திங்கள், 29 ஏப்ரல், 2019

1276. சிறுவர் மலர் - 12

’சக்தி’க் கதம்பம் -  2




‘சக்தி’ 1940 - ஆண்டு இதழ்களிலிருந்து ஒரு கவிதை , ஒரு கட்டுரை, ஒரு கதை!  ( தே.வி. யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கட்டுரை சுத்தானந்த பாரதி எழுதியது என்பது என் யூகம் ).







[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

1275.சங்கீத சங்கதிகள் - 185

தியாகராஜர் கீர்த்தனைகள் - 12
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.




மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]



தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

சனி, 27 ஏப்ரல், 2019

1274. சங்கீத சங்கதிகள் - 184

மதுரை சோமு - 7

பாரதியும் தமிழிசையும்
டாக்டர் மதுரை எஸ்.சோமசுந்தரம்




2019. மதுரை சோமு அவர்களின் நூற்றாண்டு வருடம்.

‘பாரதி’யாரின் நூற்றாண்டு மலர் ஒன்றில் ( 1982)  அவர் எழுதிய  ஒரு கட்டுரை.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

1273. விழாக்கள் - 1

சென்னையில் நடைபெற்ற இலக்கிய விழாக்கள் :
பாரதி, இளங்கோ, விகடன் கதைப் போட்டி, கலைமகள்-25

“மந்தஹாசன்’ 


‘சிவாஜி’ பத்திரிகையின் 21-04-57 இதழில் வந்த ஒரு கட்டுரை.
பாரதி, இளங்கோ, விகடன் கதைப் போட்டி, கலைமகள்-25 விழாக்கள்..... படித்துப் பாருங்கள்1






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

வியாழன், 25 ஏப்ரல், 2019

1272. பாடலும் படமும் - 61

ஐம்பூதத் தலங்கள்  -5
தில்லை
எஸ்.ராஜம் 


கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி
         ( பெரிய புராணம் - தில்லைவாழ் அந்தணர் புராணம் )

[ தன்னறிவாலும், தளையறிவாலும் கற்பிக்கப் பெறும் கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் ஒளி வடிவாகிய இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, யாவர்க்கும் அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், சிறந்த அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று, அழகும், மகிழ்வும், பொருந்த நடனம் செய்தருளும் பொலிவினை உடையவா கிய திருவடிகட்கு, என் வணக்கத்தைப் பன்முறையும் தெரிவித்துக் கொள்கிறேன்.]

சித்பரம் - உயிர் அறிவிற்கு மேலாக நிற்கும் ஞானப் பெருவெளி; அவ்வெளியே திருச் சிற்றம்பலம் ஆகும். சித் - அறிவு, பரம் - மேலான, வியோமம் - வெளி.

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்


காஞ்சிபுரம்

திருவானைக்கா


திருவண்ணாமலை

திருக்காளத்தி

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

சனி, 20 ஏப்ரல், 2019

1271. பாடலும் படமும் - 60

ஐம்பூதத் தலங்கள்  - 4
திருக்காளத்தி 
எஸ்.ராஜம்


[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 

ஸ்ரீ( சீ) - சிலந்தி; காளம்- பாம்பு ; அத்தி - யானை. சிலந்தியும் பாம்பும் யானையும் சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்காளத்தி.  ஐம்பூதத் தலங்களில் வாயுத் தலம்.
தென்கயிலை என்று பிரசித்தி பெற்றது. “ கயிலை பாதி, காளத்தி பாதி” என்று நக்கீரர் அந்தாதி பாடி முத்தி பெற்ற வரலாற்றை நாம் அறிவோம். மூவர் தேவாரமும் பெற்ற தலம். காளத்தியப்பருக்குப் பக்கத்திலேயே கண்ணப்ப நாயனாரும் உள்ளார். 

அருணகிரிநாதர் கண்ணப்பரைப் பற்றிச் சில திருப்புகழ்களில் பாடியுள்ளார்.
ஒரு பாடற் பகுதி இதோ:

பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன்

பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
     பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே   ( மச்ச மெச்சு - சிதம்பரம் ) 

என்று காளத்தி முருகனை அழைக்கிறார் அருணகிரி.

[  விபூதிப் பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு  உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த 
 பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும்,  (அவன்) தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே !  ]

இன்னொரு பாடல்:
”காளத்திநாதன்பால்     வைத்த   அன்பினால்  தன்  கண்ணையும் பெயர்த்தெடுத்த  கண்ணப்பன்  பெருமை   தமிழ்  நாடெங்கும்  பரவி நின்றது.     எல்லையற்ற    அன்பிற்கு    அவ்வேடர்   பெருமானே எடுத்துக் காட்டாயினார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப்ப ணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்று    வண்டை  நோக்கிப்  பாடும்   பான்மையில்  கண்ணப்பனது எல்லையற்ற   அன்பின்    திறத்தினை   மாணிக்க   வாசகர்   நன்கு விளக்கியுள்ளார். “  
( ரா.பி.சேதுப்பிள்ளை )

பாடலுக்குப் பதப் பொருள்:
கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக )

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்


காஞ்சிபுரம்

திருவானைக்கா

திருவண்ணாமலை

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

வியாழன், 18 ஏப்ரல், 2019

1270. ஆர்வி - 4

அப்படிச் சொல்லப் போனால் !
ஆர்வி



‘உமா’ இதழில் 1961-இல் பொங்கல் மலரில் வந்த ஒரு படைப்பு.









[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:
ஆர்வி

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

1269. சங்கீத சங்கதிகள் - 183

தமிழ்த்தாய் வாழ்த்து
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
( சுரப்படுத்தியவர்: எம்.எஸ். விஸ்வநாதன் )


இது தமிழ்நாடு அரசாங்கம் மாதம் இருமுறை வெளியிட்ட  ‘தமிழரசு’ பத்திரிகையின் ஜூலை 1,  1970 இதழில் வந்தது. ( இதுவே அந்தப் பத்திரிகையின் முதல் இதழ் )


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

1268. பாடலும் படமும் - 59

ஐம்பூதத் தலங்கள் - 3
திருவண்ணாமலை

[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 


அருணாசலத் திருப்புகழ் ஒன்றின் உரையில்  தணிகைமணி செங்கல்வராய பிள்ளை  எழுதியது:

”யாமே பரம், யாமே பரம் என்று பிரமனும் திருமாலும் தர்க்கித்துப் போர் புரியும்போது அவ்விருவர் நடுவில் பெரிய சோதி மலையாய் நின்றனர் சிவபிரான். அன்னமாய்ப் பிரமன் முடியைத் தேடியும், பன்றியாய் நிலத்தைக் கீண்டு திருமால் தேடியும் அடிமுடி காணக் கிடைக்காமல் இருவரும் அயர்ந்தனர். இதுவே திருஅண்ணாமலை" (அண்ணா - எட்ட முடியாத)


 ''மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரும் மாதவனும் 
அணிகொண்ட புண்டரிகம் அகலாத சதுமுகனும் 
ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே 
ஏனத்தின் வடிவாகி எகினத்தின் வடிவாகி 
அடிதேடி அறிவலென அவனியெலாம் முழுதிடந்தும் 
முடிதேடி வருவலென மூதண்ட மிசைப் பறந்தும் 
காணரிய ஒருபொருளாய்க் களங்கமற விளங்குபெருஞ் 
சோணகிரி யெனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்"  
                                                                              (அருணைக் கலம்பகம்)

                       
[ ஓவியம்: சில்பி ]
                                 

தொடர்புள்ள பதிவுகள் ;

காஞ்சிபுரம்


திருவானைக்கா

பாடலும், படமும்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

புதன், 10 ஏப்ரல், 2019

1267. சசி -16: சரியான ஆள்!

சரியான ஆள்!
‘சசி’ 

‘சசி’ அவர்களை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்.

ஆனந்த விகடனில் 40, 50 -களில்  ஒரு பக்கக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற  பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’  25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.
( 1939- ஆண்டு வந்த “ விமோசனம்” படத்திற்குக் கதையும், பாடல் வரிகளையும் ‘சசி’ எழுதினார். )  




[நன்றி: விகடன்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற சிறுகதைகள்

1266. கி. கஸ்தூரிரங்கன் - 2

சொல் குறுக நிமிர் கீர்த்தி!
இந்திரா பார்த்தசாரதி



‘தினமணி’யில் 2012 -இல் வந்த கட்டுரை.

=====

        நான் தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தபோது, ஒரு நாள் நளினி என்கிற மாணவி என்னிடம், என் அக்காவின் கணவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறினாள். நான் எதற்காக என்பது போல் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவருக்குத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. குறிப்பாக, அவரே ஒரு கவிஞர். புதுக் கவிதை எழுதுகிறார். சி.சு.செல்லப்பா வெளியிட்டிருக்கும் புதுக் குரல்களில் அவருடைய இரண்டு கவிதைகள் இருக்கின்றன என்றாள்.அவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன்.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறப்பு நிருபர். அவர் கடந்த ஆறு மாதங்களாகக் "கணையாழி' என்ற தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்றாள்.

பிரபல அமெரிக்க தினசரியின் சிறப்பு நிருபர், தமிழ்க் கவிஞர் என்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்ற செய்தியின் கலாசார அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள எனக்குச் சிறிது நேரமாயிற்று.அழைத்துவா, நானும் அவரைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றேன்.அடுத்தவாரம் இருவரும் சந்தித்தோம். அந்த அதிசய மனிதர்தாம் கி.கஸ்தூரிரங்கன்.

ஆங்கிலப் பத்திரிகையின் சிறப்பு நிருபர் என்பதைக் காட்டிலும், ஒரு தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வருவதுதான் அவருக்குப் பெருமை தரும் விஷயமாக இருந்தது என்பது எனக்குப் புரிந்தது. இதே ஆர்வம்தான், போன நூற்றாண்டின் பின் எழுபதுகளில், தில்லியில் அவர் பார்த்து வந்த ஆங்கிலப் பத்திரிகை வேலையை ராஜிநாமா செய்து, அதைவிடக் குறைவான சம்பளத்தில் சென்னையில், தமிழ்ப் பத்திரிகையில் பணி புரிவதற்கும் காரணமாயிற்று.அவர் நியூயார்க் டைம்ஸில் இருந்தபோதே, அப்பொழுது பிரசுரமாகிக் கொண்டிருந்த "சுதேசமித்திர'னில் அரசியல் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பெருந்தலைவர் காமராசர் அப்பத்தியின் தீவிர வாசகரென்று அவரே கஸ்தூரிரங்கனிடம் ஒரு சமயம் சொன்னபோது, அவருக்குப் புலிட்ஸர் பரிசு பெற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

கஸ்தூரிரங்கன் இயல்பாகவே அடக்கமும் அமைதியும் நிறைந்தவர். ஆனால், அவர் காமராசர் இவ்வாறு கூறியதைப் பல தடவைகள் நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம் என்றால், தமிழ்ப் பத்திரிகையாளராக இருப்பதுதான் தமக்குப் பெருமை என்பதற்கு அவர் அடிமன உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன்.1962-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நிகழ்ந்த போரைப் பற்றி "நியூயார்க் டைம்ஸ்'க்கு அனுப்பிய களச் செய்திகள்தாம், அவரை ஒரு நல்ல நிருபராக அடையாளம் காட்டியது. இதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மேல்நாட்டு வாசகர்களுக்குச் சுவாரஸ்யம் தரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.வாரணாசியில் படகுகளில் வசித்த அமெரிக்க ஹிப்பிகளை நேர்காணல்கள் நிகழ்த்தி அவர் எழுதியவை அமெரிக்க வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

 மகேஷ் யோகியைப் பற்றி நியூயார்க் டைம்ஸில் வந்த முதல் குறிப்பு கஸ்தூரிரங்கன் எழுதியதுதான்.முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கேரள ஆயுர்வேத வைத்தியசாலையில் இளமைக்காகச் சிகிச்சை பெற்றார் என்ற செய்தி கேட்டு, நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் இந்த வைத்திய சாலைகளைப் பற்றி விவரமான குறிப்பு அனுப்பும்படிக் கஸ்தூரிரங்கனைப் பணித்தார். அவை பிரபலமாவதற்கு, நியூயார்க் டைம்ஸில் இதைப் பற்றிய செய்தி வந்தது என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.அவர் "தினமணி கதிர்' ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற "வானம் வசப்படும்' என்ற நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.

1988-ல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றபோது, "தினமணி'யில் மாதம் இருமுறை இரண்டு ஆண்டுகள் தவறாமல் கட்டுரைகள் எழுதியது அவர் தந்த ஊக்கத்தினால்தான். என்னுடைய ஐந்தாண்டு போலந்து அனுபவத்தைப் பயணக் கட்டுரைகளாக எழுத நினைத்தபோது, அதை நாவலாக எழுத யோசனை சொன்னவரும் அவர்தாம். அது "ஏசுவின் தோழர்கள்' என்ற தலைப்பில், கதிரில் வந்தபோது அவருடைய யோசனையின் அருமை எனக்குப் புலப்பட்டது.அவர் நடத்திய "கணையாழி' அருமையான இளம் புதுக்கவிஞர்களை இனம் கண்டது. இன்று பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் "கணையாழி'யில் எழுதத் தொடங்கியவர்கள்தாம். குறு நாவல் வளர்ச்சிக்காக அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது. "கணையாழி'யில், அமரர் தி.ஜானகிராமன் பேரில் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடந்து வந்தது. முழு நாடகங்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் வராத காலத்தில், "கணையாழி' அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கவில்லை. ஜெயந்தன் நாடகங்களை "கணையாழி' பிரசுரித்தது. என்னுடைய நந்தன் கதையும் அப்பத்திரிகையில் பிரசுரமாயிற்று.

"கணையாழி' மூலம் கஸ்தூரிரங்கன் ஆற்றிய இலக்கியப் பணியில், அசோகமித்திரன் பங்கும் கணிசமானது. பல இளம் நல்ல எழுத்தாளர்களைக் கண்டறிவதற்கு, இப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் என்ற முறையில் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், கவிஞர், கட்டுரையாளர், பல நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர், எழுத்துச் சாதனையாளர் சுஜாதாவைக் கண்டெடுத்தவர் (இருவரும் பள்ளி நண்பர்கள்) ஆக பன் முகங்களை உடைய நண்பர் கி.கஸ்தூரிரங்கன், இறுதி மூச்சு இருந்த வரை பழுத்த காந்தியவாதியாகவும், ஆன்மிக நாட்டமுடையாராகவும் இருந்து வாழ்ந்ததுதான் மாபெரும் சாதனை."சொல் குறுக நிமிர் கீர்த்தி' என்பான் கம்பன். இது கஸ்தூரிரங்கனுக்கு மிகவும் பொருந்தும்.

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

1265. தலைவன்: கவிதை

தலைவன்
பசுபதி


தாதை காந்தி பெயரைத் தாங்கித்
. தன்னை உயர்த்து சாலையில்
தாதன் என்னைத் தலைவன் என்னும்
. சனங்கள் கூடும் வீடிது.                (1)

அம்பைப் போல்நேர்க் கோட்டில் போகும்
. அகலம் அற்ற சாலையில்
தும்பைப் பூவின் வெண்ணி றத்தைத்
. தோற்க டிக்கும் வீடிது.                (2)

வேலி ஏதும் அற்ற என்றன்
. வீட்டில் யாரும் நுழையலாம்
நாலு திசையுள் சன்னல் மூலம்
. நல்ல காற்றும் வீசலாம்.                (3)

எட்டுப் பத்து மொழிகள் பேசும்
. என்கு டும்பம் பெரியதே
கட்டுக் கதைகள் சொல்லிக் காலம்
. கழிக்கும் ஆட்கள் இல்லையே.            (4)

சென்னி தாழ்த்தி மாலை ஏற்றுத்
. திறப்பேன் மார்பைக் கல்லுக்கு 
என்கை யுறையில் உள்ள பட்டென் 
. இரும்புக் கையை மறைக்குமே.           (5)

அண்டை வீட்டுக் கார ருடனே
. அருமை நட்பெ னக்குண்டு
பண்டைச் சண்டை நெஞ்சில் வைத்துப்
. பழிகள் தீர்ப்ப தில்லையே.                 (6)

வீட்டுப் பணியைச் சொந்தப் பொறுப்பாய்
. விரும்பும் ஏவல் வேண்டுமே
தேட்டம் ஒன்றே நாடு வோர்கள்
. தேவை வீட்டில் இல்லையே                (7)

தலையை ஆட்டும் பொம்மைக் கொலுவுள்
. தர்பார் இங்கு வைத்திலேன்.
கலைகள் ஆன எண்ணும் எழுத்தும்
. கண்கள் ஆமென் வீட்டிலே.                (8)

மனையின் தூய்மை கெடுக்கும் சூழல்
. மாசு யாவும் நீக்குவேன்
எனது பணியாள் கையில் மாசாய்
. இருக்கும் அரிப்பைப் போக்குவேன்.          (9) 

வீட தற்குத் தலைவன் என்று 
. விரும்பி என்னைச் சுட்டினும்
நீடு புகழை உங்கள் மனைக்கு 
. நித்த மளிப்போர் நீங்களே!                  (10)

தொடர்புள்ள பதிவுகள் :

1264. திருப்புகழ் - 14

அருணகிரிநாதர் அருள் வாழ்க்கை:  
அணிந்துரை 
திருப்புகழ் அடிமை’ சு.நடராஜன்


அணிந்துரை வேண்டி, இந்தப்  புத்தகத்தின் பிரதி  என் சோதரர் நடராஜன் கைக்கு வந்தபோது, ( 2007/8?) தற்செயலாய் நான் சென்னையில் இருந்தேன். நூலை நானும் விரைவாய்ப்  புரட்டிப் பார்த்து அங்கங்கே  படித்தேன்.

அகச்சான்றுகளை ஆதாரமாய்க் கொண்டு அருணகிரி நாதரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும் அற்புதமான நூல்.

அந்த நூலுக்கு என் சோதரர் எழுதிய அணிந்துரையும், பதிப்புரையும் இதோ.








[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

1263. சங்கீத சங்கதிகள் - 182

தியாகராஜர் கீர்த்தனைகள் - 11
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.




மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]



தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்