வல்லிக்கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வல்லிக்கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 செப்டம்பர், 2022

2241. வல்லிக்கண்ணன் - 5

அக்கிரமம்

வல்லிக்கண்ணன்


பாரிஜாதம் இதழில் 1949-இல் வந்த கதை.






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


புதன், 3 ஏப்ரல், 2019

1261. வல்லிக்கண்ணன் - 4

வெற்றிக்கு வழி
வல்லிக்கண்ணன்



‘சக்தி’ இதழில் 1943-இல் வந்த ஒரு படைப்பு.




[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 8 ஆகஸ்ட், 2018

1134. சி.சு.செல்லப்பா - 4

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 3
வல்லிக்கண்ணன்

( தொடர்ச்சி )
7
பண விஷயத்தில் செல்லப்பா விசித்திரமான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார். அவருக்கு பணத்தேவை அதிகம் இருந்தது. வாழ்க்கை நடத்துவதற்கும், எழுத்துக்களை புத்தகங்களாக்கி வெளியிடவும் எப்பவும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இருப்பினும், நிறுவனங்களும் நல்மனம் கொண்டோரும் விரும்பி அளித்த பரிசுகளையும் பணத்தையும் அவர் பிடிவாதமாக மறுத்து வந்தார்.
அவருடைய வாழ்நாளில் வெவ்வேறு சமயங்களில் இப்படி பரிசுகள், அன்பளிப்புகள் அவரைத் தேடி வந்தன. எவர் தரினும் சரியே, அவற்றை நான்பெற்றுக்கொள்ள மாட்டேன்; இது என் கொள்கை என அவர் உறுதியாகத் தெரிவிப்பதை வழக்கமாக்கினார். கோவை ஈ.எஸ். தேவசிகாமணிதந்த முதுபெரும் எழுத்தாளருக்கான பாராட்டுப் பணம், சென்னை அக்னி அட்சரவிருது, சிந்து அறக்கட்டளை தமிழ்ப்பணி விருது, இலக்கியச் சிந்தனை தர முன்வந்த ஆதிலெட்சுமணன் நினைவுப் பரிசு... இப்படி பல.
ஒருசமயம், செல்லப்பாஉடல்நலம் இல்லாது சிரமப்படுவதை அறிந்த கோவை ஞானி அன்புடன் அவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பினார். நான் எவரிடமும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்று எழுதி அதை நண்பருக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதையும் செல்லப்பா என்னிடம் சொன்னார். ஞானி ரொம்பகால நண்பர்தான்; ஆனாலும் என் கொள்கையை நான் விடுவதற்கில்லை என்றார்.
1999 மே மாதம் கோவையில் ஞானியைக் கண்டுபேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எங்கள் நண்பரான செல்லப்பாவின் மரணம் குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அதை அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.
‘என்னிடம் செல்லப்பா சொன்னார். நீங்கள் பணம் அனுப்பியதையும் சொன்னார். அதை அவர் திருப்பி அனுப்பி விட்டதையும் சொன்னார். என்ன பண்ணுவது! நான் என் கொள்கைப்படி நடந்து கொண்டேன் என்றும் சொன்னார்.”
‘என் விஷயத்திலும் அவர் அப்படி நடந்து கொள்வார் என்று நான் எண்ணியதில்லை. என்மனசுக்கு கஷ்டமாக இருந்தது என்றார் ஞானி.
அன்பளிப்புகள் விஷயத்தில் மற்றவர்கள் மனஉணர்வுகள் பற்றி செல்லப்பா கவலைப்பட்டதில்லை. அவர் தனது உள்மனசின் குரலுக்கே செவிசாய்த்தார். அதன்படி செயல் புரிந்தார்.
அமெரிக்காவின் குத்து விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு முதல்முறையாக அறிவிக்கப்பட்டு செல்லப்பாவுக்கு வழங்கப் பெற்ற போதும், அவர் அதை ஏற்க மறுத்தார். ஆனால் நண்பர்கள் பணத்தைப்பெற்று அவருடைய எழுத்துக்களை புத்கமாக வெளியிட உபயோகிக்கலாமே என்று வலியுறுத்தினார்கள். நீங்களே அதைச் செய்யுங்கள் என்று செல்லப்பாகூறிவிட்டார். நாடக வெளி’ ரெங்கராஜன் பொறுப்பேற்று, செயல்புரிந்து செல்லப்பாவின் என் சிறுகதைப் பாணி என்ற நூலை வெளிக் கொணர்ந்தார்.
8
அவரது 75-85 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் சி.சு. செல்லப்பா புரிந்துள்ள சாதனைகள் பெரிது- பெரிது என வியக்கச் செய்வனவாகும்.
‘என் சிறுகதைப் பாணி’, ‘பிச்சமூர்த்தியின் கவித்துவம் ‘ஊதுவத்திப் புல் (ந.பி. கவிதைகள் பற்றியது), எழுத்து களம்: ‘எழுத்து பத்திரிகை அனுபவங்கள்), பி.எஸ். ராமையாவின் கதைக் களம் இப்படி அநேகம் எழுத்துப் பிரதிகளை உருவாக்கினார். ஒவ்வொன்றும் 800 பக்கங்கள், ஆயிரம் பக்கங்கள் என்று வரும். ஒவ்வொன்றும் தனித்தனி சாதனை தான்.
இவற்றில் முதல் மூன்றும் புத்தகங்களாக வந்து விட்டன. ராமையாவின் சிறுகதைக்களம்’ நூலை செல்லப்பா தனது இறுதி நாட்களில் சிரமப்பட்டு புத்தகமாக கொண்டு வந்தார். அவர் கடைகியாகப் பிரசுரித்த நூல் அதுதான்.
இவற்றை எல்லாம் விட முக்கியமானது - மகத்தான சாதனை என்று குறிப்பிட வேண்டியது - தனது விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை அடிப்படையாக்கி செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம்’ எனும் இரண்டாயிரம் பக்க நாவல் ஆகும்.
அதைத் தனது தள்ளாத வயதிலும் எழுதி முடித்தது ஒரு பெரும் சாதனை. பெரும் சிரமங்களுக்கிடையிலும் அதை மூன்று பாக நூலாக அச்சிட்டு வெளியிட்டது உண்மையிலேயே மாபெரும் சாதனைதான்.
செல்லப்பா இலக்கியத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார் என்று சொல்லலாம். எப்போதும், எவரிடமும் அவர் இலக்கிய விஷயங்கள் பற்றியே பேசினார். தமிழில் இதுவரை செய்யபட்டிருப்பவை போதாது; இன்னும் அதிகம் செய்யப்படவேண்டும்; என்னஎன்ன செய்யலாம், அவற்றை எப்படிச் செய்யவேண்டும் என்று அவர்கதா சிந்தித்து வந்தார். அவற்றை நண்பர்களிடம் ஆர்வத்தோடு எடுததுச்சொல்வதில் உற்சாகம் கண்டார். -
தமிழில் விமர்சனம் வளரவேண்டும் என்பதற்காகவே செல்லப்பா எழுத்து பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அது நின்றுவிட்ட பிறகு, சில வருடங்கள் கழித்து, இலக்கிய விஷயங்களை விளக்குவதற்காகவே பார்வை (Perspective) என்ற இதழைத் தொடங்கினார். இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டிருந்த அதுஅவர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மூன்று இதழ்களுடன் நின்று விட்டது.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், ‘கவை’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். அதுவும் மூன்று இதழ்களுக்கு மேல் வளரவில்லை.
செல்லப்பா ஆய்வுமுறை விமர்சனத்தை (Analytical Criticism) கைக் கொண்டிருந்தார். ஆயினும் சிலரது படைப்புகளை அவர் அப்படி ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வில்லை என்றே சொல்லவேண்டும்.
அவர் பிடிவாதமாகச் சில கருத்துக்ளைக் கொண்டிருந்தார். அவற்றை அவர் மாற்றிக்கொண்டதே யில்லை. மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்குப் பிறகு சிறந்த சிறுகதைப் படைப்பாளிகள் தமிழில் தோன்றவேயில்லை என்பது அவற்றில் ஒன்று. ‘எழுத்துக்குப் பிறகு விமர்சனம் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் கருதினார்.
அனைத்தினும்மேலாக, பி.எஸ். ராமையா சிறுகதைகள் பற்றி அவர்மிக உயர்ந்த கருத்துகொண்டிருந்தார். ‘படைப்புக் களத்தில் ராமையாஸ்தானம் தான் முதல். வேர்ல்ட் ஃபிகர் அவர். அவ்வளவு வைரைட்டி. தீம்ஸ். யாராலும் கன்சீவ் பண்ணமுடியாது. ஐரணிக்கு அவர் தான் ராஜா. உலகத்திலேயே’ என்று ஓங்கி அடித்துச் சொல்லி வந்தார்.
பி.எஸ். ராமையா கதைகளைப் பற்றி வேறு விதமான கருத்து தெரிவித்தவர்களை விரோதிகளாக மதித்தார் அவர்,
‘ராமையாகதைகள் பற்றி நீங்கள் இப்படி உயர்வாகப் பேசுவது உங்களுடைய வத்தலக்குண்டு ஊர் அபிமானத்தினால் தான்’ என்று சி. கனகசபாபதி ஒரு சமயம் செல்லப்பாவிடம் சொல்லிவிட்டார்.
செல்லப்பாவுக்கு கோபம்வந்தது. கனகசபாபதியுடன் மேலும் பேச விரும்பாமல் அவரைவிட்டு வேகமாக நடந்து போய்விட்டார்.
இப்படிஅவர்கள் பேசிக்கொண்டது ஒரு ஒட்டல் வாசலில் சி.க. ஒட்டலைவிட்டு வெளியே வரக்காத்து நிற்க வில்லை செல்லப்பா.
கனகசபாபதி பின்னர்வந்து பேசமுயன்றபோதும், செல்லப்பா அவருடன் பேச மறுத்துவிட்டார். ராமையா சிறுகதைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுகிற ஒருவரோடு எனக்கு நட்பு தேவையில்லை’ என்று உறுதியாகத் தெரிவித்தார் அவர்.
சி. கனகசபாபதி எழுத்துவில் புதுக்கவிதைகளில் தேர்ந்து எடுத்து புதுக்குரல் தொகுப்பாக உருவாவதற்கும், அது மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகத் தேர்வாகி இடம்பெறுவதற்கும் காரணமாக இருந்தவர். எழுத்துவில் அரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர். செல்லப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். ஆயினும், ராமையாவின் எழுத்து பற்றி அவர் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததை செல்லப்பாவால் மன்னிக்கமுடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சி. கனகசபாபதியுடன் செல்லப்பா நட்புறவு கொள்ளவேயில்லை.
இதைப்போலவே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார். அவருடைய அனுபவம் இது -
‘அன்று பி.எஸ். ராமையாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ராமையாவைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகமெல்லாம் பளபளவென ஜொலிக்கும். ராமையாவிடம் அவர்கொண்டிருந்த அன்பு மட்டுமல்ல, ராமையாவின் இலக்கியத்தின் மேல் அவர் வைத்திருந்த மதிப்பும் கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
ராமையா படைப்புகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் புத்தகமாக வெளியிட வேண்டும் என்றார் என்னிடம். ராமையா உன்னதமான எழுத்தாளர் என்பதையும், ஆகச் சிறந்த படைப்புகள் பலவற்றையும் எழுதியிருக்கிறார் என்பதையும் நான்மறுக்கவில்லை. ஆனால் குங்குமப் பொட்டுக்குமாரசாமி என்றெல்லாம் அவர் எழுதிய படைப்புகள் சாதாரணமானவை. அவரின் பொருளாதாரத் தேவைக்காக அவர் எழுதிக் குவித்தவை. அவற்றை நீக்கிவிட்டு, காலத்தை வென்று நிற்கும் மற்ற ராமையா படைப்புகளை செல்லப்பாவே தேர்வு செய்துதொகுக்க வேண்டும் என்பது என் வாதம்.
 திடீரென்று செல்லப்பா சுவரைப்பார்க்கத் திரும்பி உட்கார்ந்து கொண்டுவிட்டார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூன்று பேர் ஆகிவிட்டோம். நான், அவர், சுவர் :
  ‘ஏன் சுவரைப் பார்த்து உட்கார்ந்து விட்டீர்கள்?”
‘ஏ சுவரே வந்திருக்கும் இந்த ஆளுடன் பேசுவதை விட, எனக்கு உன்னுடன் பேசுவது திருப்தியாக இருக்கிறது.
ஆமாம். ஏனென்றால் சுவருக்கு அபிப்பிராயங்கள் கிடையதால்லவா!’
‘ராமையாவை விமர்சிக்கும் நபருடன் எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது.”
‘நாம் ஒர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். பி.எஸ். ராமையாவை விட்டு விட்டு மற்றவற்றைப்பற்றி மட்டும் இனிமேல் பேசுவோம்.”
சரி என்று சொல்லிவிட்டு மறுபடி என்பக்கமாகக் திரும்பி உட்கார்ந்து கொண்டார். என் உதட்டோரத்தில் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். என்னடா பண்ணுவேன். உன்னோட பேசாம என்னால் இருக்கமுடியாதேடா என்றார்.
என் மனம் நெகிழ்ந்தது.”
('பாரதமணி செப்டம்பர் 2001) 
அவர் ராஜமய்யரது நூற்றாண்டு விழாவை அவ்வூரில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்தார். நடத்திக்காட்டினார். அய்யர் எழுதிய ரேம்பிள்ஸ் இன் வேதாந்தா என்ற ஆங்கில நூலை உயர்ந்த பதிப்பாக வெளியிட்டு மகிழ்ந்தார்.
அதே போல ராமையாவின் பெருமையையும் வத்தலக்குண்டுக்காரர்கள் அறியவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். சென்னையிலேயே வசித்த செல்லப்பா ஒரு கால கட்டத்தில், இனி வத்தலக்குண்டில் வசிப்பது என்று தீர்மானித்து, மனைவியுடன் அவ்வூர் போய்ச்சேர்ந்தார். சில வருடங்கள் அங்கு அமைதியாகவாழ்ந்தார். பிறகு மீண்டும் சென்னையிலேயே வசிப்பது என்று வந்து சேர்ந்தார்.
 அந்த ஊரில் இலக்கியச் சூழ்நிலையே இல்லை. அங்கே இருப்பவர்களுக்கு இலக்கிய உணர்வும் ரசனையும் கொஞ்சம் கூட இல்லை. என்னால் இயன்ற அளவு முயன்றேன். அவர்கள் விழிப்படைவதாகத் தெரியவில்லை. ராமையாவின் மதிப்பைத் தெரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள். சின்ன வயசில் ராமையா அவர்களிடையே வளர்ந்து, வறுமையில் கஷ்டப்பட்டது இதுகளையே பெரிதாகச்சொல்லி, ராமையாவை இளப்பமாகக் கருதிப் பேசுகிறார்கள். அவர்களோடு இருக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. சென்னைக்கே வந்துவிட்டேன் என்று அவர் சொன்னார்.
சில வருட சென்னை வாசத்துக்குப் பின்னர் அவர் மனைவியுடன் மதுரை சேர்ந்து மகனுடன் வசிக்கலானார். அவருடைய முதுமை, அவரைப் படுத்திய நோய்கள், இவற்றால் அம்மாவும் அப்பாவும் படுகிற சிரமங்களை கவனித்து அவர்களின் ஒரேமகன் சி. மணி இருவரையும் தன்னுடன்வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டேதே காரணம். மணி பேங்கில் பணிபுரிகிறார்.
அவருக்கு உத்தியோக நிமித்தமாக பெங்களூருக்கு இடமாறுதல் ஏற்பட்டது. அவர் குடும்பத்தோடு செல்லப்பாவும் பெங்களுர் சென்றார். தமிழ்நாட்டை விட்டுப்போய் வேற்றுமாநிலத்தில் வாழ வேண்டியிருக்கிறதே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.
எனினும், வாய்த்த தனிமையை செல்லப்பா நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் எழுத எண்ணியிருந்த பலவற்றையும் எழுதி முடித்தார். முக்கியமாக, அரைவாசி எழுதிக் கிடப்பில் போட்டிருந்த சுதந்திரதாகம்’ நாவலை எழுதி நிறைவு செய்ய முடிந்தது அவரால்.
இருப்பினும், அந்த சூழ்நிலை அவருக்கு ஒத்துப்போகவில்லை. குடும்பத்தில் சகஜமாக எழக்கூடிய சிறு சிறு பிணக்குகள் அவர் உள்ளத்தை பாதித்தன. அதனால் மகனோடு சண்டை பிடித்துக்கொண்டு அவர் மீண்டும் தனி வாழ்க்கை நடத்த சென்னைக்கே வந்து சேர்ந்தார்.
சென்னையில், அதுவும் திருவல்லிகேணிப்பகுதியில் வசிக்கையில் கிடைக்கிற சூழலும் மனநிம்மதியும் மற்றஇடங்களில் எனக்குக்கிடைக்கவில்லை. இனி சாகிற வரை இங்கேதான் என்று சொன்னார் செல்லப்பா.
அவ்வாறே நிகழ்ந்தது. 1998 டிசம்பர் 18ஆம் நாளன்று, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் முதல் தெருவில் அவர்வசித்த வீடடில் செல்லப்பாவை மரணம் தழுவியது.
9
மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு கிராமத்தில், 1912 செப்டம்பர் 29ஆம் நாள் பிறந்தார் செல்லப்பா. -
அவரது தந்தை பெயர்கப்பிரமணிய அய்யர். ஊர்சின்னமனூர். ஆகவே சி.சு. என்பதைத் தனது பெயரின் முதல் எழுத்துகளாகக் கொண்டார்.
வெகுகாலம் வரைஅவர் சி.எஸ். செல்லப்பாஎன்றே பெயரை எழுதி வந்தார். பாரததேவி மாத இதழில், கு.ப. ராஜகோபாலுடன் அவர்பணியாற்றியபோது, பத்திரிகை ஆசிரியர் வ.ரா. பெயரை தமிழில் எழுதவேண்டும் என்று குறிப்பிடவும், சி.சு. செல்லப்பா என்று எழுதலானார்.
மதுரைகல்லூரியில் செல்லப்பா பி.ஏ. படித்தார். அப்போதே, மகாத்மா காந்தியின் வழிகாட்டலினால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டார். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுசிறை சென்றார். விடுதலை பெற்று வெளியே வந்தபிறகு, காந்திய வாழ்க்கைமுறைகளைக் கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். கைராட்டையில் நூல்நூற்றல், கையால் செய்யும் காகிதம் தயாரித்தல், போன்றவற்றில் அவர்உற்சாகம் கொண்டு ஊக்கத்துடன் செயல்பட்டார். அப்போதே எழுத்து முயற்சியிலும் முனைத்திருந்தார்.
1930களில் புகழ் பெற்று விளங்கிய “சுதந்திரச்சங்கு” வாரப்பத்திரிகையில் சி.சு.செல்லப்பாவின் முதல் கதை வெளிவந்தது. 1934ம் ஆண்டில். அது முதல் அவர் ஆர்வத்தோடு சிறுகதைகள் எழுதலானார். ‘மணிக்கொடி இதழில் அவருடைய கதைகள் தொடர்ந்து இடம் பெற்றன. கலைமகள், பாரததேவி, தினமணி, சத்திரோதயம் முதலிய பத்திரிகைகளில், தனித்தன்மை உடைய சிறுகதைகளை அவர் எழுதினார். அதன்மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.
‘மணிக்கொடி நடந்துகொண்டிருந்த காலத்தில் (1930 களில்) சி.சு. செல்லப்பா சென்னைக்கு வந்து பத்திரிகைத் துறையில் பணிபுரியலானார். ‘மணிக்கொடி"க்குப்பிறகு, ‘பாரததேவி மாத இதழில் வேலை பார்த்தார். 1947 முதல் 1953வரை ‘தினமணி’ நாளிதழில் சஞ்சிகைப்பகுதியின் பொறுப்பேற்று செயல்புரிந்தார். ‘தினமணி சுடர் தினமணி கதிர் என்று பெயர் மாறுவதற்கும் அவரே காரணமாக இருந்தார். கருத்து வேற்றுமையால் அவர் தினமணியிலிருந்து வெளியேறினார்.
1959ல் இலக்கிய விமர்சனத்துக்காகவும், புதிய சோதனை முயற்சிகளைப் பரப்பவும் அவர் எழுத்து என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். புதுக்கவிதை வளர்ச்சி பெறுவதற்கு எழுத்து’ வெகுவாக உதவியது.
சி.சு. செல்லப்பா நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவற்றை,பிற்காலத்தில் அவரே தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடுகளாகப் பதிப்பித்தார். செல்லப்பா சிறுகதைகள் என்று ஏழு தொகுதிகள் வந்தன. அவை தவிர, சிறு சிறு புத்தகங்களாக கைதியின் கர்வம், செய்த கணக்கு, பந்தயம், ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை ஆகியனவும் வெளியிடப்பட்டன.
தனது சிறுகதைகள் பற்றி, என்சிறுகதைப் பாணி என்ற பெரிய நூலை சி.சு. செல்லப்பா எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ஆங்கிலத்திலிருந்து சிறந்த சிறுகதைகள் பலவற்றையும் அவர்தமிழாக்கி பத்திரிகைகளில் பிரசுரம் செய்தார். எழுத்து’ காலத்தில் செல்லப்பா கவிதைகள் எழுதுவதில் ஈடுபட்டார். ‘மாற்று இதயம் என்ற நீண்ட கவிதையும், மகாத்மா காந்தி பற்றிய நீ இன்று இருந்தால் குறுங்காவியமும் நூல்களாக வந்துள்ளன.
காற்று உள்ளபோதே, ஏரிக்கரை, குறித்த நேரத்தில், எல்லாம் தெரியும் ஆகியவை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள், இவற்றுடன், தமிழில் சிறுகதை பிறக்கிறது. தமிழ் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம், ந.பிச்சமூர்த்தியின்கவிதைகள் பற்றி ஊதுவத்திப்புல் மாயத்தச்சன், எனது சிறுகதைப் பாணி, பி.எஸ். ராமையாவின் கதைக்களம் ஆகிய விமர்சன நூல்களும் வெளிவந்திருக்கின்றன.
செல்லப்பா நாடகத்திலும்ஆர்வம் காட்டினார். எழுத்து நாடக அரங்கம்’ என்ற பெயரில் ஒன்றிரு நாடகங்கள் அரங்கேற்றம் செய்தார். அப்போது, மதுரைமாவட்ட மறவர்வாழ்க்கையை அடிப்படையாக்கி முறைப்பெண் என்ற நாடகத்தை எழுதி, நூலாக வெளியிட்டார்.
 ஜல்லிக்கட்டுவை ஆதாரமாகக்கொண்ட வாடிவாசல் எனும் குறுநாவல் தனிப்புத்தகமாக வந்துள்ளது. எழுத்து'வில் சோதனை ரீதியில் அவர்எழுதிய ஜீவனாம்சம் நாவலும் பிரசுரமாயிற்று. அவருடைய இறுதி நாட்களில் சுதந்திர தாகம்’ என்கிற மாபெரும் நாவல் மூன்று பாகங்களாக வெளிவந்தது.
இவை எல்லாம் தமிழ் வாசகர்களிடையே உரிய கவனத்தைப் பெறவில்லை. அது செல்லப்பாவின் குறை அன்று.
சி.சு. செல்லப்பா சதா பேச்சிலும் செயலிலும் இலக்கிய உணர்வுடனேயே வாழ்ந்தார். வாழ்க்கையில் முன்னேற விரும்பிச் செயலாற்றுகிற பலரைப் போல, எழுத்து வேறு, வாழ்க்கை வேறு என்று அவர் நடந்து கொண்டதில்லை. அதனால் வறுமை நிலையை விரும்பி ஏற்றுக்கொண்டார். எச்சமயத்திலும் அவர் மனஉறுதி யோடும் பிடிவாதத்துடனும் நேர்மையுடனும் வாழ்ந்து காட்டினார். ஒரு போதும் அவர் நம்பிக்கை இழந்ததில்லை. கடுமையாக உழைப்பதில் அவர் உற்சாகம் கொண்டிருந்தார். உயர்ந்த எண்ணங்களும் எளிய வாழ்க்கை முறைகளும்கொண்டு வாழந்து, மனித வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், தனிமாண்பும் சேர்க்கும் உயர்ந்த மனிதர்களில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர்.
‘நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல், கடைசிவரை, நேர்மையாக வாழ்ந்து விட்டேன். இந்த திருப்தி எனக்கு இருக்கிறது என்று செல்லப்பா தனது இறுதிக்கட்டத்தில் என்னிடம் சொன்னார்.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் அவர் எழுதி வைத்துள்ள ‘எழுத்துக்களம் விமர்சனத் தோட்டம்'ஆகிய நூல்கள் அச்சுவடிவம் பெறவில்லையே என்ற மனக்குறை செல்லப்பாவுக்கு இருந்தது.
ஆயினும், அவர் செய்து முடித்துள்ள இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சி.க. செல்லப்பாவுக்கு சிறப்பானதனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில்சந்தேகம் இல்லை.
( நிறைவுற்றது )
தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 10 ஜூலை, 2018

1114. சி.சு.செல்லப்பா - 3

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 2
வல்லிக்கண்ணன்



"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1

( தொடர்ச்சி )

4

சி.சு. செல்லப்பாவை நான் முதன் முதலாகப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1945ஆம் வருடம். அப்போது திருச்சியில் இருந்து 28 மைல்கள் தள்ளி உள்ள துறையூர் என்கிற சிற்றுரரில், கிராம ஊழியன்' என்னும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை இதழ்நடந்து கொண்டிருந்தது. அதில் நான் பணியாற்றி வந்தேன். அதே சமயம் என்னுடைய இதயஒலி எனும் கையெழுத்துப் பத்திரிகையும் வளர்த்து வந்தேன். திருச்சி மாவட்ட கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்த 'முதலாவது மாநாடு ' நடத்தினார்கள். அதற்கு வரவேற்புக்குழுத்தலைவராக எனக்குபொறுப்பளித்தார்கள்.

ஸ்ரீரங்கம் ஊரில் நடைபெற்ற அம் மாநாட்டுக்கு 'ஆனந்தவிகடன் உதவிஆசிரியர் நாடோடி, 'பாரததேவி நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலம், மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் முதலியவர்கள் வந்திருந்தார்கள். சிட்டியுடன் அவர் நண்பர் செல்லப்பாவும் வந்தார். அப்போதுதான் முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன். சிட்டி அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தான். செல்லப்பா அம்முறை என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகவில்லை.

அக்காலக்கட்டத்தில் சி.சு.செல்லப்பா வத்தலக்குண்டு ஊரில் வசித்து வந்தார். கையால்காகிதம்செய்து, தக்ளி'யில் நூல் நூற்பது போன்ற காந்தி வழிக்குடிசைத் தொழில் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயல்புகளில் இதுவும் சேரும். படிப்பு, எழுதுவது, இலக்கியம் பற்றிப் பேசுவது, பத்திரிகைகளில் வேலை பார்ப்பது என்பனவற்றில் அவர்காட்டி வந்த உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் கைத்தொழில் போன்ற இதர முயற்சிகளிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.

பஞ்சினால் அழகு அழகான சிறுபொம்மைகள், பறவைகள், முயல்குட்டி, நாய் போன்றவை செய்வதில் கைதேர்ந்தவர் அவர். நவராத்திரி சமயத்தில் பொம்மைக் கொலு வைத்து, வயர் மாட்டி சின்னச் சின்ன பல்புகள் கொண்டு அலங்காரம் செய்து ஒளியேற்றுவதில் அவர் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவது உண்டு.

வத்தலக்குண்டில் அவர் வீட்டின் பின்பக்கம் காலிஇடம் அதிகம் இருந்தது. அதைப் பண்படுத்தி காய்கறிப் பயிர்கள் வளர்ப்பதிலும், முருங்கை தென்னை கொய்யா வாழை முதலிய மரங்கள் வளர்ப்பதிலும், அவற்றிலிருந்து பலன்கள் பெறுவதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி உழைத்திருக்கிறார்.

'வாடிவாசல் என்ற அவருடைய சிறப்பான நெடுங்கதையை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதில் மாட்டுச் சண்டை சம்பந்தமான படங்கள்சேர்க்க ஆசைப்பட்டார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சி விரட்டு (ஜல்லிக்கட்டு) - மாடுகளுக்கும் மனிதருக்கும் நிகழும் சண்டை- காட்சிகளை படம் பிடிக்கத் தீர்மானித்தார். அவரேகாமிராவை கையாண்டு, விரும்பிய கோணங்களில் எல்லாம் போட்டோ எடுத்தார். அவற்றை அவரே தன் வீட்டில் இருட்டறை அமைத்து, கழுவி, பிரிண்ட் போட்டு, படங்களாக்கினார். அதற்குத் தேவையான பயிற்சிகள் பெறுவதில் அவர் சலிப்பில்லாமல் காலம் செலவிட்டிருந்தார்.

இப்படி புதுமைகள் பண்ணுவதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் செல்லப்பா தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

சிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த செல்லப்பா இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட நாட்டம் கொண்டார். அதற்காக அமெரிக்க, ஐரோப்பிய இலக்கிய விமர்சன நூல்களைப் படிப்பதில் தீவிரமாக முனைந்தார். அமெரிக்கன் லைபிரரி, பிரிட்டிஷ் லைபிரரிகளிலிருந்து பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து, வீட்டில் உட்கார்ந்து விடாமுயற்சியோடு படித்தார். ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற்போல வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாமல் விமர்சன நூல்களைப் படிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவர் இந்தச் சமயத்தில் திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெரு வீட்டில் மாடியில் வசித்தார். மாடியை விட்டுக் கீழே இறங்காமல் இப்படி அநேக நாட்கள் படிப்பில் கழித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

ஒரு கால கட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒரு ஆய்வு மாணவனின் ஊக்கத் தோடு படித்தறிவதில் உற்சாகம் காட்டினார் செல்லப்பா.

 செல்லப்பாவின் மனஉறுதி, வைராக்கியத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் குணம், எண்ணியதைச்செய்து தீர்க்கும் விடாப்படியான தன்மை, கொள்கைப் பிடிப்பு, நட்பு உணர்வு முதலிய பண்புகள் வியந்து போற்றப்பட வேண்டியன ஆகும்.
5
செல்லப்பா தானே சொந்தமாக இலக்கிய விமர்சனத்துக்கு என்று ஒரு பத்திரிகை நடத்தத் துணிந்தார். அதற்கு வித்தியாசமாக - அதுவரை எவரும் எண்ணாத விதத்தில் - எழுத்து என்று பெயர் வைத்தார். இதற்காகப் பலரும் அவரைக் கேலி செய்தார்கள்.

இதில் என்ன தவறு.இருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பெயர்வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும் என்று செல்லப்பா பதிலளித்தார்.

அவர் காட்டிய வழியில் பின்னர் பலரும் பத்திரிகைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கத்துணிந்தார்கள். நடை, கசடதபற, ங், ஐ, அஃ என்றெல்லாம்.

உண்மையான சிறுபத்திரிகை (லிட்டில் மேகசின்) நடத்துவதிலும் செல்லப்பாதான் முன்னோடியாய், வழிகாட்டியாய் செயல்பட்டிருக்கிறார். "எழுத்து பத்திரிகை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் தான் பிரதிகள் அச்சிடப்படும் என்று அறிவித்துக் கொண்டு, அவ்விதமே செயலாற்றினார். பன்னிரண்டு வருட காலம் அப்படி, தனித்தன்மை உடைய ஒரு பத்திரிகையை நடத்தியது மாபெரும் சாதனையாகும்.

அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும் நஷ்டங் களும் அதிகமாகும். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக அவர் ஊர்ஊராக அலைந்து திரிந்தார். ரயிலிலும், பஸ்ஸிலும், நண்பர்களின் சைக்கிள் பின்னால் அமர்ந்தும், நடந்தும் போய், படிப்பில் ஈடுபாடு உடைய அன்பர்களை அணுகி, எழுத்து பத்திரிகை பற்றி எடுத்துச் சொல்லி செல்லப்பா இதழை வளர்க்கப் பாடுபட்டார். அது இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதாகும். அந்தப்பத்திரிகையே தனி இலக்கிய வரலாறு ஆகத் திகழ்வதும் ஒரு விசேஷம் ஆகும்.

அதே போல் தான் அவர் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டதும். வணிகப் பிரசுரகர்கள் தனது எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன்வரவில்லை என்றதும், தானே தன்னுடைய எழுத்துக்களை நூல்களாக்குவது என்று செல்லப்பாதீர்மானித்தார். அதற்காக எழுத்து பிரசுரம் ஆரம்பித்தார். குறிப்பிடத் தகுந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.

அவர் தன்னுடைய நூல்களை வெளியிட்டதுடன் நில்லாது, தான்மதிப்பும் மரியாதையும், அன்பும்நட்பும் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களையும் புத்தகமாக்க முன்வந்தார். வ.ரா. ந. பிச்சமூர்த்தி, சிட்டி எழுத்துக்களை புத்தகங்களாக்கினார். எனது சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டது அவருடைய விசால மனப்பண்பை வெளிப்படுத்தியது.

பின்னர், 'தீபம்’ இதழில் நான் தொடர்ந்து எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைகளை நானே தான் புத்தகமாக வெளியிடுவேன் என்று அவராகவே கூறி, 1977ல் எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்தார்.

அதனால் அது 1978ல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

 'அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டின. பணத்தை நான் வேறு வகைகளில் செலவிட்டு விட்டேன். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது என் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது” என்று செல்லப்பா சொன்னார்.

'நீங்கள் எனக்கு பணம் தரவேண்டாம் என்றேன்.

”அது முறையாகாது. நான் எப்படியும் தந்து விடுவேன்' என்று அவர் தெரிவித்தார்.

 சில வருடங்களுக்குப் பிறகு செல்லப்பாஎன்னைத் தேடிவந்து ஆயிரம் ரூபாய் தந்தார். இது ஒரு பகுதி தான். பாக்கியை பிறகு தருவேன்’ என்றார்.

 'இதுவே போதும்” என்று சொன்னேன்.

”அது நியாயமில்லை”  என்று கூறிச் சென்றார். அநேக வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா ஒருநாள் எதிர்பாராத விதமாக, தன் மனவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். ”அதை இவரிடம் கொடு’ என்றார்.

அம்மா ஆயிரம் ரூபாய் கட்டை அளித்தார்.

”இப்பதான் என்மனச்சுமை தீர்ந்தது. புத்தகம் முழுதும் விற்று, வந்த பணத்தை நானே செலவுபண்ணிவிட்டேன். உங்களுக்கு பணம் தரவில்லையே என்று உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. முன்பு ஒரு பகுதி கொடுத்தேன். மேலும் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை. நீங்கள் ஒரு தடவை கூட பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதனாலேயே என் மன உறுத்தல் அதிகமாயிற்று. இப்பதான் என்மனசுக்கு சமாதானமாயிற்று, “ என்று செல்லப்பா சொன்னார்.

அவரது அன்பும் நட்பு உணர்வும் என் உள்ளத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தின.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 20 மார்ச், 2018

1016. வல்லிக்கண்ணன் -3

உலகம் கெட்டுப் போச்சு
வல்லிக்கண்ணன்




‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!




  [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 19 டிசம்பர், 2016

சி.சு.செல்லப்பா -2

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1
வல்லிக்கண்ணன்


டிசம்பர் 18. சி.சு. செல்லப்பாவின் நினைவு தினம்.

1
தமிழ் எழுத்துலகில் மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு.செல்லப்பாவும் ஒருவர் ஆவார்.

- 1930களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தரம் சேர்க்கவும், தமிழ் சிறுகதையை உலக இலக்கியத்தரத்துக்கு உயர்த்தவும் இலட்சிய வேகத்தோடு எழுத்துப்பணியில் ஈடுபட்டார்கள். இளைஞர்கள் சிலர். அவர்களுக்கு 'மணிக்கொடி என்ற பத்திரிகை களம் அமைத்துக் கொடுத்தது.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ். ராமையா, பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), ந. சிதம்பரசுப்பிரமணியன், சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோர் 'மணிக்கொடி”யில், அவரவர் ஆற்றலையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்படலாயினர்.

பின்னர் தோன்றிய மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகைகளுக்கு 'மணிக்கொடி ஒரு முன்னோடியாக விளங்கியது. குறைவான காலமே அது பிரசுரம் பெற்றிருந்தாலும், எழுத்துலகத்தில் அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் சிலரது எழுத்துக்கள் பின்னர் கதை எழுத முற்பட்ட இளைஞர்களை வெகுவாக பாதித்தன.

மணிக் கொடி எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றி ஆழ்ந்த நோக்குடன் புதுமையும் கனமும் சேர்ந்த, உணர்ச்சிகரமான சிறுகதைகளைப் படைத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரது நோக்கும், எழுத்துப் பாணியும், கதைகள் எழுதுவதற்கு எடுத்துக்கொண்டவிஷயங்களும் வித்தியாசமானவையாக இருந்தன.

இலக்கிய உணர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டி ருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வையே இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் பலவிதமான சிரமங்களுக்கும் சோதனைகளுக்கும் அவர்கள் உள்ளானார்கள். எனினும், சாதனைகள் படைப்பதில் அவர்கள் ஊக்கமும், உற்சாகமும் காட்டினார்கள். –

அவர்களில் சி.சு. செல்லப்பா விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தவர். தனித்தன்மை உடைய சிறுகதைகள் படைத்துக் கவனிப்புப் பெற்ற செல்லப்பா நாவல், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை, பதிப்புத்துறை என்று பலவகைகளில் தனது ஆற்றலையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி பாராட்டுதற்குரிய சாதனைகள் புரிந்திருக்கிறார். சதாகாலமும் அவருடைய சிந்தனையும் பேச்சும் தமிழ் இலக்கியம் குறித்ததாகவே இருந்தன. தீவிர வேகத்துடன் முனைந்து செயலாற்றி இலட்சிய வாதியாகவும் அவர் விளங்கினார்.

இப்படிப் பலதுறைகளில் அவரது பங்களிப்பும் சாதனைகளும் பெரும் அளவில் இருப்பினும், சி.சு. செல்லப்பா என்றதும் ஒரு இலக்கிய வாசகனுக்கு நினைவுக்கு வருவது எழுத்து பத்திரிகை தான். அவ்வளவுக்கு அவருடைய எழுத்து இதழ் தனிச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டது ஆகும்.

2
'என் அப்பா வழியில் எனது ஊர் சின்னமனூர். என் தாய் வழியில் என் சொந்த ஊர் வத்தலக்குண்டு. இரண்டு வகையில் பார்த்தாலும் நான்மதுரைஜில்லாக்காரன். ஆனாலும் திருநெல்வேலி ஜில்லா மீது எனக்கு தனி அபிமானம் உண்டு. என் தகப்பனார் பொதுப்பணித்துறை (பப்ளிக் ஒர்க்ஸ் டிப்பார்ட்மெண்ட்) ஓவர்சீயர் ஆக வேலைபார்த்தது அங்கே தான். தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் அமைத்து துத்துக்குடிக்குத்தண்ணிர் கொண்டு செல்லும் பணியை என்.அப்பாதான்செய்துமுடித்தார். பல வருடங்கள் நாங்கள் திருநெல்வேலி ஜில்லாவின் பல ஊர்களில் வசித்தோம். என் ஆரம்பப்படிப்பு பாளையங்கோட்டையில் தான் நடந்தது. பிறகு துரத்துக்குடியில் தொடர்ந்தது. தாமிரபரணியை ஒட்டி அமைந்துள்ள முறப்பநாடு, அகரம் கிராமங்களில், நாங்கள் வசித்தோம். காலையில் அப்பாவும் நானும் ஆற்றில் குளித்ததும், அநேக நாட்கள் அப்பா ஆற்றைக்கடக்க என்னை தோளில் தூக்கிக்கொண்டு அக்கரையில் பணிகள் நடக்கும் இடத்துக்கு இட்டுச்சென்றதும் என்னால் மறக்க முடியாத அனுபவங்கள்.

இதற்கெல்லாம் மேலாக, நான் சிறுகதை எழுத்தாளன் ஆக மலர்ச்சி பெற்றதும், என் கதைகள் சுதந்திரச்சங்கு, மணிக்கொடி இதழ்களில் வரத் தொடங்கியதும் நான் பூரீ வைகுண்டம் ஊரில் வசித்த நாட்களில்தான். அதனாலே நானும் திருநெல்வேலி எழுத்தாளர்களோடு சேர்ந்தவன்தான்; தாமிரபரணித்தண்ணிர்தான் என்னுள் இலக்கிய உணர்வையும் எழுத்தாற்றலையும் ஊட்டி வளர்த்தது என்று நானும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும். “

இப்படி சி.சு. செல்லப்பா என்னிடம் அடிக்கடி சொல்லி யிருக்கிறார்.

 ஆயினும், அவருக்கு தந்தை வழியில் சொந்தமான சின்னமனூரை விட, தாய் வழிப்பாட்டி ஊரான வத்தலக்குண்டு பேரில்தான் அதிகமான பற்றுதலும், பிரியமும் இருந்தது. அதனால் வத்தலக்குண்டு ஊரில் தோன்றிப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான வல்லிக்கண்ணன் பி.எஸ். ராஜமய்யர், பி.எஸ். ராமையா ஆகியோரிடம் விசேஷமான அபிமானமும் அவருக்கு இருந்தது.

இலக்கியத் தகுதி பெற்ற நாவலான கமலாம்பாள் சரித்திரம்: எழுதிய பி.எஸ். ராஜமையரின் பெருமையை வத்தலக்குண்டு ஊர்வாசிகள் சரிவர அறிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் செல்லப்பாவுக்கு உண்டு. எனவே, நாவலாசிரியரின் பெருமையை சொந்தஊர்க்காரர்களுக்கு உணர்த்துவதற்காக, ஒருவருடம் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்தார் செல்லப்பா. பெயர் பெற்ற எழுத்தாளர்கள் பலரை சென்னையிலிருந்து வத்தலக்குண்டுக்கு வரவழைத்து, ராஜமய்யர் பெருமைகளையும் சிறப்புகளையும் பேசும்படி செய்தார். நா. பார்த்தசாரதி, வ.க, , தி.க. சிவசங்கரன், கோமல் சுவாமிநாதன், நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் கலந்து கொண்ட அவ்விழா முக்கியத்துவம் பெற்றதாயிற்று. ‘ராஜமய்யர் வாழ்ந்த இல்லம்' என்ற கல்வெட்டும் ஒரு வீட்டில் பதிக்கப்பட்டது.

3
செல்லப்பாவுக்கு அவருடைய தகப்பனார் மீது மிகுந்த பற்றுதலும் பாசமும் பெருமையும்இருந்தன. அவருள் தேசபக்தியை, காந்தி ஈடுபாட்டை, சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்கிற உணர்வை தகப்பனார் எப்படியெல்லாம் தன்னுடைய சின்ன வயசிலிருந்தே வளர்த்து வந்தார் என்பதை செல்லப்பா அடிக்கடி சொல்வது உண்டு. ஒவ்வொரு சந்திப்பின் போதும் குறிப்பிட்டு மகிழ்வார். அவருடைய இறுதிக்காலத்திலும் உள நெகிழ்ச்சியோடு என்னிடம் நினைவுகூர்ந்தார். அவரது மகத்தான நாவலான சுதந்திர தாகம் மிலும், 'என் சிறுகதைப்பாணி நூலிலும் இவ் உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

1974ல் எழுத்து பிரசுரம் களை கல்லூரிகளிலும் மேல் நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்வதற்காக செல்லப்பாவும் நானும், இரண்டு மாதகாலம், திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றினோம். துத்துக்குடியில் நாங்கள்.அப்படி அலைந்த போது, அங்கே சிறுவயதில் அவர் கல்வி கற்ற பள்ளிக்கூடத்தை மகிழ்ச்சிப் பெருக்கோடு எனக்குக்காட்டினார். அவர்காலத்திய ஆசிரியர்களைப் பற்றியும் சொன்னார்.

பின்னர், தாமிரபரணி ஆற்றங்கரை ஊர்களான முறப்ப நாடு, அகரம் என்ற இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்றார். துத்துக்குடி குடிநீர் குழாய்திட்ட வேலைக்காக அவருடைய அப்பா அக்கிராமங்களில் தங்கிப் பணிபுரிய நேர்ந்தது. தாமிரவர்ணி ஆற்றில் கிணறு வெட்டி, இருபத்து நாலு மைல் தூரத்துக்குக் குழாய் போடும் வேலை அவர் தந்தையின் மேல்பார்வையில் தான் நடைபெற்றது. அந்தக்காலத்தில் அவர்கள் வசித்த வீடு, சுற்றிய இடங்கள், பொதுப் பணித் துறையில் அப்பா நிறைவேற்றிய பணிகள், வெட்டப்பட்ட கிணறு, அங்கு குடிநீர்த்திட்டத்துக்காக அமைக்கப்பட்டபெரிய இரும்புக்குழாய்களை எல்லாம் செல்லப்பா உற்சாகத்துடன் எனக்குக் காட்டினார். தனது சிறுபிராய நினைவுகளில் வாழ்ந்து அவர் சந்தோஷம் கண்டார். அந்நாட்களில் குடியிருந்த வீட்டின் முன் நெடுநேரம் நின்று தனது நினைவுகளை உணர்ச்சி பரவசத்துடன் பேசினார்.

 ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்த போதுதான் சி.சு. செல்லப்பா எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற உந்துதல் பெற்று கதை எழுதத்தொடங்கினார். அவர் எழுதிய முதல் கதையை சுதந்திரச் சங்கு வாரப் பத்திரிகைக்கு அனுப்பினார். அதன் ஆசிரியர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு பெயர் பெற்றிருந்த சங்கு சுப்பிரமணியன். அவர் அந்தக் கதையை வரவேற்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கதையைத் திருத்தி சங்கு இதழில் வெளியிட்டார். அவருடைய கடிதமும், புதிய எழுத்தாளனுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டிய செயலும் தன்னுள் எத்தகைய கிளர்ச்சி ஏற்படுத்தியது, மேலும் மேலும்எழுத எப்படி உற்சாகம் தந்தது என்பதை செல்லப்பா பலமுறை சொல்லியிருக்கிறார். இதை என் சிறுகதை பாணி நூலில் விரிவாகவே பதிவு செய்துள்ளார்.

 ‘என்னை சிறுகதையாளனாக ஆக்கி வெளிப்படுத்தியவர் சங்கு சுப்பிரமணியன். அவரை நான் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:



ஞாயிறு, 13 நவம்பர், 2016

வல்லிக்கண்ணன் -2

சில முன்னோடிப் பத்திரிகைகள்
வல்லிக்கண்ணன்


நவம்பர் 12. வல்லிக்கண்ணன் அவர்களின் பிறந்தநாள்.

’தமிழில் சிறுபத்திரிகைகள்’  என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை இதோ.
பாரதி முதல் மணிக்கொடி வரை இருந்த இதழ்களைப் பற்றிய ஒரு தொகுப்பு. 1900-30 களின் காலம். 

=====

மொழியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், இலக்கியத்தில் புதுமையும் வளமும் சேர்க்கவும் விரும்பும் படைப்பாளிகள், தங்கள் சோதனை முயற்சிகளை எல்லாம் பிரசுரிப்பதற்குத் தங்களுக்கென்று தனிப் பத்திரிகை தேவை என்று கருதுவது இயல்பாக இருந்து வருகிறது. வசதி உள்ளவர்கள் ஏதாவதொரு காலகட்டத்தில் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்துவதும், அதுவே பெரும் சோதனையாக அமைந்து விடுவதும் நியதியாக அமைந்துள்ளது.

சொல்லில், பொருளில், சொல்லும் முறையில் புதுமைகள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ’இந்தியா’, ’சக்கிரவர்த்தினி’ என்ற பத்திரிகைகளை நடத்தினார்.

தமிழ் நாவலுக்கு முதன் முதலாக இலக்கிய அந்தஸ்து அளித்த படைப்பாளி எனும் சிறப்பைப் பெற்றுள்ளவர் பி. ஆர். ராஜமையர், ’கமலாம்பாள் சரித்திரம்' என்ற நாவலை எழுதிய அவர் 'விவேக சிந்தா மணி’ என்றொரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார். அதில் அவர் தொடர்கதை, கட்டுரைகள் முதலியன எழுதினார்.

ராஜமையர் காலத்திலேயே வாழ்ந்து, பத்மாவதி சரித்திரம் நாவலை எழுதிப் புகழ்பெற்ற பெருங்குளம் ஆ. மாதவையா சமூக சீர்திருத்த நோக்குடன் வேறு பல நாவல்களும் ’குசிகர் குட்டிக் கதை’களும் எழுதினார். தமது எழுத்துக்களைப் பிரசுரிப்பதற்காக அவர் ’பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையை நடத்தினார். இது 1924-ல் பிரசுரமாயிற்று என்று தெரிகிறது.

தமிழ்ச் சிறுகதைக்கு முக்கிய வடிவம் தந்த முதல்வரும், தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முன்னோடியுமான வ. வே. சு. ஐயர் உலக இலக்கியங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். உலக இலக்கியங்களைத் தமிழ்நாட்டினருக்கு அறிமுகப்படுத்துவதற்காகவும், தமிழிலும் மேல்நாட்டு இலக்கியங்களுக்கு இணையாகக் கூடிய படைப்புக்களை ஆக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவர் ‘பால பாரதி' என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.

வ. வே. சுப்பிரமணிய ஐயர் நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவதைத் தமது முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தார். அதே அளவுக்கு, தமிழ் மறுமலர்ச்சியிலும், இலக்கியம், கலைகள் வளர்ச்சியிலும் அவர் அக்கறை காட்டினார்.

இந்நோக்கங்களைச் செயல்படுத்தும் திட்டத்தோடு அவர் சேர்மா தேவியில் குருகுலம் நிறுவினார். அங்கிருந்துதான் ’பாலபாரதி’ வெளி வந்தது. (சேர்மாதேவி என்ற ஊரின் சரியான பெயர் சேரன்மாதேவி ஆகும் ).

“தனது இணையற்ற பேராற்றல் குலைந்து போயிருக்கும் தமிழுக்கு அதன் இயற்கையான முதன்மை ஸ்தானத்தைத் தந்து, புராதனக் கலை களைப் போலவே இக்காலத்துக் கலைகளுக்கும் அதைப் பெரியதோர் நிலையமாக ஆக்க வேண்டுமென்பதும், மக்களுக்குப் பூரணமான கல்வி-அதாவது, இலக்கியக் கல்வியோடு விசுவ கர்ம கலைகளும் கற்பிக்க வேண்டுமென்பதுமே. அந்நோக்கத்திற்கேற்ப, இப்பத்திரிகையில் சீனத்தினின்று பெருதேசம் வரையிலுள்ள சகல நாடுகளிலும் பூத்த இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவோம். புதிய கதைகளையும், உயர்ந்த பாஷாந்திரங்களையும் கலாப்பிரியர் ஆனந்திக்கும்படி இப்பத்திரிகை தாங்கி நிற்கும்” என்று ஐயர் அறிவித் துள்ளார். பழைய இலக்கியங்களில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியத் தையும் அவர் வலியுறுத்தினார்.

இப்பத்திரிகைகள் எல்லாம் சிலகாலமே வெளிவந்தன. பரவலான விநியோகம் பெற்றிருக்கவுமில்லை. எனினும், எந்த நோக்கத்துக்காக அவை தோன்றினவோ, அதை இறுதிவரை செயல்படுத்தி வாழ்ந்தன.
இப்பத்திரிகைகளின் ஒன்றிரு இதழ்கூட இப்போது யாரிடமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.

'விவேக சிந்தாமணி இதழை நான் பார்த்ததில்லை. ’பஞ்சாமிர்தம்’ பத்திரிகையின் ஒன்றிரு இதழ்களையும் ’பால பாரதி’யின்’ இதழ்கள் பலவற்றையும் பார்க்கவும் படிக்கவும் எனக்கு 1936-ல் வாய்ப்பு கிட்டியது.

பாலபாரதி இலக்கியத் தரமான பத்திரிகையாக இருந்தது. கதை, இலக்கியம் பற்றிய கட்டுரைகள் என்று பல்வேறு விஷயங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

அடுத்து ‘சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகையைக் குறிப்பிட வேண்டும். சங்கு சுப்பிரமணியன் அதன் ஆசிரியர். 1930களின் ஆரம்ப வருடங்களில், காலணா விலையுள்ள வாரப் பத்திரிகையாக அது வளர்ந்தது. காந்திய லட்சியத்துடன், தேச விடுதலைப் போராட்டத்தில், 'சங்கு தீவிர மான பங்கு ஆற்றியது. விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த கட்டுரைகளே அதில் வந்து கொண்டிருந்தன. அதன் விளைவாக, பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைக்கு அது இலக்காயிற்று.

பின்னர், 1932-ல் ‘சுதந்திரச் சங்கு மீண்டும் தோன்றியது. “தமிழ்த் தொண்டுதான் சங்குக்கு மூச்சு” என்று அறிவித்து வளர்ந்த அது மாதம் இருமுறை வெளிவந்தது. தி. ஜ. ரங்கநாதன் ( தி. ஜ. ர. ) அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமூகப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள், சிந்தனைகள், ’சங்கு’ வில் இடம் பெற்றிருந்தன. வ. ரா. ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், சிட்டி ஆகியோர் அதில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகள் சில வும் அதில் இடம் பெற்றுள்ளன. சி. சு. செல்லப்பாவின் கதை ‘சுதந்திரச் சங்கு’ வில்தான் பிரசுரமாயிற்று. அதன் பிறகு அவ்வப்போது அவர் அதில் கதை எழுதி யுள்ளார்.

சுதந்திரச் சங்கு என்ற இலக்கியப் பத்திரிகையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அதன் ஆசிரியர் பக்கம் ஆகும். சங்கு ஆசிரியர் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டி னார். திறமையைக் கண்ட இடத்து, அதை வரவேற்றுப் பாராட்டி அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யோசனைகள் கூறி ஆதரித்தார். தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், உரைநடை பற்றிய கருத்துக்கள், கட்டுரை சம்பந்தமான சிந்தனைகள் - இப்படிப் பலவகை களிலும் பயனுள்ள விஷயங்களை ஆசிரியர் பக்கம் எடுத்துச் சொன்னது. சங்கு சுப்பிரமணியமும் தி. ஜ. ர. வும் இத்தகைய எண்ணங்களை எழுதி வழிகாட்டியிருக்கிறார்கள்.

1930களின் ஆரம்ப கட்டம் அரசியல் விழிப்பு மிகுந்திருந்த காலம். மகாத்மா காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. அரசியல் போராட்டத்துடன் சமூகச் சீர்திருத்தமும் மொழி வளர்ச்சியும் வலியுறுத்தப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் இந்திய நாட்டின் பல மொழிகளிலும் மறு மலர்ச்சி வேகம் பெற்றிருந்தது. அதற்காகப் பல பத்திரிகைகள் பாடுபட் டன. தமிழிலும், சுதந்திரச் சங்கு வுடன் காந்தி, ஜெயபாரதி போன்ற சிறு பத்திரிகைகள், காலணா விலையில் மக்களைத் தொட முயன்று வந்தன.

அந்தக் காலகட்டத்தில்தான் மணிக்கொடி’ என்ற வார இதழும் தோன்றியது. 1933 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த வார ஏடு மணிக்கொடி அரசியல் பத்திரிகையாகத்தான் செயலாற்றியது. ஆரம்பத்தில் கே. சீனி வாசன், வ. ரா., டி. எஸ். சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது இயங்கியது.

வார இதழின் ஆரம்பகாலத்தில் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. வ. ரா, டி. எஸ். சொக்கலிங்கம், சீனிவாசன் கட்டுரைகள் புதுமையாகவும் சிந்தனை வேகத்துடனும் அமைந்தன. தமிழில் புது முயற்சியான நடைச்சித்திரம் என்பதை வ. ரா. இதில் தொடர்ந்து எழுதினார்.
வாழ்க்கையில் காணப்படுகிற பல தொழில்துறை நபர்களையும் பற்றிய விவரணைச் சித்திரங்கள் இவை. அங்காடிக் கூடைக்காரி, மார்க்கட் மாணிக்கம், காவல் காத்தான், கான்ஸ்டபிள் சுப்பையா, தரகர், ஒட்டல் சிப்பந்தி என்று பலரையும் பற்றிய சுவாரஸ்யமான சொல்லோவி யங்கள். இவை பின்னர் நடைச்சித்திரம் என்ற தொகுப்பாக வெளி யிடப்பட்டன. அப்புறம், பல வருஷங்களுக்குப் பிறகு, இவைதான் வாழ்க்கைச் சித்திரம்' என்று மறுபதிப்பாகப் பிரசுரம் பெற்றுள்ளன.

சிட்டி, ந. ராமரத்னம், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி முதலி யோர் முதலில் கட்டுரைகளே எழுதினார்கள். கால ஓட்டத்தில் மணிக் கொடி வார ஏடும் சிறுகதைகளுக்கு இடம்தர முன்வந்தது.
பின்னர், பத்திரிகையின் கூட்டுப் பொறுப்பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் மணிக்கொடி நிற்க நேரிட்டது. “மணிக்கொடி என்ற இலட்சியக் கூடாரம் மன வேறுபாடு என்ற பெருங்காற்றினாலே டேராத் துணி காற்றோடு போக, முளைகளும் பிய்த்துக்கொண்டன” என்று கே. சீனிவாசன் சொன்னதாக, பி. எஸ். ராமையா மணிக்கொடி காலம் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு, 1935 மார்ச் முதல்- பி. எஸ். ராமையாவின் பெரும் முயற்சியால், மணிக்கொடி கதைப் பத்திரிகையாக வெளிவந்தது. சாதனைகள் புரிந்த அதன் வளர்ச்சி தனி வரலாறு ஆகும்.


[ நன்றி: ’தமிழில் சிறுபத்திரிகைகள்’ நூல் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 9 நவம்பர், 2016

வல்லிக்கண்ணன் -1

சரித்திர நாவல் பற்றிச் சில சிந்தனைகள்
வல்லிக்கண்ணன்


நவம்பர் 9.  வல்லிக்கண்ணன் அவர்களின் நினைவு தினம். 

இதோ அவர் எழுதிய  ஒரு கட்டுரை! சரித்திர நாவல் ரசிகர்களுக்குச் சுவையாக இருக்கும்.
====

  சமீப நாட்களில், என் நண்பர் ஒருவர் தனது இளமைக் காலத்தில் தான் படித்திருந்த வடுவூரார், ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களை நினைவுகூர்ந்து ரசமாகக் கடிதங்கள் எழுதினார். 1930கள் 40களில் படித்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களின் நயங்களை இப்பவும் மறக்க முடியவில்லை என்று அவர் வியந்திருந்தார். இப்போது அவருக்கு வயது 76க்கு மேல் இருக்கலாம்.

இந்த நூற்றாண்டின் முப்பதுகள் நாற்பதுகளில், படிப்பதில் ஈடுபாடு கொண்ட வாசகர்கள் பலரும் கட்டாயமாக வடுவூரார், ஆரணி குப்புசாமி, ஜே.ஆர். ரங்கராஜூ, வை.மு. கோதைநாயகி நாவல்களைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். எல்லாம் பெரிசு பெரிசாக - சில இரண்டு பாகங்கள் கொண்டதாக இருந்தன.

இருப்பினும், வடுவூராரின் திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், தாசி துரைக் கண்ணம்மாள், திவான் லொடபடசிங் பகதூர் போன்ற நாவல்கள் பெரிதும் விரும்பிப் படிக்கப் பட்டன. வயது வித்தியாசம் இல்லாமல் வாசகர்கள் அவற்றை விழுந்து விழுந்து வாசித்து மகிழ்ந்தார்கள். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் கூடத்தான்.

 விறுவிறுப்பான கதை சுவாரஸ்யமான சம்பவ விவரிப்புகள். அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வளர்க்கப்படும் கதைப்பின்னல். கிளுகிளுப்பூட்டும் காதல் நிகழ்ச்சிகள் அங்கங்கே ரசமாகச் சிதறிவைக்கப்படுகிற சிருங்கார (செக்ஸ் ) வர்ணிப்புகளும் விவரிப்புகளும் மற்றும் மர்மங்கள். திடுக்கிட வைக்கும் திகில் விஷயங்கள். இவ்விதமான உள்ளடக்கம் வாசகர்களை கிறுகிறுக்கச் செய்தன. –

இத்தகைய நாவல்களை விரும்பிப்படித்த பெரியவர்கள் கண்டிப்பாக ஒரு விதி செய்வது வழக்கம். சின்னவர்கள் (பள்ளியில் படிக்கிற பையன்கள்) இந்த நாவல்களை எல்லாம் படிக்கவே கூடாது என்று. ஆனாலும் பையன்கள் புத்தகங்களை மறைத்து வைத்துப் படித்து ரசித்து அவை பற்றிப் பேசி மகிழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள்.

 வடுவூரார், ஆரணி, ஜே. ஆர். ரங்கராஜூ முதலியவர்கள் எழுதியவை சமூக நாவல்களா, சரித்திர நாவல்களா, துப்பறியும் மர்ம நாவல்களா என்று யாரும் கவலைப்பட்டதில்லை. படிப்பதற்கு சுவையான - பொழுது போக்குவதற்கு ஏற்ற - விறுவிறுப்பு நிறைந்த கதைப்புத்தகங்கள் என்றுதான் அவை விரும்பிப் படிக்கப் பட்டன. அவற்றை ரொமான்டிக் நாவல்கள் என்று சொல்லலாம். மிகுகற்பனை கொண்ட கற்பனாலங்காரக் கதைகள். சகல விதமான சமாச்சாரங்களும் அவற்றில் சுவாரஸ்யமாகக் கலக்கப்பட்டிருந்தன.

அவை சொந்தச் சரக்குகளாக இருந்ததும் இல்லை. ஆங்கிலத்தில் கிடைத்த பல்வேறு மேல்நாட்டுக் கற்பனைகளையும் சொந்த அளப்புகளுடன், சுவையோடு கலந்து தந்தார்கள். அந்த நாட்களில் பிரபலமாகயிருந்த ஜி. டபிள்யு. எம். ரெயினால்ட்ஸ் நாவல்களின் வெற்றிகரமான தழுவல்களாக இருந்தன. மிஸ்டரீஸ் இன் தி கோர்ட் ஆஃப் லண்டன் என்பது காளிங்க ராயன் கோட்டை ரகசியங்கள் என்றும் பிரான்ஸ் ஸ்டேச்சுயூ ஆர் தி விர்ஜின் கிஸ் என்பது வெண்கலச்சிலை அல்லது கன்னியின் முத்தம் என்றும் தமிழில் வந்தன. அப்புறம் வடுவூரார் தேர்ந்துவிட்டார். இப்படி வெளிப்படையாகத் தழுவுவதில்லை. தமிழ்நாட்டு வாசகர்களின் டேஸ்டுக்குத் தக்கபடி கலப்பட சங்கதிகளைத் தயாரித்துக் கொடுப்பதில் மன்னரானார். கிளுகிளுப் பூட்டும் செக்ஸ் சமாச்சாரங்களைத் தாராளமாகச் சேர்க்கவும் தயங்கவில்லை.

வடுவூரார் சரித்திரநாவல் என்று எதுவும் எழுதவில்லை. காளிங்கராயன் கோட்டை ரகசியங்கள் என்பதை வேண்டுமானால் நாவல் அபிமானிகள் சரித்திர நாவல் என்று கருதியிருக்கலாம். ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களில் கற்கோட்டைகள் அபாயத்தீவுகள், கப்பற்படைகள், பாதாளச்சிறைகள் என்றெல்லாம் வரும் உக்கிரசேனர், வீரசிம்மன் போன்ற பெயர்கள் காணப்படும். அந்தக் காலத்தில் சரித்திர நாயகர்களுக்கு இப்படி எல்லாம் தான் பெயர் இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் எண்ணியதாகத் தெரிகிறது. சிறுகதைகள், நாடகங்கள் முதலியவற்றில் இவ்விதமான பெயர்கள் அதிகம் இடம் பெற்றன.

சரித்திரக்கதை என்றாலே ராஜாராணிக் கதைதான். ராஜாராணிகளின் வேலைத்தனங்கள் பற்றிக் கேட்பதிலும் படிப்ப திலும் ஜனங்களுக்கு எப்பவுமே தனிமோகம் உண்டு.

தமிழின் முதல் நாவல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற பிரதாபமுதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நம் மக்களின் ரசனையைச் சரியாக அறிந்து நற்சான்று கூறியிருக்கிறார்.

ராஜா ராணிக் கதைகளைக் கேட்பதிலும் படித்தறிவதிலும் நம் நாட்டினருக்கு விசேஷமான ஈடுபாடு உண்டு. விசாலமான மாளிகைகளின் உப்பரிகைகளிலும், அழகான நந்தவனங்களிலும் ராஜாக்களும் ராணிகளும், இளவரசர்களும் இளவரசிகளும் நடப் பதையும் இருப்பதையும் படுத்து மகிழ்வதையும் அறிந்து கொள்வதில் ஜனங்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவது வழக்கம். அவர்களின் ரசனையைத் திருப்திப்படுத்தும் விதத்திலும் இந்த நாவலின் கதைப்போக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரீதியில் ( இது நேரடி மேற்கோள் இல்லை) வேத நாயகர் தனது நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நம் நாட்டு மக்களின் சுவையைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்குத் தக்கபடி சுவை மிகுந்த நாவல்களை உருவாக்குவதில் மிகுந்த வெற்றிகண்டவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,

கள்வனின் காதலி என்கிற ரொமான்டிக் நாவலையும் தியாகபூமி, மகுடபதி போன்ற சமூக தேசிய நாவல்களையும் தொடர்கதைகளாக எழுதிய பிறகு, கல்கி தன் கவனத்தைச் சரித்திரநாவல் மீது திருப்பினார்.

கல்கி தனது திறமையினால் தமிழ்நாட்டில் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பத்திரிகையின் சர்குலேஷனை வளர்ப்பதில் கருத்தாக இருந்தார். அதற்குத் தொடர்கதையை வெற்றிகரமான ஒரு சாதனம் ஆக்கினார். சாதாரண சமூக அல்லது அதீதக் கற்பனாலங்காரக் கதைகளைவிட சரித்திரப் போலிகளான தொடர்கதைகள் நன்கு பயன்படும் என்று அவர் உணர்ந்தார்.

சரித்திரநாவல் என்ற வடிவம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்தது. கல்கி சரித்திர நாவலைப் பிரபலப்படுத்தவதற்கு முன்னரே தமிழில் சரித்திர நாவலும் சரித்திரக் கதைகளும் காலூன்றி மெது மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாட்டு மக்களிடையே தேசபக்தி, வீர உணர்வு, எதிர்த்துப் போராடும் பண்பு முதலியவைகளை வளர்க்கவும் முயன்றார்கள். அதற்காக எழுத்தின் பல வடிவங்களையும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள். கதை, நாவல், நாடகம் முதலியன இந்த நோக்கத்துக்கு நன்கு உதவக்கூடும் என்று கருதினார்கள்.

சிறுகதைக்கு இலக்கிய வடிவம் கொடுத்தவர் என்று போற்றப்படுகிற வ.வே.சு. ஐயர் கதைகளின் மூலம் மக்களுக்கு வீர உணர்வைப் புகட்ட வேண்டும், அதற்காக வரலாற்றுப் புகழ் பெற்ற வீரர்களின் கதைகளை ரசமான முறையில் எடுத்தெழுத வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். அவ்வகையில் அவர் சில கதைகளும் எழுதினார்.

 பிரஞ்சு நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகத் தன் உயிரை ஈந்த வீரன் அழேன் ழக்கே கதை வ.வே.சு.ஐயர் கதை களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று ஆகும். இந்திய வரலாற்றில் கீர்த்தி பெற்றுள்ள சந்திரகுப்தனை ஆதாரமாக்கியும் அவர் கதைகள் புனைந்தார். விடுதலைப்போராட்டம் விறுவிறுப்பு பெற்றிருந்த 1930களில் மொழி மறுமலர்ச்சியும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. அக் காலகட்டத்தில் இந்தியமொழிகள் பலவும் மறுமலர்ச்சி வேகம் பெற்று வளர்ச்சிப்பாதையில் சென்றன. தமிழிலும் மறுமலர்ச்சி போற்றத்தகுந்த விதத்தில் மணம் பரப்பலாயிற்று.

அந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்ச் சிறுகதை, இலக்கிய கனத்துடனும் பல்வேறு பரிமாணங்களுடனும் வளரத் தொடங்கியது. அப்போது சரித்திரக்கதைகளும் உரிய கவனிப்பைப் பெற்றிருந்தன.

வீரம், தன்மான உணர்வு, போராட்ட குணம், சுதந்திரப் போக்கு, தியாகம் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் சரித்திரக் கதைகள் பலரால் எழுதப்பட்டு, பத்திரிகைகளில் பிரசுரம் பெற்றன. எம்.எஸ். சுப்பிரமணியஐயர் எழுதிய இத்தகைய கதைகள் வாசகர் களால் அதிகம் ரசிக்கப்பட்டு வந்தன.

இத்தகைய சரித்திரக் கதைகளில், வரலாற்று அடிப்படை களைவிட உணர்ச்சி வேகமும் மிகுகற்பனையும் நடை அழகுமே மிகுதியாக இடம் பெற்றிருந்தன.

அவற்றைக் குறைகளாகக் கருதிய சிலர் சரித்திர உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு கதைகள் எழுதினார்கள். அவர்களில் தி.நா.சுப்பிரமணியன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். இவர் எழுதிய கதைகள் பின்னர் ”தோட்டியை மணந்த அரசுகுமாரி” என்ற தொகுப்பாகவும், வேறு சில புத்தகங்களாவும் வெளிவந்தன. இவர் கட்டபொம்மு வரலாறு எழுதினார். நவயுகப் பிரசுரம் ஆக 1940களில் வெளிவந்த இந்த நூலில் வரலாற்று உண்மைகள் ஒரு வறண்ட தன்மையில் சொல்லப்பட்டிருந்தன. இதை, காயடித்த கட்டபொம்மு என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டார்.

மணிக்கொடி எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனும் சரித்திரச் சிறுகதைகள் எழுதினார். அழகிய முறையில் படைக்கப் பட்ட அவை ‘காணாமலே காதல்’ என்ற தொகுதியாக பின்னர் பிரசுரம் பெற்றன. அந்நாட்களில் வீரம், போர்புரிதல், தியாகம், காதல் முதலிய வற்றைச் சித்திரித்த சரித்திரக்கதைகள் பெரும்பாலும் ராஜபுத்திர மன்னர்களையும் அரசிகளையும் பற்றியே அமைந்திருந்தன. சிவாஜி, புத்தர், விஜயநகர சாம்ராஜ்ய விஷயங்களும் அபூர்வமாகக் கதைப் பொருள்களாக ஆக்கப்பட்டது உண்டு.

அந்நாட்களில் வேறு இந்தியமொழிகளில் சரித்திர நாவல்கள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல நல்ல வெற்றியும் மிகுந்த கவனிப்பும் பெற்றதுமுண்டு. அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, புத்தகங்களாக வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. தேவி செளது ராணி, துர்கேச நந்தினி பிருதிவி வல்லபன், ராஜபுத்திர ஆதிக்கத்தின் அஸ்தமனம் போன்ற நாவல் மொழிபெயர்ப்புகள் 1940களில் தமிழ் வாசகர்களின் பாராட்டுக் களைப் பெற்றிருந்தன.

ஆங்கிலம் படித்தவர்கள் சர் வால்டர் ஸ்காட் எழுதிய வரலாற்று நாவல்களையும், அலெக்சாண்டர் டுமாஸ் பிரஞ்சு மொழியில் எழுதி ஆங்கிலமொழி மூலம் உலகப் பிரசித்தி பெற்றுள்ள சரித்திர ரொமான்ஸ் படைப்புகளையும் விரும்பிப் படித்து மகிழ்ந்தார்கள்.

வால்டர்ஸ்காட் நாவல்களில் சரித்திர ஆதாரங்கள் அதிகம். அவர் எழுத்து நடை காம்பவுண்ட் சென்டன்ஸ்களையும் காம்ப்ளெக்ஸ் சென்டன்ஸ்களையும் மிகுதியாகக் கொண்ட சிக்கல் நிறைந்த நீளமான வாக்கியங்களும் நீண்ட பாராக்களும் கொண்டதாக இருக்கும். எனினும் சுவாரஸ்யமான கதைப்பின்னல்களும் ஈர்க்கும் சம்பவ அடுக்குகளும் வீரதீரப் போராட்டக் கட்டங்களும் வாசகருக்குத் தனி லயிப்பு ஏற்படுத்திவிடும். (தமிழில் சரித்திர நாவல்கள் எழுதத் தொடங்கிய சாண்டில்யன் இப்படிப்பட்ட ஒரு நடையைக் கையாண்டதை நினைவு கூரலாம்)

டுமாஸ் நாவல்கள் அதீத கற்பனாலங்காரத்தோடு, மர்மங்கள், சூழ்ச்சிகள், வீரக்கதாபாத்திரங்களின் சாமர்த்தியங்கள், தந்திரங்கள்  முதலியவற்றைக் கொண்ட ஜிலுஜிலு சிருஷ்டிகளாக இருக்கும். (கல்கி டுமாஸ் வழியைப் பின்பற்றினார் என்று கூறலாம்)

காலப்போக்கில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வலுப் பெற்று வந்தது. அது வடவர் எதிர்ப்பை வளர்த்தது. ராஜபுத்திர வீரத்தையும் மராட்டியவிரர் பெருமையையும் போற்றிப் புகழ்வதை விடுத்து, தமிழ்மன்னர்களின் - முக்கியமாக சோழப் பேரரசர்களின் - கீர்த்திகளை எடுத்துரைப்பதில் திராவிடத் தலைவர்கள் ஆர்வம்கொண்டார்கள். சோழ மன்னரின் வட நாட்டுப்படையெடுப்பும், இமயத்தில் தமிழ்க்கொடி பொறிக்கப் பட்டதும், திமிர்பிடித்த வடநாட்டு மன்னர்களான கனகவிசயர் தலைமீது கல் ஏற்றிக்கொண்டு வந்ததும் மேடைகளிலும் ஏடுகளிலும் முழக்கமிடப்பட்டன. தமிழ் மாமன்னரின் பொற்காலப் பெருமைகள் எடுத்துச் சொல்லப்பட்டன.

தமிழர்கள் தமிழ் மன்னர்களின் கீர்த்திகளை உணரலானார்கள்.

அந்நியர் ஆட்சியை எதிர்ப்பதற்கும், தமிழரின் தமிழ் உணர்வையும் தமிழர் மாண்பையும் வலியுறுத்துவதற்கும் சோழ சக்கர வர்த்திகளின் வரலாற்றுப்புகழையும் சரித்திர சாதனைகளையும் சாகசங்களையும் சுவையான நாவல்களாகப் புனைவது பொருத்தமாக இருக்கும், மக்களிடையே அவை நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எண்ணம் கல்கிக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் பார்த்திபன் கனவு படைத்தார். தொடர்ந்து சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய பெரிய பெரிய நாவல்களை எழுதினார்.

அவை வாசகர்களைக் கவர்ந்தன. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பத்திரிகையின் விற்பனையைப் பெருக்குவதற்கும் உதவின. சரித்திரம் என்பது மன்னர்கள் பற்றியும் அவர்கள் நடத்திய போர்களைப் பற்றியும் விவரிப்பது என்றே வெகுகாலம் வரை நம்பப்பட்டு வந்திருக்கிறது. அரண்மனை ரகசியங்களையும், மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்ந்த முக்கியஸ்தர்களின் போட்டி - பொறாமைகள், சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள், அந்தப்புர மகளிரின் காதல் அல்லது காமஈடுபாடுகளை வர்ணிப்பதும் வரலாற்றின் வேலையாகும் என்ற எண்ணமும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்த அடிப்படையில்தான் சரித்திரக் கற்பனைகள் புனைவோரும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் - வருகிறார்கள். இவை மட்டுமே சரித்திரம் ஆகா. நாட்டுமக்களின் வாழ்க்கையையும், மன்னர்களின் போக்குகள் மற்றும் ஆட்சி முறைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், அந்தந்த காலகட்டத்திய முக்கிய நிகழ்ச்சிகளையும், சமூக மாற்றங்களையும் பதிவு செய்வதும் சரித்திரத்தின் பணி ஆகும் என்ற கருத்து தோன்றி வலுப்பெறலாயிற்று.

மன்னர்கள் காலம் முடிந்துபோன பிறகு, நாட்டையும் மக்களையும் ஆளவந்தவர்களின் போக்குகளையும் தன்மைகளையும், அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் பதிவு செய்யவேண்டியது சரித்திரத்தின் கடமை ஆயிற்று.

அவற்றை ஆதாரமாகக்கொண்டு, கற்பனையையும் கலந்து வரலாற்றுநாவல்கள் புனையும் முயற்சிகள் தோன்றி வளர்வதும் காலவகை ஆயிற்று.

இந்த ரீதியில் தமிழிலும் படைப்புகள் தோன்றியுள்ளன. வரலாற்று நிகழ்வுகளையும், அவற்றினால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்களையும், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விதங்களையும் நாவலாக எழுதும் முயற்சிகள் அவ்வப்போது மேற் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.

இந்திய விடுதலைப்போராட்ட காலத்தையும், விடுதலைக்குப் பிந்திய காலகட்ட பாதிப்புகளையும் வைத்து அதிகமான நாவல்கள் - சமூகவரலாற்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் கவனம் வெகுகாலம்வரை இத்திக்கில் செலுத்தப்படவில்லை என்பது ஒரு குறைதான். ஆயினும், குறிப்பிடத்தகுந்த சில முயற்சிகள் இவ்வகையிலும் பிறந்துள்ளன என்று சொல்லலாம்.

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் அலை ஓசை’ நாவல் இவ்வகையில் எழுதப்பட்ட முதல் முயற்சி ஆகும். சுதந்திரப் போராட்ட காலம், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட இலக்கிய வாதிகளின் செயல்கள், அவர்களும் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்ட தன்மைகள், அவர்களின் உறவுகள், உணர்வுச் சிக்கல்கள் முதலியன இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. ம.சீ. கல்யாணசுந்தரம் எழுதிய இருபது வருடங்கள். இதில் முதல் பகுதி விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை நன்கு விவரிக்கிறது. பிற்பகுதி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு டாக்டர் எங்கோ ஒரு தீவுக்குப் போய் வாழ்ந்து பெற்ற அனுபவங்களையும், அவர் தாய்நாட்டுக்குத் திரும்பிவந்ததும், தான் கற்ற புதிய சிகிச்சைமுறையைப் பிரபலப்படுத்துவதில் காட்டுகிற உற்சாகத்தையும் விவரிக்கிறது.

வல்லிக்கண்ணன் எழுதிய வீடும் வெளியும் சுதந்திரப் போராட்ட கால நிகழ்வுகளையும் உணர்ச்சி வேகத்தால் அவற்றில் ஈடுபட்ட மாணவர்களின் இயல்புகள், வீட்டுச் சூழ்நிலைகள், இவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்ட விதங்களையும் உணர்ச்சிகரமாகச் சித்திரித்துள்ளது. அப்படி உணர்ச்சி வேகத்தோடு  போராட்டத்தில் குதித்தவர்களின் பிற்கால நிலையையும் இந்த நாவல் விவரித்துள்ளது.

ந. சிதம்பரசுப்ரமணியன் எழுதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ விடுதலைப்போராட்ட காலத்திய நிகழ்ச்சிகளைக் கூறினாலும், அது சமூக வரலாற்று நாவலாக எழுதப்படவில்லை என்றே சொல்லவேண்டும். அரசு உத்தியோகம் பார்க்கிற ஒரு தந்தை தன் மகனைப்பற்றிக் கண்ட கனவுகளையும், மகன் அவற்றுக்கு மாறாகத் தேசீய உணர்வோடு விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுவிடுவதையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்த நாவல் வர்ணித்துள்ளது.

நா. பார்த்தசாரதியின் ”ஆத்மாவின் ராகங்கள்” விடுதலைப் போராட்ட காலச் சூழ்நிலையையும், நிகழ்வுகளையும் அடிப்படையாக்கி ஒரு நாவல் எழுதப்பட வேண்டும் என்ற ஆர்வத்தின் மலர்ச்சியாக இருந்தபோதிலும் ஒரு காந்தியவாதியையும் அவர்மீது காதல் கொள்ளும் ஒரு தாசி குலப்பெண்ணின் உணர்வுகளையும் ரசமாக விவரிக்கும், ரொமான்டிக் நாவலாகவே அமைந்துள்ளது.

சமீபகாலத்தில் வெளிவந்துள்ள சமூக வரலாற்று நாவல்கள் சில பாராட்டப்பட வேண்டிய படைப்புகள் ஆகும். –

பொன்னிலன் எழுதியுள்ள ”புதிய தரிசனங்கள்” இவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது. இது அரசியல் நாவலின் தன்மையையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அமுலுக்கு வந்த அவசர காலச்சட்டம், அதனால் அரசியல் கட்சிகளிடத்தும், மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட பாதிப்புகள் முதலியன இந்த நாவலில் விரிவாகவும் உணர்ச்சியோடும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

அடுத்தது, செ. யோகநாதன் மிக விரிவாக எழுதத் திட்டமிட்டுள்ள ”அசுரவித்து' எனும் பெரிய நாவலின் முதல் பகுதியாக வெளியிட்டிருக்கும், ”நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ என்பது. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும், கிராமப்புற மக்களின் உணர்வுகளையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் கலைத் தன்மையுடன் விவரிக்கிறது. இது.


கவிஞர் தமிழ்நாடன் எழுதியுள்ள சாரா நாவல் வரலாற்றுப் பார்வையும், சமூக நோக்கும், உலகம் தழுவிய விசாலமான சிந்தனையும் கொண்ட புதியதோர் முயற்சியாகும். பண்பாட்டுப் பெருமையும் இனஉணர்வும் பேசுகிற மக்களின் வெறித்தன இயல்புகளையும், அவை விளைவிக்கிற பாதிப்புகளையும் எடுத்துச் சொல்கிற இந்த நாவல், ஆரம்பத்தில் சிந்தனைக்கனமும், வளர வளர காதல் சுவாரஸ்யமும், பிற்பகுதியில் மர்மநாவலின் விறு விறுப்பும் பெற்றுள்ள படைப்பாக இருக்கிறது. தமிழ் நாவலில் புதிய களம், புதிய கரு, புதிய போக்கும் நோக்கும் சேர்த்திருப்பதற்காக, கவிஞர் தமிழ் நாடனை பாராட்ட வேண்டும்.

[ நன்றி: ”வல்லிக்கண்ணன் கட்டுரைகள் “ நூல், அர்ச்சுனா பதிப்பகம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
வல்லிக்கண்ணன்: விக்கிப்பீடியாக் கட்டுரை

வல்லிக்கண்ணன்