ஞாயிறு, 30 மே, 2021

1881. கதம்பம் - 64

பாம்பன் சுவாமிகள்  

மு.ஹரி காமராஜ்

மே 30. பாம்பன் சுவாமிகளின் நினைவு தினம்.

=====

பிரணவத்தின் பொருளாகவே தோன்றிய முருகப் பெருமானைப் போற்றி வணங்கிய பேரருளாளர்கள் காலம்தோறும் தோன்றி கந்தப்பெருமானின் புகழைப் பரப்பி வந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனியக் கனியப் பாடிப் பரவசமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் ஸித்தியடைந்த தினம் இன்று (30.5.18)  அனுஷ்டிக்கப்படுகிறது. பாம்பன் ஸ்வாமிகளின் ஆராதனை நாளில் அவர்தம் திவ்ய சரிதத்தின் சில பகுதிகளை தரிசிக்கலாமே..! 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய (1848 அல்லது 1850 என்கிறார்கள்) பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டைத் தீவிரமாக்கிய மகான். சாத்தப்பப் பிள்ளை, செங்கமலம் தம்பதியருக்கு ஞான மகவாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் `அப்பாவு’ என்கிறார்கள். தமிழையும் வடமொழியையும் கற்று 12 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றார். அருணகிரிநாதப் பெருமானை குருவாக வரித்துக்கொண்ட ஸ்வாமிகள் 'கங்கையைச் சடையில் பதித்து' என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார். 

திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனார் ஸ்வாமிகள்.  ‘சண்முகக் கவசம்’, ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ போன்ற பாடல்களை இயற்றினார். துறவறம் இருக்க பழநிக்கு முருகப்பெருமான் வரச் சொன்னதாக தனது நண்பரிடம் பொய்யுரைத்தார் ஸ்வாமிகள். உடனே அவரது கனவில் காட்சி தந்த முருகப்பெருமான், பொய்யுரைக்குத் தண்டனையாக 'தாம் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவே கூடாது' என்று தடை விதித்தார். இதனால் ஸ்வாமிகள் தமது இறுதிக்காலம் வரை பழநியை தரிசித்ததே இல்லை என்கிறது வரலாறு. 1894-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில்  அமர்ந்து 35 நாள்கள் கடும் தவமிருந்து முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டார். அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி. அன்றிலிருந்து பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். துறவறம் மேற்கொண்டு சொந்தங்களையும் சுகங்களையும் இழந்தார். அருணகிரிநாதரைப்போல தலம்தோறும் சுற்றி, பாடத் தொடங்கினார். 

6,666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார். தமிழகம் மட்டுமின்றி பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா... என்று காசி வரை திருத்தல யாத்திரை மேற்கொண்டார். 1918-ம் ஆண்டு ஸ்வாமிகள் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது `குமாரஸ்தவம்’ எனும் ஆறெழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்தப் பாடலால் பூரண குணம் பெற்றார். “ 'ஓம் ஷண்முக பதயே நமோ நம:' எனத் தொடங்கும் இந்த மந்திரப் பாடல்களைப் பாடுவோர், சண்முகப் பெருமான் இரு தேவியர்களோடு மயில் மீது அமர்ந்த காட்சியை தரிசிப்பார்கள்” என ஸ்வாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார். 

முருகப்பெருமானை நாடிச் சென்ற இடமெல்லாம் மனமுருகிப் பாடினார். இவரது தமிழால் மயங்கிய முருகப்பெருமான் பலமுறை நேரிலும் கனவிலும் காட்சி தந்து, பல அருள்விளையாட்டுகளை நடத்தினார். வயதான காரணத்தால் ஸ்வாமிகள் சென்னையிலேயே தங்கியிருந்தார். 1923-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சென்னை தம்புசெட்டிதெருவில் நடந்து சென்ற ஸ்வாமிகளின் மீது குதிரை வண்டிச் சக்கரம் இடித்து கால் எலும்பு முறிந்து போனது. சென்னை சென்ட்ரல் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஸ்வாமிகள். ‘குணப்படுத்துவது கஷ்டம்’ என்று மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், முருகப்பெருமான் கைவிடவில்லை. தினமும் பாடிய `சண்முகக் கவசம்’ அவரைக் காத்தது. 1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘15 நாளில் குணப்படுத்துவேன்’ என்று வாய் மலர்ந்தார். 

அவ்வாறே ஸ்வாமிகளின் கால் எலும்புகளைச் சேர்த்து குணப்படுத்தினார். முருகன் காட்சியளித்த  அந்த நாள் இன்றும் ‘மயூர வாகன சேவன விழா’ என மார்கழி மாத வளர்பிறை பிரதமை நாளில் கொண்டாடப்படுகிறது. ஸ்வாமிகள் உருவாக்கிய மகா தேஜோ மண்டல சபையினர் இந்த விழாவை நடத்துகிறார்கள். அப்போது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய ‘அசோக சாலவாசம்’ என்ற பாடல்களை வாசிப்பார்கள். இன்றும் சென்னை பொது மருத்துவமனையின் (ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை) மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கிறது. 

பூரண குணமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் 1926-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் நாள் ‘மகா தேஜோ மண்டல சபை அமைப்பு’ என்ற வழிபாட்டு அமைப்பை ஏற்படுத்தினார். தமது இறுதிக்காலம் நெருங்குவதை ஸ்வாமிகள் அறிந்துகொண்டார். படிப்போரும் கேட்போரும் பரவசம்கொள்ளும் 'குமாரஸ்தவம்' பாடியபடியே இருந்தார். கந்தபெருமானை அடையும் காலம் வந்ததை ஸ்வாமிகள் உணர்ந்தார். உணவை மறுத்தார். சதா சர்வ நேரமும் முருகப்பெருமானைத் துதித்தபடியே இருந்தார். 1929-ம் ஆண்டு மே 30-ம் தேதி காலை 7:15 மணியளவில் பாம்பன் ஸ்வாமிகள் மகா சமாதியடைந்தார். அவரது சீடர்களும் பக்தர்களும் கலங்கிப் போனார்கள். ஆனால், அவரது உபதேசப்படி முருகப்பெருமானின் பாடல்களைப் பாடியபடியே ஸ்வாமிகளின் இறுதி யாத்திரை முறைகளைச் செய்தார்கள். அடுத்த நாள் 1929-ம் ஆண்டு மே 31 அன்று அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் ஸ்வாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அவர் விதித்தபடி வங்கக் கடலோரம் சென்னை, திருவான்மியூரில் ஸ்வாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு, மகா சமாதி அமைக்கப்பட்டது.

இன்றும் பல ஆயிரம் மக்கள் கூடி வழிபடும் இடமாக ஸ்வாமிகளின் சமாதி ஆலயம் விளங்கிவருகிறது. இங்கு பௌர்ணமி வழிபாடு மிக மிக விசேஷமானது. `இங்கு வந்து முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களை பாம்பன் ஸ்வாமிகள் கைவிடுவதே இல்லை’ என பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறுகிறார்கள். எளிய மக்கள் 'தாத்தா கோயில்' என்றே இந்த ஆலயத்தைக் குறிப்பிட்டு வணங்கி வருகிறார்கள். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலிருக்கும் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசித்து, பாம்பன் ஸ்வாமிகளின் அருளுடன் ஆறுமுகனின் அருளும் சேர்த்து பெற்றுச் சிறப்புற வாழலாமே..!

[ நன்றி : https://www.vikatan.com/spiritual/news/126285-pamban-kumaraguru-dasa-swamigal-memories ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: விக்கிப்பீடியா  

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 26 மே, 2021

1880. கதம்பம் - 63

 46-இல் திருவள்ளுவர் விழா

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading!  

செவ்வாய், 25 மே, 2021

1879. சுஜாதா- 6

எழுத்தில் ஹிம்சை

சுஜாதா

 ஹிம்சை செய்யாத எழுத்துக்கு உரியவர் சுஜாதா. ஆனால் அவர் எழுதிய முதல் கதையின் தலைப்போ ' எழுத்தில் ஹிம்சை' ! 

'சிவாஜி'  29 நவம்பர் 1953- இதழில் வந்தது. 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா

சுஜாதா கதையில் குறிப்பிடும் இரு ஆங்கில எழுத்தாளர்கள் எனக்கும் மிகப் பிடித்தவர்களே. அவர்களைப் பற்றி அறிய ;

E. Phillips Oppenheim 

Edgar Wallace 

 இவர்களின் நாவல்கள்  தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளனவா? வடுவூர் , ஆரணி வால்லஸ் நாவல்கள் சிலவற்றைச் செய்ததாக நினைவு. 

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading! 

திங்கள், 24 மே, 2021

1878. முருகன் - 12

குமார வயலூர் குமரன்

குருஜி ஏ.எஸ்.ராகவன்

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your pc and then read after zooming. ]

தொடர்புள்ள பதிவுகள்: 

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 19 மே, 2021

1877. ரா.கி.ரங்கராஜன் - 10

தொட்டில்
ரா.கி.ரங்கராஜன் 

[ ஓவியம்: ராஜு ]

குமுதத்தில்  'ராஜு'வின் சித்திரத்துடன் 51-இல் வந்த கதை. விகடனிலிருந்து வெளியேறிய ராஜு குமுதத்தில் பணி செய்து கொண்டிருந்த சமயம். 

[ நன்றி: திருப்பத்தூர் திருத்தளியான் ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 18 மே, 2021

1876. சிறுவர் மலர் - 18

 ’சக்தி’க் கதம்பம் -  3

‘சக்தி’ 1939/40 - ஆண்டு இதழ்களிலிருந்து ஒரு கவிதை , ஒரு கட்டுரை, ஒரு கதை!  ( தே.வி. யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கட்டுரை சுத்தானந்த பாரதி எழுதியது என்பது என் யூகம் ).

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர் 

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading!  

திங்கள், 17 மே, 2021

1875. பெ.சு.மணி - 1

'தி ரிபப்ளிக்':சர்மாஜியைக் கவர்ந்த நூல்

பெ.சு.மணி 

27 ஏப்ரல், 2021 அன்று மறைந்த தமிழறிஞர் பெ.சு.மணிக்கு அஞ்சலியாய் 'தினமணி' யில் அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே இடுகிறேன். 

==== 

 அரசியல் தமிழ் இலக்கியத்துறையின் முன்னோடி அமரர் வெங்களத்தூர் சாமிநாத சர்மா (1895 - 1978) பல வேறுபட்ட இவருடைய 78 நூல்களுள் 'பிளாட்டோவின் அரசியல்' தலைசிறந்தது. இவ்வுண்மையை அவரே என்னிடம் நேரில் குறிப்பிட்டுளார். சாக்ரடீஸ் (கி.மு. 470 - 399), பிளாட்டோ (கி.மு. 427 - 347) இணைப்பில் உருவான உலகப் புகழ் பெற்ற நூல் 'ரிபப்ளிக்' என்றழைக்கப்படும் 'பிளாட்டோவின் அரசியல்'.. பிளாட்டோவின் 26 நூல்களில் "இதுவே மணிமகுடம். என்னை அதிகமாக வசீகரித்ததும் 'ரிபப்ளிக்' நூல்தான்" என்று சர்மாஜியே கூறியுளார்.

 'பிளாட்டோவின் அரசியல்' வாசக உள்ளங்களை வென்று வாகை சூடியதற்கு முதற்காரணம் சர்மாஜியின் மொழிபெயர்ப்புச் சிறப்பு. மொழிபெயர்ப்பு கலையின் திட்ப - நுட்பங்களைத் தேர்ந்து தெளிந்தவர் அவர்.

  'பிளாட்டோவின் அரசியல்' நூலைப் படித்த டாக்டர் மு.வ., பிளாட்டோவும் சாக்ரடீஸும் தமிழிலேயே உரையாடியிருப்பார்களோ என்று தோன்றியதாக சர்மாஜியிடம் வியப்புடன் கூறினாராம். இதை சர்மாஜி என்னிடம் நினைவு கூர்ந்தார். 'பிரபஞ்சசோதி பிரசுராலயம்' இந்த நூலின் பல பதிப்புகளை வெளியிட்டது. நான்காம் பதிப்பில் 'பிளாட்டோவும் நானும்' எனும் தலைப்பில் சர்மாஜி எழுதினார். அதில் பிளாட்டோவிடம் தாம் கொண்ட ஈடுபாடு திரு.வி.க.வின் தேசபக்தன் நாளேட்டிலேயே தொடங்கியது என்று சுட்டிக்காட்டி அதன்  வளர்ச்சியை விவரித்துள்ளார். 'பிளாட்டோவின் அரசியல்' என் நெஞ்சை அள்ளியதற்கு மற்றொரு காரணம் சிந்தனைச் செம்மல் சாக்ரடீசின் நவில்தோறும் நயம் தரும் புதுமைகள். இவை சிந்தனைக் கருவூலத்துக் கலைச் செல்வங்களாகும். சாக்ரடீஸ் எதையும் எழுதவில்லை . அவர் இளம் வயதில் கற்சிலை வடிக்கும் சிற்பியாக மட்டுமே அரும்பினார். பிற்காலத்தில் சிந்தனைகளைச் செதுக்கி சொல்லோவியங்களைப் படைத்த நாவுக்கரசராய் மலர்ந்துவிட்டார். இந்த புத்தெழுச்சிக்கு மூலகர்த்தா, அவருடைய அருமைச் சீடர் பிளாட்டோ, குருநாதரின் உடையாடல் கலையில் விளைந்த கருத்துகளுக்கு எழுத்து வடிவம் அளித்தவர் பிளாட்டோ.

 'பிளாட்டோவின் அரசியல்' பத்து புத்தகங்களை, அதாவது பத்து அத்தியாயங்களைக் கொண்டது. உரையாடல் பாங்கில் அமைந்தது. உடையாடல் கலையின் நுட்பங்களையெல்லாம் இந்த நூலில் கற்றுத் தெளிவு பெறலாம். தனி மனிதனுடைய அறவாழ்க்கை , சமூதாயத்தின் அரசியல் வாழ்க்கை இரண்டையும் இயைபுப்படுத்திக் காட்டுகிறார் பிளாட்டோ.

 இந்த நூலின் மூலதத்துவம், "எல்லாவற்றிற்கும் மூலமாய் உள்ளது நீதி அல்லது தருமம் என்பதாகும். பிளாட்டோ கற்பிக்கிற அரசின் பல்வேறு இலட்சியங்கள், சமூக அமைப்புகள், தத்துவங்கள், கலைப்பயிற்சிகள், இலக்கியக் கோட்பாடுகள் முதலானவையெல்லாம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த நூல் விரித்துரைகின்றது.

 நீதி (அ) தருமம் என்பது அறிவு, வீரம், தன்னடக்கத்தின் கூட்டுக் கலவையாகும் என்று விளக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் பொய் இலக்கியம், மெய் இலக்கியம் என்ற இருவகைகளைக் குறித்து உரையாடியபொழுது சாக்ரடீஸ் உலக மகாகவி ஹோமரைப் (கி.மு. 11-ஆம் நூற்றாண்டு) பற்றியும் கிரேக்கத்தின் மற்றொரு மகா கவிஞரான ஹெசியாட்டையும் (கி.மு. 8-ஆம் நூற்றாண்டு) விமர்சனம் செய்துள்ளார்.

"அழகில்லாத பொய்களை இவர்கள் தங்கள் கதைகளில் நுழைத்திருக்கிறார்கள். விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து, அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா?கடவுளர்களே பல குற்றங்கள் செய்கிறபொழுது நாமும் செய்தால் என்ன என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கிவிடுவார்கள். எனவே அவர்களுக்கு இந்தமாதிரியான கதைகளைச் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு எதிராக மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ அல்லது யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.

 ஞானிகளே ஆட்சி செய்ய வேண்டும். ஆள்வோருக்கும் பாதுகாவலர்களுக்கும் தனிச்சொத்துரிமை கூடாது. ராஜ்யத்தில் கவிஞர்களை வெளியேற்ற வேண்டும். ஆத்மாவின் பரமார்த்திகத் தன்மையை வளர்த்து அதன் மூலம் ஆத்மாவைச் சுற்றிலும் இருக்கிற உலக பந்தங்களையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அளவுக்கு மீறிய துர்ப்பழக்கங்களைப் பற்றிச் சொல்கிற வரலாறு, காமக் குரோத உணர்ச்சிகளை உண்டுபண்ணக் கூடிய கதைகளையும் ஆடம்பர வாழ்க்கையில் மோகங்கொள்ளத் தக்க நிகழ்ச்சிகளையும் நமது இளைஞர்களின் போதனா முறையில் இருந்து அகற்றிவிட வேண்டும்".

'பிளாட்டோவின் அரசியல்' இது போன்ற பல கருத்துகளை வினா - விடைப் பாங்கில் விளக்கும் இலக்கிய உத்தி வாசகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது.

'தெளிவு பெற அறிந்திடுதல், தெளிவு பெற மொழிந்திடுதல்' என்ற பாரதி வாக்கை சர்மாஜி இந்த நூலில் சாதித்துக் காட்டியுள்ளார்

=== 

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

 பெ.சு.மணி 

பெ. சு. மணி: விக்கிப்பீடியா

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. If you are already a Follower of my blog , thanks for reading! 

ஞாயிறு, 16 மே, 2021

1874. சோ ராமசாமி - 7

 என்னைப் போல் ஒருவன்!

 'சோ'

சோ’ விகடனில் 1970-இல் எழுதிய ஆறாம் நவரச(!)க் கதை (ரியலிசக் கதை)

அவள் தன் புருசனைப் பார்த்து, ''தா... சும்மா கிட!'' என் றாள். புருசன், ''சீ... கம்னு கிட!'' என்றான். அவர்கள் ஏழு வயதுப் பையன், ''இது இன்னடா பேஜாரு!'' என்றான்.

''இந்தாம்மே... இப்ப இன் னான்றே?''

''இன்னாய்யா முறைக்கிறே..! இஸ்டமில்லாட்டி உட்டுட்டுப் போயேன்... இன்னாமோ உன்னை நம்பித்தான் நான் கீரா மாதிரி!''

''சீ... கய்தே! இன்னா தெனா வெட்டு இருந்தா இப்படி பேசுவே நீ!'' என்று கோபமாகக் கூறி, அருகிலிருந்த அரிவாளை எடுத்தான் அவன். பக்கத்திலிருந்த தேங்காயையும் எடுத்து ஒரே சீவாகச் சீவினான். இளநீர் குடித்துவிட்டு வெளியேறிவிட்டான். அவன் கீழே அலட்சியமாக வீசி எறிந்து விட்டுச் சென்ற தேங்காயை அவள் கையில் எடுத்து உடைத்துக் கொஞ்சம் சாப்பிட்டாள். பையனுக்கும் கொடுத்தாள்.

அடுத்த நாள், அந்த வீட்டில் பையன் கண் விழித்து எழுந்த போது, தாயின் பக்கத்தில் வேறொருவன் படுத்துக் கிடந் தான்.

''யாரம்மா இது?'' என்றான்.

''இவன்தாண்டா இனிமே உங்கப்பன்!'' என்றாள் அவள்.

''அப்பாவா? நம்ம அப்பாவா?''

''அவன் பூட்டான்! இவன் வன்ட்டான். கம்னு கிடறா! இந்தா, கஞ்சி தண்ணி. குட்சிட்டு வெளியிலே போய்ட்டு வாடா!''

''அம்மா... நீ...'' - அந்தப் பிஞ்சு உள்ளத்திலே விவரிக்க முடியாத வேதனை.

''சீ! உங்கப்பனுக்குப் பொறந்த வன்தானே நீ... அதே திமிரு! கேல்வியா கேக்கறே... கய்தே... போடா வெளியிலே! இனிமே ஊட்டுப் பக்கம் வந்தே, தோலை உரிப்பேன்!'' என்று கத்தினாள். இந்தச் சத்தம் கேட்டு, அந்தப் புதியவன் எழுந்துவிட்டான்.

''இன்னாம்மே கெலாட்டா?'' என்றான்.

அவள் அவனை முறைத்துப் பார்த்தாள். ''இன்னா கெலாட் டாவா இருந்தா உனுக்கின்னாய்யா? எனக்கும் என் மவனுக் கும் ஆயிரம் இருக்கும்! நீ கம்னு கிடப்பியா. அத்த உட்டுட்டு...''

அந்தப் பையன் மிரள மிரள விழித்துவிட்டு, வெளியே சென்று விட்டான். அவள் 'ஓ'வென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

''இன்னாம்மே, ஏன் அளுவறே? தா... இன்னா ஆயிடிச்சு இப்ப... ஏம்மே கூவறே... கோஸ்டம் போடாதே... தா!''

''என்னைத் தொடாதேய்யா..! எல்லாம் உன்னாலேதான். நீ ஏன்யா வந்தே..? பூடு...பூடு...'' என்று கத்தினாள்.

''இன்னாமே இது, இப்படிச் சொல்றே? வா, ரெண்டு பேருமா பூடுவோம்...'' என்று அவன் அவள் கையைப் பிடித்தான்.

பூடுவதா, பூடாமல் இருப்பதா என்று புரியாமல் தவித்தாள்.

''ஆமா... இப்ப உன் பெஞ்சாதி எங்கேய்யா கீரா?''

''உம் புருசனோடதான்!''

''அடப் பாவி!'' என்றாள்.

அப்போது அவள் புருசன் வந்துவிட்டான். ''யேண்டி! இன்னாடி பாவியைக் கண்டே நீ?''

''ஊராமுட்டான் பெஞ்சா தியைக் கூட்டிக்கினியே, நீ பாவி இல்லாமே இன்னாய்யா?''

''அப்ப இவன்கூட நீ கீறியே, இதுக்கு இன்னா சொல்றே?''

''இவன்கூட நான் இருந்தா, ஊராமுட்டான் பெஞ்சாதியைக் கூட்டிக்கின இவன்தான் பாவி. நான் இன்னாத்தக் கண்டேன்!''

அதற்குள் அந்த ஆளின் பெஞ்சாதி வந்து, ''யோவ்... வாய்யா ஊட்டுக்கு! நடந்தது நடந்து போச்சு'' என்று அவனை அழைத்துப்போய்விட்டாள்.

அப்போது மகன் வந்தான். ''நயினா நயினா!'' என்று அப்பாவைக் கட்டிக்கொண்டான். ''வாடா ராசா'' என்றான் புருசன். ''நம்ம மவன்'' என்றாள் அவள்.

''சரி சரி, இப்ப இன்னா இப்ப? அவன் யாரு... என்னைப் போல ஒருத்தன். உடு..!'' என்றான் அவன்.

பையன் குளிக்கச் சென்றான். அவள் பையன் தலையில் தண்ணீர் ஊத்தினாள். அவள் பாவம் தீர்ந்தது!

 [ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சோ ராமசாமி

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading!  

சனி, 15 மே, 2021

1873. தெ.சி.தீத்தாரப்பன் - 4

பருவ மங்கை 
'பூ'

[ தீபன் ]

'சக்தி' இதழில் 1941-இல் வந்த பாடல். ( 'தீபன்' ( 'பூ', தீ' )  டி.கே.சி. அவர்களின் புதல்வர்.) 

தொடர்புள்ள பதிவுகள்:

தெ.சி.தீத்தாரப்பன்

பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. . If you are already a Follower of my blog , thanks for reading!  

வெள்ளி, 14 மே, 2021

1872. ஓவிய உலா - 18

 சிலேடைச் சித்திரங்கள் - 4

'கல்கி' இதழில்  40-களில் வந்த மேலும் இரு அரிய ஓவியங்கள்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
 பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading! 
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

வியாழன், 13 மே, 2021

1871. வசுமதி ராமசாமி - 4

தேவியின் கடிதங்கள் - 2
வசுமதி ராமசாமி 

'கல்கி'யில் வந்த மூன்று கடிதங்கள்.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

பி.குI have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog.  If you are already a Follower of my blog , thanks for reading

தொடர்புள்ள பதிவுகள்:

வசுமதி ராமசாமி

புதன், 12 மே, 2021

1870. சங்கீத சங்கதிகள் - 280

 தியாகராஜர் கீர்த்தனைகள் - 27

காஞ்சி பி.பி.ஸ்ரீனிவாசய்யங்கார் எழுதியது

மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ

இவை 1936-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 
பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. If you are already a Follower of my blog , thanks for reading!  

செவ்வாய், 11 மே, 2021

1869. சிறுவர் மலர் - 17

துப்பறியும் சுப்புடு - 5

‘சந்தனு’

’துப்பறியும் சாம்பு’வை நினைவுபடுத்தும் இந்தத் தொடர் சுதேசமித்திரனில் 1956-இல் வந்தது.

[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சிறுவர் மலர்
 
பி.கு.  I have now switched to a new service , follow.it  which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. You  will also find many new features in this follow.it  site which you may like. If you are already a Follower of my blog , thanks for reading!  

திங்கள், 10 மே, 2021

1868. பி.எஸ்.ராமையா - 7

இலக்கியத் துறையில் இளைஞர்கள்! 

 [ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.எஸ்.ராமையா

மணிக்கொடிக் காலம் : 1.முகப்பு