொண்டிருந்த நான், ஆங்கிலக் கதைகளைப் படித்து புரிந்துகொண்டுவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கையில், மாணிக்க முதலியார் பார்க்கிலிருந்த 'மினி’ நூல் நிலையத்துக்குச் சென்று, வாரம் தவறாமல் அந்தக் கதைகளைப் படிப்பேன். அப்போது தான் முதன்முறையாக அவருடைய பெயர் ஆர்.கே.நாராயண் (நாராயணசாமியின் சுருக்கம்) என்று தெரிந்துகொண்டேன். எனவே, அதுதான் எனக்கு முதல் அறிமுகம்! அவருடைய இளைய சகோதரரான 'டூடூ’, ஆர்.கே.லக்ஷ்மண் என்ற பெயரில் அந்தக் கதைகளுக்குச் சித்திரம் வரைவார். அவற்றைப் பிரமிப்புடன் வெகு நேரம் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பேன்.

ஆர்.கே.நாராயணின் இங்கிலீஷ் சிம்பிளாக இருக்கும். சில வார்த்தைகள் புரியாவிட்டாலும், கதையை ஒரு மாதிரி புரிந்து கொண்டுவிடுவேன். பின்னர் ஒரு சமயம் சின்ன அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் 'Swami and Friends’யை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அதில் வந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போய், உண்மை நிகழ்ச்சிகளைக் கண்முன் பார்ப்பது போல் உணர்ந்தேன். பின்னர் ஆனந்த விகடனில் அந்த நாவல் 'சுவாமியும் சிநேகிதர்களும்’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாராவாரம், கலர் காகிதத்தில் வெளிவந்தபோதும் படித்தேன்.** அதன் பிறகு 'Dark Room’ என்ற அவரது நாவல், 'இருட்டறை’ என்ற தலைப்பில் விகடனில் வெளியானபோதும் படித்தேன்.

ஆர்.கே.நாராயணின் புகழ் பெற்ற 'The Guide’ என்ற நாவலை, 1966-ம் ஆண்டு 'சாகித்திய அகாடமி’க்காக 'வழிகாட்டி’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதைத் தவிர, தமது அமெரிக்க அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய 'Dateless Diary’ என்ற நூலின் பெரும்பகுதிகளை 'அமெரிக்காவில் நான்’ என்ற தலைப் பில் விகடனில் எழுதினேன்.

ஆர்.கே.நாராயண் மிக எளிமையானவர். நாளும் அவரைத் தேடி வரும் புகழும் செல்வமும் அவர் மீது ஒட்டிக்கொள்வதில்லை. அவருக்காகப் பாராட்டு விழா நடத்துவதோ, அவரை நேரில் புகழ்ந்து பேசுவதோ, அவரை மேடையில் பேசச் சொல்லுவதோ, பத்திரிகையாளர்களும் டி.வி-காரர்களும் காமிராவோடு பேட்டி காண வருவதோ அவருக்குப் பிடிக்காதவற்றில் சில.

- பரணீதரன்

[ நன்றி : விகடன் ] 

** 
மொழிபெயர்த்தவர்  "மதுரம்" என்ற புனைபெயரில் அந்தக் காலத்தில் விகடனில் எழுதிவந்த வி.கிருஷ்ணசுவாமி என்பவர். . 

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 13 மே, 2015

ஆர்.கே.நாராயணன் -1

அமெரிக்காவில் நான் 
ஆர்.கே.நாராயணன்

மே 13. பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் நினைவு தினம்.

அவருடைய நாவல் மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன்  வாசகர்களுக்குப் புதியவை அல்ல. அவருடைய ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ விகடனில் 1937-இல் வந்திருக்கிறது. 40-இல் ‘இருட்டறை’யும் வெளியாகியுள்ளது.  அவர் எழுதிய “ தேதி குறிக்காத என் டயரி” ( My Dateless Diary )யின் பல பகுதிகளைப் பரணீதரன் மொழிபெயர்த்து விகடனில் 1963-இல் வழங்கினார். [ பரணீதரன் ( மெரினா, ஸ்ரீதர்)  நாராயணனின் தாய்மாமன் ‘கலாநிலையம்’  சேஷாசலம் அவர்களின் புதல்வர்.]

அந்தக் கட்டுரைத் தொடரில் பல புகைப்படங்களும்,  நாராயணனின் சோதரர், பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த கோட்டுப் படங்களும் விகடனில் வந்தன. அந்தத் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி இதோ :



ஸ்டேஷன் பூராவும் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒருவராவது சரியான தகவல் கொடுப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருக்கும் ஆல்பனியைப் பற்றிக்கூட விவரம் தெரியாமலிருக்கிறார்களே என்பதை நினைத்தபோது, ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஏதோ கடல் கடந்து செல்லும் ஒரு பிரயாணத்திற்கு நான் வழி கேட்டுவிட்டது போல் எல்லோரும் விழித்தார்கள்!


ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்துப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் நடந்துகொண்டிருந்தேன். மனித நடமாட்டமேயில்லாத ஒரு மூலையில் அந்த இரண்டு ஆசாமிகள் மறுபடியும் என்னை வழிமறித்தார்கள். இம்முறையும் என் டிக்கெட்டை நான் இழக்கத் தயாராக இல்லை. ஆகவே, அதை உள் பாக்கெட்டில் வைத்துப் பத்திரப்படுத்தினேன்.



அவர்களில் ஒருவன், என் கோட்டு காலரைப் பற்றிக்கொண்டு, "உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்" என்றான். மற்றொருவனோ, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு, யாராவது வருகிறார்களா என்று கழுத்தை நீட்டி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.
என்னருகில் இருந்தவன், "இதோ பாரு, வீண் சிரமம் கொடுக்காதே! நான் சொல்வதை மரியாதையாகக் கேளு" என்று சொல்லியபடி தன் கையை உயர்த்திப் பயமுறுத்தி னான். "உன் பல்லை உடைத்து விடுவேன், ஜாக்கிரதை! என்ன புரிகிறதா?" என்றான்.

அதன் அர்த்தம் எனக்கு மிக நன்றாகப் புரிந்தது. அவன் உருவத் தைப் பார்த்ததுமே, சொல்வதை உடனே செய்யக்கூடியவன் என்று தெளிவாகத் தெரிந்தது. எனக்கு உடலெல்லாம் நடுங்கிற்று. 'குப்' பென்று வியர்த்துவிட்டது. அடுத்த நாள் பத்திரிகையில் வெளியாகப் போகும் ஒரு தலைப்பு, என் மனக் கண் முன்னால் மின்னல் போல் பளிச்சிட்டது.

'கீ ஸ்டேஷன் அருகில் இந்திய நாவலாசிரியர் படுகொலை!'

"உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டேன் நிதானமாக.

தெரு முனையில் காவல் புரிந்து கொண்டிருந்தவன், உள்ளூர் மொழியில் ஏதோ சொன்னான். உடனே, என் காலரைப் பற்றிக் கொண்டிருந்தவன் தன் நிஜார் பாக்கெட்டில் கையைவிட்டான். 'அவன் துப்பாக்கியை எடுக்கப் போகிறான்' என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

 [ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்: