ஜி.என்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜி.என்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 பிப்ரவரி, 2023

2451. சங்கீத சங்கதிகள் - 349

பாத  சமர்ப்பணம்

ஜி.என்.பாலசுப்பிரமணியம்


ஜனவரி 31. டைகர் வரதாச்சாரியாரின் நினைவு தினம்.

அவர் மறைந்தபின், 'கல்கி'யில் வந்த 'சாமா' , 'ஜி.என்.பி' இருவரின் அஞ்சலிகள். 



[நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 3 ஜூலை, 2020

1576.சங்கீத சங்கதிகள் - 238

பள்ளத்தாக்கில் ஒரு பள்ளிக்கூடம்
சாருகேசி

 

ஜூலை 3. எம்.எல்.வசந்தகுமாரியின் பிறந்த தினம்.

கல்கியில் 1985-இல் வந்த ஒரு பேட்டிக் கட்டுரை.










[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 30 ஏப்ரல், 2020

1532 சங்கீத சங்கதிகள் - 230

மகா வித்துவான் மறைந்தார்! 


மே 1. ஜி.என்.பி அவர்களின் நினைவு தினம். அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி.


[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

ஜி.என்.பி: பசுபதிவுகள்

வியாழன், 13 ஜூலை, 2017

768. சங்கீத சங்கதிகள் - 127

ரசிகரின் மனோபாவம்
ஜி.என்.பி. 




1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்கியிலும் இருந்த ‘வஸந்தன்’ , கல்கியை விட்டபின்  தொடங்கிய பத்திரிகை இது. )




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

ஜி.என்.பி.

சங்கீத சங்கதிகள்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

சங்கீத சங்கதிகள் - 105

ஜி.என்.பியின் முதல் ரேடியோக் கச்சேரி! 
“ நீலம் “ 


ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள்.

ஜி.என்.பிக்கும் சென்னை வானொலிக்கும் இருந்த அபிப்ராய பேதங்கள் தீர்ந்து , 1945-இல் அவர் செய்த முதல் வானொலிக் கச்சேரியைப் பற்றிப் பிரபல விமர்சகர் “நீலம் “ ( நீலமேகம் ) சுதேசமித்திரனில் ( 1-7-1945)   எழுதிய விமர்சனக் கட்டுரை இதோ!  ( கூடவே துறையூர் ராஜகோபால சர்மாவின் ஒரு கச்சேரியைப் பற்றிய குறிப்பு ஒரு போனஸ்! )



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
  

தொடர்புள்ள பதிவுகள்: 

ஜி.என்.பி.

சங்கீத சங்கதிகள்

ஞாயிறு, 1 மே, 2016

சங்கீத சங்கதிகள் - 74

ஜி.என்.பி.யின் சாரீரமும் சங்கீத பாணியும்
கல்கி


மே 1.  ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினம்.



‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி  4-8.44 -இல் நடந்த ஜி.என்.பி யின் கச்சேரியைக் கேட்டபின் ஒரு ‘கல்கி’ இதழில் எழுதிய விமர்சனக் கட்டுரை இதோ! 
 ============

நாட்டில் பெரியோர்கள் பலர் தங்கள் அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் சங்கீதம் சம்பந்தமாக நான் இரண்டு வருஷத்துக்கு முன்பு கூறிய ஒரு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதைப் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.

சங்கீத வித்வான் பூரீ ஜி.என். பாலசுப்பிரமணியத்தைப் பற்றி முன் ஒரு முறை எழுதிய போது, "ஜி.என்.பி. நாலு கச்சேரி செய்தால் ஒன்று நிச்சயம் நன்றாயிருக்கும்.' என்று எழுதியிருந்தேன். இப்போது, ஜி.என்.பி. நாலு கச்சேரி செய்தால், அவற்றில் மூன்று நிச்சயம் நன்றாயிருக்கும்' என்று
சொல்லும்படி ஆகிவிட்டது.

இரண்டு வருஷத்துக்குள்ளே இவ்வளவு சிறந்த அபிவிருத்தி - மூன்றுமடங்கு அபிவிருத்தி - ஜி.என்.பி. அடைந்திருப்பது குறித்து எனக்கு அளவில்லா ஆனந்தம் ஏற்படுகிறது. இந்த அபிவிருத்திக்கு - இரண்டு வருஷத்துக்கு முன்னால் நான் சற்றும் எதிர்பாராத அபிவிருத்திக்கு - முக்கிய காரணம் ஜி.என்.பி.யின் சாரீரத்திலும் சங்கீத பாணியிலும் ஏற்பட்டிருக்கும். அதிசயக்கத்தக்க மாறுதல்கள்.


'இமிடேஷன் வைரமானது வாங்கியவுடனே பள பளவென்று பிரகாசிக்கிறது. சிறிது சிறிதாகப் பல்லை இளித்துக் கொண்டு வந்து கடைசியில் அதன் உண்மை ஸ்வரூபத்தை - அதாவது தான் வெறுங் கண்ணாடித் துண்டு என்பதை காட்டிவிடுகிறது.

உண்மையான வைரமோ அதனுடைய இயற்கை நிலையில் பிரகாசமின்றி மங்கிக் கிடக்கிறது. அதைப் பட்டை தீர்த்துத் தேய்க்கத் தேய்க்கப் பிரகாசம் பெற்று நவநவமான வர்ண ரேகைகள் வீசி ஜாஜ்வல்யமாய்த் திகழ்கிறது.

இமிடேஷன் வைரத்தைப் போல் முதலிலே நன்கு பிரகாசித்துப் பிறகு மங்கிவிடும் வித்வான்களின் சாரீரத்தை நாம் பார்த்து அனுதாபப்பட்டிருக்கிறோம். –

ஆனால், உண்மையான வைரத்தைப்போல் நாளாக ஆக மெருகு ஏறிப் பிரகாசிக்கும் சாரீரத்தை அவ்வளவு சுலபமாக நாம் பார்ப்பது கிடையாது. –

சமீப காலத்தில் இரண்டு சிறந்த சங்கீத வித்வான்களின் விஷயத்தில் அந்த அருமையான காரியம் நடந்திருப்பது குறித்து நாம் பெரிதும் சந்தோஷப்பட வேண்டும்.


ஜி.என்.பி. விஷயத்திலும், மதுரை மணி ஐயர் விஷயத்திலும் இந்த அதிசயம் நடந்திருக்கிறது.

நாலு வருஷத்துக்கு முன்னால் அவர்களுடைய பாட்டைக் கேட்கும்போது, 'ஆஹா இப்பேர்ப்பட்ட சங்கீத சம்பத்து உள்ளவர்களுக்குக் குரலில் இனிமையுள்ள சுகபாவமும் இருந்தால் எவ்வளவு உயர்வாயிருக்கும்? ' என்று பரிதாபமடைந்தோம்.

இப்போது, அவர்கள் இருவருடைய சாரீரமும் எப்படி இனிமையும் சுகபாவமும் ஏறி, மிகமிக அபூர்வமான இடங்களில் எல்லாம் சிறிதும் தடுமாறாமல் சஞ்சரிக்கக் கூடியவையாயிருக்கின்றன என்பதைக் கண்டு அதிசயித்து மகிழ்கிறோம்.

ஜி.என்.பியின் சாரீரம் இரண்டு வருஷத்துக்கு முன்பு கூட இவ்வளவு பதமடைந்து சுகபாவம் பெற்றிருக்க வில்லை. நாலிலே இரண்டு கச்சேரியில், 'இன்று சாரீரம் ஒத்துக்கொள்ளவில்லை!" என்று ஏமாற்றத்துடன் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கும். ஜி.என்.பி. யின் சாரீரம் இரண்டு கச்சேரியைக் கெடுத்ததென்றால், மூன்றாவது கச்சேரியும் சுகப்படாமல் போனதற்கு ஜி.என்.பி. யின் பிர்க்காமயமான சங்கீதபாணி, காரணமாயிருந்தது.

பிர்க்கா சங்கீதத்தில் ஒரு தொந்தரவு என்னவென்றால், குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பிடிகளில் எதிர் பார்க்கும் சங்கதிகள் விழுந்தேயாக வேண்டும். அப்படி விழாமல் போனால் விசிறிகள் உடனே இன்றைக்கு கச்சேரி சுகப்படவில்லை' என்று தீர்ப்பளித்துவிடுவார்கள்.

அதோடு, சாரீரமும் இடக்குச்செய்து எங்கேயாவது ஒரு இடத்தில் இங்கிலீஷ் பேசி விட்டால், கச்சேரி தொலைந்தது. அப்புறம், பாடகர் எவ்வளவுதான் 'கொடி’ வித்தை செய்தாலும், கச்சேரி களை கட்டுவதில்லை.

ராஜாஜி அன்று சங்கீதத்தைப் பற்றிப் பொதுவாகச் சொன்னார்: 'டாங்கிகளையும் குண்டுகளையும் வைத்துக் கொண்டு நடத்தும் யுத்தத்தைக் காட்டிலும் இந்த சங்கீத யுத்தம் ரொம்பக் கடினமானது. அந்த ஆயுத யுத்தத்தில் ஒரு தடவை தோல்வியடைந்தால் இன்னொரு தடவை ஜயிக்கலாம். இந்தச் சங்கீத யுத்தத்திலே ஒரு தடவை தவறிவிட்டால், போயே போச்சு!"

ராஜாஜி மேலே கூறியது, பிர்க்கா பிராதான்யமான சங்கீத பாணிக்கு மிகவும் பொருந்துவதாகும்.

இந்த இடையூறுகளையெல்லாம் ஜி.என்.பி. கடந்து மேலே வந்துவிட்டார் என்பதை 4.8.44 ல் மயிலை சங்கீத சபையில் அவர் செய்த கச்சேரி நிரூபித்தது.

ஜி.என்.பி. யின் சாரீரமும் சங்கீத பாணியும் இப் போது அடைந்திருக்கும் மேன்மை, அன்று அவர் பைரவி ராக ஆலாபனை செய்தபோது வெளியாயிற்று.

உண்மையான கர்நாடக சங்கீதம் எப்படி இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, அதில் என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோமோ, அவ்வளவும் அந்த ஆலாபனத்தில் இருந்தன. பைரவி ராகத்தின் ஸ்வரூபத்தை அதில் பூரணமாகக் கண்டோம். நாபீ கமலத்திலிருந்து மேலோங்கி வந்த நாத கம்பீரத்தைக் கண்டோம். அதிசயமான லாகவத்தோடு ஆகாச வெளியில் இஷ்டப்படியெல்லாம் சஞ்சரித்து வந்த மனோ தர்மத்தைக் கண்டோம். சுருதியோடு கலந்து நின்ற கார்வையை ஆங்காங்கு கண்டோம். உசிதமான அளவு மணி உதிர்ப்பது பிர்க்காக்களையும் கண்டோம்.

இவ்வளவுடன் ஜி.என். பி. யின் சாரீரம் எவ்வளவு தூரம் பதமடைந்து எவ்வளவு விஸ்தாரமும் அடைந்திருக்கிறது என்பதைக் கண்டு வியந்தோம்.

'இப்போதெல்லாம் மூன்று ஸ்தாயிகளில் பாடுகிறவர்களே இல்லை' என்று யாரோ ஒரு உபந்நியாசக வித்வான் சொன்னாரல்லவா? அதைப் பொய்ப்படுத்துவதற்காகவே செய்தது போல், ஜி.என்.பி. அன்று சில வேலைகளைச் செய்தார். பைரவி ராக ஆலாபனையில் தார ஸ்தாயி மத்தியமத்தில் நின்று அவர் சஞ்சரித்தபோது, சபையோர் 'ஹா ஹா' என்றார்கள்.

பிறகு, பஞ்சமத்துக்குப் போய்க் கார்வை கொடுத்து நின்றபோது 'ஹா ஹா. ஹா' என்றார்கள். அத்துடன் ஜி.என்.பி. கீழே இறங்கினாரா? இல்லை! மேலே, தைவதத்துக்குப் போனார். எல்லோருக்கும் மூச்சு நின்று விடும்போல் ஆகிவிட்டது. இன்னும் மேலே சென்று அவர் நிஷாதத்தைப் பிடித்ததும் எல்லோருக்கும் மூச்சே நின்று போய்விட்டது! பாடகர் கீழே இறங்கிவந்த பிறகுதான் சபையோர் ஹாய்யாக மூச்சு விட்டார்கள்.

பாலக்காட்டு மணி எந்த வித்வானுக்குப் பக்க வாத்தியம் வாசித்தாலும், கச்சேரி சிறப்பாகிவிடுகிறது என்பதில் இரகசியம் ஒன்றுமில்லை. என்றாலும், ஜி.என்.பி. யின் பாட்டுக்கும் மணியின் மிருதங்கத்துக்கும் விசேஷ பொருத்தம் இருக்கிற தென்பது உண்மையேயாகும். ஜி.என்.பி. யும் மணியும் சேரும் கச்சேரிகளில் பாட்டுக்கு மிருதங்கமும், மிருதங்கத்துக்குப் பாட்டும் ஒன்றுக் கொன்று சோபை அளிக்கின்றன. பாட்டும் பக்கவாத்தியமும் அவ்வளவு ஒற்றுமையாகச் சேர்வது மிகவும் அருமை யென்றே சொல்லவேண்டும்.


அழகுக்கு அழகு செய்வதுபோல், ஸ்ரீ செளடய்யாவின் கம்பீர பிடில் நாதமும் ஸ்ரீ வேணு நாயக்கரின் ஜிலுஜிலுப்பான கஞ்சிரா ஒலியும் மேற்படி கச்சேரியை நன்கு சிறப்பித்தன. ★

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 6 ஜனவரி, 2016

சங்கீத சங்கதிகள் - 66

என் குருநாதர்
எம்.எல்.வசந்தகுமாரி
 

ஜனவரி 6. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாள். 


1965-இல் எம்.எல்.வி அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இதோ: 
=============

சுமார் இருபத்தாறு ஆண்டு காலமாக நானும் என் குடும்பத்தினரும் திரு. ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களுடனும், அவரது குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகி வந்திருக்கிறோம். காலஞ் சென்ற என் தந்தையும், திரு ஜி.என்.பி. அவர்களின் தந்தையும் தஞ்சை ஜில்லாவில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். கடைசி வரை நெருங்கிய நண்பர்களாயிருந்தவர்கள். எனக்குச் சுமார் பத்து வயது இருக்கும்போது, என் தந்தை ஒரு நாள் என்னை ஜி.என்.பி. அவர்களின் வீட்டுக்கு அழைத் துச் சென்றார். அப்போது ஜி.என்.பி. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் வசித்து வந்தார். ஜி.என்.பி. என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

[ நன்றி: விகடன் ] 

''ஐயா! குழந்தை ரொம்பவும் நன்றாகப் பாடுகிறாள். இவள் மிகவும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறாள். நீங்கள் அடிக்கடி இவ்விடம் அழைத்து வாருங்கள். என்னிடமிருந்து அவள் நிறையப் பாடம் செய்யட்டும்'' என்று மிக அன்புடன் சொன்னார். அதற்குப் பிறகு பத்து வருட காலம் அவரிடம் நூற்றுக்கணக்கான உருப்படிகள் பாடம் செய்தேன். நூற்றுக்கணக்கான அவருடைய கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். 

[நன்றி: விகடன் ]

திரு. ஜி.என்.பி. அவர்களுக்கு ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் நன்றாகத் தெரியும். தென்னாட்டிற்கு திருமதி ரோஷனாரா பேகம், படேகுலாம் அலிகான் இவர்களைப் போல ஹிந்துஸ்தானி பாடகர்கள் அறிமுகமாவதற்கு அவர்தான் காரணம். ஒரு சமயம், திரு. குலாம் அலிகான் 'காவதி' என்ற ராகம் பாடினார். அது ஒரு சிக்கலான ராகம். பாடுவது ரொம்ப சிரமம். ஆனால், நம் ஜி.என்.பி. அவர்கள் அடுத்த தினம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபா கச்சேரியில் ராகமாலிகையாக சுலோகம் பாடும் போது, காவதி ராகத்தையும் பாடிக் காட்டினார்.
[நன்றி: விகடன் ] 

எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய சக்தி அவருக்கு உண்டு. கீர்த்தனங்களை ரொம்பவும் சீக்கிரத்தில் ஸ்வரப்படுத்திவிடுவார்.

ஒரு தினம், யாரோ ஓர் ஆங்கிலேயர் ரேடியோவில் வயலின் வாசித்திருக்கிறார். அடுத்த தினம் ஜி.என்.பி. அவர்கள் ''வசந்தி! நேற்று ஓர் ஆங்கிலேயர் வயலின் வாசித்தார். அவர் வாசித்த டியூன் நம் சங்கராபரணத்தை ஒட்டி இருந்தது. அதில் எல்லா ஸ்வரங்களையும் வைத்துக் கொண்டு க்ரக பேதம் செய்தார். நான் எல்லாவற்றுக்கும் ஸ்வரம் எழுதி வைத்திருக்கிறேன், பார்'' என்று சொன்னார்.

சில்லறை ராகங்களாகிய தேவ மனோஹரி, ரஞ்சனி, மாளவி மாதிரி பல ராகங்களை விஸ்தாரமாகவும் ரக்தியாகவும் பாடுவார். கச்சேரிகளில் சின்னப் பல்லவியாகப் பாடுவார். பார்த்தால் ரொம்பவும் சுலபமாகவும் தோன்றும். ஆனால், அதே பல்லவிகளை நாம் கையாளும்போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். 

திரு.ஜி.என்.பி. அவர்கள் சிறந்த கலா ரசிகர். எல்லாக் கலைகளையும் நன்கு ரசிப்பார். சாப்பாட்டு விஷயத்தில் பரம ரசிகர். ரொம்பவும் ருசியாக இருந்தால்தான் சாப்பிடுவார். வாசனை திரவியங்கள் அவருக்கு ரொம்பவும் பிரியம். ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி, மேடையில் நன்றாகப் பேசும் திறமை உள்ளவர் ஜி.என்.பி.

சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அவரது சிறந்த சங்கீத ஞானத்தாலும், ஸம்ஸ்கிருத தெலுங்கு பாஷை ஞானத்தாலும் பல அரிய கீர்த்தனங்களைச் சொந்தமாக இயற்றியுள்ளார். அவர் மறைந்துவிட்ட போதிலும் அவர் இயற்றிய கீர்த்தனைகள் இந்த உலகம் உள்ளவரை அழியாத செல்வங்களாகத் திகழும்.

[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


வியாழன், 30 ஏப்ரல், 2015

சங்கீத சங்கதிகள் - 52

ஜி.என்.பி , மதுரை மணி  சந்தித்தால் ?  




மே 1. ஜி.என்.பியின்  நினைவு நாள். ( இந்த வருடம் 50-ஆவது நினைவு நாள்) 



இதோ அவர் நினைவில் சில ‘சங்கதி’கள் !

முதல் சங்கதி:
இசை விமர்சகர் சுப்புடு ஜி.என்.பி.யைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியது.

“ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இசை வானிலே ‘ஜி.என்.பி’ தோன்றியபோது இசைப் பழம்புள்ளிகளெல்லாம் பெரிதும் கலங்கினார்கள். ஏனெனில் ஜி.என்.பி. மேதா விலாசம் படைத்தவர். குறுகிய நோக்கம் அவரிடம் அறவே கிடையாது. பழைய பல்லவியைப் பாடாமல், இருபதே கீர்த்தனைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளாமல், ராகங்களையும் கீர்த்தனைகளையும் எழில் நோக்குடன் கண்டு, இசை உலகில் ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார். நாதஸ்வரத்தை ஒத்த சாரீரம். நாலு ஸ்தாயிகளை எட்டும் சாரீரம். நினைத்ததையெல்லாம் பேசும் சாரீரம். 

அவர் ஒரு இசை வள்ளல். அண்டியவர்க்கெல்லாம் இசையை அள்ளி அள்ளி வழங்கினவர். அவருடைய சீடர்கள் அனந்த கோடி. வேறு எந்த மகா வித்வான்களுக்குள்ளும் இந்த மனப் பான்மையோ பாங்கோ அறவே கிடையாது. இதற்கு சாட்சி தேவையில்லை. இது அப்பட்டமான உண்மை. ”

இரண்டாம் சங்கதி:

ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் ... ‘ஆனந்த விகட’னில் 22.7.56-இல் ஒரு புதிய நகைச்சுவைத் தொடர் தொடங்கியது. “இவர்கள் சந்தித்தால்’ என்பது அதன் தலைப்பு.

முதலில் இந்தத் தொடரைப் பற்றி எழுத்தாளர் ஸ்ரீதர் ( பரணிதரன், மெரினா) , அமரர்  ‘கோபுலு’ இருவரும் என்ன சொன்னார்கள்  என்று  பார்ப்போம்.


“ அக்காலத்தில் ‘இவர்கள் சந்தித்தால்” என்ற பகுதியைப் படிக்காதவர்களே  இல்லை எனலாம். பத்திரிகை உலகிற்கே புது இலக்கணம் படைத்த எவரெஸ்ட் சட்டயர் அது. நான்கைந்து பேரை எழுதச் சொல்லி, அவற்றை அடித்துத் திருத்தி, செதுக்கிச் செப்பனிட்டு, இணைத்துப் பிணைத்து, ஒரு கட்டுரையைக் கடைந்தெடுக்கும் ஆசிரியரின் (வாசனின்) செப்பிடு வித்தையைக் கண்டு நான் வியந்து போனேன்.
                -- ஸ்ரீதர், ”விகடனில் நான்”,விகடன் பவழ விழா மலர் ---

“ அந்தக் கால கட்டம் விகடனுக்கு ஒரு லேசான இறங்குமுகமாக இருந்தது. அந்த சமயத்தில் வாசன், விகடனுக்குப் புதிய பொலிவு ஊட்டும் நோக்கத்துடன் தானே நேரடியாக விகடன் சம்பந்தப்பட்ட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். தினமும் விகடன் ஆபீசுக்கு வந்து, ஆசிரியர் இலாகாவினருடன் மீட்டிங் நடத்துவார். விகடனை இம்ப்ரூவ் பண்ண ஆலோசனைகள் சொல்லுவார். அனைவரிடம் ஆலோசனைகள் கேட்பார். அப்போது உதித்தது தான் ‘இவர்கள் சந்தித்தால்’ என்ற ஐடியா. இந்த வரிசையில் எழுதப் பட்ட கட்டுரைகளில் ராஜாஜி, ஈ.வே.ரா.வில் தொடங்கி பல இரு துருவ முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? என்ன பேசுவார்கள்? என்று சுவைபட விவரிக்கும் கற்பனைச் சந்திப்புகள் இடம்பெற்றன. அவை வாசகர்கள் மத்தியில் பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன. ‘
      --கோபுலு, “சித்திரம் பேசுதடி”,  தொடர், அமுதசுரபி, டிசம்பர் 2007.

( என் குறிப்பு:  

முதல் கட்டுரை ஈ.வே.ரா - ஆசார்ய வினோபாவுடன்  தான் தொடங்கியது. பிறகு ராஜாஜி-காமராஜர் , அண்ணாதுரை - ஸ்ரீபிரகாசா, சிவாஜி கணேசன் -எம்.ஜி.ஆர் என்ற பல சந்திப்புக் கட்டுரைகள் வந்தன.   தோராயமாக  20 கட்டுரைகள் வந்தன என்று நினைவு. ) 

முதல் கட்டுரைத் தொடர்புள்ள ஒரு படம் கீழே! )





அந்தத் தொடரில் அவ்வப்போது சங்கீதம், நடனம்  தொடர்புள்ள  சில கட்டுரைகள் வந்தன. அவற்றில் ஜி.என்.பி. தொடர்புள்ள ஒன்றை இங்கே இடுகிறேன்.  அவருடைய நண்பர் மதுரை மணிக்கும் இது ஓர் அஞ்சலி தான்!

இந்தக் கட்டுரைக்குப் போனஸ் அமரர் கோபுலு வின் ஓவியங்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? ( சில ஓவியங்களில் ‘மாலி’யின் பழைய சித்திரங்களின் சாயல் தெரியவில்லை? )







[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜி.என்.பி.

மதுரை மணி 

சங்கீத சங்கதிகள் : மற்ற பதிவுகள்