வ.வே.சு.ஐயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.வே.சு.ஐயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூன், 2020

1552. வ.வே.சு.ஐயர் - 7

பிடிவாதத்துடன் தேசத்தொண்டு!
ரா.அ.பத்மநாபன்




ஜூன் 3.  வ,வே.சு. ஐயரின் நினைவு தினம்.





[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

புதன், 23 அக்டோபர், 2019

1379. வ.வே.சு.ஐயர் - 6

நம் பெண்கள்
வ.வே.சு. ஐயர்





‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த கட்டுரை.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

1161. வ.வே.சு.ஐயர் - 5

தாயின் கடமை
வ.வே.சு. ஐயர் 

                                     


‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.

                                           



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

858. வ.வே.சு.ஐயர் - 4

தமிழ் நாகரிகத்தின் பழமை
வ.வே.சு. ஐயர்


1948-இல் ‘சக்தி’ இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.

===







 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

திங்கள், 3 ஏப்ரல், 2017

680. வ.வே.சு.ஐயர் - 3

எது கவிதை?
வ.வே.சு. ஐயர் 

ஏப்ரல் 2. வ.வே.சு. ஐயரின் பிறந்த தினம்.

அவர் பாரதியின் ‘கண்ணன் பாட்டிற்கு’  1919-இல்   எழுதிய முன்னுரை யைப் படித்திருப்பீர்கள்.  அவர் ‘ கவிதை’யைப் பற்றி வேறு என்ன எழுதியிருக்கிறார் ?

இதோ,  அவர்  1918-க்குப் பிறகு எழுதி,  ‘சக்தி’ இதழில் 1946-இல் வெளியான ஒரு கட்டுரை.






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

சனி, 4 ஜூன், 2016

வ.வே.சு.ஐயர் -2

கண்ணன் பாட்டு : முன்னுரை 
வ.வே.சு ஐயர் 

ஜூன் 3. வ.வே.சு. ஐயரின் நினைவு தினம்.



பாரதியாரின் கண்ணன் பாட்டு , இரண்டாம் பதிப்பிற்கு , அவர்  1919-இல் எழுதிய முன்னுரை இதோ!
==============

நம் காலத்துத் தமிழ்க் கவிகளுள் பிரதம ஸ்தானத்தை வகிக்கும் ஸ்ரீமான் சுப்ரஹ்மண்ய பாரதியின் நூல்களுக்கு முன்னுரை வேண்டுவதே யில்லை. இருப்பினும், 'பாயிர மல்லது பனுவ லன்றே என்னும் முதுமொழியை நினைத்தோ அல்லது வேறு என்ன எண்ணியோ, பதிப்பாசிரியர் இக்கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்புக்கு என்னை ஒரு முன்னுரை எழுதித் தரவேண்டுமெனக் கேட்டார்; சிறிதளவேனும் சாத்தியமாயிருக்கிற ஒரு காரியத்தை நட்புரிமை பூண்டோர் செய்யும்படி வேண்டினால் மறுத்தல் அழகன்று என நினைத்துச் சம்மதித்தேன்.

பாரத நாட்டின் குலதெய்வமாகிவிட்ட கண்ணனுக்குப் பாமாலை சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடு நாட்களாக மறந்திருந்த பாரத நாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதா சாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஒட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.

பத்து வருஷங்களுக்கு முன் அவர் பதிப்பித்த ஜன்ம பூமியிலேயே ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுட்கள் காணப்படுகின்றன. ஆனால், பிற்பட்டுத்தான் கண்ணனுடைய செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்திற்கு நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்களின் அனுசந்தானம் முக்கிய காரணமாக  இருந்திருக்கிறது. இக் கண்ணன் பாட்டானது பாவ விஷயத்தில் அப்பாசுரங்களின் வழியையே தழுவியதாக இருக்கிறது.

இஷ்ட தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது பக்தி சாஸ்திரங்கள் கூறுகின்றன, நமது ஆசிரியரும் இதை அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமானனாகவும், குருவாகவும், தோழனாகவும், நாயகியாகவும், நாயகனாகவும் பாவித்துப் பாடுகிறார்.
இவற்றுள், நாயக நாயகி பாவத்தைப்பற்றி இங்குச் சில மொழிகள் கூறாது விட முடியவில்லை. இப் பாவத்தால் பகவானை வழிபடும் முறை தொன்றுதொட்டுப் பக்தர்களாலும் கவிகளாலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக் மதத்திலே கூட அடியார் வர்க்கத்தை நாயகியாகவும் கிறிஸ்துவை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள் பல உள. நமது பாகவதத்தில் கோபிகைகளின் உபாக்கியானங்களெல்லாம் இப் பாவத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளனவே. மகா பக்திமதியான மீராபாய் உலகத்திலுள்ள ஜீவகோடிகள் அனைத்தும் ஸ்திரீப்பிராயம் என்றும் பகவான் ஒருவனே புருஷன் என்றும் பாவித்துப் பக்தி செய்திருக்கிறார். பரமஹம்ஸ ஸ்ரீராமகிருஷ்ண தேவரும் தம்முடைய அனுபவங்களுள் நாயகி  அனுபவத்தையும் அனுபவிக்க எண்ணி சேலை தரித்துக்கொண்டு, ராதை என்கிற பாவத்தால் கண்ணனை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. திருக்கோவையாரையும், ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவையும் அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும் முறை புதிதாகப் படாது.

ஆனால் இந்த பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப்பக்கத்தின்மீது நடப்பதைப் பொன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது; அதற்கு இப்புறம் அப்புறம் போய்விட்டால், அசந்தர்ப்பமாகிவிடும். ஸ்ரீபாகவதத்திலுங்கூட கோபிகா உபாக்யானங்களில் சுக பகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்துவிட்டிருக்கிறார் என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயம்.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும், 
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் 

என்று தொடங்கும் திருவாய் மொழிகளையும், (5, 6, 1)

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ? 
திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ? 

என்று தொடங்கும் ஆண்டாளுடைய பாசுரங்களையும் (7, 1) போலச் செயிரின்றி இப்பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம்.

நமது கவியும் இப் பாவத்தை விரிக்கையில் பரபக்தியை விடச் சரீரமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார் ஆனால், சுகப் பிரம்மமே நிறுத்த முடியாததான தராசு முனையை நம் ஆசிரியர் நிறுத்தவில்லை என்று நாம் குறை கூறலாமா?

இந்தக் கீர்த்தனங்களைப் பரபக்திக்குப் பேரிலக்கியமாகக்கொள்ள வேண்டுவதில்லை. ஆசிரியர் இந்நூலில் கவி என்கிற ஹோதாவில்தான் நம்மிடம் வருகிறார் என நினைக்க வேண்டும். கவிதா ரீதியாகப் பார்க்கும்போது, இக் கீர்த்தனங்களுள் பெரும்பாலவையிலுள்ள சுவை தேனினும் இனிதா யிருக்கிறது. இன்னொன்று: கவிதை யழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந் நூலின் பண்ணழகை மறந்துவிடக்கூடாது.

இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையா யிருக்கின்றன. கடற்கரையில், சாந்தி மயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும் மோஹ வயப்படுத்தி நீலக்கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்.

இந் நூலைத் தமிழுலகம் ஆதரித்துத்தான் இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது. ஆனால், ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயர் எழுதிய ஆங்கிலக் கீர்த்தனங்களின் விலை மூன்று ரூபாயாக இருக்க, அளவில் அந்நூலில் குறையாததும், சுவையில் அதற்கு இணையாக இருப்பதுமான இந் நூலின் முதற் பதிப்புக்குக் காகித விலை ஏறிவிற்ற காலத்தில் பதிப்பாசிரியர் விலை கால் ரூபாயாகக் குறைக்க வேண்டி யிருந்தது என நினைக்கும்போது நாட்டில் தமிழபிமானம் வெளிப்படையாக விளங்கவில்லை யென்றாவது ஒப்புக்கொள்ள வேண்டும். முன் காலத்தில், ஆசிரியர்களுக்கு அரசர்கள் ஏராளமான பொருள் உதவி செய்து அவர்கள் மனத்தைச் சிறிய விசாரங்கள் பீடிக்காமல் காத்து வந்து அவர்களுடைய ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரிக்கும்படி செய்து வந்தார்கள். தற்காலத்தில் கல்வியபிமானமுள்ள பொது ஜனங்கள் தாம் அக்காலத்து அரசரின் ஸ்தானத்தை வகிக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபிமானத்தை, விலையைப் பொருட்படுத்தாமல் நூல்களின் யோக்கியதையைக் கருதி ஆதரித்துத்தான் காட்டமுடியும். நமது ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே.

'சுற்றி நில்லாதே போ, பகையே; துள்ளி வருகுது வேல்' 

என்றும்,

'கைதனில் வில்லும் உண்டு; 
காண்டீவம் அதன் பேர்'

என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது. தமிழபிமானிகள் இப் பதிப்பை ஆதரித்து வாங்கி ஆசிரியனுடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால் தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்கள் என நம்புகிறேன்.

புதுச்சேரி: சித்தார்த்தி ,
ஆவணி 22உ.

( ஆகஸ்ட், 1919 )

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

வியாழன், 7 ஏப்ரல், 2016

சுத்தானந்த பாரதி - 2

அசடு வழிந்தது ! 
ஸ்ரீ சுத்தானந்த பாரதி  




வ.வே.சு. ஐயரின் வாழ்வில் புதுவையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.

சுத்தானந்த பாரதியார் கல்கியில் 45/46 -இல் ( இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்)   எழுதிய ஓர் அரிய கட்டுரை. பலர் படித்திருக்க மாட்டார்கள் என்பதால் இங்கே இடுகிறேன்.
==== 


ஒருநாள் காலையில் வேலைக்காரி பருவதம் கொல்லைக் கிணற்றில்  தண்ணீர் இறைத்தாள். வாளியில் ஒரு பாத்திரம். வந்தது அதைக் கண்டு பயந்து, “ அம்மா !. சூனியம் !! சூனியம்!!” என்று கதறினாள், 

பாக்கியலக்ஷ்மியம்மாள் ஐயரை அழைத்துக் கொண்டு வந்தாள் ஐயர் பாத்திரத்தை உற்றுக் கவனித்தார். முக்திரை வைத்திருந்தது. அடிப்புறம் பார்த்தார். “சரி, அந்த ஆசாமிகள் வேலை! “ என்று உடனே பாரதியார்  முதலிய நண்பர்களை அழைத்து வந்து பாத்திரத்தைத் திறந்து பார்த்தார். அடடா! எப்படிப்பட்ட சரக்குகளை மகானுபாவர்கள் மிகவும் சிரமப்பட்டுச் சேர்த்திருக்கிறார்கள் ! காளியின் படம்; அதற்கு ஒருதலை பலி தருவதாக பாவனை. ஒரு அறிக்கை: அதில் புரட்சி வரிகள். அதில்  புதுவை தேச பக்தர்கள் ஜாப்தா, ஒரு கத்தி. இவ்வளவும் அந்தப் பாத்திரத்தில் துருப்பிடித்துக். கொண்டிருந்தன.

வ.வே.சு.ஐயர்

 ஐயர் அப்படியே பாத்திரத்தை மறைத்துக் கொண்டு பிரெஞ்சு சர்க்கரரிடம் போனார், பருவதம், ஐயர் திரும்புகிற வரையில் வெளியே தலை நீட்டவில்லை. ஐயர் அழகாகப் பிரெஞ்சு பேசி, “ஏதோ நாங்கள் குடியரசுப் பிரெஞ்சு ராஜ்ஜியத்தில் அமைதியாக இருக்கிறோம்: என்றால், எங்களை இப்படி யெல்லாம் செய்கிறார்களே? இதிலிருப்பதெல்லாம் சுத்தப் பொய் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. கிரிமினல் சட்டத்தின் இத்தனாவது செக்க்ஷன்படி! “ என்றெல்லாம் வெளுத்து வாங்கினார். அதிகாரி, “நீங்கள் தைரியுமாய் இருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் “ என்று சமாதானம் சொல்லி அனுப்பினார். பாத்திரம் சர்க்காரிடம் சேர்ந்தது ஒற்றருக்குத் தெரியாது.

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் தடதடவென்று போலீஸார் புகுந்தனர். " வீட்டைச் சோதனை போடுவோம் “ என்றனர். “ ஆஹா! தாராளமாகப் போடுங்கள்" என்றார் ஐயர் விநயமாக மல்லாந்திருந்த சட்டி பானைகளெல்லாம் குப்புறக் கவிழ்ந்தன. இரகசியப் புலிகள் புத்தகப் பெட்டியை உதறி உதறிப் பார்த்தனர். ஒற்றர் எலிப் பொந்து எறும்புப் பொந்துகளை யெல்லாம். கண்ணில் திரிவிட்டுப் பார்த்தனர். மண் கூட அகப்படவில்லை. பருவதம் அவ்வளவு சுத்தமாக வீட்டைக் கூட்டியிருந்தாள் ! “ ஐயரே! நீர் புரட்சிச் சாமான்களைக் கிணற்றில் ஒளித்து வைத்திருப்பீர். கிணற்றை இறைத்துப் பார்ப்போம் “ என்றனர். “ ஆஹா!  சந்தோஷம். எங்களுக்குத் தூர்வை எடுக்கப் பணம் கிடையாது. அந்த உதவி செய்தால் நல்லதுதான் ’ என்றார் ஐயர்.

ஆசாமிகள் கிணற்றை இறைக்கத் தொடங்கினர். இறைத்தனர். " பள பளான்னு தெரியுதா' என்றார் ஒருவர். “ ஒன்றுமில்லேங்கிறேன் “  என்றான் மற்றொருவன். இதற்குள் இன்னொருவன் நுழைந்தான். “அட,  வீண் வேலை! நிறுத்தடா! “ என்றான். ஒற்றர் முகத்தில் அசடு வழிந்தது. நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சிரிக்காதவர் ஐயர் ஒருவர் மட்டும்தான்! ஏன் சிரிக்கவில்லை "ஐயோ! நமது தேசத்திலே இப்படி அசடுகளும் உண்டா? “ என்றுதான்.


=============

போனஸ் : கட்டுரையின் அடியில் வந்த ஒரு துணுக்கு :




[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுத்தானந்த பாரதியார்

வ.வே.சு.ஐயர்

சனி, 2 ஏப்ரல், 2016

வ.வே.சு.ஐயர் - 1

தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்
 பெ.சு.மணி

ஏப்ரல் 2. வ.வே.சு. ஐயரின் பிறந்த தினம்.

தமிழறிஞர் பெ.சு.மணி தினமணியில் அவரைப் பற்றி  2009-இல் எழுதிய கட்டுரை இதோ:
================

வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, வேங்கடேச ஐயர்-காமாட்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

  ஐயரின் தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரையில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்தது. 1895-இல் "மெட்ரிகுலேஷன்' தேர்வில், மாநிலத்தில் ஐந்தாவது மாணவராகத் தேறினார்.

  1897-இல் அவருடைய அத்தைமகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு புதல்விகளும், ஒரு புதல்வரும் பிறந்தனர்.

  1899-இல் வரலாறு, பொருளாதாரம், லத்தீன் ஆகிய பாடங்களை எடுத்து பி.ஏ., பட்டம் பெற்றார். லத்தீன் மொழியில் முதன்மைச் சிறப்பும் பெற்றார். 1902-இல் "பிளீடர்' என்னும் வக்கீல் தேர்வில் தேறினார். திருச்சியில் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாகத் தொழில் நடத்தினார்.

  வ.வே.சு.ஐயர், 1906-இல் பர்மா, ரங்கூனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1907-இல் லண்டனில் "பாரிஸ்டர்' பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார். லண்டனில் அப்போது, ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா எனும் தேசபக்தர், இந்திய இளைஞர்களுக்காக நடத்தி வந்த "இந்தியா ஹவுஸ்' எனும் விடுதியில் சேர்ந்தார். அங்கு புரட்சி வீரர், வீரசாவர்க்காரைச் சந்தித்தார். இந்திய தேசியப் புரட்சி வீரரானார். சாவர்க்காரின் வலக்கரமாகப் புகழ்பெற்றார். ராஜவிசுவாச வாழ்த்துப் பாட மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்தார். லண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். புரட்சித்தாய் காமா அம்மையாரின் நட்புறவைப் பெற்றார்.

  லண்டனில் முப்பது மாதங்கள் வாழ்ந்த காலத்தில் வ.வே.சு.ஐயரின் அரசியல் இலக்கியத் தொண்டுகள் மலர்ச்சியுற்றன. 1908-இல் லண்டன் ஹைகேட் யூனிடேரியன் சர்ச்சில் முதன்முதலாக கம்பராமாயணச் சொற்பொழிவாற்றினார். இந்த ஆங்கிலச் சொற்பொழிவு, லண்டனில் இருந்து வெளிவந்த "ஸ்வராஜ்' (ஆசிரியர் பிபின் சந்திரபால்) பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

  தமிழில் அவருடைய எழுத்தும் பணியும் லண்டனில் தொடங்கியது. 1909-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த "இந்தியா' (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுúஸ கரிபால்டி சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர்.

  இதைத்தொடர்ந்து 1909 ஜூன் 5-ஆம் தேதி இந்தியா இதழில், ""ழான் ழாக் ரூசோ எழுதிய ஜனசமூக ஒப்பந்தம்'' எனும் தலைப்பில் எழுதப்பட்ட வ.வே.சு.ஐயரின் தமிழாக்கக் கட்டுரைத்தொடர் வெளிவரத் தொடங்கியது. இக்கட்டுரை வ.வே.சு.ஐயரை மொழிபெயர்ப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

  வ.வே.சு.ஐயரின் எழுத்துலகப் பயணம் பாரதியாரின் "இந்தியா'வில் மேலும் தொடர்ந்தது. "இந்தியா'வில் 1908 நவம்பர் 28 முதல் வ.வே.சு.ஐயர் எழுதிய "லண்டன் கடிதங்கள்' வெளிவரத்தொடங்கின.

  1910-இல் ஐயர் புதுவையில் வசிக்கத் தொடங்கினார். புதுச்சேரி வாழ்க்கையில் அவருடைய அரசியல், இலக்கியப் பணிகள் தொடர்ந்தன. 1919-இல் இந்திய தேசிய அரசியலில் காந்தியுகம் தோன்றியதும், அதன் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு வன்முறைப் புரட்சி அரசியலைக் கைவிட்டு, காந்தியத்தைத் தழுவி, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.

  வ.வே.சு.ஐயரின் தொடக்க கால எழுத்துப் பணியில் லண்டன் கடிதங்கள் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலும் "பாரதப்பிரியன்' எனும் பெயரில் எழுதி வந்தார். தேசிய-சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, தமிழக தேசிய மாவீரர்கள் பற்றிய செய்திகள் லண்டன் கடிதங்களில் வெளிவந்தன. "இந்தியா'வில் மட்டுமல்லாமல், புதுச்சேரி "சூரியோதயம்', "விஜயா' இதழ்களிலும் வ.வே.சு.ஐயரின் லண்டன் கடிதங்கள் வெளிவந்தன. பின்னாளில் அவர் 1924 அக்டோபரில் தொடங்கிய "பாலபாரதி' எனும் அருமையான இலக்கிய மாத இதழில், "ராஜகோபாலன் கடிதங்கள்' எனும் தலைப்பில் எழுதிய கடிதங்களும் பன்முகப்பார்வை கொண்டவை. ""அவர் எழுதிய "ராஜகோபாலன் கடிதங்கள்' என்பனவற்றிலும் அபூர்வமான கதைகள் உண்டு'' என்று நவ இலக்கிய மேதை புதுமைப்பித்தன் பாராட்டியுள்ளார்.

  சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரை கற்று, தமது இலக்கிய வாழ்க்கை மூலமாகத் தமிழ் மரபு செழிப்பதற்குப் பெரும் பங்களித்தார் ஐயர் அவர்கள். பழந்தமிழையும், நவீனத் தமிழையும் இணைத்தார்.

  பாரதியார், வ.உ.சி. ஆகியோரைக் காட்டிலும் தமது படைப்புகளில் சங்க இலக்கியத்தை ஐயரே பெருமளவில் ஆண்டுள்ளார்.

  வ.வே.சு.ஐயர், தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் (1920), ""குறுந்தொகையிலும், கலித்தொகையிலும் சில செய்யுள்கள் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக'' குறிப்பிட்டுள்ளார்.

  1918-இல் வெளிவந்த "கவிதை' எனும் கட்டுரைதான் கவிதை பற்றிய விமர்சனத்துறைக்கு ஓர் ஆரம்பம் செய்து வைத்திருக்கிறது என்பதை திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரிய ஒப்பியல் ஆய்வில் வ.வே.சு.ஐயர் சங்க இலக்கியமான "மலைபடுகடாம்' கவிதையை பிரெஞ்சு எழுத்தாளர் சேனாங்கூர், தாகூர், வேர்ட்ஸ்வர்த் ஆகியோரின் படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார்.

  தொல்காப்பியம், சங்க இலக்கியம் கண்ட மூவேந்தர் மரபை, பாரதியார் போன்று வ.வே.சு.ஐயரும் நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார். வ.வே.சு.ஐயர் 1909 நவம்பர் 6-இல் "இந்தியா' இதழில் பாரத நாட்டின் பெருமைகளை விதந்தோதுமிடத்தில், ""சேரன், சோழன், பாண்டியன் புரந்தளித்த தாய்த் திருநாடு'' என்று சாற்றியுள்ளார். "மறுமலர்ச்சி' எனும் கட்டுரையில், ""சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் தமிழறிவானது, லெüகீக விஷயங்களாகட்டும், ஆத்யாத்ம விஷயங்களாகட்டும் கம்பீரமான வேலைகள் செய்திருக்கிறது''. தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் மூவேந்தர் மரபைப் போற்றிப் புகழ்வதற்கு முன்னோடியாக வ.வே.சு.ஐயர் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

  ""திருவள்ளுவரையும், கம்பரையும் வ.வே.சு.ஐயர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடி வந்தாரென்று கொள்ளலாம்'' என்று ஐயருடன், தேசபக்தன் இதழில் பணியாற்றி, நெருங்கிப் பழகிய வெ.சாமிநாதசர்மா குறிப்பிட்டுள்ளார். குறள் நெறி பரப்பிய பணியில் வ.வே.சு.ஐயரின் மகத்தான சாதனை, அவர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்ததும், அதில் எழுதிய மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் ஆகும்.

  அதேபோல் முதல் பதிப்பு 1916-இல் வெளிவந்தது. சுப்பிரமணிய சிவா, பதிப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது பதிப்பு 1925-இல் வெளிவந்தது. தமது நூல்களில் இடமறிந்து குறட்பாக்களை ஆள்வதில் பேரார்வம் செலுத்தியுள்ளார் வ.வே.சு.ஐயர்.

  1916-இல் புதுச்சேரியில் பதிப்பகம் ஒற்றை மண்டயம் எஸ்.சீனிவாசாசாரியாருடன் இணைந்து தோற்றுவித்தபொழுது, அதற்கு "கம்ப நிலையம்' என்று பெயரிட்டார். வ.வே.சு.ஐயர் கம்ப நிலையம் வெளியீடுகளில் ஒன்றாக 1917-இல் வெளிவந்த "கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம்' எனும் பதிப்பு நூல், வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் தவத்தில் வெளிவந்த முதல் சாதனை நூலாகும். பாலகாண்டத்தின் 1399 பாடல்களில் 545 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்தார் வ.வே.சு.ஐயர்.

  கம்ப நிலையம் சார்பில் வெளியிடப்பெற்ற வ.வே.சு.ஐயருடைய "மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்' எனும் நூல், வ.வே.சு.ஐயரை நவீன படைப்பிலக்கியம்-குறிப்பாக சிறுகதை இலக்கிய முன்னோடி என்று நிறுவியுள்ளது.

  1917-இல் வெளிவந்த முதற் பதிப்பில், "மங்கையர்க்கரசியின் காதல், காங்கேயன், கமல விஜயம், ழேன் ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகள் உள்ளன. வ.வே.சு.ஐயர் மறைவுக்குப்பிறகு, லைலாமஜ்னுன், எதிரொலியாள், அனார்கலி எனும் மூன்று சிறுகதைகள் சேர்க்கப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. வ.வே.சு.ஐயரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் சார்பாக "சுதந்திர சங்கு' ஆசிரியர் சங்கு எஸ்.கணேசன் மூலம் அது வெளியிடப்பட்டது. ""இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும், உன்னதமான எண்ணங்களும் ததும்பும்'' என்று ராஜாஜி 1927-இல் வெளிவந்த பதிப்பிற்கு அளித்த முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

[ நன்றி: தினமணி ] 

தொடர்புள்ள பதிவுகள்: