ராமகிருஷ்ண பரமஹம்ஸர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூன், 2022

2165. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 4

தெய்வ மனிதர் 


இந்த வருடம் (2022) சென்னை மயிலையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல உறைவிட உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு வருடம்.

" ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரால், 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாணவர் இல்லம் தாய், தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, உடை, உறைவிடம், அளித்து சேவை செய்து வருகிறது.

தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த கல்வி பணியாற்றும் நிறுவனங்களில் ஒன்றான ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் தனது உறைவிட உயர்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

ராமகிருஷ்ண மிஷனின் முன்னோடி கல்வி நிறுவனமாக மாணவர் இல்லம் விலங்குகிறது.

மாணவர் இல்லத்தில் ராம கிருஷ்ண மிஷன் பாலிடெக்னி கல்லூரி ராமகிருஷ்ண நூற்றாண்டு தொடக்கப்பள்ளி ஆகியவையும் இயங்கி வருகின்றன."

[ நன்றி : searcharoundweb.com  ]

[ நன்றி: தினமணி]

'கல்கி'யில் 1950-இல் வந்த ராமகிருஷ்ணரின் அட்டைப் படமும், அட்டைப்பட விளக்கமும். 


                                [ ஓவியம்: சந்திரா]



இந்தக் 'கல்கி' இதழில் தான் 'ராஜாஜி'யும் 'ராமகிருஷ்ண உபநிஷதம்' தொடரை எழுதத் தொடங்கினார்.  






[நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 


செவ்வாய், 16 மார்ச், 2021

1825. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 3

என் குருநாதன்
ஸ்வாமி விவேகானந்தர் 



 
கல்கியில் 1970-இல் வந்த ஒரு கட்டுரை.






[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்


சனி, 18 பிப்ரவரி, 2017

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 2

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 
ஸரஸி 



‘சக்தி’ இதழில் 1944-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!





தொடர்புள்ள பதிவுகள்:

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

புதன், 17 ஆகஸ்ட், 2016

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 1

பச்சோந்தி 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 



ஆகஸ்ட் 16. ராமகிருஷ்ண பரமஹம்சரின் நினைவு தினம். 

அவர் சொன்ன ஒரு சிறுகதை இதோ:


பச்சோந்தி

இரண்டு மனிதர்கள் ஒரு பனந்தோப்பு வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மனிதன் அங்குநின்ற பனை மரத்தின் மேல் ஒரு பச்சோந்தி இருப்பதைக் கவனித்தான்.

"அதோ, அந்தப் பனை மரத்தில் ஓர் ஓந்தி யிருக்கிறது. பார் நல்ல சிவப்பு நிறம்.' என்றான்.

இரண்டாவது மனிதன் “எந்தப் பனை மரம் எந்தப் பனைமரம்?” என்று கேட்டுக் கடைசியாக அவன் சுட்டிக் காட்டிய மரத்தைப் பார்த்தான். அதில் இருந்த ஓந்தியையும் பார்த்தான்.

'பனைமரம் இருக்கிறது. அதில் ஓந்தியும் இருக்கிறது. ஆனால் அதன் நிறம் சிவப்பல்ல; நீலநிறம்” என்று சொன்னான் இரண்டாவது மனிதன்.

'சிவப்புக்கும் நீலத்துக்கும் வேற்றுமை தெரியாமல் உளறுகிறானே இவன்” என்று நினைத்துக் கொண்டான் முதல் மனிதன்.

'அடே அது சிவப்பு நிறமடா, சிவப்பு நிறம்' என்றான்.

“இல்லை யில்லை அது நீலநிறம்தான்” என்றான் இரண்டாவது ஆள்,

“சிவப்பு சிவப்புத் தான்' என்று கத்தி னான் முதல் மனிதன்.

"இல்லை நீலம், நீலமேதான்' என்று கூச்சலிட்டான் இரண்டாவது ஆள்.

இப்படி இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வேறொரு மனிதன் வந்தான்.

இரண்டு மனிதர்களும் அவனை அருகில் அழைத்தார்கள்.

'ஐயா, ஓந்தி சிவப்பு நிறம் தானே!” என்று கேட்டான் முதல் ஆள். "ஆமாம்” என்றான் புது ஆள்.

“என்னையா இப்படிச் சொல்கிறீர்? நன்றாகப் பார்த்துச் சொல்லும் ஓந்தி நீல நிறம் தானே?’ என்று கேட்டான் இரண்டாமவன்.

"ஆமாம்’ நீலநிறம் தான் என்றான் புது ஆள்.

“என்னையா, நான் கேட்டாலும் ஆமாம் போடுகிறீர்? அவன் கேட்டாலும் ஆமாம் என்கிறீர்? உமக்கெனன பைத்தியமா?' என்று கேட்டான் முதல்வன்.

‘பைத்தியம் எனக்கல்ல; உங்களுக்குத் தான். ஓந்தி நேரத்துக்கு நேரம் நிறம் மாற்றிக் கொள்ளும். நீர் பார்த்த போது சிவப்பா யிருந்தது. அவர் பார்த்த போது நீலமாகி விட்டது. இன்னொரு முறை பார்த்தால் பச்சையாகவும் காட்சியளிக்கும்” என்றான் அந்தப் புதுமனிதன்.

இருவரும் தெளிவு பெற்றார்கள். கடவுளும் இப்படித்தான். பிள்ளையாராக இருப்பவரும் கடவுள்தான்; பெருமாளாக இருப்பவரும் கடவுள்தான். இந்த உண்மையை அறியாமல் மதச்சண்டை போடுபவர்கள் பைத்தியக்காரர்கள்

[ நன்றி : ”ஏழாவது வாசல்”, நாரா.நாச்சியப்பன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்



வியாழன், 18 பிப்ரவரி, 2016

ராஜாஜி -3

பரம்பொருள்

ராஜாஜி 

           


18 பிப்ரவரி. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தினம். 

நான் சென்னையில், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யின்  ஒரு மாணவன் என்பதில் மிகவும் பெருமை உள்ளவன்.

  நான்  அப்போது சில காலம் நடத்திய ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சிறப்பிதழும் வெளியிட்டேன்! :-)


1950-இல் ராஜாஜி ‘கல்கி’ யில் தொடர்ந்து ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதினார்.  நினைவில் உள்ளது. அவற்றைத் தொகுத்து ராமகிருஷ்ண மடம் பின்னர் ஒரு நூலாய் வெளியிட்டது.
அந்த நூல் எனக்கு பிப்ரவரி 26,1953-இல்  ஒரு பரிசாய்க் கிட்டியது!  அப்போது நூலின் விலை ரூ.1-4-0 !

 1950-வரை ராஜாஜியின் வீட்டுக்கு அடுத்தவீட்டில்  தான் ( சென்னை, தி.நகரில், பஸ்லுல்லா ரோடில்) நாங்கள் குடியிருந்தோம்! பக்கத்து வீட்டுக்காரரின் நூல் எனக்குப் பரிசாய்க் கிடைப்பது ஒரு சுவைதானே!




அந்த நூலிலிருந்து ராஜாஜி எழுதிய முன்னுரையையும், முதல் கட்டுரையையும் இங்கிடுகிறேன்!    




      





[ நன்றி: கல்கி, ராமகிருஷ்ண மடம் ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: