சாவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2022

2384. சாவி - 25

கலியுகக் கர்ணன்

சாவி

1944-இல் 'கல்கி'யில் வந்த கதை.





[நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 

தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 10 பிப்ரவரி, 2021

1802. சாவி - 24

பல்டி பலராமன்
சாவி

[ ஓவியம்: நடனம் ]


பிப்ரவரி 9. 'சாவி' அவர்களின் நினைவு தினம்.
=====
"ஹல்லோ, சந்தர்! நான் யார் தெரிகிறதாடா?... என்னடா முழிக்கிறே? இடியட்! என்னைத் தெரியலேயா உனக்கு? நான்தாண்டா பலராம்!'-என் தோளைப் பிடித்து உலுக்கிக்கொண்டே ஏகவசனத்தில் தொடங்கிவிட்டான் அவன். என்பாடு சங்கடமாய்ப் போய்விட்டது.

என்னுடைய மனைவியுடன் அப்போதுதான் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். புறப்படும்போதே இப்படி ஒரு அபசகுனம்! அவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் மேலும் ஆரம்பித்து விட்டான்.

"ஏண்டா, பழைய பிரண்டை இப்படியா மறந்துடறது? இது யாருடா? ஒய்பா? வெரிகுட்!...பலே ஆள்டா நீ; எப்படா கல்யாணம் ஆச்சு? ஏண்டா எனக்கு இன்விடேஷனே அனுப்பல்லே?”

"இரண்டு.மாசம் ஆச்சு, உன் அட்ரஸ்ஸே தெரியல்லே! அதனாலே அனுப்பல்லே...' என்று இழுத்தேன்.

 "என்னடா என் அட்ரஸ் தெரியல்லேங்கறே? எல். ஐ. சி. கட்டடத்திலே தானேடா இருக்கேன்! டாப் ப்ளோர்டா! நான் இப்ப ஓர் இன்ஷூரென்ஸ் ஏஜண்டு. போறது! கலியாணத்தைத்தான் ரகசியமா முடிச்சுட்டே, ஒரு பதினாயிரம் ரூபாய்க்கு இன்ஷூராவது செய்துகொள்ளேன்” என்று அடி போட்டான்.

"ஆகட்டும் பார்க்கலாம். இப்ப நான் அவசரமா சினிமாவுக்குப் போயிண்டிருக்கேன். நாளேக்கு ஆபீஸ் பக்கம் வாயேன்: சாவகாசமாகப் பேசலாம்..” என்று தட்டிக் கழித்தேன்.

"நாளைக்கா? எந்த ஆபீசுடா உனக்கு?" என்று கேட்டான்.

"நான் இப்போ ஆடிட்டரா இருக்கேன். ஆபீஸ் ஆர்மீனியன் ஸ்ட்ரீட்லே' என்று கூறி விலாசத்தைச் சொல்லி விட்டு அந்த விடாக்கண்டனிடமிருந்து ஒரு வழியாகத் தப்பினேன்.

அவன் அப்பால் போனதும் என் மனைவி, ” யார் இந்தப் பைத்தியம்? நாகரிகமில்லாமல் நடுத்தெருவிலே நிற்க வைத்துக்கொண்டு...” என்றாள்.

"என் கிளாஸ்மேட் அவன் ஒரு டைப். ஆனால் கவடு சூது கிடையாது. எதையும் ஸ்டெடியாச் செய்யமாட்டான். ஒரு நாள் இன்ஷூரென்ஸ் ஏஜண்டுன்னுவான்; இன்னொரு நாளைக்கு டூரிங் சினிமா மானேஜர் என்பான். ஒரு நாளைக்குக் காரிலேயே பறப்பான். இன்னெரு நாளைக்கு நடந்தே சுற்றுவான் ஒரு நாளைக்கு இங்கிலீஷிலேயே பிளந்து கட்டுவான். இன்னெரு நாள் இந்தியிலே வெளுத்துக் கட்டுவான், ஒரு நாள் குபேரன்! மறுநாள் அன்னக்காவடி எதுவும் நிலை இல்லே”  என்றேன்.

- ஆறு மாதம் கழித்து மீண்டும் அவனைச் சந்தித்தேன், கூலிங் கிளாஸ். ஸில்க் ஜிப்பா. கையிலே ஒரு லெதர் பை. மூக்கின் கீழ் வண்டு போன்ற துண்டு மீசை; இம்மாதிரி அலங்காரங்களுடன் டாக்சியில் போய்க்கொண்டிருந்தான். என்னைக் கண்டுவிட்டு டாக்சியை நிறுத்திக் கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு, "ஹல்லோ சந்தர்!" என்று கத்திக் கொண்டே ஓடிவந்தான்.

- சரிதான் பத்தாயிரத்துக்கு ஒரு பாலிஸி எடுத்துக் கொண்டுவிட வேண்டியதுதான். காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது' என்று பயந்தபடியே அவன் முற்றுகைக்குத் தயாரானேன்.

- "என்ன பலராம்! எங்கே மறுநாள் வரேன்னு விலாசம் வாங்கிக்கொண்டு அப்புறம் வரவேயில்லையே?’ என்றேன்.

 "ஓ! அதுவா? அது என்னடா ஜாப்! ஸில்லி! எல்லாருக்கும் பல்லைக் காண்பித்துக்கொண்டு. நான்சென்ஸ்! அப்பவே அதை விட்டுட்டேன்!”

"விட்டுட்டாயா? அப்படின்ன இப்ப என்ன செய்யறே?"

"இப்ப ஒரு புரொட்யூசரைப் பிடிச்சு மாம்பலத்திலே ”ஹனிமூன் பிக்சர்ஸு”ன்னு ஒரு படக் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். அதுலே நான் ஒரு பார்ட்னர்; இங்கிலீஷ் மர்டர் "த்ரில்லரை தமிழிலே அருமையான சோஷல் லவ் ஸ்டோரியா மாத்திருக்கேன். ஒண்டர்புல் ஐடியாவெல்லாம் போட்டிருக்கேன். வரப்போறது பாரேன். உனக்கு ப்ரீ பாஸ் அனுப்பி வைக்கிறேன். ஒய்பையும் அழைச்சிண்டு வா!' என்றான்.

- "படம் எடுத்தாயிடுத்தா?”

"இல்லேடா; அடுத்த வாரம்தான் பூஜை போடப் போறோம் ஸ்டார் புக்கிங் நடந்துண்டிருக்கு. வாடா எல்லாம் சொல்றேன்...” என்று கூறி என்னை ஏர்கண்டிஷன் ஒட்டல் ஒன்றுக்குள் அழைத்துச் சென்றான். ஒரே உற்சாகம்: லெதர்பாக்கில் கற்றை கற்றையாக நோட்டுகளைத் திணித்துக்கொண்டு உலகத்தையே விலைக்கு வாங்கிவிடுபவனைப் போன்ற பெருமிதத்துடன் காணப்பட்டான்.

"ஸாலட் சாப்பிடறயா!' என்றான்.

”வேண்டாம், காபி மட்டும் போதும்" என்றேன்.

"நீ ஒரு டல் பேர்வழிடா ஹாப்பியா இருக்க கத்துக்கணும்டா? லைப் ஈஸ் பார் லிவிங்டா, இடியட்! ஸர்வர்! இரண்டு ப்ரூட் ஸாலட் கொண்டு வா" என்று கூறிக் கொண்டே வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கொடுத்தான். -

மீண்டும் ஆறுமாதம் கழித்து வந்தான்.

"என்னப்பா, சந்தர்!’ என்று ஈன சுரத்தில் ஒலித்த பலராமன் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

தாடியும் மீசையும் வளர்ந்து ஏதோ முற்றும் துறந்த முனிவர்போல் காட்சி அளித்தான். ’ஹல்லோ’வெல்லாம் போய் ’அப்பா’வில் வந்துவிட்டது. கழுத்திலே துளசி மாலை : முகத்திலே வேதாந்தக் களை!

"என்ன பலராமா! இது என்ன வேஷம்? இப்ப எங்கே இருக்கே? உன் சினிமாக் கம்பெனி என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.

"அது அப்போதே திவால் சினிமா சுத்தப் பிராடுப்பா. இதெல்லாம் எனக்குச் சரிப்படலே. ரிஷிகேசம் போய் ஆறு மாசம் இருந்துட்டுப் போனவாரம்தான் வந்தேன், இப்போ சுவாமி துக்கானந்த தீர்த்திடம் சீடனாயிருக்கேன். ஆப்டர் ஆல் லைப் ஈஸ் நத்திங்: கீதையிலே கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லியிருக்கிறார், பார்த்தாயா? அர்ஜுனா சோர்வடையாதே! சுற்றம் அது இது என்று பார்க்காதே! கர்மா தான் முக்கியம்னு சொல்றாரே. எனக்கு யார் இருக்கா? பெண்டாட்டியா? பிள்ளையா? ஒண்டிக்கட்டை ஏகாங்கி, எங்கே இருந்தா என்ன...சந்தர் ஒரு நாலணு இருந்தாக் கொடு. காலையிலிருந்து காப்பிகூடச் சாப்பிடல்லே!" என்றான்.

சமீபத்தில் ஒருநாள் மூர்மார்க்கெட் பக்கம் போய்க் கொண்டிருந்தேன்.
"கபர்குத் கபாஹை! அதாவது இப்போது இமாசல் பாபா என்ன சொல்கிறார் என்றால்...-" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன், நம்ப பலராமன்! விஷக்கடி மருந்து வியாபாரி ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்ததைத் தமிழில் அவன் அநாயாசமாக மொழி பெயர்த்துக்கொண்டிருந்தான்.


[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 8 பிப்ரவரி, 2020

1457. சாவி - 23

சாவி என்றால் அன்பு! 


பிப்ரவரி 9. சாவி அவர்களின் நினைவு தினம்.


சாவியின் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த கட்டுரை.



[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 18 மே, 2019

1287. சாவி - 22

'அல்டாப்' ஆறுமுகம் 
 சாவி

[ ஓவியம்: நடனம் ]


அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு விசிலடித்தால், அது அந்த வட்டாரம் முழுவதுமே எதிரொலிக்கும். அந்தச் சீட்டியின் சாயலிலிருந்தே தங்கள் வாத்தியார் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஆறுமுகத்தின் சகாக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். 

டீக்கடை, சலூன், சினிமாக் கொட்டகை, ரிக்ஷா ஸ்டாண்டு - இம்மாதிரி இடங்களில்தான் அவனுடைய சீடர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 'சலாம் வாத்தியாரே!' என்று ஆறுமுகத்தை அன்புடன் வரவேற்பார்கள். அவனிடத்தில் அவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் பக்தியும் உண்டு. 
இரவு 'நைட்ஷோ' ஆரம்பித்து ஊர் அடங்குகிற நேரத்தில்தான் ஆறுமுகத்தின் அட்டகாசம் ஆரம்பமாகும். 

''டாய்......கேட்டுக்கினீங்களாடா, நம்ப வெங்கடேசன் கதையை; பொறுக்கிப் பையன் புத்தியைக் காமிச்சுட்டாண்டா...நேத்து ராத்திரி மணி ஒண்ணு இருக்கும்; நாடார் கட்டைத் தொட்டி இருக்குதுல்வே, அந்தச் சந்துலே வாரன்...கும்முனு இருக்குது இருட்டு! நாயர் கடை இன்னம் மூடியாவல்லே. அங்கே போய் ஒரு பீடியைப் பத்த வச்சுக்கிட்டு ஜைலண்டா நடக்கறேன். தபால் பொட்டி பக்கத்துலே முருங்கமரம் இல்லே, அந்தக் குடிசைக்குள்ளாற யாரோ பொம்பளை அழுவற சத்தம் கேக்குது. நடுப்புற ஆம்பளைக் குரலும் கேக்குது. 

[ ஓவியம்: சு.ரவி, மூலம்: கோபுலு ]


''கம்மலைக் கழட்டிக் குடுக்கப் போறயா, இல்லே உதை வாங்கப் போறயான்னு' ஒரே அடியா கலாட்டா பண்றான் அவன். அதுவோ 'லபோ திபோ'ன்னு அடிச்சுகிணு அழுவுது; பாவம்! 

''நீ என்னை வீட்டைவிட்டு அடிச்சித் துரத்தி ஆறுமாசம் ஆவுது. இங்கே ஏன் வரே நீ? எங்கண்ணங்காரன் சேஞ்சு போட்ட கம்மல் இது. நீ என்னை வெட்டிப் போட்டாலும் சரி, குடுக்கமாட்டேன்'னுது . 

''இவன் அத்தோட வுட்டுட்டுப் போக வேண்டியதுதானே? கம்மலைக் கழட்டிக் குடுத்தாத்தான் ஆச்சுன்னு அடாவடித்தனம் பண்றான். இன்னாடா அக்குரும்பு இது? எனக்குப் பொறுக்கல்லே; நான் ரவுடிதான். ஆனா நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். உள்ளே அப்படியே பாஞ்சி அவனை இழுத்து வந்து வெளியே போட்டேன். இவன் என்னைக் கண்டுட்டுத் திக்குமுக்காடறான். 'இன்னாடா சோம்பேறி! கம்மலா வோணும் ஒனக்கு? இந்தா வாங்கிக்கோன்னு' உட்டேன் பாரு ஒண்ணு, அப்படியே கீழே குந்திக்கினான். 

''டேய், மரியாதையா இந்த இடத்தை உட்டுப் போயிடு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிருப்பேன். யாரும் இல்லாத நேரத்திலே ஒரு பொம்பளை கிட்டே வந்து கலாட்டாவா பண்றே? சோமாறி! பாவம், பச்சைப் பொண்ணு! அதை வெச்சுக் காப்பாத்தத் துப்பு இல்லே உனக்கு. போடா கைராத்து! இன்னாடா மொறைக்கிறே? நீ பெரிய சீமானா? சார்பட்டா பரம்பரை வஸ்தாதா? போடாஆ! கையிலே இன்னா இருக்குதுனு பார்த்துகினியா? அப்படியே சீவிடுவேன், சீவி! நம்பகிட்டயா கமால் காட்றே நீ? நட்டைக் கயிட்டிடுவேன் ராஸ்கோல்னேன்!'' 

''இதுக்குள்ளே அக்கம்பக்கமெல்லாம் 'ஜேஜே'ன்னு கூடிப்போச்சு. 

''டேய், அல்டாப்! உனக்கு வெக்கறேன் இருடா 'வேலை'ன்னு சொல்லிக்கினே சைக்கிள்ளே குந்திக்கினு பறந்துட்டான் அந்தத் துடை நடுங்கி! 
 
''போடா கய்தே! எங்கிட்டே ஒரு கும்மாகுத்து தாங்குவியா நீ...உனக்கு ஓர் அடையாளம் பண்ணி வெக்கறேன் இரு'ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன். பாவம், அந்தப் பொண்ணு மொகத்தைப் பார்த்தேன்; அப்படியே மனசு எளகிடுச்சுப்பா! நான் ரவுடிதாம்பா. ஆனா, நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். நாயம் அநியாயம் பார்க்கணும்பா எதுக்கும் இவனாட்டமாவா? செங்கல் சூளை தன்சேகரன்கிட்டே போய், அநியாயமா வலுச்சண்டைக்கு நிக்கறானே; அது இன்னா யோக்யதை...? அடடே! அந்தக் கதை தெரியாதா உனக்கு? சொல்றேன் கேளு. தாய் தவப்பன் இல்லாத பொண்ணுப்பா அது. தெளஜன் லைட்லே ரொட்டிக் கடை வெச்சுருக்குது. இந்தத் தன்சேகரன் பையன் மல்லு ஜிப்பா போட்டுக்கினு, கழுத்திலே ஒரு தங்க சையினை மாட்டிக்கினு அந்தப் பொண்ணை 'டாவு' அடிக்கிறான். அது இவனைச் சட்டை பண்லே. பள்ளிக்கூடம் படிக்கிற அந்தப் பையனும் அதுவும் சிநேகிதம். செங்கல் சூளையானுக்கு அது ஆவலே. அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனை மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். இந்தப் பொறிக்கி வெங்கடேசன்தான் அவனுக்குக் கையாளு. தன்சேகரன்கிட்டே துட்டை வாங்கித் துன்னுக்கினு தினம் போய் வரான் இவன். ஒண்ணுப் பையனை அடிக்கணும்; இல்லாட்டி துட்டைத் திருப்பிக் கொடுத்துடணும். துட்டை வாங்கிக்கினு ஆளை அடிக்காம ஏமாத்தறது எந்த நாயத்தைச் சேர்ந்தது? அவனைச் சும்மா உடலாமா? இது ஒரு பொழைப்பா? இன்னைக்கு ஆவட்டும்...அவனுக்கு வெக்கறேன் வேலை!'' 

சினிமாக் கொட்டகை வாசலில் ஒரு பெரிய கூட்டம். 

அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பலம் வாய்ந்த கை பிச்சுவாவை உயர்த்திக்கொண்டு நிற்கிறது. அந்தக் கையை வேறொரு கை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. கத்தி மேலாக எந்தத் திசையில் நகருகிறதோ, அந்தப் பக்கமே அந்தக் கூட்டமும் சாய்கிறது. அந்தக் கத்திக்குரியவன் வேறு யாருமல்ல; 'அல்டாப்' ஆறுமுகந்தான். வெங்கடேசன் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான். ஆறுமுகம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கொண்டிருக்கிறான்! 

''ரெளடியாயிருந்தா என்ன? அதுக்காவ அக்கிரமம் செய்யலாமா? அதான் கீறிட்டேன். ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லே. டாய்! எவனாச்சும் தப்புத்தண்டா சேஞ்சிங்க, திரும்பி வந்ததும் தீர்த்துப்புடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இந்த 'அல்டாப்' நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன்!'' 


[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்:


திங்கள், 4 ஜூன், 2018

1085. சாவி - 21

'பப்ளிசிடி' பங்காருசாமி
சாவி

[ ஓவியம்: நடனம் ]
நிலைக்கண்ணாடி முன் நின்றபடி தம்மை அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பங்காருசாமி. தலைப்பாகையிலும், அங்கவஸ்திரத்திலும் பளபளக்கும் சரிகை. 'பங்காரு சாமி', 'பங்காருசாமி' என்று அங்கவஸ்திரத்தின் கரை முழுவதும் அவருடைய நாம தேயம் பளபளத்துக் கொண்டிருந்தது. இடது கையில் தங்கப்பட்டைக் கடியாரம். வாய் நிறையத் தங்கப் பற்கள். விரல்களிலே வைர மோதிரங்கள்.

''ஐயா, உங்க போட்டோவும் பெயரும் பேப்பர்லே வந்திருக்குது'' என்று ஒரு பத்திரிகையை நீட்டினார் கார் டிரைவர்.

பங்காருசாமி தம்முடைய தங்கப் பற்கள் தெரிய, அந்தப் பத்திரிகையை ஆவலோடு வாங்கிப் பார்த்தார். அவருடைய 'போட்டோ'வும் பெயரும் அந்தப் பத்திரிகையில் வெளியாகியிருப்பதைக் கண்டபோது அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அயல்நாட்டுக் கலைஞர் ஒருவர் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது பங்காருசாமி அந்தக் கலைஞருக்கு மாலை போடுகிற போட்டோ அது. பிரபலஸ்தர்கள், சினிமா நட்சத்திரங்கள் இவர்களில் யாராவது வெளிநாட்டுக்குப் போனாலும், வெளி நாட்டிலிருந்து வந்தாலும் அவர்களை வரவேற்கவோ வழி அனுப்பவோ பங்காருசாமிதான் முதலில் ஆஜராவார். அவர்தான் மாலை போடுவார். அவர்தான் கை குலுக்குவார். மறுநாள் தாம் மாலை போட்ட செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறதா என்று எதிர்பார்ப்பார். அச்சில் தம்முடைய பெயரைப் பார்ப்பதில் அவருக்கு அத்தனை ஆசை! அவருடைய கலியாணத்தின்போது முகூர்த்தப் பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டிருந்த தம்முடைய பெயரைப் பலமுறை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர் ஆயிற்றே அவர்?

ஒரு சங்கத்தின் ஆண்டு விழாவுக்கு மந்திரி ஒருவர் விஜயம் செய்தபோது, பங்காருசாமி ஆள் உயர மலர் மாலையை மந்திரியின் கழுத்தில் சூட்டினார். மந்திரியுடன் கை குலுக்கினார். ஆனால் குலுக்கிய கையை ஐந்து நிமிஷம் வரை விடாமல் பிடித்தபடியே போட்டோகிராபருக்குப் 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார்! அந்த நேரத்தில் மந்திரி பாடு ரொம்பவும் அவஸ்தையாகப் போய்விட்டது.

ஊரில் யார் எந்தக் காரியம் செய்தாலும் பங்காருசாமிக்கு தூக்கம் வராது. தாமும் அதே காரியத்தைச் செய்து முடித்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பார். அதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் அதைப்பற்றி அவருக்குக் கவலை கிடையாது. அவருடைய பெயரும் போட்டோவும் பொது மக்கள் கண்களில் அடிக்கடி பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் அதுதான் அவருடைய ஆசை.


கலியாண ஊர்வலம், சுவாமி புறப்பாடு என்றால் பங்காருசாமிதான் ஊர்வலத்துக்கு முன்னால் வருவார். இரு பக்கங்களிலும் காஸ் லைட்டுகள் ஒளி வீச, அந்த ஒளியில் அவருடைய வைர மோதிரங்கள் பளபளக்க நடந்து வருவார் அவர்.

வடக்கே யாரோ ஒரு பைராகிச் சாமியார் சகல வியாதிகளையும் குணப்படுத்துவதாகக் கேள்விப்பட்ட பங்காருசாமி, அந்தச் சாமியாரைத் தம்முடைய பங்களாவிலேயே அழைத்து வந்து வைத்துக்கொண்டார். ''பங்காருசாமி பங்களாவில் பைராகிச் சாமியார் தங்கியிருக்கிறாராம்'' என்று நாலுபேர் அவருடைய பெயரைச் சொல்லுவார்கள் அல்லவா?

ஒரு சமயம் அவர் தேர்தலுக்கு நின்றார். பதினாயிரக் கணக்கில் பணத்தை அள்ளி வீசினார். தம் பெயரையும் போட்டோவையும் பிரசுரித்துப் பிரபலப்படுத்தினார். தேர்தலில் தோல்வி அடைந்தபோது அவர் சிறிதும் வருத்தப்படவில்லை. தம்முடைய போட்டோவும், பெயரும் பத்திரிகைகளில் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்ததே, அது போதாதா?

ஒரு சமயம், ரயிலில் முதல் வகுப்பு வண்டியில் அவருக்கு ஒரு சீட் ரிசர்வ் செய்யப்பட்டது. கம்பார்ட்மெண்டுக்கு வெளியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் ஜாபிதாவில் இவருடைய பெயரும் டைப் செய்யப்பட்டிருந்தது. பங்காருசாமி ரயில் ஏறும்போது ஞாபகமாகத் தம்முடைய பெயர் ஜாபிதாவில் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார். பெயர் இருந்தது; ஆனால் பங்காருசாமி என்பதற்குப் பதிலாகக் கங்காருசாமி என்று தப்பாக டைம் அடிக்கப்பட்டிருந்தது. உடனே தம்முடைய பெயர் தப்பாக இருப்பதை ரயில்வே அதிகாரிக்குச் சுட்டிக் காட்டி அதைத் திருத்தி எழுதிய பிறகுதான் அவர் ரயிலுக்குள் ஏறிச் சென்றார்.

போட்டி அபேட்சகர் பஞ்சாட்சரம் ஒரு சமயம் தம்முடைய பேரக் குழந்தையை முதல் முதலாகப் பள்ளிக்கு அனுப்பியபோது, குழந்தையைக் குதிரை மீது வைத்து, பாண்டு வாத்தியம், நாதஸ்வரம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அந்த ஊர்வலம் பங்காருசாமியின் வீதி வழியாகப் போயிற்று. அவ்வளவுதான்; அந்தக் காட்சியைக் கண்டதும் பங்காருசாமிக்கு எங்கிருந்தோ ஒரு வேகம் பிறந்தது.

தமக்கு ஒரு பிள்ளைகூட இல்லையே என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. தூரத்து உறவினர் ஒருவருடைய குழந்தையை அழைத்துவந்து காது குத்து விழா நடத்தினார். அவர் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் சொல்லவேண்டுமா, தடபுடலுக்கு? வாணவேடிக்கை, பாண்டு வாத்தியம், நாதஸ்வர இசை எல்லாம் சக்கைப்போடு போட்டன. குதிரைக்குப் பதிலாக யானையையே ஊர்வலமாக விட்டார்.

யானை ஊர்வலம் என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா? அக்கம்பக்கத்துக் குடிசையில் வாழ்ந்த குழந்தைகளெல்லாம் யானையைச் சுற்றி வட்டமிட்டன. பங்காருசாமி மிக்க பெருமையோடு யானையின் முன்னால் நடந்து செல்ல ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று யானை மீதிருந்த குழந்தை பயந்துபோய்க் கீழே இறங்கவேண்டுமென்று அழுது பிடிவாதம் பிடித்தது. பங்காருசாமி கவலைப்படவில்லை. போட்டிக்கு ஊர்வலம் விட்டாகவேண்டும். அவ்வளவுதானே அவருடைய நோக்கம்? குழந்தை யாருடையதாயிருந்தால் என்ன? சுற்றி நின்ற குடிசை வாழ் குழந்தைகளின் ஒன்றைப் பிடித்து யானை மீது ஏற்றிவிட்டார். அந்தக் குழந்தை ரொம்பக் குஷியாக 'ஜம்'மென்று யானைமீது ஏறி உட்கார்ந்து சவாரி செய்தது.

யாரோ ஒரு சினிமா நட்சத்திரம் வீடு கட்டிப் புது மனை புகுவிழா நடத்தியதாகப் பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி பங்காருசாமியின் கண்ணில் பட்டுவிட்டது.

புதிதாக வீடு கட்டுவதென்றால் நாட்கள் ஆகுமே. எனவே, உடனே தாமும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி விழா நடத்தினார். விழா முடிந்தவுடன் வீட்டை விற்று விட்டார். வீடு வாங்கியது விழா நடத்துவதற்குத்தானே? தங்கப் பற்கள் கட்டிக்கொள்வதற்காகத் தம்முடைய அசல் பற்களையே எடுத்தவருக்கு ஒரு பிரமாதமா என்ன?
===============


[ நன்றி: விகடன் ]


தொடர்புள்ள பதிவுகள்: