சுக்கிரன்
எஸ்.ராஜம்
பிப்ரவரி 10. ஓவியர் எஸ்.ராஜத்தின் பிறந்த தினம்.
இன்று ( 10-2-2017) வெள்ளிக்கிழமை அல்லவா? அதனால் அவருடைய ‘சுக்கிரன்’ படத்தையும் அதற்குக் கி.வா.ஜ -வின் விளக்கத்தையும் , கி.வா.ஜ.வின் வெண்பாவையும் இடுகிறேன். இந்தப் படம் முதலில் கலைமகளில் 1954-இல் வந்தது என்று நினைக்கிறேன். அதன் விளக்கக் கட்டுரையைக் ‘கும்பன்’ என்ற புனைபெயரில் அறிஞர் கி.வா.ஜ எழுதினார்.
கி.வா.ஜ வின் கட்டுரையிலிருந்து :

” இந்த மூவண்ண ஒவியத்தில்
சுக்கிரன் சாந்த மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறான், வெண்திருமேனியும் வெண் குடையும் உடையவனாக விளங்குகிறான். சடையும்
முடியும் நாற்கரங்களும் அந்தக் கரங்களில் அட்சமாலையும், வரதம், கமண்டலம், தண்டம் என்பனவும் உள்ளன. ஒரு கண் சற்றே மங்கியிருத்தல் வாமனாவதாரக்
கதையை நினைப்பூட்டுகிறது. அவனுடைய தேர் ஐந்து கோணங்களை உடையதாகவும் எட்டுக்
குதிரைகளைப் பூண்டதாகவும் இருக்கிறது. வலப் பக்கத்தில் மேகமண்டலத்தில் வீற்றிருக்கும்
கோலத்தில் இருக்கும் மங்கை அதிதேவதையாகிய இந்திராணி. இடப்புறத்தில் மேகத்திடையே தோன்றுபவன்
பிரத்தியதி தேவதையாகிய இந்திரமருத்துவன். கீழே மூலையில் உள்ள தராசும் விடையும் சுக்கிரன்
துலாராசிக்கும் இடப ராசிக்கும் உரியவன் என்பதைக் குறிக்கின்றன. . பின்னாலே மேருமலையின் ஒரு பகுதி தோன்றுகிறது. மேருவை வலம் வருபவன் சுக்கிரன்.”
வல்லவுணர் தம்குரவன் மாய்ந்தார் உயிர்பெறவே
சொல்லுமனு வைஅறிவான்; சுக்கிரன்என்- றெல்லவரும்
சாற்றும் பெரியான்; சடைமுடியான் மாரிக்கோள்:
போற்றுவெள்ளி என்றே புகல்.
[ மேலும் சுக்கிரனைப் பற்றி அறிய விரும்பினால்,
என்ற நூலைப் படிக்கவும்.]
தொடர்புள்ள பதிவுகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக