ஞாயிறு, 31 ஜனவரி, 2021

1792. கா.ம.வேங்கடராமையா -1

கா.ம.வேங்கடராமையா 10

ராஜலட்சுமி சிவலிங்கம்


ஜனவரி 31. சிறந்த தமிழ் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான கா.ம.வேங்கடராமையா (Ka.Ma.Venkataramiah) நினைவு தினம் இன்று  அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை பூந்தமல்லி அடுத்த காரம்பாக்கத்தில் (1911) பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு. பள்ளிக்கல்வி முடிந்ததும் தமிழ் ஆர்வம் காரணமாக பிஓஎல் தேர்ச்சி பெற்றார். சென்னை லயோலா கல்லூரி யில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார்.


* செங்கல்பட்டில் உள்ள தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1981-ல் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அரிய கையெழுத்து சுவடித் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார்.


* சமஸ்கிருதம், இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக செயல்பட்டார். அப்போது பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் திருவனந்தபுரம் பன்னாட்டு திராவிட மொழியியல் கழகத்தில் பணியாற்றினார். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சைவ சமய சொற்பொழிவாளராகவும் புகழ்பெற்றார். திருமுறைகளில் புலமை பெற்றவர். இவரது பெரும்பாலான ஆய்வுகள் அதையொட்டியே இருந்தன. இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.


* திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பிறகும் பல்வேறு மொழி ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் படைத்த சிவனருள் திரட்டு நூலில் 500 பாடல்களுக்கு உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

* கல்வெட்டு வரலாற்றுத் துறைகள், சங்க நூல்கள், பக்தி நூல்கள், இலக்கண நூல்களிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். பொதுவாக இவரது நூல்கள், கட்டுரைகளில் புதிய, அரிய தகவல்கள் காணப்படும். திருக்குறள் உரைக்கொத்து பதிப்பித்தபோது, பிரபலங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.


* ஏராளமான தமிழ் அறிஞர்களை உருவாக்கியுள்ளார். ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழ்க் கையேட்டு நூலையும் வெளியிட்டுள்ளார். இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர்கால அரசியல் தலைவர்கள், ஆய்வுப் பேழை, நீத்தார் வழிபாடு, திருக்குறள் சமணர் உரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்துள்ளார்.

* தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை அக்காலச் சமுதாய வரலாற்றுடன் சேர்த்து ஆராய்ந்து முழுமையாக வெளியிட்டார். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்கு குறிப்புரை எழுதி 1949-ல் பதிப்பித்தார். திருக்குறளுக்கு ஜைனர் எழுதிய உரை, பன்னிரு திருமுறை, கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்தார்.

* தான் பதிப்பித்த நூல்களின் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதாவது செய்திகள், குறிப்புகள் கிடைத்தால் அவற்றையும் சேர்த்து குறிப்பிடுவார். சமரசம் செய்துகொள்ளாத, கண்டிப்பான நிர்வாகத் திறன், நேர்மை, நல்லொழுக்கம், பக்தி, உதவும் பண்பு, நன்றி மறவாமை என அத்தனை நல்ல பண்புகளையும் கொண்டிருந்தார்.

* இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சிவநெறிச் செல்வர், கல்வெட்டு ஆராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார். இறுதிவரை தமிழ்த் தொண்டு ஆற்றிவந்த கா.ம.வேங்கடராமையா 83-வது வயதில் (1995) மறைந்தார்.

[ நன்றி: https://www.hindutamil.in/news/blogs/188183-10-~XPageIDX~.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கா. ம. வேங்கடராமையா: விக்கி


சனி, 30 ஜனவரி, 2021

1791. அகிலன் - 4

ஒரு முழுமையான எழுத்தாளர்

கி.ராஜேந்திரன்


ஜனவரி 31. அகிலனின் நினைவு தினம்.



 [ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
அகிலன்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

1790. கதம்பம் - 56

பண்டைய நாளையப் படப்பிடிப்பு

எஸ்.ராஜம் 


ஜனவரி 29. எஸ்.ராஜம் அவர்களின் நினைவு தினம்.

'கல்கி' யில் 1963-இல் வந்த கட்டுரை. பிரபல ஓவியர், சங்கீத வித்வான் எஸ்.ராஜம் தன் திரைப்பட  அனுபவங்களை நினைவிற் கொண்டு, சித்திரங்களுடன் எழுதிய அரிய கட்டுரை. 





[ நன்றி: கல்கி ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம் 

எஸ்.ராஜம்

நட்சத்திரங்கள்

வியாழன், 28 ஜனவரி, 2021

1789. சங்கீத சங்கதிகள் - 263

 தியாகராஜர் கீர்த்தனைகள் - 25

ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.



மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1936-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை













[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

புதன், 27 ஜனவரி, 2021

1788. சங்கீத சங்கதிகள் - 262

சென்னையில் சங்கீத மோதல்


  
ஜனவரி 27. மகா வைத்தியநாதையரின் நினைவு தினம்.

'தினமணி கதிரின்' இசைச் சிறப்பிதழ் ஒன்றில் வந்த ஓர் அரிய கட்டுரை இதோ!






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 26 ஜனவரி, 2021

1787. பாடலும் படமும் - 131

 நல்ல காலம் வருகுது ! 


'கல்கி' குடியரசு மலரில் (1950) வந்த ஒரு பாடல்.






[ நன்றி: கல்கி]
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஓவிய உலா  


திங்கள், 25 ஜனவரி, 2021

1786. முதல் குடியரசு தினம் - 4

குடியரசு ஜனனம்


ஜனவரி 26. 1950 -இன் பின்னர்  வந்த 'ஆனந்த விகடன்’  இதழில் வந்த தலையங்கமும், குடியரசு தினத்தன்று எடுக்கப்பட்ட சில படங்களும் இதோ! 

====




பாரத நாட்டிற்குச் சென்ற 26-ம் தேதி சரித்திரப் பிரசித்த வாய்ந்த தினமாகும். அன்று கோடி சூரியப் பிரகாசம் கொண்ட சுதந்திர மாளிகையில், பொன்மயமான கொலு மண்டபத்தில் தேச மகா தலைவர்கள், முப்பது கோடி மக்கள் முன் னிலையில் ஜயகோஷ ஆரவாரங்களுக்கிடையே குடியரசுத் திட்டத்தைப் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள். அது முதல் பாரத தேசத்தின் பெயரும் 'பாரதக் குடியரசு' எனத் திகழலாயிற்று.


1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியா சுயராஜ்யம் பெற்ற பிறகு, குடியரசு நிலையை அடைந்தது இரண்டாவது பெரிய சம்பவமாகும்.


இதுவரை 175 வருடங்களாக, பிரிட்டிஷார் தங்களுக்குச் சாதகமான வகையில் அமைந்திருந்த அரசியலே அமுலில் இருந்து வந்தது. அதிகாரத்தை விட்டு அவர்கள் வெளியேறி யதைத் தொடர்ந்து நமக்கான சுதந்திர அரசியலை நாமே தயாரிக்கலானோம். அதற்காக தேசப் பிரதிநிதிகள் கொண்ட ஒரு சபையை அமைத்தோம். புது அரசியலை வகுக்க ஏற்பட்ட சபையாகையால் அதற்கு அரசியல் நிர்ணய சபை என்றே பெயரும் சூட்டினோம்.


சென்ற மூன்று ஆண்டுகளாகவே தேச நிர்வாகம் சுயேச்சையாய் நடந்து வந்தபோதிலும், எல்லாம் பிரிட்டிஷ் மன்னரின் பெயரால் இயங்கி வரலாயிற்று. இப்போது ஏற்பட்டிருக்கும் புது அரசியல் முறை முற்றிலும் சுயேச்சைத் தன்மை பெற்றதாகும். பிரிட்டிஷ் மன்னரில் பெயர் தாங்காமல் தாமே இயங்கக்கூடிய ஜனநாயக அரசியலே இப்போது ஆரம்பமாகி யிருக்கிறது. பிற சுதந்திர நாடுகளின் அரசியல் அமைப்புகளில் காணப் படும் சிறந்த அம்சங்களைக்கொண்டு இந்நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு அரசியல் திட்டம் அமைத்திருக்கின்றனர்.


ஆகவே, உலகிற் சிறந்த ஜன நாயக தத்துவங்கள் யாவும் ஒன்று சேர்ந்து உருவெடுத்ததே இந்தியக் குடியரசு என்று கூறலாம். உலகிற் சிறந்த நவரத்தினங்களைக் கொண்டு தயாரித்த இந்தக் குடியரசு ஆபரணத்தையே நமது பாரத அன்னைக்கு 26-ம் தேதியன்று அணிவித்து மகிழ்ந்திருக்கிறோம்


[ நன்றி; விகடன் ]

தொடர்புள்ள பதிவு:

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

1785. சங்கீத சங்கதிகள் - 261

 அரியக்குடி அற்புதம்


ஜனவரி 23. அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் நினைவு தினம்.

'கல்கி'யில் 1952-இல் வந்த கட்டுரை.  'கல்கி'யே எழுதியிருக்கலாம்.





[  நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்  

அரியக்குடி


சனி, 23 ஜனவரி, 2021

1784. கதம்பம் - 55

 சுவாமிஜியும் நேதாஜியும் !


ஜனவரி 23. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம்.  ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட ஒரு கட்டுரை.

====

சுபாஷ் சந்திர போஸின் வாழ்வில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் அவரை ஆட்கொண்ட காலம் மிக முக்கியமானது. வாலிபத்தின் ஆரம்ப காலம். சுபாஷ் அந்த வயதினருக்கு உரிய உடல், உணர்வு சார்ந்த போராட்டங்களால் அல்லலுற்றார். இயல்பான உணர்ச்சிகளைக்கூட தவறானதோ, இயற்கைக்கு மாறானதோ என்றெல்லாம் கற்பனை செய்து அமைதி இழந்து தவித்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் தற்செயலாக சுவாமி விவேகானந்தரின் நூல்களை அவர் படித்தார். முதலில் சுவாமிஜியின் எழுத்துகளின் பூரண பரிமாணத்தைப் புரிந்து கொள்ள அவரால் முடியவில்லை. ஆனால் அவற்றின் அடித்தளமான தீவிர தெய்வப் பற்றும் மனித சேவையும் பிரிக்கமுடியாதவை நாட்டு மக்களுக்கான சேவை நாராயணனுக்குச் செய்யும் சேவை என்ற கூற்றுகளின் உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆன்மீகத்தையும் மனித நேயத்தையும் ஒன்றாக்கிய சுவாமிஜியின் மகத்தான செய்தி, கலங்கியிருந்த சுபாஷின் மனதிற்கு அரு மருந்தானது; வாழ்வில் புதிய பாதையைத் திறந்தது.

பின்னாளில் இதைப் பற்றி எழுதும்போது நேதாஜி உலக ஆசைகளை எல்லாம் தியாகம் செய்து எனது முக்திக்கும், மக்களின் சேவைக்கும் என்னை அர்ப்பணிக்க வேண்டுமென்ற ஒரு புதிய லட்சியத்தை என்னுள் ஏற்படுத்தினார் விவேகானந்தர் என்று கூறினார். சுவாமிஜியைத் தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றியும் நேதாஜி அறிந்து கொண்டார். இந்த இருவரின் ஆன்மிகச் சிந்தனைகள் மலர்கின்ற பருவத்திலிருந்த அவரது மனதில் அற்புதத் தாக்கத்தை ஏற்படுத்தின. இயன்றவரையில் நான் இவர்களையே வாழ்க்கையின் முன்னோடிகளாகக் கொண்டு வாழப் போகிறேன். ஒரு போதும் உலகியலைத் தேட மாட்டேன் என்பது உறுதி என்ற அவரது எழுத்துகளே இதற்குச் சான்று.

சுவாமிஜியின் தாக்கத்தால் சுபாஷ் சமூக சேவையை ஆன்மிக வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதினார். அவர் தம் சுயசரிதையில் ஆன்மிக உயர்விற்குச் சமூகசேவை தேவை என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரியத் தொடங்கியது... இந்த உண்மை சுவாமி விவேகானந்தரிடமிருந்து எனக்குக் கிடைத்ததாக இருக்கலாம். ஏனெனில் சமூக சேவையை அவர் ஒரு லட்சியப் பாதையாகக் காட்டியவர். தேசசேவை சமுதாய சேவையின் ஒரு பகுதி: இறைவன் ஏழையின் உருவில் நம்மிடம் வருகிறார். எனவே ஏழையின் சேவையே இறை வழிபாடு என்றார் சுவாமிஜி. இதைப் படித்த பிறகு ஏழைகள், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு நான் தாராளமாக உதவலானேன்.

இவ்வாறு சுவாமிஜி நேதாஜியின் வாழ்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார்.

சுபாஷ் இது பற்றி, விவேகானந்தரால் நான் முதன் முதலில் ஈர்க்கப்பட்டபோது எனக்கு 15 வயது இருக்கும். அதற்குப் பிறகு என் வாழ்வில் எல்லாமே மாறி ஒரு பெரும் புரட்சியே உண்டானது என்று குறிப்பிடுகிறார்.

விவேகானந்தரின் குறிக்கோள்

1912-13 இல் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமிஜியின் அறிவுரைகளை சுபாஷ் நடைமுறைப்படுத்த ஆர்வம் கொண்டார். ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் தம்மை ஒத்த கருத்துள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்தார். அம்முயற்சியால் புதிய விவேகானந்த சங்கம் உருவானது.

1914-இல் ஹேமந்த் குமார் சர்க்காருக்கு எழுதிய கடிதத்தில் விவேகானந்தரின் குறிக்கோளே என் குறிக்கோள் என்றார் சுபாஷ்.

இத்தகைய உன்னத லட்சியம் கொண்ட சுபாஷும் அவரது நண்பர்களும் தங்களுக்கு வழிகாட்ட ஒரு குருவைத் தேடினார்கள். ஆனால் ஒருவரும் கிட்டவில்லை.

(சுபாஷ் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரம்மசாரியாகச் சேர்வதற்கு முயன்றார் என்றும், ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தர் நீ தேச சேவை செய்யப் பிறந்தவன் எனக் கூறித் தடுத்ததாகவும் சுவாமிகளின் நினைவுக் குறிப்புகளில் உள்ளது)

சுபாஷ் தம் பள்ளிக் காலப் பிற்பகுதியிலும், கல்லூரி நாட்களிலும் (1912-16) மக்கள் சேவையில் பல வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கொடிய காலரா நோயினால் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதிலும் சுபாஷ் சிறிதும் தயங்கவில்லை. சுவாமி விவேகானந்தரின் தாக்கம் வேறொரு வகையிலும் அவரைத் தூண்டியது. ஆன்மிக மேம்பாட்டிற்குப் புரட்சியையும் ஏற்கலாம் என்று சுவாமிஜி ஒப்புதல் கொடுத்திருப்பதாகக் கருதினார்.

இதனால் ஆன்மிக, சமுதாயச் சேவைகளுக்குத் தடையிட்ட தம் குடும்பத்தினரை எதிர்த்தார். தந்தையின் கோபமோ, தாயின் கண்ணீரோ அவரைத் தம் லட்சியத்திலிருந்து திருப்ப முடியவில்லை. இந்த மனவுறுதியே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளாலும் செய்திகளாலும் எவ்வாறு அவர் கவரப்பட்டார் என்பதற்குச் சான்று.

அரசியல் முன்னேற்றம்


வளர்ந்த முழு மனிதனானபோது சுபாஷ் ஓர் இடதுசாரி அரசியல் தலைவரானார். அப்போது எதேச்சாதிகார எதிர்ப்பு, சமூக சமத்துவம் ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளையே தம் கருத்தில் கொண்டிருந்தார். அந்த இருகொள்கைகளுக்கும் சுவாமி விவேகானந்தரின் தாக்கமே காரணம் என்பதை சுபாஷ் வெளிப்படையாகவே கூறி வந்தார்.

விவேகானந்தர் அரசியல் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆனாலும் அவரைச் சந்தித்தவர்களும் அவரது எழுத்துகளால் கவரப்பட்டவர்களும், தேசப்பற்று மற்றும் அரசியல் மனப்பான்மை கொண்டவர்கள் என்பது அவரது கருத்து.

சுபாஷின் வாழ்வில் மிகத் தாமதமாகவே அரசியல் நுழைந்தது. இதற்கு ஒரு காரணங்கள். அரசியலை அவர் தந்தை, வீட்டில் நுழையவிடாதது ஒன்று. பள்ளி அதிகாரிகள் பள்ளியில் அரசியலைத் தடை செய்தது மற்றொன்று

சுவாமிஜி காட்டிய பாதையில் ஆன்மிக வாழ்விலும், சமூக சேவையிலும் ஈடுபட்ட இளம் சுபாஷ் ஆரம்பத்தில் அரசியல் பக்கம் திரும்பவில்லை.

வாலிபப் பருவத்தில் தேசம் விடுத்த அறைகூவல்களால் கவரப்பட்ட சுபாஷ் அரசியலில் நுழைய முடிவெடுத்தார். இதிலும் சுவாமிஜியின் தாக்கம், காந்திஜி, சி.ஆர். தாஸ் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய இயக்கம் ஆகியவை அவருள் தேசபக்திக் கனலைத் தூண்டின.

சுபாஷ் தம் அரசியல் வாழ்வில் எந்த இஸத்தையும் நம்பவில்லை. அவரின் ஒரே இஸம் தேசப்பற்றே. அவர் தம் தாய்நாட்டை ஆங்கிலேயே ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, சுதந்திர இந்தியாவைச் சமுதாயச் சமத்துவத்தின் அடிப்படையில் நிர்மாணிக்க விரும்பினார்.

சுவாமி விவேகானந்தரின் மனிதனை உருவாக்கும் லட்சியத்தைப் பற்றியே அடிக்கடி நினைவு கூர்ந்தார். சுவாமிஜியைப் பின்பற்றி மனிதனை உருவாக்க இரண்டு வழிகள் உண்டு என அவர் நினைத்தார்.

அதில் ஒன்று, சுதந்திர தாகம் கொண்ட மனிதர்களின் ஓர் இயக்கத்தைத் தோற்றுவிப்பது. இதற்கு அவர் சாம்யவாதி சங்கம் என்ற பெயரிட்டார். ஒவ்வொருவனும் அடிமைத் தளையிலிருந்து உண்மையிலேயே விடுதலை பெறும் வரை போராட வேண்டும் என்பதே இச்சங்கத்தின் நோக்கம்.

சுவாமிஜியைப் போலவே நேதாஜியும் நீண்ட உறக்கம், சோம்பல், போலியான திருப்தி, எதையும் போனால் போகிறது, பரவாயில்லை என்று விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றிலிருந்து மக்களைத் தட்டியெழுப்ப விரும்பினார்.

இதைச் சாதிக்க மக்களிடையே மிகுந்த மனோதிடமும் தியாக உணர்வும் தேவை என்று சுவாமிஜி போல அவரும் நம்பினார். சுவாமிஜி வலியுறுத்திய வீரம். தீரம், தியாகம் முதலியவற்றையே சுபாஷும் விடுதலைக்கு வேண்டிய குணங்களாக வலியுறுத்தினார்.

தேசத்தின் மறுமலர்ச்சி

விடுதலைக்குப் பிறகு புதிய பாரதத்தைச் சமுதாயச் சமத்துவத்தின் அடிப்படையில் உருவாக்க விரும்பினார் சுபாஷ். சுவாமிஜி புதிய பாரதம் பற்றிக் கூறும்போது தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சுபாஷின் சிந்தனையில் இது சமூகத்தில் அனைவருக்கும் கல்வி, பொருளாதார மேம்பாடு என்று விரிந்தது. சுவாமிஜியைப் போலவே இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் சுபாஷுக்கும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் வெவ்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், அவற்றின் ஒருமைப்பாடும் தேச ஒற்றுமையுமே முக்கியம் என்று தீவிரமாக நம்பினார்.

சுவாமிஜியும் நேதாஜியும் மனிதநேயவாதிகள் இருவரும் இந்தியாவில் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் சுதந்திரமாக, அமைதியுடனும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் ஹயாஷிதா என்ற ஜப்பானியர் விவேகானந்தரின் தாக்கத்தால் சுபாஷ் புரட்சியாளர் ஆனார் என்றார். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் உத்போதன் என்ற வங்காள மாதப் பத்திரிகையின் ஆசிரியராக சுவாமி சுந்தரானந்தர் இருந்தார். அவருக்கு சுபாஷ் எழுதிய ஒரு கடிதத்தின் கீழ்க்கண்ட பகுதி, அவரது வாழ்க்கையில் சுவாமிஜியின் செல்வாக்கை இவ்வாறு விவரிக்கிறது.

" ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்பதை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும்? அவர்களின் புனித தாக்கத்தினால்தான் என் வாழ்வில் முதல் விழிப்புணர்வு ஏற்பட்டது. என் உயிர் உள்ள வரையில் அவர்களுக்கு நன்றியுணர்வோடு, அவர்கள் பாதம் பணியும் பக்தனாக இருப்பேன்."


[ நன்றி: https://www.dinamalar.com/news_detail.asp?id=617129 ]


தொடர்புள்ள பதிவுகள்:

சுபாஷ் சந்திர போஸ் 

கதம்பம்

வெள்ளி, 22 ஜனவரி, 2021

1783. ஏ.கே.செட்டியார் - 8

பீஜப்பூர்

ஏ.கே.செட்டியார் 


'சக்தி'யில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.





 [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 


தொடர்புள்ள பதிவுகள்:
ஏ.கே.செட்டியார்

வியாழன், 21 ஜனவரி, 2021

1782. பெரியசாமி தூரன் - 6

 அவர் ஒரு கலைக்களஞ்சியம் !

கி.ராஜேந்திரன்

ஜனவரி 20. பெரியசாமி தூரனின் நினைவு தினம். கல்கியில் வந்த அஞ்சலி.

















[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:
பெரியசாமி தூரன்


புதன், 20 ஜனவரி, 2021

1781. சங்கீத சங்கதிகள் - 260

 இசைஉலகின் இழப்பு





ஜனவரி 19. மைசூர் டி.சௌடையாவின் நினைவு தினம். 

'கல்கி' சௌடையாவின் படத்தை 44-இலேயே அட்டைப்படத்தில் இட்டுக் கௌரவித்தது. 



அவர்  மறைந்தவுடன், கல்கியில் வந்த அஞ்சலி இதோ.


[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்  

மைசூர் டி. சௌடையா: விக்கி