சனி, 6 ஏப்ரல், 2019

1262. பாடலும் படமும் - 58

கேது
கி.வா.ஜகந்நாதன்



[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 


படத்தில் கருகிற மேனியனாகிய கேதுவைப் பார்க்கிறோம். அவன் இடமாக வரும் மேரு செந்நிறத்தோடு பின்னே தோற்றம் அளிக்கிறது. கேதுவின் வலப்பக்கத்தில் ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்க்திருப்பவன் சித்திரகுப்தன். அவனே கேதுவுக்கு அதிதேவதை.

இடப்பக்கத்தில் நான்முகன் வீற்றிருக்கிருன். அவனுடைய மூன்று முகம் முன்னே தெரிய மற்றொரு முகம் அப்பால் மறைந்திருக்கிறது. அவன்தான் கேதுவின் பிரத்தியதி தேவதை.

கேது, கழுகு வாகனத்தின்மேல் கொடியின் உருவமைந்த ஆசனத்தில் எழுந்தருளியிருக்கிறான். அவன் தலையில் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலிய பன்னிற மணிகள் பதித்த பெரிய கிரீடம் மின்னுகிறது. அதற்குமேலே குடை, நிழல் தருகிறது. அவனுடைய முகம் செதில்களே உடையதாய்ப் பாம்புமுகம் என்பதைக் குறிப்பிக்கிறது. அவனுடைய விழிகளில் உள்ள சிவப்பு அவன் சினமுடையவன் என்பதற்குச் சாட்சி சொல்கிறது. அவனுடைய வலக்கை அபயமாகவும் இடக்கை கதையை எந்தியதாகவும் இருக்கின்றன. ஆடையில் பல வண்ணங்கள் கலந்திருக்கின்றன.

பொன்னங் கிரிஇடமாப் போதுவான்; மோகினியால் 
முன்னம் தலையிழந்த மூர்த்தியான் - மன்னுகையில் 
மோதுகதை அஞ்சல்உள்ளான் மூண்ட கருநிறத்தான் 
கேதுஎன்று சொல்வர் கிளந்து .


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்


பிருகஸ்பதி

சுக்கிரன்

சனி

ராகு


[ மேலும் நவக்கிரகங்களைப் பற்றி அறிய விரும்பினால், 
  என்ற நூலைப் படிக்கவும்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக