சனி, 31 அக்டோபர், 2020

1673. சங்கீத சங்கதிகள் - 251

 ஓடி வந்த சங்கீதம்!அக்டோபர் 31. செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரின் நினைவு தினம்.

அவர் மறைவுக்குப் பின், கல்கியில் வந்த அஞ்சலி.
[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

1672. சுந்தர சண்முகனார் - 1

 "ஆராய்ச்சி அறிஞர்"  பேரா.சுந்தர சண்முகனார் 


அக்டோபர் 30. சுந்தர சண்முகனாரின் நினைவு தினம்.

[ நன்றி : தினமணி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 30 அக்டோபர், 2020

1671.சத்தியமூர்த்தி - 18

 மஹா யுத்தம், வகுப்புக் கலவரம், அஹிம்சா தர்மம்

 எஸ். சத்தியமூர்த்தி 


1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த மூன்று கடிதங்கள்.பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சத்தியமூர்த்தி

1670. கதம்பம் - 40

 ஆஸ்திக ஜோதி அஸ்தமித்தது!


அக்டோபர் 30. அனந்தராம தீக்ஷிதரின் நினைவு தினம்.

'கல்கி'யில் வந்த அஞ்சலி  இதோ!


[ நன்றி: கல்கி ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

அனந்தராம தீக்ஷிதர்: பசுபதிவுகள்

வியாழன், 29 அக்டோபர், 2020

1669. லா.ச.ராமாமிருதம் -18

 இயல்பாய் உதிர்ந்த பழம்!

திருப்பூர் கிருஷ்ணன்


அக்டோபர் 30. லா.ச.ரா.வின் நினைவு நாள். 

இதோ 'கல்கி'யில் வந்த அஞ்சலி![ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம்


புதன், 28 அக்டோபர், 2020

1668. பி.ஸ்ரீ. - 27

 இவரல்லவோ எழுத்தாளர்

துமிலன்.


அக்டோபர் 28. பி.ஸ்ரீ அவர்களின் நினைவு தினம்.  'கல்கி'யில் வந்த அஞ்சலி இதோ! 


 

[ நன்றி: கல்கி]


' சுதேசமித்திர'னில் பி.ஸ்ரீ. 1945-இல் எழுதிய ஒரு கட்டுரை. 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.ஸ்ரீ

செவ்வாய், 27 அக்டோபர், 2020

1667. தி. சே. சௌ. ராஜன் - 1

 டாக்டர் ராஜன் மறைந்தார்.


அக்டோபர் 27. தி.சே.சௌ.ராஜனின் நினைவு தினம்.  'கலைமகள்' வெளியிட்ட  நினைவு அலைகள், வவே.சு. ஐயர் போன்ற  அருமையான நூல்களைப் படித்திருக்கிறேன். 

அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி.அவருடைய ' நினைவு அலைகள்' நூலுக்குக் 'கல்கி' எழுதிய முன்னுரை.[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தி.சே.சௌ.ராஜன்: விக்கிப்பீடியா

திங்கள், 26 அக்டோபர், 2020

1666. பாடலும் படமும் - 96

 சகல கலாவல்லியே ! வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
   வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
   கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
   ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
  கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.  --- பாரதி ---  


[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்
ஓவிய உலா 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

1665. கதம்பம் - 39

 திருவாளர் பொதுஜனம் - 50


அக்டோபர் 24. ஆர்.கே.லக்ஷ்மணின் பிறந்த தினம்.

'கல்கி'யில் 1998-இல் வந்த கட்டுரை.[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம் 

ஆர். கே. லட்சுமண்: விக்கிப்பீடியா 

R.K.Laxman: மொழிகளைத் தாண்டி அனைவரையும் கவர்ந்த அற்புதமான கலைஞர்!

சனி, 24 அக்டோபர், 2020

1664. மு.கதிரேசன் செட்டியார் - 3

சிவனடி  சேர்ந்த செல்வர்அக்டோபர் 24. பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம்.

முதலில்,  1942-இல் மேலேயுள்ள அட்டைப்படத்திற்கு 'கல்கி'  யின் பட விளக்கம்.அடுத்ததாக,  அவர் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.கதிரேசன் செட்டியார்

 

வியாழன், 22 அக்டோபர், 2020

1663. சங்கீத சங்கதிகள் - 250

மைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 4
சுதேசமித்திரனில் வந்த இரு கட்டுரைகள்.[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

மைசூர் வாசுதேவாச்சாரியார்: பசுபதிவுகள்

புதன், 21 அக்டோபர், 2020

1662. வ.சுப. மாணிக்கம் - 2

தனிப்பாடல்கள்
வ.சுப.மாணிக்கம்
===
( 1958-இல் திருச்சிராப்பள்ளி வானொலியில் பேசியது ) 

இலக்கியவுலகில் சுவை மலிந்த தனிப்பாடல்களுக்கு என்றும் வரவேற்பு உண்டு. மின் விளக்கு வந்ததற்காக அகல் விளக்கு இல்லாமல் போயிற்றா? வானூர்தி வந்ததற்காக வண்டிக்கு இடம் இல்லையா? தொடர்கதைகள் ஒருபுறம் தோன்றச் சிறுகதைகளும் ஒருபுறம் தோன்றவே செய்யும். பலவுறுப்பு நாடகங்கள் இருப்ப, ஒருறுப்பு நாடகங்களும் இருக்க்வே செய்யும். தொடர்நிலைக் காப்பியங்கள் ஒப்பத் தனிப்பாடல்களுக்கும் ஒருமொழியில் இடம் உண்டு. மேலும் இலக்கியம் வளர்ந்த நெறியை நோக்கின், தனிப்பாடல்களே ஒருமொழியில் முன் தோன்றின என்பதும், இவற்றின் அடிப்படையில் தொடர்நிலைச் செய்யுள் என்னும் பெருங்காப்பியங்கள் பின் தோன்றின என்பதும் விளங்கும். எப்பெரும் புலவனும் முதலில் தனிப்பாடல் எழுதிப் பழகித்தானே பேரிலக்கியம் செய்யப் புறப்பட்டான் என்ற படிமுறையையும் எண்ணுங்கள். மொழி என்னும் கட்டிடத்துக்கு இலக்கணம் அடித்தளம் என்றால், காப்பியங்கள் துண்கள் என்றால், நாடக நூல்கள் மேன்மாடங்கள் என்றால், நாடோடிப் பாடல்கள் காற்று வரும் காலதர்கள் என்றால், தனிப் பாடல்கள் படிக்கட்டுகள் என்று சொல்லலாம். -
தனிப்பாடல் என்பது யாது? நடந்த ஒரு தனி நிகழ்ச்சியை அல்லது மனத்துத் தோன்றிய ஒரு தனிக் கருத்தைப் பற்றிப் பாடுதல்.தனிப்பாடல்கள் கற்பனை குறைந்தன;ஆனால் கவர்ச்சி மிகுந்தன. மறைவு இல்லாதவை; ஆனால் உண்மை தழுவியவை. உறுதி தளர்ந்தவை; ஆனால் உணர்ச்சி செறிந்தவை. ஆதலின் இப்பாடல்கள் மக்கள் மனத்துப் பதிந்து பேச்சோடு பேச்சாகக் கலந்து விடுகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம். கொடையும் பிறவிக்குணம், கற்றது கைம்மண்ணளவு, பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி, மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் என்பன போலும் பல தனிப்பாடற் பகுதிகள் மக்கள் பேச்சுக்கிடையில் வழங்குவதக் கேட்கின்றோம்.
இடைக்காலத் தமிழ்ப்புலவர்கள் நிகண்டுகளை வரப்பண்ணிச் சொல்வளம் மிக்க செல்வர்களாக விளங்கினர். பல செல்வர்கள் செல்வத்தையே பொருளெனக் கருதி எண்ணி இருப்புப் பார்த்து மகிழ்வதுபோல, இந்தச் சொற்செல்வர்களும் சொற்களையே புலமையெனக் கொண்டு யாப்பு நயம் பாடி மகிழ்ந்தனர். எவ்வெழுத்திலும் பாட்டுத் தொடங்குவோம்; எவ்வெழுத்திலும் பாட்டை முடிப்போம்; எதிரி வியக்கும்படி பாட்டுக் கட்டமுடியும் என்று செய்யுட் பந்தயத்தில் ஈடுபட்டார்கள். உடலைப் பரத நடிகை பொருளுக்குத் தக வளைப்பது போலத் தமிழ் மகளை இப்புலவர்கள் தாம் விரும்பிய யாப்புக்குத்தக வளைத்தனர்.
சிவப்பிரகாசர்
துறைமங்கலம் சிவப்பிரகாசர் முந்நூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். கற்பனைக் கருவூலம் என்று பெயர் பெற்றவர். திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், நால்வர் நாண்மணிமாலை முதலாய பல நூல்களின் ஆசிரியர். தந்தையை இளம்பருவத்திலேயே இழந்த இவர் தம்முயற்சியால் கல்விப் புலமை எய்தினார்; இயற்றமிழை நன்கு கற்க விரும்பித் தருமபுர ஆதீனத்தை அடைந்தார்; வெள்ளியம்பலவாணர் என்னும் ஆசிரியரை அணுகினார். அம்பலவாணர் சிவப்பிரகாசரின் சொற்பயிற்சியையும் பாடல் இயற்றும் யாப்பும் பயிற்சியையும் அறிய விரும்பினார். மேடைமீது ஏறியவுடன் சொற்பொழிவாற்றும் உடனடிப் பேச்சுப் போட்டியை நாம் இன்று நடத்துவதுபோல்,உடனடிப் பாட்டுத்தேர்வொன்றைச் சிவப்பிரகாசருக்கு ஆசிரியர் அன்று நடத்தினார். “ஒரு பாட்டை ‘கு’ என்று தொடங்கி 'கு' என்று முடி மேலும், 'ஊருடையான்’ என்ற தொடரைப் பாட்டுக்கிடையில் வை” என்று ஒரு கேள்வி விடுத்தார். கேள்விக்குச் சிவப்பிரகாசர் உடனே இயற்றிய பாட்டானது,
குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழல்
முடக்கோடு முன்னம் அணிவார்க்கு - வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்.
ஊருடையான் என்னும் உலகு.

என்பதாம். குடக்கு எனத் தொடங்கி உலகு என முடிதலால் முடிதலும் இறுதியும் ‘கு’க்கள் வருதல் காண்க. ஊருடையான் என்று ஆசான் கொடுத்த ஒரு தொடரை ஊர் உடைஆன் எனப் பிரிவு செய்துகொண்டு சிவனுக்கு ஊராவது தில்லை, உடையாவது புலித்தோல், ஏறும் ஊர்தியாவதுகாளை என்று பொருளமைத்து இளமையிலேயே தம் மதி நுட்பத்தை வெளிப்படுத்தினார் சிவப்பிரகாசர்,
யாப்புவிளையாட்டு
காய் என்று எடுத்து இலை என முடித்தல், கொட்டைப் பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என முடித்தல், கரி என்று எடுத்து உமி என முடித்தல், ஐந்து 'டு’க்கள் வரத் தொடுத்தல் என்றவாறு புலவர்கள் பாடல்கட்டி விளையாடுகிறார்கள். இன்னவிளையாட்டில் ஒட்டக்கூத்தர்கூட ஒரு சமயம் தோற்றுப்போனார்."மதி அல்லது பிறை என்றசொல் ஒரடிக்குள் மூன்றிடத்து வரப் பாடுக என்று ஒளவை கொடுத்த வினாவுக்கு, 'பிள்ளை மதிகண்டு எம்பேதை பெரிய மதியும் இழந்தாளே” எனப்பிள்ளைமதி பெரியமதி என்று இரண்டு மதிகள் வரவே ஒட்டக்கூத்தரால் பாடமுடிந்தது. “ஒட்டா ஒரு மதி கெட்டாய்” என்று ஒளவை இகழ்ந்து, புகழேந்திப் புலவரை நோக்கினாள். வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே எனப் பிறைச் சொல் மூன்று ஒரடிக்குள் வருமாறு பாடிப் புகழேந்தியார் வெற்றி பெற்றார் என அறிகிறோம்.
அஞ்சற்றலைகள் தொகுப்பது, நிழற்படம் எடுப்பது, ஒவியம் வரைவது இன்று பலர்க்குப் பொழுது போக்காக இருத்தல் போல, செய்யுள் இயற்றல் என்பது பண்டப் புலவர்க்கு ஒரு பொழுது போக்காகும்.
இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று அளக்கின்றார் காளமேகம்.
மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும்
ஆச்சென்றால் ஆயிரம்பாட் டாகாதோ
என்று விரிக்கின்றார் அதிமதுரக் கவிராயர்.
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை
ஒப்பிக்கும் எந்தன் உளம்
என எதனைப் பெறவும் ஒரு பாட்டு என்று எளிய பண்ட மாற்றாக மதிக்கிறார் ஒளவை. ஒருவர் முன்னிரண்டடிகளைப் பாடுவது; இன்னொருவர் பின்னிரண்டடிகளை முடிப்பது என்பது புலவர் கண்ட ஒரு யாப்பு விளையாட்டு. இரட்டையருள் குருடர் இரண்டடி பாடிநிறுத்திக் கொள்வார்; பிற்பகுதியை முடவர் பாடி முடித்து விடுவார். இஃது ஒருநிலை. வேறு சில பாடல்கள் உள. ஒருவர் முற்பகுதியைப் பாட அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் அவர் கருத்தை மாற்றுவதற்காக மிக விரைந்து பிற்பகுதியைப் பாடிவிடுவார். எவ்வளவு யாப்புப் பயிற்சியிருந்தால் இங்ஙனம் முந்திக் கொண்டு பாடவரும் என்று எண்ணிப்பாருங்கள்!
சோழன்புலமை
ஒட்டக்கூத்தர் குலாத்துங்கசோழன் அவைப்புலவர் ஆவர். இவர்சோழன் அகவாழ்க்கையிலும் அரசியல்வாழ்க்கையிலும் நெருங்கிய தொடர்புகொண்டவர். சோழன் ஆட்சிச் சிறப்பை நேரில் அறிந்தவர். இவன் ஆட்சியில் ஆராய்ச்சிமணி அசையவில்லை:இவன்குடையோவ்பரந்து விரிந்தது என்று பலர் சூழ்ந்த அவை முன் பாராட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர்,
- ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெலாம்
நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில்
என்று பாடி வருவதைக் கேட்டான் குலோத்துங்கன். தன் செவ்விய ஆட்சிக்கு ஒட்டக்கூத்தரே துணை என்பதை உட்கொண்டான். மேலும் தன் ஆசான் என்பதையும் நினைந்தான். ஒட்டக்கூத்தர்பால் தான் கொண்டுள்ள நன்மதிப்பையும் பெரும் பணிவையும் காட்ட இதுவே காலம் என்று துணிந்தான். தான் அரசன் என்பதைச் சிறிதும் எண்ணாது புலவருள் தலையாய ஒட்டக்கூத்தரின் அடியவன், மாணாக்கன் என்று சொல்லிக் கொள்ளத் துடித்தான் குலோத்துங்கன். புலவர் மேலிரண்டடிகளை முடிப்பதற்கு முந்தி,
பாடும் புலவர் புகழொட்டக் கூத்தர் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேஎன்னைச் சொல்லுவரே
என்று செய்யுளை முடித்துவிட்டான். இதனால்இடைக் காலத்துத் தமிழ்ப் புலவன் பெற்றிருந்த அரசியற் செல்வாக்கு ஒருபுறம் விளங்க, இடைக் காலத் தமிழ் வேந்தன் பெற்றிருந்த தமிழ் வன்மையும் விளங்கக் காண்கின்றோம்.
சொற்சிலம்பம்
தனிப்பாடற் புலவர்கள், நமக்கு உரைநடை போல எண்ணிப்பாராதே செய்யுள் செய்வதை ஒருபொழுது போக்காகக் கொண்டனர் என்று கண்டோம். வைக்கோலுக்கும் யானைக்கும் பொருத்தம், மீனுக்கும் பேனுக்கும் பொருத்தம், திருமாலுக்கும் கடிகாரத்துக்கும் பொருத்தம் என்ற முறையில் பொருத்தப் பாடல்கள் செய்வதையும் ஒர் இன்தொழிலாகக் கருதினார்கள்.
சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை
ஐங்கரர்க்கு மாறுதலைய யானதே!
என்ற வகையில் புணர்ச்சி விதியுள் புகுந்து ஒசைநயம் காட்டுவதையும் ஒருவிளையாட்டு வினையாகப் பயின்றார்கள். வழக்கில் மக்கள் அடிக்கடி பேசும் சிறப்பில்லாத சொற்களுக்குக்கூட, சுவைததும்பும் பாட்டு வடிவம் கொடுக்குமுடியும் என்று நிகரற்ற தம்மொழித்திறத்தை மிகத்தெளிவாகக் காண்பித்தார்கள். தனிப்பாடல்கள் இலக்கியவுலகில் உரைநடையை ஒக்கும். ஆதலால் காப்பியங்களில் தள்ளுபடியாகும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தனிப்பாடலில் நல்வரவு உண்டு. ஆத்தாள், அக்காள், கண்ணாலவோலை, சும்மா, வண்ணான், அம்பட்டன், தேங்குழல், அப்பம்,தோசை முதலான சொற்களைக் கொண்டு எத்துணையோ தனிப்பாடல்கள் இனிமை தருகின்றன.
தனிப்பாடல் செய்தாருள் சொக்கநாதப் புலவரும் ஒருவர் இவர் முருகனை நோக்கி, கொடிய இம்மானிடவுடம்பு தவஞ்செய்து இளைத்துக்காய்ந்த சுக்குப்போல் ஆகவேண்டும்; அதன்பின் சுடுகாட்டில் வெந்தால் என்ன கேடு? இவ்வுடலை மீண்டும் கொள்ள யாரும். விரும்பமாட்டார்கள்; சிறந்த வீட்டின்பத்தை நீர் அருளுக நான் இக்காயத்தை என்றும் தேடமாட்டேன்’ என்று வேண்டுகின்றார். திருவேரகத்து எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செட்டி என்பது பெயர். செட்டி என்றால் வணிகனையும் குறிக்குமன்றோ! இவ்வணிகச் சொல்லை.அடிப்படியாக வைத்துச் சொக்க நாதப்புலவர் ஒர். உருவகம் புனைகின்றார். அவர் உருவக வெண்பாவில் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற மளிகைச் சொற்கள் நயமான கவியாக ஆவதைக் கேளுங்கள்:
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் கமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே.
ஒரு மொழியின் இலக்கியம் இடையறாது வளர்கின்றது என்பதற்கும், ஒரு மொழிமக்கள் நீண்ட கலையுணர்ச்சி யுடையவர்கள் என்பதற்கும் காலந்தோறும் எழுகின்ற தனிப்பாடல்களே கண்ணாடியாகும். கற்றார் எல்லாரும் காப்பியங்கள் செய்துவிட முடியாது. ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்பொழுது தனிப்பாடல்கள் பாடி வாழ்க்கையில் அறிவின்பம் நுகரலாம். இவ்வின்பமும் சிறந்த இலக்கிய இன்பமேயாகும்

தொடர்புள்ள பதிவுகள்:


செவ்வாய், 20 அக்டோபர், 2020

1661. உ.வே.சா. - 11

என் பாட்டனார்
 க. சுப்பிரமணியன்கலைமகளில் 1955-இல் அவருடைய நூற்றாண்டு விழாக் காலத்தில் வந்த ஒரு கட்டுரை இதோ. அவருடைய பேரர் எழுதியது.
=====தமிழ்த் தாத்தா, தமிழ்த் தாத்தா என்று தமிழுலகம் கொண்டாடும் பெரியாரைத் தாத்தா என்று நேரிலே அழைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவருடைய ஒரே பேரனாகிய எனக்கு உள்ள அந்தத் தனி உரிமையை இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கு உண்டாகும் உணர்ச்சிகள் பல.

ஐயரவர்கள் பிறந்த தமிழ் ஆண்டிலேயே அடியேனும் பிறந்தேன்; அவருடைய 61-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேதான் ஆனந்த வருஷத்தில் நான் பிறந்தேன். எனது 27-ஆம் பிராயம் வரை என்னுடைய பாட்டனார் ஜீவித்திருந்தார்.

அவரைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் என் கண்முன் நிற்பது அவர் மாணவர்களுடன் பழகிய காட்சிகளேயாகும். மாணவர் என்று குறிப்பிடுவது கல்லூரியில் படித்த மாணவர்கள் அல்ல. அவ்வகையில் பயன் பெற்றோர் பலருண்டு. ஆயினும் அவர் இல்லத்திலேயே முழு நேரத்தையும் செலவிட்டு அவருக்குப் பணிவிடை செய்து இன்பம் கண்ட சிலரைப் பற்றியே நான் குறிப்பிட விரும்புகிறேன்.


திருவாவடுதுறை மடத்தில் ஏற்பட்ட நற்பழக்கங்கள் எல்லாம் ஐயரவர்களின் வாழ்நாளில் தலைசிறந்து விளங்கின. தம் ஆசிரியப் பிரானாகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடத்தும், திருவாவடுதுறை ஆதீனகர்த்தராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களிடத்தும் தாம் பெற்ற அன்பின் திறத்தை மாணவர்களுக்குக் கதை கதையாகப் பரிவுடன் பல முறை எடுத்துக் கூறுவார். என் இளமைப் பிராயத்தில் என் பாட்டனாரவர்களிடம் நெருங்கிப் பழகியவர்கள் ஸ்ரீ இ. வை. அனந்தராமையர், ஸ்ரீ  ம. வே. துரைசாமி ஐயர், ஸ்ரீ சு. கோதண்டராமையர் முதலியோராவர். இவர்களில் ஸ்ரீ  அனந்தராமையர் வயசானவர். அவர் காலையிலும் மாலையிலும் வெகு நேரம் வரை விடுமுறை நாட்களில் ஐயரவர்கள் செய்துவந்த ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவார். பல மணி நேரம் அவர் கருத்தையும் கண்ணையும் ஏடு பார்ப்பதிலும், பிரதிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதிலும், 'ப்ரூப்' பார்த்தலிலும் செலுத்துவதைக் கவனித்தால் ஆச்சரியமாகவே இருக்கும். சிறந்து உறுதியுடன் இவ்வகைப் பணியில் இக்காலத்தில் ஈடுபடுகிறவர் அரியர்.

ஸ்ரீ  கோதண்டராமையர் ஐயரவர்களுக்குப் பணிவிடை செய்வதில் சிறந்த பக்தராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்ற சமயம் அங்கே சங்கத்தில் படித்துக் கொண்டிருந்த அவரை ஐயரவர்கள் சென்னைக்கு உடன் அழைத்து வந்தார். 15 வயசுச் சிறாராகிய அவர் தியாகராச விலாசத்திலேயே ஐயரவர்களிடம் படித்துக் கொண்டும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டும் வரலானார். வெளியூர் யாத்திரை செல்லும் பொழுதெல்லாம் அவர் உடன் செல்வார். ஐயரவர்களின் குறிப்பை உணர்வதில் அவர் வெகு சமர்த்தர். அதனால் அவரிடம் ஐயரவர்களுக்கு மிகுந்த அன்பு உண்டு. அந்த அன்பு பல சமயங்களில் பல விதமாகப் புலப்படும்.

தாம் அருந்தும் எந்தச் சிற்றுண்டியையும் ஐயரவர்கள் தம் இல்லத்தில் பழகிய மாணவர்களுடனேயே பகிர்ந்து கொள்வார். எதையும் மறைத்துச் சாப்பிடும் வழக்கம் அவரிடத்தில் இல்லை. உடன் பழகிய மாணவர்கட்கு உணவும் ஆடையும் தேடித் தந்து அவர்களைப் பாதுகாப்பதில் அளவற்ற இன்பங்கொண்டார். சிலருக்கு விவாகம் செய்வித்தும் மகிழ்ந்தார்.

ஐயரவர்கள் 1924-ஆம் ஆண்டு முதல் 1927-ஆம் ஆண்டு வரை ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரவர்களால் சிதம்பரத்தில் நிறுவப் பெற்ற மீனாட்சி தமிழ்க் கல்லூரித் தலைவராக இருந்தார். அங்கே அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர். ஒவ்வொருவரும் சிறந்த பண்புடையவராகவே விளங்கினர். இந்தக் கல்லூரியைப் பற்றி நினைக்கும் பொழுது வித்துவான்கள் தண்டபாணி தேசிகர், சிவப்பிரகாச தேசிகர் இவர்கள் ஞாபகம் வருகிறது. இவர்கள் இருவரும் ஐயரவர்களுடைய தலை சிறந்த மாணவர்களாக விளங்கினர். இவர்களிடம் ஐயரவர்களுக்குத் தனிப்பட்ட அன்பு ஏற்பட்டது.

மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் படித்த மாணவரில் ஸ்ரீ வி. மு. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். இவர் மிகவும் அடக்கமான சுபாவமுள்ளவர். சுயநலம் பாராதவர். ஆழ்ந்த கல்வியறிவும், சிறந்த ஞாபக சக்தியும் உடையவர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து ஆயிரம் ரூபாய்த் தமிழ்ப் பரிசை முதல் முதலாகப் பெற்றவர். இவரை ஒரு நடமாடும் புத்தகசாலை என்றே சொல்ல வேண்டும். ஐயரவர்கள் புத்தக வேலைகளுக்கு இவர் செய்த உதவி மிகுதியானது.சென்ற முறை சென்னையில் காங்கிரஸ்  மகாசபை கூடிய பொழுதுதான் ஸ்ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் ஐயரவர்களிடம் தமிழ்ப் பாடங் கேட்கத் தியாகராச விலாசத்திற்கு வந்து சேர்ந்தார். இவருக்கு அப்பொழுதே முருகக் கடவுளின் மீது அபார பக்தியும், அதன் விளைவாகச் சிறந்த தமிழறிவும், கவியியற்றும் ஆற்றலும் இருந்தன. இவரைப் பற்றி நான் எழுத விரும்பும் விஷயங்கள் பல. பிறிதொரு சமயம் வாய்ப்பு நேரும்பொழுது தனிக் கட்டுரையாகத்தான் எழுத வேண்டும் என எண்ணுகிறேன். இவருடைய இடையறா முயற்சியினால்தான் ஐயரவர்கள் சுயசரிதம் வெளிவந்தது. நூறாண்டு விழாவிற்குள் சுயசரிதத்தின் பிற்பகுதியும் வெளிவரச் செய்ய வேண்டுமென்ற அவா இருந்தது. இவ்விழாவை ஒட்டி ஸ்ரீ  கி. வா. ஜ அவர்கள் அப்பணியைத் தொடங்கி நன்கு பூர்த்தி செய்வார் என்பது திண்ணம்.


உற்றார் உறவினர்களிடம் ஏதோ வியாஜமான அபிமானமே வைத்திருந்தார் என்னுடைய தாத்தா. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் அவர்களுடன் பழகுவார். அவருடைய தமிழ்ப் பணிக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று நெருங்கிய உறவினர்களும் அவரிடத்துப் பக்குவமாகவே பழகி வந்தார்கள். தம் சிறு பிராயத்திலே உதவி செய்த உறவினர்களை அவர் மறக்கவே இல்லை. அவர்கள் சந்ததியாருக்கெல்லாம் தாம் சௌகரியமாக இருந்த பிற்காலத்தில் இயன்ற அளவு பொருளுதவி செய்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் தாம் படித்துப் பயனடைந்ததை ஆயுள் பரியந்தம் மறக்கவேயில்லை. மடத்துச் சம்பந்தமான எவ்வகைப் பணியிலும் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டார். ஆதீனத்தின் சிறப்பைத் தம்முடன் அன்பாகப் பழகிய தக்க கனவான்களிடத்தும் பிரமுகர்களிடத்தும் விரிவாக எடுத்துரைத்தார். ஆதீனகர்த்தர்களின் சிறப்பியல்புகளைச் சுவாரசியமாகக் கூறுவார்.  தாம் பெற்று வரும் நலன்களுக்கெல்லாம் காரணம் தம் தந்தையாரின் சிவபூஜா விசேஷமே என்று அடிக்கடி சொல்வதுண்டு.


ஏட்டுச் சுவடிகளும் பயன்படுத்திய அச்சுப் புத்தகங்களுமே ஐயரவர்களுடைய சிறந்த பொக்கிஷங்களாக விளங்கின. தியாகராச விலாசத்தில் அவர் வீட்டின் மாடியில் தம் தொண்டுகளைப் புரிந்து வந்தார். புத்தகங்களும் அவரும் மாணவர்களுமே அவ்விடத்தில் உறைந்து வந்தனர். மாடியிலுள்ள மேற்புறத்து அறையில் ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாத்து வந்தார். அவர் அநுமதியின்றி யாரும் அங்கே சென்று எதையும் பார்க்க இயலாது. நூல்களின் மேல் அளவு கடந்த பற்றும் பழைய நூல்களெல்லாம் நன்கு வெளிவரவேண்டுமே என்ற கவலையும் அவரிடம் குடி கொண்டிருந்தன. குடும்பச் செலவுகளைப் பற்றியோ வருவாயைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை. குடும்ப விஷயங்களையெல்லாம் இளம் பிராயத்தில் அவர் தந்தையாரும், நடுத்தர வயசில் அவர் தம்பியாரும், பின்னர் என் தந்தையாரும் கவனித்துக்கொண்டார்கள். அவசர சந்தர்ப்பத்திற்கென ஒரு ரூபாய் சில்லறை மாத்திரம் தம்மிடம் வைத்துக்கொள்வார். இல்லத்தில் படித்து வந்த மாணவர்களே அவர் குடும்பத்தினராக விளங்கினர். மாணவர்களுக்குப் பாடம் சொல்வது, அவர்களுடன் தமிழ்ப் பணியில் ஈடுபடுவது, கவிகள் சொல்லியும் கேட்டும் இன்புறுவது என்பனவே அவருடைய தினசரி நடவடிக்கைகளாக இருந்தன. தமக்கு எந்தச் சிறிய வகையிலும் உதவி புரிந்தவர்களை அவர் மறக்கவே இல்லை. ஞாபகம் வைத்துக்கொண்டு நன்றி செலுத்திவந்தார்.

காலையில் தவறாமல் தினந்தோறும் முதலில் தேவாரத்தில் ஒரு பதிகமேனும் பாராயணஞ் செய்து இன்புறுவார். பிறகு புத்தக ஆராய்ச்சி வேலை நடைபெறும். 11 மணிக்கு மேல் நீராடல், அநுட்டானம், பூஜை, போஜனம் முதலியன நிகழும். பிற்பகலில் சிறிது நேரம் நித்திரை செய்வார். நித்திரை வரும்வரை உடனிருக்கும் மாணவரை அழைத்துப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கச் செய்து கேட்பார். அயர்ச்சி நீங்கியபின் மாணவர்களுக்குப் பாடம் சொல்லுவார். மீண்டும் மாலையில் புத்தகப் பதிப்பு வேலையும் ஆராய்ச்சியும் தொடங்கும். இரவு 10 மணி வரை பதிப்புச் சம்பந்தமான பணிகள் நடைபெறும்.

இதற்கிடையே, காண வரும் அன்பர்கள் பலர். அவர்களிற் பல வகையினர் உண்டு. பிரபுக்கள், புலவர்கள், புத்தகப் பதிப்பாளர்கள், மாணவர்கள், உறவினர், யாசகர்கள், உற்றார்கள் எனப் பல விதமாகப் பிரிக்கலாம். யாவரிடத்தும் அவர் அவர் தகுதிக்கு ஏற்ற வண்ணம் முகமன் கூறி அன்புடன் உசாவி அவர் உரையாடும் விதம் சுவையாக இருக்கும். சிலேடையாகப் பேசிச் சிலரைச் சிரிக்கச் செய்வார். கொஞ்சம் கடுமையான சுபாவமுள்ளவர்கள் ஐயரவர்களிடம் விடை பெற்றுத் திரும்பும் பொழுது இன்முகத்துடனேயே செல்லுவார்கள். புத்தகங்களுக்கு அபிப்பிராயம் பெறும் அன்பர்கள் வருகை அதிகம். நல்ல அபிப்பிராயம் பெற வேண்டுமென்று சிலர் தந்திரமாக, அந்தச் சமயத்தில் ஐயரவர்கள் வெளியிட்ட நூல்களை விலைக்குப் பெறுவர். நூல்களுக்கு அபிப்பிராயம் நிதானமாகவே ஐயரவர்கள் அளிப்பது வழக்கம். தம் கருத்துக்கு ஒவ்வாத நூல்களுக்கு விரிவான முறையில் அபிப்பிராயம் எழுத மாட்டார். சமத்காரமாகவும் பக்குவமாகவும் பதில் எழுதி அனுப்பி விடுவார்.


வரும் கடிதங்களுக்குப் பதில் அனுப்பும் பணியை என் தந்தையார் செய்து வந்தார். என் தந்தையாருக்கும் பாட்டனாருக்கும் இடையே ஒரு சிறு தூதனாக நான் இருந்தேன். ஆதலின் இருவர் கருத்துக்கும் இணங்க நான் நடந்தேன். இளமையில் செய்து வந்த இந்தச் சிறு தொண்டு இப்பொழுது நினைக்குந்தோறும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

புத்தகங்களுக்கு அகராதி தயாரிக்கும் முறை வேடிக்கையாக இருக்கும். இந்தப் பணியில் நான்கூட ஈடுபடுவதுண்டு. இதில் அதிகமாக ஈடுபட்டவர் என் சிறிய பாட்டனாராகிய ஸ்ரீ  சுந்தரமையரவர்கள். நீளமான காகிதங்களில் வார்த்தைகளைக் குறித்து விடுவார்கள். அவற்றை ஒவ்வொரு வார்த்தையாகக் கத்தரித்து அகராதி வரிசைப்படி அதற்கென அமைந்த சிறிய பெட்டியில் பிரித்துப் போட்டுப் பின் சேகரித்து வரிசைப்படுத்தும் முறை என் இளம் பிராயத்தில் ருசிகரமாகவே இருந்தது. இந்தப் பணியில் அன்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைவில் பணியை முடிப்பார்கள். அகராதி வேலை செய்வதில் எனக்குப் பழக்கம் உண்டாகும்படி செய்து 'ப்ரூப்' பார்க்கும் விதத்தையும் என் பாட்டனார் எனக்கு நன்கு போதித்தார். அகராதி வரிசை தெரியுமா என்று விசித்திரமாக அவர் இடையே கேள்வி கேட்டு ஆராய்வது வேடிக்கையாக இருக்கும்.

நான் சிறு நூல்கள் சிலவற்றை அவரிடம் பாடம் கேட்டதுண்டு. சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், நள வெண்பா, ஆறுமுக நாவலர் இயற்றிய சிற்றிலக்கண வினா விடை முதலியவை படித்தேன். ஒரு நாளைக்கு ஒரு பாட்டிற்கு மேல் பாடஞ் சொல்ல மாட்டார். செய்யுளை நிதானமாகப் பலமுறை படிக்கச் செய்து கேள்வி கேட்கத் தொடங்குவார். பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது போல் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லும் வழக்கம் அவரிடம் இல்லை. எழுவாய் பயனிலை செயப்படுபொருள் இவை யாவை என்று வினவிப் படிப்பவனையே சிந்திக்கச் செய்து, பிறகு ஒவ்வொரு தொடருக்கும் பொருள் சொல்லுவார். பாடலில் ஏதாவது வரலாறு வந்தால் அதனை விளக்குவார். ஒரு பாட்டைப் பாடம் கேட்கும் பொழுதே படிப்பவனுக்குப் பல விஷயங்கள் புலப்படுமாறு அரிய செய்திகளை எளிதில் எடுத்துரைப்பார். இசையுடன் செய்யுட்களைப் படித்துக் காட்டுவார்.


ஐயரவர்கள் எனக்கு அவ்வப்பொழுது கூறிய புத்திமதிகள் பல. தம்மிடம் கற்ற மாணவர்களிடம் எப்போதும் பிரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார். "வேறொன்றும் வேண்டாம்; அவர்களிடம் சுமுகமாக இருந்தாற் போதும்" என்று வேடிக்கையாகச் சில சமயம் சொல்லுவதுண்டு. பழைய அன்பர்களை உபசரித்து அவர்களுக்குச் செய்யக்கூடிய சிறிய உதவிகளைச் செய்யத் தயங்கக்கூடாது என்றும், யாசகர்கள் வந்தால் 'போ' என்று சொல்லுதல் பிழை என்றும், நம்முடைய வலிமையை அவர்களிடம் காட்டக் கூடாதென்றும் அறிவுறுத்துவார். சிறியவர்களையும் ஏகவசனமாக அழைத்தல் கூடாது என்று கூறுவார். காயத்திரி ஜபம் அவசியம் செய்ய வேண்டுமென்றும், ஜபம் செய்யுங்கால் சூரியனைத் தியானம் செய்ய வேண்டுமென்றும் உபதேசிப்பார். சந்தியாவந்தனம் செய்யும்பொழுது ஆசமனம் இப்படிச் செய்ய வேண்டும், பிரோக்ஷண ஜலம் சிரசில் படவேண்டும் என்பன போன்ற விஷயங்களையும் பிரியமாக மனங் கொள்ளுமாறு கூறுவார். சுற்றந் தழுவுதல் மிகவும் முக்கியம் என்றும், அவர்களைத் திருப்தி செய்வதற்காகப் பெரியவர்களாயின் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டியது நல்லதென்றும் கூறுவார். திருவாவடுதுறை, திருப்பனந்தாள் மடங்களிலிருந்து தாம் அடைந்த நன்மை பலவென்றும், அவ்விரண்டு மடத்து அதிபர்களிடத்தும் என்றென்றும் உண்மையன்புடன் நடந்துவர வேண்டுமென்றும் பல நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து உள்ளம் உருகப் பேசிய சந்தர்ப்பங்கள் பல உண்டு.


ஐயரவர்கள் சிலரைப்போல் கையெழுத்துப் போடுவதற்குக் கூட ஆங்கிலம் பழகவில்லை. சிலர் அவரிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விடுவார்கள். தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேசுவது ஒரு கௌரவமென்று நினைத்த காலம் அது. ஐயரவர்கள் அவர்களுக்குப் புன்னகையுடன் "தேங்க்ஸ்" (Thanks) அல்லது "நோ தேங்க்ஸ்" (No Thanks) என்று சொல்லியனுப்பி விடுவார்.

(++)மீண்டும் ஐயரவர்கள் தோன்றினால் இன்றைத் தமிழுலகில் அவர் எங்ஙனம் விளங்குவார் என்று சில சமயம் நான் சிந்திப்பதுண்டு. பல விதமான புரட்சிகளும் போராட்டமும் நடந்துவரும் இக்காலத்திலும் அவர் வெற்றிகரமாக வாழ்வார் என்பது திண்ணம். காரணம், அவருடைய சிறந்த பண்பும் அனைவரிடத்தும் பழகும் முறையுமேயாகும்.[ நன்றி: வெண்பா விரும்பி ]

தொடர்புள்ள பதிவுகள்: