புதன், 31 ஜூலை, 2019

1331. சங்கீத சங்கதிகள் - 194

பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் 


ஜூலை 31. பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் நினைவு தினம்.


'கல்கி'யில் 1942- இல் வந்த ஒரு கட்டுரை இதோ.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : கல்கி ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 


செவ்வாய், 30 ஜூலை, 2019

1330. சங்கீத சங்கதிகள் - 193

தியாகராஜர் கீர்த்தனைகள் - 14
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

திங்கள், 29 ஜூலை, 2019

1329. கு.அழகிரிசாமி - 5

பித்தளை வளையல்
கு.அழகிரிசாமி 
'சக்தி' இதழில் 1943-இல் வந்த சிறுகதை. [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 28 ஜூலை, 2019

1328. பாடலும் படமும் - 73

கல்கி அவதாரம் 

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

திருமங்கை ஆழ்வார் தசாவதாரப் பாசுரங்களில்,  கடைசிப் பாசுரத்தில்  முதல் ஒன்பது அவதாரங்களைக் கூறிப் பின் கல்கி அவதாரத்தைப் பற்றிச் சொல்கிறார்.

மீனோ டாமை கேழலரி 
  குறளாய் முன்னு மிராமனாய்த்
தானாய் பின்னு மிராமனாய்த் 
  தாமோ தரனாய்க் கற்கியும்
ஆனான் றன்னை கண்ணபுரத்(து) 
  அடியேன் கலிய னொலிசெய்த
தேனா ரின்சொல் தமிழ்மாலை 
  செப்பப் பாவம் நில்லாவே.


பதவுரை

மீனோடு - மத்ஸ்ய ரூபியாயும்
ஆமை - கூர்ம ரூபியாயும்
கேழல் - வராஹரூபியாயும்
அரி - நரஸிம்ஹ ரூபியாயும்
குறள் ஆய் - வாமநமூர்த்தியாயும்
முன்னும் இராமன் ஆய் - பரசுராம மூர்த்தியாயும்
தான் ஆய் - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும்
பின்னும் இராமன் ஆய் - பலராமனாயும்
தாமோதரன் ஆய் - கண்ணபிரானாயும்
கற்கியும் ஆனான் தன்னை - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து)
அடியன் - சேஷபூதரான
கலியன் - திருமங்கையாழ்வார்
ஒலி செய் - அருளிச் செய்த
தேன் ஆர் இன் சொல் - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய
தமிழ் மாலை - இத்தமிழ்ப்பாசுரங்களை
செப்ப - அப்யஸிக்குமளவில்
பாவம் - பாவங்கள்
நில்லா - நிற்கமாட்டாமல் அகன்றொழியும்,


பி.கு. "இந்தக் கல்கி" யை மனத்தில் வைத்துத்தான்  ரா.கிருஷ்ணமூர்த்தி 'கல்கி' என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்; 'கல்கி' என்ற இதழையும் 1941-இல் தொடங்கினார்.   "பொன்னியின் புதல்வர்" தொடரின் முதல் பக்கத்தில் இடது பக்கம் இருக்கும் ( மணியம் வரைந்த ) 'கல்கி' அவதார ஓவியத்தைக் கவனியுங்கள்!  இந்தப் படம் 'கல்கி' இதழின் தொடக்க காலத்தில் பல மாதங்களில் 'பொருளடக்க'ப் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது !புதன், 24 ஜூலை, 2019

1327. சத்தியமூர்த்தி - 8

மரியாதையான பழக்கம், கடவுள், மதம்
எஸ்.சத்தியமூர்த்தி 


1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த இரு கடிதங்கள்.


பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

திங்கள், 22 ஜூலை, 2019

1326. நா.சீ.வரதராஜன் - 1

சூறைக் காற்று
நா.சீ.வரதராஜன்'சக்தி' இதழில் 1950-இல் வந்த கவிதை.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:


நா.சீ.வரதராஜன்

சனி, 20 ஜூலை, 2019

1325. பாடலும் படமும் - 72

கிருஷ்ண அவதாரம்

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] " மோது மறலி" என்று தொடங்கும் திருப்புகழில்   பாரதக் கதையையே சுருக்கமாய்த் தருகிறார் அருணகிரிநாதர்.

சூது பொருதரும னாடு தோற்றிரு
     வாறு வருஷம்வன வாச மேற்றியல்
          தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற்

சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
     ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
          தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள

வாது சமர்திருத ரான ராட்டிர
     ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
          மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப

வாகை விஜயனடல் வாசி பூட்டிய
     தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
          மாயன் 

சூது பொரு தருமன் நாடு தோற்று ... சூதுப்போர் செய்த
தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து,

இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று ... பன்னிரண்டு
ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக்
கொண்டு வசித்தபின்,

இயல் தோகை உடனுமெ விராடராச்சியம் உறை நாளில் ...
கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட
நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து
வந்த நாளில்,

சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ... பசுக்களைக்
கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து
துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து,

ஆளும் உரிமை தருமாறு கேட்டு ... அரசாட்சி உரிமையைத்
தரும்படி கேட்பதற்காக,

ஒருதூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என மீள ...
ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய
ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்)
என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன்
மீண்டும் வரவும்,

வாது சமர் திருதரானராட்டிர ராஜ குமரர் துரியோதனால்
பிறர் மாள ... வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர
ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட
மற்றவர்களும் இறக்க,

நிருபரொடு சேனை தூட்பட ... பிற அரசர்களோடும்
சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய,

வரி சாப வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை ... வரிகள்
பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட
அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை

முடுகு நெடு மால் பராக்ரம மாயன்  ... வேகமாகச் செலுத்திய
பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயன் ,திருமங்கையாழ்வாரின் பாசுரம் இதோ.

துவரிக் கனிவாய் நிலமங்கை 
  துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,
இவரித் தரசர் தடுமாற 
  இருள்நாள் பிறந்த அம்மானை,
உவரி யோதம் முத்துந்த 
  ஒருபா  லொருபா லொண்செந்நெல்,
கவரி வீசும் கண்ணபுரத்து 
  அடியேன் கண்டு கொண்டேனே.


பதவுரை

துவரி கனி வாய் - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான
நிலம் மங்கை - பூமிப்பிராட்டியானவள்
துயர் தீர்ந்து - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து
உய்ய - சுகப்படும்படியும்,
பாரதத்துள் - பாரதப் போரில்
இவரித்த - எதிரிட்ட
அரசர் - ராஜாக்கள்
தடுமாற - நிலைகுழம்பும்படியாகவும்
இருள் நாள் - இராப்பொழுதில்
பிறந்த - திருவவதரித்த
அம்மானை - ஸ்வாமியை ( கிருஷ்ணனை )
ஒரு பால் - ஒரு புறத்தில்
உவரி ஓதம் - கடலலைகள்
முத்து - முத்துக்களை
உந்த - ஒதுக்கித்தள்ளவும்
ஒரு பால் - இன்னொருபுறத்தில்
ஒண் - அழகிய
செந்நெல் - செந்நெற்பயிர்கள்
கவரி வீசும்  - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்திலே
அடியேன் கண்டுகொண்டேன்

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

புதன், 17 ஜூலை, 2019

1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3

சொற்சிகரம் 
வி.ஆர்.எம்.செட்டியார் சக்தி இதழில் 1940-இல் வந்த கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள  பதிப்புகள்:
வி.ஆர்.எம்.செட்டியார்

சனி, 13 ஜூலை, 2019

1323. பாடலும் படமும் - 71

பலராம அவதாரம்
'கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்' என்ற புறநானூறு -56 பாடல்  ”சங்கினை ஒத்த வெண்நிறமும் நாஞ்சில் பனைக்கொடியும் உடையவர் ”என்று பலராமனை வர்ணிக்கின்றது,


திருமங்கையாழ்வாரின் பாசுரம் இதோ.

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் 
  ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் 
  விண்பாற் செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச் 
  செந்தீ மூன்றும் இல்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத்(து) 
  அடியேன் கண்டு கொண்டேனே.பதவுரை

ஒற்றை குழையும் - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும்
ஒருபால் - ஒரு பக்கத்தில்
நாஞ்சிலும் - கலப்பையும்
தோன்ற - விளங்க
தான் தோன்றி  - (பலராமனாய்த்) திருவவதரித்து,
வெற்றி தொழிலார் - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும்
வேல் - வேற்படையையுடையருமான
வேந்தர் - அரசர்கள்
விண் பால் செல்ல -வீரஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி
வெம் சமத்து - வெவ்விய போர்க்களத்தில்
செற்ற - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான
கொற்றம் - வெற்றியை
தொழிலானை - தொழிலாகவுடைய பெருமானை,-
செம் தீ மூன்றும் - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும்
இல் - திருமாளிகை தோறும்
இருப்ப - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும்
கற்ற மறையோர் -கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தில்
அடியேன் கண்டுகொண்டேன்.

 தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

தசாவதாரம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

வியாழன், 11 ஜூலை, 2019

1322. தேவன்: துப்பறியும் சாம்பு - 12

மைசூர் யானை
தேவன்+கோபுலு


ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 5-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 10 ஜூலை, 2019

1321. ய.மகாலிங்க சாஸ்திரி - 1

 இது ஒப்பந்தக் கல்யாணமல்ல
ய.மகாலிங்க சாஸ்திரி ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த படைப்பு..[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ய.மகாலிங்க சாஸ்திரி

செவ்வாய், 9 ஜூலை, 2019

1320. சங்கு சுப்பிரமணியம் - 2

கோர்ட்டுக் குளவிகள்
சங்கு சுப்பிரமணியம்சக்தி இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்

சங்கு சுப்பிரமணியம்